அய்யனாருக்கு...
அன்பின் அய்யனார்,
'அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் 'தேவடியாள்' என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. பரத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடம் குடிகொண்டன' என்கிற ஜி. நாகராஜன்
'விபச்சாரம் ஒரு சமூக உயவு. சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காக்கின்ற விலைமாந்தர்கள் சமூக சேவகர்கள்!' என்கிற ஓஷோ ஆகியோரிடத்தில் ஊறி வந்தவன் 'விபச்சாரி' எனும் பதத்தை எக்காரணம் கொண்டு பிரயோகித்திருக்க வேண்டாம்தான். திருத்திக்கொள்கிறேன்.
இணைய விவாதமொன்றில் இப்படி எழுதியிருந்தேன்...
ஒரேயொரு ஆடவனின் அன்புக்கு பாத்திரமாகக் கடைசிவரை இருந்து வாழ்ந்தவர்களைக் 'காதல் பரத்தையர்' என்றும், பொருள் தேடும் நோக்கில் காமத்தை விலைக்கு விற்றவர்களை 'வேசிகள்' என்றும் அழைத்து வந்தது தமிழ்ச்சமூகம். மன்னர்களுடைய அரண்மனைகளில் நூற்றுக்கணக்கான தாசிகள் இருந்தனர். அவர்கள் மன்னனை மட்டுமல்லாது, விருந்தினர்களையும், போர்க்காலங்களில் போர் முனைக்குச் சென்று வீரர்களையும் உற்சாகமூட்டியது வரலாறு. புத்தருடைய தவத்தைக் கலைக்க அவரது தந்தை கத்தோதனர் விலைமாதரை நாடி இருக்கிறார். வைசாலி குடியரசில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அதை அரசாங்கமே வளர்க்கவும், அவள் பருவமடைந்த பின் அரச குடும்பமே அவளை அனுபவிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது. புத்த சரித்திரத்தில் புகழ் பெற்ற 'அம்பாபாலி' இப்படிப்பட்ட ஒருவள்தான். ஆண்டவனுக்குச் சேவை செய்த தேவரடியார்கள் பிற்காலத்தில் பக்தர்களுக்கும் சேவை செய்யத் தொடங்கி தேவதாசிகள் ஆனார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழ்க்கை முறையாக இருந்திருந்தால், வேசி, பரத்தை, கணிகை, தேவதாசி, விபச்சாரி, சேடி, தாசி போன்ற வார்த்தைகளே தோன்றி இருக்காது.
விபச்சாரம் உலகின் புராதன தொழில். விபச்சாரம் சமூகக் குற்றங்களைக் குறைக்கும் உயவுப் பொருளாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை முறைப்படுத்த அரசாங்கம் தவறியதன் விளைவுதான் தமிழகம் / இந்தியா எய்ட்ஸில் முன்னணியில் இருக்கக் காரணம். கற்பிதங்களும், உணர்ச்சி வசப்பட்ட விவாதங்களும் தொடர்ந்து நம்மைப் படுகுழியில்தான் தள்ளி வருகிறது. விபச்சாரிகளுக்கு முறையான உடல் சோதனைகள் செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டு, பாதுகாப்பான உடலுறவிற்கான சாதனங்களும் வழங்கப்பட்டு வரும் தேசங்களில் இருப்பதை விட பாரத மணித்திருநாட்டில் எயிட்ஸ் அதிகம் இருப்பதை எவரால் மறுக்க இயலும்?!
போர்க்கப்பலில் சென்னை வந்த ஐரோப்பிய ராணுவ வீரர்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு, கால் கேர்ள்ஸை அழைத்து வந்து 'மாமா வேலை' பார்க்கத் தயாராக இருக்கும் அரசாங்கம் அதே சேவையைத் தன் சொந்த குடிமகனுக்கு மறுப்பது எந்த வகை நியாயம்?!
க.சீ. சிவக்குமார் பற்றி இந்தப் பக்கங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பெயர்கள் குறித்த அவரது அபிப்ராயம் ஹாஸ்யச் சுவை கொண்டதாக இருந்ததால் பகிர்ந்துகொண்டேன். தவிர வால்பையன் உள்ளிட்ட பல பதிவர்களை அறிந்தவர் க.சீ.சி.
என் எழுத்துப்பொறுப்பு காணாமல் போயிருக்கிறது என்கிற தங்களது விமர்சனம் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வைக்கிறது. அன்பிற்கு நன்றி அய்யனார்.
'வாழ்க பிரபலங்கள்' எனும் சொல்லாடல் ஐஸ் கத்தி! :(
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Comments
//'அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே//
nice
பெண் பிறவியே அதிசயம் தான்.. கணவன் குடித்துவிட்டோ, பாக்குபோட்டோ, சிகரெட்டொ, கருப்போ, வெறுப்போ, குள்ளமோ, வழுக்கையோ, prematureரோ, amateurரோ.. அப்படியே ஏற்றுக்கொள்வது.
நான் சரக்கடிக்காத போது வேறு நண்பன் சரக்குப்போட்டு மொக்கபோட்ட நாத்தம் தாங்காம escape ஆகியிருக்கேன்.
பெண் ஆச்சரியமே?
நச்...
எனக்கு இதைப்பற்றியெல்லாம் பேச வயது வரம்பு இடம் கொடுக்காதெனினும், பகிர்வுக்கு நன்றி. இதில் தாய்லாந்து நாட்டுக்காரர்களிடமிருந்து கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம். டாஸ்மாக்கிற்கே எள்ளல் நிரம்பியிருக்கும் நம் நாட்டில் இதெல்லாம் சாத்தியப்பட பலகாலமாகும். ப்ரொஹிபிஷன் இருந்து வரும் குஜராத்தை வைத்துக்கொண்டு, நீங்கள் சொல்லும் அஃபிஷியல் செக்ஸ்-வொர்க்கர்ஸ் லேபிளை ஒட்ட நிச்சயம் துணிச்சல் மிகுந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் ஆளும் காலம் வரவேண்டும். ஸோ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
000
//சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காக்கின்ற விலைமாந்தர்கள் சமூக சேவகர்கள்//
குற்றங்கள் பெருகாது போவதற்கு முக்கிய காரணம், போதை, விபச்சாரம் போன்ற ஆற்றுப்படுத்தல்கள்தான். மனதிலிருக்கும் ஆதி வன்முறையை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தீர்த்துக் கொள்கிறோம். சிலருக்கு எழுத்து.
000
//உயவு// என்ற வார்த்தை உபயோகத்தை ரசித்தேன்.
000
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
Niyayamana kelvi...!!!
நியாயமான கேள்விதான்.
கர்நாடகாவில் ,குறிப்பாக பெங்களூருவில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதாகக் கேள்வி.
(வழக்கமாக எனது முதல் பின்னோட்டத்தில் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன்)
எது விபச்சாரம் .........
உடலால் செய்வதா ...... இல்லை உணர்வுகளால் செய்வதா ????
Yes you are right 100%
//சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காக்கின்ற விலைமாந்தர்கள் சமூக சேவகர்கள்//
குற்றங்கள் பெருகாது போவதற்கு முக்கிய காரணம், போதை, விபச்சாரம் போன்ற ஆற்றுப்படுத்தல்கள்தான். மனதிலிருக்கும் ஆதி வன்முறையை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தீர்த்துக் கொள்கிறோம். சிலருக்கு எழுத்து."
உங்களின் மனதில் இருக்கும் வன்முறையை தீர்த்து கொள்ள இன்னொருவர் விபச்சாரம் செய்தால் நலம் என்று பொருள் படுகிறது எனக்கு .....
நீங்கள் நல்லவனாய் வாழ ஒரு பெண் விபச்சாரம் செய்ய வேண்டுமா ????
(இன்னும் சொல்லி இருப்பேன் ...... வேண்டாம் என்று விட்டேன்)
தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்
//என் எழுத்துப்பொறுப்பு காணாமல் போயிருக்கிறது//
நிச்சயமாய்..
நிறைய எழுதுங்கள் செல்வா.. :-)
குற்றங்கள் பெருகாது போவதற்கு முக்கிய காரணம், போதை, விபச்சாரம் போன்ற ஆற்றுப்படுத்தல்கள்தான். மனதிலிருக்கும் ஆதி வன்முறையை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தீர்த்துக் கொள்கிறோம். சிலருக்கு எழுத்து."
உங்களின் மனதில் இருக்கும் வன்முறையை தீர்த்து கொள்ள இன்னொருவர் விபச்சாரம் செய்தால் நலம் என்று பொருள் படுகிறது எனக்கு .....
நீங்கள் நல்லவனாய் வாழ ஒரு பெண் விபச்சாரம் செய்ய வேண்டுமா ????
(இன்னும் சொல்லி இருப்பேன் ...... வேண்டாம் என்று விட்டேன்)//
நிச்சயம் நீங்கள் இன்னும் சொல்லி இருக்கலாம் டம்பி மேவீ.
ஐஸ் கத்தியை பிரயோகித்திருக்க வேண்டாம்தான் அந்த நிமிடத்தின் உணர்வு அவ்வளவே :)
Is this true??
//
ரசித்தேன்.
நல்ல கேள்வி..
மிக வலிமையான வார்த்தை பிரயோகங்கள்,
வலியின் வலியை வளமையாய் சொன்னவிதம்,
சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் கோபமும்
எல்லாம் சொல்லி சென்ற பதிவு அருமை
ஒரே வார்த்தையின் வாழ்க்கை
ஒவ்வொருவரின் மதி படும்போது
மாறிப்போகிறது, சிலரினால் மட்டுமே
முழுமை அடைகிறது
கம்பீரம்