நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்

கவிஞர் மயூரா ரத்தினசாமி என் முதுகிற்குப் பின்னால்தான் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏர்வாடியில் இருந்து ஹரிகிருஷ்ணன் வரவேண்டி இருந்திருக்கிறது. என் அறையிலிருந்து பத்து கட்டிடங்கள் தாண்டி மயூரா ரத்தினசாமியின் அச்சகம் இருக்கிறது. இத்தனை நாள் தெரியாது போனது துரதிர்ஷ்டமே. அவரது ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்’ தொகுப்பினை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசனின் இயக்குனர் திரு.ஸ்ரீதரன் ஒரு தமிழர் என்று தொடந்து உள்ளூர் பத்திரிகைகள் எழுதி வருவது எதனால் என்று தெரியவில்லை. அவர் கேளராவின் கருகாபுத்தூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயரே ‘இலத்துவலப்பில் ஸ்ரீதரன்’ என்பதுதான்.

***

அப்துல்லாவை அழைத்தால் ‘என்ன பாடுறது...’ பாடலை வெல்கம் ட்யூனாக வைத்திருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்பிரவேசம் தெரிந்தவர்களுக்கு அந்த வெல்கம் ட்யூனின் மெல்லிய நகைச்சுவை புரியும். அவர் அடுத்தடுத்து மாற்றிக்கொள்ள என் சார்பில் சில பாடல்களை சிபாரிசு செய்கிறேன்...
பாட்டுப் பாடவா பாட்டுக் கேட்கவா..
பாட்டு ஒண்ணு நா பாடட்டுமா...
பாட்டாலே புத்தி சொன்னா...
பாடவா என் பாடலை...
நான் பாடும் பாடல்...
பாடும்போது நான் தென்றல் காற்று...
என்னைப் பாடச் சொல்லாதே...
பாடறியேன் படிப்பறியேன்...
ரசிகமகா ஜனங்களும் பாட்டாய் துவங்கும் பாடல்களை அவருக்காக சிபாரிசு செய்யலாம்.

***

சுயமுன்னேற்றப் பயிலரங்குகளில் அமர ஒருபோதும் விரும்புபவனல்ல நான். ஆனாலும், தொடர்ந்து பல பயிலரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறேன். ஏவனாவது ஒரு அங்கி அணிந்த மந்திரவாதி, கோல் செட்டிங், இண்டிஜூவல் எஃபெக்டிவ்னஸ் என்று என்னை சாவடிக்கிறான்.

சமீபத்தில் ஒரு பயிலரங்கில் வினாத்தாள்கள் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள்...

பெர்மணண்ட் கோல் – மனிதனாக வாழ்வது

புரொபஷனல் கோல் – மனிதனாக வாழ்வது

சோஷியல் கோல் – மனிதனாக வாழ்வது

ஸ்பிரிட்ஜூவல் கோல் – கடவுளை மனிதர்களுக்காக செயலாற்ற வைப்பது – என்று நிரப்பிக் கொடுத்தேன்.

***

நான் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் கல்யாணம் என்று சங்கல்பம் செய்திருந்த நண்பர் அமர்நாத்தின் திருமணம் கூடுவாஞ்சேரியில் நிகழ்ந்தது. ஒருநாள் மின்னல் பயணமாக ஞாயிறன்று சென்னை வந்து திரும்பினேன். கன்னட பிராமண முறைப்படி நிகழ்ந்த அத்திருமணத்தில் மணமகளின் தலையலங்காரத்தில் முன் நெற்றியின் இருபுறமும் எலுமிச்சைப் பழங்கள் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. பார்க்க பெரிய மனுஷனாய் இருக்கிறானேயென்று பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் விளக்கம் கேட்டேன்.
“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”
இவனெல்லாம் கல்யாணத்துக்கு வரலன்னு... சரி விடுங்க.

Comments

நான் கூட சாலையை கடக்கும் தவளையை பத்தி எழுதியிருக்கேன். செல்வேந்திரன்..
:)


அப்துல்லாவுக்கு இன்னொரு பாட்டு

‘என்ன பாட்டு பாட.. என்ன தாளம் போட..”
Anonymous said…
அட, நானும் நாலுநாள் முன்னாடிதான் நத்தையப்பத்தி பதிவு போட்டேன்.
இடங்கொடுத்தான் சூப்பர். கண்டிப்பா காசு குடுத்து வாங்கிப்படிக்கணும்.
//“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”//

செல்வா,

நல்ல கேள்வி, மிக நல்ல பதில், ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டிருக்கேன்....

பிரபாகர்...
செல்வேந்திரன்,
அறிமுகமாகாதவரை எல்லாமே தொலைவில்தான். ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்‘ குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். வெளியீட்டாளர் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் வாசிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும்.
000
ஸ்ரீதரன் தமிழர் என்று எந்த பத்திரிகையில் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அவர் தமிழகத்தில் படித்தவர் என்று தினமலரில் எழுதியிருந்தார்கள். நேரடி தொடர்பில்லாவிட்டாலும் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அவரது நேர்மை பிடித்திருக்கிறது.
000
//பெர்மணண்ட் கோல் – மனிதனாக வாழ்வது

புரொபஷனல் கோல் –
மனிதனாக வாழ்வது

சோஷியல் கோல் –
மனிதனாக வாழ்வது

ஸ்பிரிட்ஜூவல் கோல் –
கடவுளை மனிதர்களுக்காக செயலாற்ற வைப்பது//

நல்ல விஷயம்தான் என்றாலும் ரொம்ப கஷ்டமானதும்கூட.

மரம் சும்மாயிருந்தாலும்
காற்று விடுவதில்லை
என்பது போலத்தான்
வாழ நேர்ந்து விடுகிறது.
000

பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ஒருதடவ ரொம்ப சீரியஸான மேட்டர் பேச அப்துல்லாவ அண்ணாவ கூப்பிட்டவ, அவரோட காலர் ட்யூன் கேட்டுட்டு பேச வேண்டிய மேட்டரையே மறந்துட்டேன், கேட்டா ராஜா , ரஹ்மான் எல்லாம் கூப்புட்டு தொந்தரவு பண்றாங்க, அதான் இப்டிங்கிறாரு.


நல்ல வேளை வேற யாரும் கேராகி மாப்ள மூஞ்சில இருந்த எலுமிச்சைய புழிஞ்சுடலைல?
இன்னைக்கு கூட தினமலர்ல மெட்ரோ மேன் தமிழகத்தை சேர்ந்தவர் , கேரளாவில் படித்தவர்னுதான் செய்தி போட்ருந்தாங்க.
அப்துல்லாவிற்கு

பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்

ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?

பாட்டும் நானே பாவமும் நானே
//என்னைப் பாடச் சொல்லாதே...//

இது நல்ல மேட்சா இருக்கும்!
selventhiran said…
வாங்க கேபிளண்ணே, இந்திரவிழா என்ன ரிசல்ட்?

வாங்க சின்ன அம்மிணி (ஏனுங்க நமக்கு கோயம்புத்தூருங்களா?!)

நாஞ்சிலார், பிரபாகர் வருகைக்கு நன்றி!

அகநாழிகை, இன்றைய தினமலர் மற்றும் தந்தியில் அவர் ஒரு தமிழர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மை மட்டுமல்ல அவர் இந்தியாவின் தலை சிறந்த செயல் வீரர்! வருகைக்கு நன்றி!

வாங்க ஜோசப், வாங்க முரளி

வாங்க வால்!
பாசகி said…
//..“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”..//

உங்களுக்கு அவர பாத்தா பெரிய மனுசனா தெரிஞ்சுருக்கு. அதேமாதிரி அவருக்கு உங்களை பாத்தப்போ... பாத்தப்போ...
.
.
.
.
.
.

ஜோவியலான ஆளா தெரிஞ்சதோ என்னமோ :)
/
பார்க்க பெரிய மனுஷனாய் இருக்கிறானேயென்று பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் விளக்கம் கேட்டேன்.
“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”
/
:))))))))))
ROTFL
உங்கள பார்த்தா அவருக்கு அப்படி தோணியிருக்குமோ........
ஸ்பிரிட்ஜூவல் கோல் – கடவுளை மனிதர்களுக்காக செயலாற்ற வைப்பது –

wow superb
அதுக்குத்தான் நம்மள ஒழுங்காப் படிக்கணும்ங்கிறது :)

மயூராவின் இக்கவிதைத்தொகுப்புப் பற்றி அறிமுகப்படுத்தி முகவரியோடு எப்பவோ ஒரு பதிவு போட்டிருந்தேன்.(அவர் கவிதைகள் பற்றிய என் கருத்துக்கள் என்னுடைய முதிர்ச்சியில்லாத எழுத்து)
Sanjai Gandhi said…
//டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசனின் இயக்குனர் திரு.ஸ்ரீதரன் ஒரு தமிழர் என்று தொடந்து உள்ளூர் பத்திரிகைகள் எழுதி வருவது எதனால் என்று தெரியவில்லை. அவர் கேளராவின் கருகாபுத்தூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயரே ‘இலத்துவலப்பில் ஸ்ரீதரன்’ என்பதுதான்.//

இவர் படித்தது தான் கேரளா. பிறந்தது தமிழகத்தில் எனக் கேள்வி.
இப்போ பதவியை ராஜினாமா செய்யும் அளவு பிரச்சனை ஆகிவிட்டது பவம்.
அப்துல்லா ட்யூனுக்கு...அவர்க்கிட்டயே நானும் சொன்னேன்.

' பாட்டு நல்லாத்தானே இருக்கு! அப்புறம் ஏன் இந்த லந்து? ' ன்னு!

எலுமிச்சை மேட்டர் :)))
அண்ணே நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள் எனக்கொன்று அனுப்பி வைய்யுங்கள்.

அப்புறம் ”என்னைப் பாடச் சொல்லாதே” இதுதான் நம்ப அடுத்த காலர் டியூன்.

:))
Thamira said…
நீங்கள் குறிப்பிட்டிருந்த சம்பவத்துக்கு ஏற்ப இருந்தது அந்த புத்தகத்தலைப்பு :நெடுஞ்சாலையை கடக்கும் நத்தைகள்.!

சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் கொடுமைடா சாமி.!
Admin said…
நல்லாத்தான் இருக்கு அசத்திட்டிங்க....
/
ஆதிமூலகிருஷ்ணன் said...

சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் கொடுமைடா சாமி.!
/

எதை சொல்லுறீங்க தாமிரா நடுவில வர்ற பலன்ச் ப்ரேக்கையா???
:)))))))))))
நல்லா பிழியறீங்க எலுமிச்ச ஜூஸ் .. ஹி ஹி
Anonymous said…
http://en.wikipedia.org/wiki/E._Sreedharan
selventhiran said…
வாங்க பாசகி, ஜோவியலை விடுங்கள். கல்யாண பந்தியில் 'அவியலை சிறுகுவியலென வை!' அப்படின்னு சொன்னதற்கு ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

மங்களூரார், குப்பன், நியாஸ், முத்துவேல், ஐசிக்யூ, சுரேகா, அப்துல்லாண்ணே, ஆமுகி, சந்துரு, ரெட்மகி, அணானி வருகைக்கு நன்றி!

Popular Posts