மனிதர்களே...
மனிதர்களே, நீங்கள் மிகுந்த நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள். நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் நீங்கள் அடிக்கும் ஜோக்குகள் பிரமாதமானவை. அலுவலக நகைச்சுவையை சொல்லவே வேண்டாம். உங்களை எல்லோரும் ரசிக்கிறார்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சிரிப்பு களை கட்டுகிறது. எல்லாரும் உங்கள் இருப்பை எதிர்நோக்குகிறார்கள். சிரித்து சிரித்து உங்கள் நகைச்சுவையுணர்வை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால், நீங்களோ ஈனத்தனம் மிக்கவர்கள். பிறரை / பிறவற்றை ஊனப்படுத்தாத நகைச்சுவை உங்களுக்கு சாத்தியம் இல்லை. உங்கள் நாக்குகளின் வரிகள் சாத்தானின் குறியால் எழுதப்பட்டது. உங்களோடு சிரித்தவர்களையே நீங்கள் கேலி செய்வீர்கள். முடை நாற்றமெடுக்கும் வாசகங்களைச் சொல்லிக் கெக்கலிப்பீர்கள். அனைவரும் இப்போது உங்கள் வார்த்தைகளை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். நீங்கள் அவர்களை சர்வ அலங்கார இலக்கணச் சுத்தத்தோடு துரோகிகள் என்பீர்கள். உங்கள் நிம்மதியை திருடியவர்கள் என்பீர்கள். அவர்கள் இன்னொரு சிரிப்பாணி மனிதனைத் தேடி அலைவார்கள். பிணந்தின்னி நாய் போல மனந்தின்னி மனிதர்கள்!
- பிரதியங்காரக மாசானமுத்து
Comments
- பிரதியங்காரக மாசானமுத்து
\\
புரியலையே...:)
கும்க்கி, ஏதுவும் சொல்லாதேன்னு சொல்ல வர்றார்...
விக்கி, இதுக்கும் ஸ்மைலியா...