பிஞ்சு

கண்காட்சிகள், டிரேடு ஃபேர்கள், புத்தகத் திருவிழாக்களில் ஸ்டால்களில் அமர்வது எனக்கு மிகவும் பிடித்தமானது. விற்பனை ஆகிறதோ இல்லையோ விதம் விதமான மனிதர்களை சந்திக்க உதவுகிற ஒரு வாய்ப்பாக அது இருக்கிறது. இந்த முறை புத்தகக்கண்காட்சி ஸ்டாலில் இருந்தபோது சுமார் ஏழு வயது குழந்தையொன்று "அங்கிள் யூ நோ... ஐயாம் எ பொயட்" என்றது. விழிகள் விரிய 'ஏங்கே நீ எழுதிய கவிதைகளில் ஒன்றை எழுது பார்க்கலாம்' என்றேன்.
There was a boy
Who was very coy
When he got a toy
He was filled with joy
என நான்கு வரி கவிதையை ஒரு நோட்டீஸின் பின்பக்கம் எழுதி வைத்துவிட்டு ஓடி மறைந்து விட்டது அக்குழந்தை. எளிய அந்தக் கவிதையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். நேரடியாகப் பொருள் கொள்ள முடிந்து விடுகிற அந்த நான்கு வரிகள் தனிமையான சிறுவனின் பொம்மை கிடைத்த சந்தோஷத்தைத் தவிரவும் வேறொன்றையும் உணர்த்துவதாகத்தான் பட்டது எனக்கு. எளிமைதான் கவிதையின் மொழி. வார்த்தைச் சிக்கனமும், ஓசை நயமும் கொண்ட இந்த நான்கு வரிக்கவிதை என்னை மாதிரி லூஸூப்பயலால் வேறொரு பொருள் கொள்ளப்பட்டு சிலாகிக்கப்படும் என்று அக்குழந்தை நினைத்து இருக்காதுதான். ஆனால் இவள் பிற்காலத்தில் சரோஜினி நாயுடுவின் 'Fate' ஐ விஞ்சும் கவிதைகளை இவள் எழுதுவாள் என்று எனக்கு தோன்றுகிறது.

Comments

கடைசியாக சொன்ன வரிகள் யூகமா இல்லை ஜோதிடமா? :P
selventhiran said…
வாழ்த்துக்கள்னு எடுத்துக்கோங்க விக்கி
//''வாழ்த்துக்கள்னு'' எடுத்துக்கோங்க விக்கி//

இந்த வார்தையே சர்சையான வார்தையென கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்/வாழ்த்துக்கள்... (க்) முக்கியமா?
selventhiran said…
விக்கி மனதின் அடியாழத்திலிருந்து வாழ்த்தும்போது 'க்' வரும்...