ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்

1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.

3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.

4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.

5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.

6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.

9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.

10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

டிஸ்கி: ஒரு உரசு உரசி நாளாச்சுல்ல... அதாங்...

Comments

சே என்ன கொடுமை ஒன்னே ஒன்னத்தவிர ஒன்னும் ஒத்துவரலியே. அப்ப நான் நல்ல எழுத்தாளனா??
Anonymous said…
இதாச்சும் பரவால்லங்க.. ஒரு போஸ்ட் போட்டுட்டாங்கன்னா அதைத் தனிமடல்ல அனுப்பி தொந்தரவு பண்ணுவாங்களே அதை என்ன சொல்றது.. ஒரு ஒரு விசயத்தை எழுதிட்டு அதையே 108 இடங்களுக்கு பிரசுரத்துக்கோ இணையத்துல எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அனுப்புவாய்ங்களே அதை விட்டுடீங்க..
selventhiran said…
வாங்க இளா, நீங்கதான் சொல்லெறுழவன் ஆச்சே...

ஆமாம் அகிலன் அவங்களுக்குத்தான் 'ஸ்பாம் ரைட்ட்ர்ஸ்'னு பேரு...

லோஷன் வருகைக்கு நன்றி
உணமை தான் போங்க.
Anonymous said…
//அதாங்...//

இது மட்டும்தான் ஒருத்தர குறிப்பா இடிக்குது.
Anonymous said…
// ஒரு உரசு உரசி நாளாச்சுல்ல... அதாங்... //

எதுக்கு இந்த டிஸ்கிய போட்டிருக்கீங்கனு தெரியலயே செல்வா!
தாக்கத் தகுதி கொள்(ளுங்கள்)
surapathi said…
ஹலோ, பதினஞ்சு புனைபெயர் வெச்சுகிட்டு எல்லா பத்திரிக்கைக்கும், எதாவது எழுதி போட்டுகிட்டே இருப்பாங்களே ...................
Anonymous said…
ஹலோ, பதினஞ்சு புனைபெயர் வெச்சுகிட்டு எல்லா பத்திரிக்கைக்கும், எதாவது எழுதி போட்டுகிட்டே இருப்பாங்களே ...................
selventhiran said…
மோசமான எழுத்தாளர்கள் எப்போதும் ஃபினிஷிங்கில் ஒரு 'டச்' வைப்பார்கள். அதாங் அவங்க ஸ்டைல்லயே ஒரு 'டச்'

ரமேஷ் அண்ணா தகுதியை வளர்த்துக் கொண்டுதான் விமர்சிக்க வேண்டுமா? - ஒரு நீண்ட பதிலை எதிர்பார்க்கிறேன்.
Anonymous said…
செல்வா,

நான் இந்த விளையாட்டுக்கு வரல.

ஆனா அவரோட இயல்பு அது. அதத் தெரிஞ்சு செய்யிறாரா தெரியாமச் செய்யிறாரான்னு தெரியல.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என் செல்லக் குட்டி, naughty boy, கவர்ச்சி இளைஞன் திரு செல்வேந்திரன் என் வேண்டுகோளை ஏத்துகிட்டு என்னைப் பத்தி (என் பேரக் குறிப்பிடாம) ஒரு பதிவு போட்ருக்கார். எல்லாரும் அதைப் படிச்சுப் பாருங்க.(http://www.selventhiran.blogspot.com/) என்ர எழுத்து இம்சையெல்லாம் தமிழ்கூறு வலையுலகம் படிக்கக் காரணமா இருக்கிறவர் செல்வாதான். அவருதானே “சார்! ‘பிளாக்கு பிளாக்கு’ ஒண்ணு இருக்கு! நானே ஊட்டுக்கு வந்து ஆரமிச்சித்துத் தாரேன்னு வந்து பூஜை போட்டவரு! கோழி பிரியாணிதான் குரு தட்சிணையாக் குடுத்தேன். மிச்சத்தை அஞ்சப்பர்ல தீத்துருவேன். படிங்க! படிங்க!!




1.தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.


(நெம்பப் பேரு சொன்னதைத்தனே ராஜா சொன்னேன்?)



2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.


(இனிமே கிசுகிசுப்பான குரல்லயே சொல்றேன். “தேவியில என்ற சிறுகதை வந்திருக்கு!")


3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.


(எனக்குத் தெரிஞ்ச வெரைக்கும் எழுதியிருக்கேன். நீயும் சாத்தான்(குளம்) பாஷையில எழுதி எனக்கு வழிகாட்டேன் செல்லம்?)



4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.


(அய்யோ! ஆமாம்பா! பொன்ஸீ ஒனக்குத் தெரிஞ்சவர்தானே? அவர்கிட்டயே கேளேன் சாமி! எத்தனை நாளா ப்ராமிஸ் பண்ணினதை எழுதிக் குடுக்காம இருக்கேன்னு!)



5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.


(ரொம்பப் பாராட்ற செல்வா! கூச்சமாயிருக்கு! சுஜாதாவும் இதையேதான் அடிக்கடி சொல்வார். செய்தும் காமிப்பார்!)



6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.


(எண்பதுனு சொல்ல வர்ராய்! சரிதானே? இதுல ரெண்டு பாயிண்ட் இருக்கு!i)காலாவதியாய்டுதுனு நீ மட்டும் சொன்னாப் போதுமா குட்டி? அப்டி ஆயிருந்துச்சுனாப் பத்திரிக்கைல போடுவாங்களா? காலாவதியாகாதபடி நீயெல்லாம் எழுதி இந்த முதிய தலைமுறைக்கு வழிகாட்டக் கூடாதா ராசு?ii)கதைகள் பிரசுரமாக என்ன செய்யுறதுனு கேட்டவிங்ககிட்ட எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். நீயாச்சும் நல்லவிதமா அவிங்களை ஆற்றுப் படுத்திப் ‘பரிசு’ வாங்க வெக்கோணும் செல்லம்! ஆமா! எழுத்தான் அப்படின்னா என்ன?)



7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.


(பாத்தியா! ‘ஸ்க்ராப்’னா என்ன? அதன் மூலம் எப்படித் தெரிவிக்கிறதுனு சொல்லிக் குடுக்காம உட்டிட்டயே? உங்கூட டூ!)



8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.


(வஞ்சப் புகழ்ச்சியோ _ஞ்சுப் புகழ்சியோ கேக்கறதுகு சொகமா இருக்கு. வஞ்சகரின் புகழ்ச்சிதான் டேஞ்சர் கண்ணு!)



9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.


(கோவிக்காத கண்ணு! இப்ப மீசையத் தரிச்சுப் போட்டேன். இனிமேத் தெகிரியமா இரு. என்னால முடிஞ்ச மாத்தத்தைத்தானேப்பா செய்ய முடியும்? குருடனப் பாத்து ராச முழி முழின்னா என்ன கண்ணு பண்ண முடியும்?)



10.வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)




(சரியாச் சொன்னாய்! நெம்பப் பதிவுகளை நான் வாசிக்கிறதேயில்லை. இப்ப எழுதுறதையும் கொறைசிக்கிட்டேனே! அமா! இப்ப நான் அதிகமாக் “கொரைக்கறது” இல்ல!)



டிஸ்கி: ஒரு உரசு உரசி நாளாச்சுல்ல... அதாங்..


.
(உரசு! உரசு! அப்பத்தானே நாளைக்கு சுலபமா இருக்கும்? அது சரி! இந்த வலையுலகப் பதிவர்களே நெம்ப மோசம் குட்டி! பின்ன என்ன? இவ்வளவு அறிவாளியான ஒன்னோட பதிவுகளை நெம்ப நாளு “0 comments” லேயே வெச்சிருக்காங்க. பின்னூட்டம் போடுறவிங்களும் சிங்கிள் டிஜிட்லயே இருக்காங்க? நெம்ப ஆதங்கமா இருக்கு!)

அது சரி! எப்பக் கோயமுத்தூர் வர்ரே? வந்ததும் சொல்லு! அஞ்சப்பர் போயிர்லாம்.
அப்புறம் என்ர எடத்துக்க் நவம்பர் கடைசி/டிசம்பர்ல வந்தாக் குளுரு ஓவரா இருக்கும்! அதனால சீக்கிரம் வா!________________________________________________
செல்வா!
இவிங்களையெல்லாம் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு
Vijayashankar said…
//குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்//

//மோசமான எழுத்தாளர்கள் எப்போதும் ஃபினிஷிங்கில் ஒரு 'டச்' வைப்பார்கள். அதாங் அவங்க ஸ்டைல்லயே ஒரு 'டச்'//

என்ன கொடுமை!
ஊஹூம் பெயிலு. நான் இன்னும் போக வேண்டியது தூரம் அதிகம் இருக்கிறது :-)
தம்பி,
ஒன்ன மாரி எனர்ஜடிக் யூத் குடுக்கிற டஃபுக்கும் ஈடு குடுக்குறாரு பாத்தியா அதான் என்ர தல!
selventhiran said…
வாங்க கிழஞ்செழியன், மூகமுடிகளோடு அலைவது உங்களுக்கு சிரமமாக இல்லையா?!
Anonymous said…
“0 comments” லேயே வெச்சிருக்காங்க. பின்னூட்டம் போடுறவிங்களும் சிங்கிள் டிஜிட்லயே இருக்காங்க? நெம்ப ஆதங்கமா இருக்கு!)// பாவம்... அவருக்கு உங்களை மாதிரி பல பெயர்கள்ல டுபாக்கூர் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி தனக்குத்தானே கமெண்ட் போடுற பழக்கம் இல்லை போலருக்கு..
Karthikeyan G said…
//ஒன்னோட பதிவுகளை நெம்ப நாளு “0 comments” லேயே வெச்சிருக்காங்க.//

இன்னுமொரு comment,
Comment no:: 20
selventhiran said…
அணாணி, இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... சரி, சரி சத்தமாப் பேசாதீங்க... பெரியவர் அப்புறம் துப்பாக்கியை எடுத்துட்டு வந்துடப் போறார்.

வாங்க கார்த்திக்கேயன், உங்களை மாதிரி ஆட்கள் எடுத்துச் சொன்னாதானே பெரியவருக்கு புரியும்...
கார்த்திகேயன் ஜி!

0 கமெண்டடில் இருந்த செல்வேந்திரனோட பதிவு என் பிளாக்கில அதைப்பத்தி எழுதினபிறகு 20க்கும் மேல போயிருச்சு பாத்தீங்களா?
இப்பச் சொல்லுங்க!
வேட்டைக்கார வேம்புவா அல்லது சேட்டைக்கார சாம்புவா?
Saminathan said…
முன்கூட்டியே பேசி முடிவு பண்ணி பதிவு போடுவாங்களோ..?
Anonymous said…
Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team