சந்தேகம்

ஐ.ஐ.எம் - அகமதாபாத்தின் இருபத்தைந்து வெற்றியாளர்களின் கதையான 'ஸ்டே ஹங்ரி..ஸ்டே ஃபூலிஷ்' புத்தகம் வெளியான ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் ஆசிரியரான ரேஷ்மி பன்சாலும் ஓர் ஐ.ஐ.எம் - மேக்கிங்தான். இந்திய புத்தகச் சந்தையினைத் தாங்கிப் பிடிப்பது சுயமுன்னேற்ற நூல்கள்தாம் என்பதற்கு மேலும் ஒரு சாம்பிள் இது.

***
'ஆப்பு' எனும் பெயரான் கீழ்க்கண்ட நபர்களுள் ஒருவராக இருக்கலாம் என நான் தீவிரமாக சந்தேகிக்கிறேன்.

1. சஞ்ஜெயின் எதிர்வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது குழந்தை

2. காக்கர்லால்

3. லதானந்தின் கார் டிரைவர்

4. நான்கு மாத சம்பளப் பணத்தை மிச்சப்படுத்தி, 'செகண்ட் ஹேண்ட்' மொபைல் வாங்கி தன் காதலனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு பதிலழைப்பிற்குக் காத்திருக்கும் பைப் கடை முருகேஷ்வரி.

5. முத்தாலம்பட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பா. கணேசன்

6. ஜெயமோகன்

7. நாமக்கல் - திருச்சி சாலையில் இரவு பத்தரைக்கு மேல் தென்படும் அரவாணி நிர்மலா

8. வெங்கட்பிரபு

9. மனுஷ்ய நாடகத்தில் வரும் தந்தி ஆபிஸ் கிழவர்

10. ஜல்லிப்பட்டி பழனிச்சாமியின் வாழைத்தோட்டத்தில் மறைந்து கொண்டு பச்சைக் கற்பூரத்தை வாழைப்பழத்தில் வைத்து முழுங்க யத்தனித்துக்கொண்டிருக்கும் சரோஜா.

11. ராக்போர்ட் சந்துரு

12. அசினின் மானேஜர்

13. வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாச சிடி வாங்க கிஞ்சித்காரம் டிரஸ்ட் வாசலில் ஆட்டோவில் இறங்கும் பெரியவர் நரசிம்மன்.

14. மாவோ இயக்கத்தின் க்யூப கிளையின் செயலாளர் டாம் என்கிற சீஸ் கட்டர்

15. சுஜித் சோமசுந்தர்

16. தற்கொலை செய்யும் தீர்மானத்தில் 'லேட்டனா காமிரா' பூக்களை வயிறு புடைக்கத் தின்றுவிட்டு மலை உச்சியில் காத்திருக்கும் வரையாடு

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம்தானே?!

***

வெப்காமிரா வசதி இல்லாதவர்கள் தங்களது காமிரா மொபைலை வெப்கேம் ஆகப் பயன்படுத்தும் வசதியை இந்த இணையதளம் தருகிறது.
***

உறுத்தாத மழை, அழுத்தாத குளிரென கோவை ஒரு சொர்க்கமாக மாறிக்கொண்டிருந்த ரம்மிய மாலையில் ச்சின்னப்பையன், வால் பையன், தாரிணி, விஜிராம், சஞ்ஜெய், வடகரை வேலன் மற்றும் இரு வல்லவர்களுமாக ஒரு சிறிய சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் பலனாக கொங்கு பதிவர்கள் ஒருங்கிணைந்து கொஞ்சம் உருப்படியான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். விரைவில் நல்ல செய்திகள் வரும்.

***
ஒரு சீனத் தம்பதியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை எர்கோவில் படித்தேன். கணவன், மனைவி இருவருமே 29-04-1982ல் பிறந்தவர்கள். இருவரது பெயருமே 'வேங் யெங்'. இருவருக்கும் ஓரே அலுவலகத்தில் பணியும் கூட. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் சண்டையே போடுவதில்லையாம். காரணம்: சண்டையில் இருவரும் தங்களது பெயரைச் சொல்லியே திட்டியாக வேண்டும் என்பதால்!

***

"யாவரும், கேட்பதற்கு தீவிரமாயும், பேசுவதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும் - இருக்க கடவர்கள்" - யோகோபு 1:19

***

" I think I am trying to make my head as empty as it was when I was born on to this damaged planet fifty years ago." - Kuri Vonnegut Jr.

Comments

எனக்கு கூட ஒரு சந்தேகம் இருக்குதுங்க... அந்த 'ஆப்பு' நானாகூட இருக்குமோ?

:)
Karthikeyan G said…
//15. சுஜித் சோமசுந்தர்//

ha ha ha...

this is top :)))
RaGhaV said…
//யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம்தானே?!//

நள்ளிரவில் தூங்காம பதிவு எழுதுனா இப்படிதான் சந்தேகம் வரும்.. :-)
Anonymous said…
நான் அடுத்த முறை கோவை வரும்போது எல்லாரையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.
selventhiran said…
ஊர்சுற்றி, கார்த்திகேயன், ராகவேந்திரன், சின்ன அம்மிணி வருகைக்கு நன்றிகள்!
மணிஜி said…
ஆப்பு யார்னு எனக்கு தெரியும் செல்வா....சொல்லவா?
ம்.. ம்.. சந்தேகம் வழுக்கின்றது.
//சஞ்ஜெயின் எதிர்வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது குழந்தை//

நானும் அப்படி தான் சந்தேகிக்கிறேன்!
ஆனால் கோஸ்ட் விரைட்டர் சஞ்சய் தானாம்!

எப்பூடி!
" I think I am trying to make my head as empty as it was when I was born on to this damaged planet fifty years ago." - Kuri Vonnegut Jr.

//

ஆஹா...தொர இங்கிலீசு எல்லாம் பேசுது :)
// சின்ன அம்மிணி said...
நான் அடுத்த முறை கோவை வரும்போது எல்லாரையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

//

ஆமா..ஆமா..பார்த்துட்டுதான் அடுத்த வேலை பார்ப்பீங்க...தெரியாதாக்கா உங்கலைப் பற்றி :)
மூன்றாம் 'பாலினள்' நிர்மலா என்று குறிப்பிட்டிருக்கலாம்...... என்பது என் மிக மிகத் தாழ்மையானக் கருத்து.......


மற்றபடி நீங்கள் எடுக்கும் புது முயற்சி ஆட்டையில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களாஆஆ.......
Thamira said…
எனக்குக்கூட செலா டெய்லி டீ சாப்பிடும் முக்குக்கடை மாஸ்டர் மேல சந்தேகமா இருக்குது..

(அப்புறம் பதிவுக்கு வாங்க.. வேறென்ன? விருது வாங்கத்தான்)
iniyavan said…
அப்போ நீங்க இல்லையா?

(சும்மா ஜாலிக்காக செல்வா)
///தண்டோரா said...
ஆப்பு யார்னு எனக்கு தெரியும் செல்வா....சொல்லவா?///

செல்வா நல்ல சான்ஸ்..!

அண்ணன்கிட்ட கேட்டு இவர்தான் ஆப்பு அப்படீன்னு ஒரு பதிவு போடுங்க..

ஐயாயிரம் ஹிட்ஸ் உறுதி..!
Anonymous said…
சீனத் தம்பதி விஷயமெல்லாம் சொல்றீங்க... கேண்டிக்கு செல்வேந்திரன்னு பேரு மாத்தப் போறீங்களா, இல்லை நீங்க கேண்டீன்னு பேரு மாத்திக்கப் போறீங்களா
சொம்ப எடுத்து வைங்கப்பா!
ஜீவா said…
தயவு செய்து படிக்கவும்


http://gg-mathi.blogspot.com/2009/07/blog-post_23.html
Sanjai Gandhi said…
எங்க எதிர் வீட்டு ரோஹித் வெவகாரமான ஆளு. அவனெல்லாம் அட்ரசோட வந்து தான் ஆப்படிப்பான். ஒளிஞ்சிட்டு இல்ல. :))
Sanjai Gandhi said…
// சின்ன அம்மிணி said...

நான் அடுத்த முறை கோவை வரும்போது எல்லாரையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.//

நல்ல காமெடி.. ரசித்து சிரித்தேன்.
Sanjai Gandhi said…
// ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்குக்கூட செலா டெய்லி டீ சாப்பிடும் முக்குக்கடை மாஸ்டர் மேல சந்தேகமா இருக்குது..
//

டீ தூளுக்கு பதில் புளியங்ககொட்டை பொடி கலந்திருப்பான்னா? :))
இது என்ன ஃப்லோரஸண்ட் கலர், சார்
ஏதாவது வாஸ்து... சமாச்சாரமா
இது என்ன ஃப்லோரஸண்ட் கலர், சார்
ஏதாவது வாஸ்து... சமாச்சாரமா
//
உறுத்தாத மழை, அழுத்தாத குளிரென கோவை ஒரு சொர்க்கமாக மாறிக்கொண்டிருந்த ரம்மிய மாலையில் ச்சின்னப்பையன், வால் பையன், தாரிணி, விஜிராம், சஞ்ஜெய், வடகரை வேலன் மற்றும் இரு வல்லவர்களுமாக ஒரு சிறிய சந்திப்பு நிகழ்ந்தது.
//
நாங்களும் ஊருக்குள்ளதானே இருக்கோம்..

ஆட்டைக்கு சேக்கவே இல்லையேணா..
அண்ணா.. நீங்க கேட்ட அந்த நிதிநிறுவனத்தின் தகவல்களை பெறுவதில் ஆகிக்கொண்டுள்ள தாமதத்திற்கு மன்னிக்கவும்..

Popular Posts