கடவுளரை உருவாக்கும் சுண்டெலிகள்!
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் பொது சுகாதாரத்திற்காக செலவு செய்யும் 175 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 171 வது இடம் கிடைத்துள்ளது. இந்த வகையில் கொடிய வறுமையில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் படு கேவலமான இடம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது 62வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மகிழ்வான செய்தி அல்லவா?!
***
'அய்யோ இவர்கள்தான் ஜுரிகள் எனத் தெரிந்திருந்தால் அவர்களது ரசனை மட்டத்திற்கு எழுதி இருப்பேனே' என்கிற புலம்பல்களை மவுனமாக ரசித்து விட்டு நகர வேண்டி இருக்கிறது. 'கடவுளரை' உருவாக்கும் கதவிடுக்கு எலிகளின் கூக்குரல்கள். அறிவின் போதாமையால் நிகழும் இத்துதி பாடல்களால்தாம் 'தமிழிலக்கிய அத்தாரிட்டிகள்' உருவாகிறார்கள். நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்து 'நல்ல ஓட்டத்தை ஓடினேன். முடித்துக்கொண்டேன்' என்றார். 'பார்முலா ஒன்' ரேஸில் போய் ஓடலாமோ?!
***
பதினைந்து வயதில் 'மனஸ்' படித்திருப்பேன். அதே காலகட்டத்தில்தான் அப்புசாமிக் கதைகளையும் நூலக அலமாரிகளில் தேடித் தேடிப் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு எழுத்தாளர்களும் ஒருவரே என்றறிந்த ஓரிரவில் மலைத்துக் கிடந்தேன். ஹாஸ்யக் கதைகளை எழுதுகிற பாக்கியம் ராமசாமிதான் 'மனஸை' எழுதினார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஜ.ரா. சுந்தரேசன் எனும் அந்த எழுத்துக்கலைஞன் மீது ஏற்பட்ட பிரமிப்பு அவரது 'வா!' எனும் மிகச் சமீபத்திய சிறுகதை வரை தொடர்கிறது. 37 வருட பத்திரிகைப் பணியில் தன் 'க்ரியேட்டிவிட்டியை' சாகாமல் வைத்திருந்ததும், 77 வயதிலும் படைப்புலகில் மல்லுக்கு நிற்பதும் சாமான்யம் இல்லை. தமிழிலக்கிய அத்தாரிட்டிகள் இவரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்தான் வாசகனை முட்டாளடிக்கும் வரிகளை எழுதியதில்லையே!
***
மைக்கேல் ஜாக்சனின் கல்லறையில் பதிக்கப்பட இருக்கும் 'மோனுமண்ட்' எனும் நினைவுக் கல்லை வடிவமைத்தது ஒரு தமிழர். அதுவும் கோயம்புத்தூர்காரர். செய்தி கேட்டதும் தேடிப் போய் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு வந்தேன். மஞ்சள் பையோடு கடல் கடந்த கிராமத்துக்காரர் சொந்த உழைப்பில் முட்டி மோதி அமெரிக்காவில் மூன்று கடைகளை வைத்திருக்கிறார். 'உலகிலேயே அதிகம் பேர் க்ளிக் செய்யப்போகும் கல் இதுவாகத்தான் இருக்கும்' என்று பெருமிதம் பொங்க சொன்னார். இவரது வெற்றிக்கதையினை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.
***
லேண்டனா காமிரா எனும் அழகுச் செடி எப்படி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியின் உணவுச் சங்கிலியை அழிக்கிறது என்கிற கதையை 'காட்டுப்பூ'வில் எழுதி இருந்தேன். ஒரு மலைப் பயணத்தில் திரு.லதானந்த் தகவலாகச் சொன்ன ஒற்றைச் செய்தியைப் பின் தொடர்ந்ததில் கிடைத்த கட்டுரை அது. அதன் சிறு பகுதி...
'துரைசாணியம்மா' என்று பழங்குடியினரால் அழைக்கப்பட்ட ஆங்கிலேயப் பெண்கள், தங்களது 'ஹோம் சிக்' ஐ போக்க இங்கிலாந்தின் மர, செடி வகைகளை வரவழைத்து தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், முற்றங்களிலும் நட்டனர். அப்படி நடப்பட்ட அழகுச் செடிகளுள் ஒன்றுதான் 'லேண்டணா காமிரா'. சிறிய அளவில் வண்ண, வண்ணமாகப் பூக்கும் உண்ணிச்செடியான லேட்டணா காமிரா 'பார்த்தீனியத்தைக்' காட்டிலும் வேகமாகப் பரவி ஊட்டி, கொடைக்கானல், முதுமலை, ஆணைமலை என மேற்கு தொடர்ச்சி முழுமைக்கும் பரவி இயற்கைக்கு சவால் விடுகிறது.
இச்செடி வளர்கிற இடங்களின் அருகில் உள்ள புல், பூண்டுகள் இதர வகைச் செடிகளை வளரவிடாமல் செய்து விடும். விலங்குகளின் உணவுச் சங்கிலியில் புல்தான் பிரதானம். காடு முழுவதும் 'லேட்டணா காமிரா' வேகமாகப் பரவுவதால் உணவுச் சங்கிலியைப் பாதித்து உயிர்ச்சுழலை அழித்து விடும் அபாயமும் இருக்கிறது.
யாதொரு பலனும் தராத, உலகைச் சீரழிக்கிற அழகுச் செடிகளை வாங்கி அவற்றிற்கு தனிப்பட்ட கவனிப்பைக் கொடுத்து தண்ணீரை, நேரத்தை, பணத்தை விரயமாக்குவதை விட சமூகத்திற்குப் பலனளிக்கும் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதை லேட்டனா கொஞ்சம் லேட்டாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

Comments
லேட்டணா வைக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள் அந்த லேட்டணா என்னானு புரியும்படி சொல்லி இருக்க கூடாதா.
குரொட்டன்ஸ் வகையா
குறிப்பிட்டு சொல்லவும்
ஆங்கில வார்த்தை என்றாலும் பரவாயில்லை
சரியாகச் சொன்னீர்கள் செல்வேந்திரன். இப்போதாவது அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.
:-(((((
//'மோனுமண்ட்'//
அருமையான செய்தி..
மொத்தத்தில் அட்டகாசமான கோர்வை.. :-)
எலெக்சனில் செலவு செய்வதில் நாம்தானே முதலிடத்தில் இருக்கிறோம்?
//புலம்பல்களை மவுனமாக ரசித்து விட்டு நகர வேண்டி இருக்கிறது//
இந்த கருத்துக்கு நான் முரண்படுகிறேன். முதலில் பொதுவான நடுவர் என சொல்லிவிட்டு, பின் அவர்களே இருந்ததால் தான் இந்த குழப்பம். உங்களுக்கே தெரியும், அவர்களின் நடை, ரசனை. தேர்ந்தெடுத்த கதைகளையும் பாருங்களேன், புலம்பல்களில் நியாயம் இல்லாமல் இல்லை.
//தமிழிலக்கிய அத்தாரிட்டிகள் இவரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்//
மிகச்சரி. ரொம்பவும் சாதாரணமாக, ஜனரஞ்சமாக எழுதுபவர்களுக்கு இது போன்றுதான் நடக்கும்.
//வெற்றிக்கதையினை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.//
சீக்கிரம் எழுதுங்கள்
//லேட்டனா கொஞ்சம் லேட்டாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது//
கற்றுக்கொடுத்தாலும் பின்பற்றுவோமா என்பதுதான் பெரிய கேள்வி.
பிரபாகர்.
நல்லெழுத்து.
அங்கேயும் இரண்டே சக்கரம் உள்ள காரோ, அல்லது ஒரு ஆமை வண்டியோ உங்களை முந்தும்..... பரவாயில்லையா.....?
மிகச்சரியா சொன்னிங்க!(சொல்லியிருக்கார்)
அப்படியா? அட. (நிஜமாகவே அவரது சொந்த வடிவமைப்பா அல்லது யாராவது பிரபல சிற்பி வடிவமைத்ததை செதுக்கித் தருகிறாரா?)
வாங்க அணாணி, நோனோ பின்னூட்டத்தினைப் பார்க்கவும்.
வாங்க ராகவன்.
வாங்க ராகவேந்திரன்.
ஆமாம் ஆர்.ஆர். அவர்தான். பொள்ளாச்சிக்காரர். குடியிருப்பது சாயிபாபா காலனியில்.
வாங்க பிரபாகர்.
தண்டோரா அண்ணே நானும் உங்களைக் கூப்பிடுகிறேன். மருதமலைக்கு!
வாங்க முத்துராமலிங்கம்.
வாங்க அசோக்.
வாங்க பித்தன்.
வாங்க வால்!
வாங்க கார்த்திக்
வாங்க முரளிக்கண்ணன்
வாங்க சரவணன்
அனைவரது வருகைக்கும் நன்றிகள்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
மங்களூர் அண்ணே சுட்டிக்கு நன்றி.
கார்க்கி, ஒருவேளை சுந்தரேசனை உங்களுக்கு பிடிக்கலாம்.
வாங்க சொக்கன், வி.ஐ.பி விசிட்!