குதிப்போர்க்கு...
கோவை அரசு கலைக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் திரு. கனகராஜ், இந்திய ஆட்சிப்பணிக்கும், அரசின் பிற பணிகளுக்குமான தேர்வுகளுக்கு மாநகராட்சி பள்ளி மாணவர்களைத் தயார் செய்யும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவரோடு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையரும் சேர்ந்து ஒவ்வொரு பள்ளிகளிலும் “கேரியர் கைடுலைன்ஸ்” என்றொரு வழிகாட்டி நிகழ்ச்சியினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பேச அசிஸ்டெண்ட் கமிஷனருடன் அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன். ஊடகத்துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பின் கிடைத்த அவகாசத்தில் 'கதைகள் என்ன செய்யும்?' என்கிற என் பேஃவரிட் சமாச்சாரத்தையும் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
நேரடி உரையாடலில் மாணவியர்கள் பலருக்கும் எழுத்தார்வம் இருப்பதையும், தயக்கம், கூச்சம், அறியாமை போன்ற காரணங்களால் வெளிப்படுத்த தயங்குகிறார்கள் என்பதையும் உணர முடிந்தது. பேர்பாதியினர் கவிதை எனும் பெருநோயின் ஆரம்ப அறிகுறியான “அகவலோசைக் கவிதைகளைப்” பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கின்றனர்.
***
என்.டி.டிவியில் பெண்பாற் கவிஞர்களின் நவ கவிதைகளை முன் வைத்து டாகுமெண்டரி ஒளிபரப்பினார்கள். குட்டிரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி போன்றோரது உரையாடல்களுக்கும், கவிதைகளுக்கும் சப்-டைட்டில் போட்டு அசத்தலாக இருந்தது டாகுமெண்டரி. குட்டிரேவதியின் ‘முலைகள்’ வெளியானபோது சினேகன், பழனிபாரதி, அப்துல்ரஹ்மான் போன்றோரது எதிர்வினைகள் ரொம்பவும் ஆறிய பழங்கஞ்சி. அதையே அடிக்கடி நோண்டியது மட்டும் நெருடல். இத்தனைச் சுத்தமாக இதைத் தயாரித்திருப்பது பிரீதம் சக்கரவர்த்தி. சாருவின் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்!
“இதுமாதிரி தமிழிலக்கியவாதிகள் பற்றிய டாகுமெண்டரிகளை விஜய் டிவியில் ஐந்து வருடங்களுக்குள்ளும், கோபாலபுர டிவிக்களில் பதினைந்து வருடங்களுக்குள்ளும் எதிர்பார்க்கிறேன்” என்றேன் அண்ணாச்சியிடம். உனக்கு மூடநம்பிக்கைகள் ஜாஸ்தி என்கிறார் அவர்.
***
ஊரில் இருக்கிற எல்லா பிள்ளையார் கோவில்களிலும் அன்னதானம். முதல் பந்தியில் அறங்காவலர் குழுவினர்களின் குடும்ப உறுப்பினர்கள் வைர அட்டிகை சகிதம் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இரண்டாவது பந்தியில் கட்டளைதாரர்கள் மற்றும் குடும்பத்தார். மூன்றாவது பந்தியில் கணக்கப்பிள்ளை துவங்கி நாதஸ்வரக்காரர்வரை உள்ள கோவில் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தார். இவர்களெல்லாம் தின்று தீர்த்தது போக மிச்சம் மிஞ்சாடி இருந்தால் எழைப்பட்டவர்களுக்குக் கொடுப்பார்கள் போலும்.
இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே தானம். அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்’ என்று சிலர் சொல்வது இன்னும் அனர்த்தம். எந்த பந்தியிலும் தர்மகர்த்தாவும், கோவில் துப்புரவுப்பணியாளரும் சேர்ந்து சாப்பிட்டுப் பார்த்ததில்லை.
****
இசை (உறுமீன்களற்ற நதி), இளங்கோ கிருஷ்ணன் (காய சண்டிகை), தென்பாண்டியன் (மிதக்கும் காடு) ஆகிய மூவேந்தர்களும் நவீன கவிதை இலக்கியத்தில் காத்திரமாய் வினையாற்றும் கோயம்புத்தூர்க்காரர்கள். மூவரையும் அண்ணாச்சி, சஞ்ஜெய் சகிதம் சென்று சந்தித்தோம்.
ஓர் இலக்கிய நிகழ்வில் கடந்த முப்பது வருடங்களில் தமிழ்க் கவிதைகளில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நிகழவில்லை என்பதாக நாஞ்சில் நாடன் பேசியதில் கொதித்துப் போயிருந்தனர்.
"கம்பனுக்குப் பின் கன்னித் தமிழ் எண்ணுறு ஆண்டுகள் என்ன செய்தது?" என்றெல்லாம் அகவலோசை ஆசாமிகள்தான் ஆஃப் பாயில் போடுவார்கள். கும்பமுனி ஏன் இப்படி ஆவேசப்பட்டார் என்பதுதான் புரியவில்லை. அவரது Buddy லிஸ்டில் இருக்கும் சுகுமாரன் கூட கண்ணுக்குத் தெரியவில்லையா?!
***
விநாயகர் சதூர்த்தி அன்று க.சீ.சி அழைத்திருந்தார்.
“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொலைப் பாறைகள் இருக்கிறது. அதில் இப்படி எழுதி வைக்கலாம்னு ஆசைப்படறேன்.
“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”
அல்சரே வந்துவிட்டது.
Comments
அப்படின்னா என்னா செல்வா?
///“இதுமாதிரி தமிழிலக்கியவாதிகள் பற்றிய டாகுமெண்டரிகளை விஜய் டிவியில் ஐந்து வருடங்களுக்குள்ளும், கோபாலபுர டிவிக்களில் பதினைந்து வருடங்களுக்குள்ளும் எதிர்பார்க்கிறேன்” என்றேன் அண்ணாச்சியிடம். உனக்கு மூடநம்பிக்கைகள் ஜாஸ்தி என்கிறார் அவர்.///
இதுக்குப் பேர் மூட நம்பிக்கையில்லே! பேராசை!
அப்படி நடந்தா தான் நாடு உருப்பட்டுருமே!
”குதிப்போர்க்கு”
சிரிச்சுகிட்டே இருக்கேன்!
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
பர்ஃபெக்டாத்தான் செட் ஆகுது :)
:(
முக்கிய விசேஷ நாட்களில் அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற சமபந்தி போஜனங்களிலும் இதே கதைதான்! - போஸ் கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் முகம் காட்டும் மனிதர்கள் இந்த விசயத்தில் பல ஏழை முகங்கள் மறைந்துவிடுகின்றன !
ஆற்காட்டாரின் பாவத்தால் சல்மாவின் உரையாடலை மட்டுமே கேட்டேன்
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'
வாய் வலிக்க சிரித்தேன்...அருமை
thenpandiyan parri arinthirukkireen vaasiththathillai
nanjsilar sonnathu avaralavil irukkalam.
athu muuda nampikkaithaan
“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”//
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு தலைவா
சரியாத்தானே சொல்லியிருக்காரு :)
‘ஏன் பாபு... பின்னாடி வர்றவன் இப்படி விடாம ஹாரன் அடிக்கானே... ஒருவேளை ஹாரன் சத்தம் கேட்டு பாலம் அகலாமாயிரும்னு எதிர்பார்க்கிறானோ!’
கோபாலபுர டிவிக்களில் வர சாத்தியமே இல்லை செல்வா, அவர்களுக்கு சுய தம்பட்டம் அடிக்கவே நேரம் போதவில்லை....?
சரிதான்.
என் டி டிவியில் இப்படியொரு நிகழ்ச்சியா?
ஆச்சரியம்..
அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்
இதெல்லாம் சும்மா பம்மாத்துக்கள் தானென சாப்பிடுபவர்களைவிட வேடிக்கை பார்க்கும் அனைவருக்குமே தெரிந்ததுதானே.....ஏரியா விளம்பரம்.
நாஞ்சில் கொஞ்சம் பிடிவாதக்காரர்.எதையும் சுலபத்தில் ஒப்புக்கொள்ளாதவர்.அவர் திருப்திபடுமளவிற்க்கு ஏதுமில்லை என்பதை பொதுப்புத்தியில் சொல்லிவிட்டாரோ என்னவோ....
க சீ சி......கொன்னுட்டார்.
குதிப்போர்க்கு கலக்கல்.
இம்மாதிரி கவிதைகளை பாலபாரதி பக்கெட் கவிதைகள் என்பார். எழுதுபவர்கள்
பக்கெட் கவிஞர்கள்
தொலைநோக்குப்பார்வையோடு தாங்கள் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் நுண்ணரசியல் ஏதும் இருக்கிறதா?
மற்றபடி பதிவு வழக்கம் போல சுவாரசியம். கடைசி க.சஷ்டி ரீமிக்ஸ் செல்வா டச்!
நீங்க விஷால் படமெல்லாம் பார்க்குறதில்லையா? சரியான ஸ்பெல்லிங் பொரச்சி என்பதே.
வேதனையான விஷயம்தான்...
கோவில் என்பதே கொள்ளையடிப்பவர்களின் கூடாரம்தானே..?
அன்பே...
ஏய் இளைஞனே...
எழுக தேசமே... என்று போட்டுத் தாக்குவார்களே அம்மாதிரி புர்ச்சி கவிதைகளுக்கு அடியேன் வைத்திருக்கிற பெயர்தான் 'அகவலோசைக் கவிதைகள்'//
செல்வா...
சிவாவுக்குப் பதிலாய்ச் சொனன் இந்தப் பின்னூட்டத்தில் சிவாவையும் அகவலாய் அழைத்துச் சேர்த்ததை ரசித்தேன்!
அப்புறம் அதாரு கும்பமுனி? நா எலக்கியத்துல கொஞ்சம் வீக்கு.!
***
அப்புறம் நான் அகவலோசைக்கவிதைகள் எழுதறதில்லைனு நினைக்கிறேன். ஹிஹி..
ஹா ஹா ஹா
அன்னாரது "துரையின் மரணம்" என்ற சிறுகதையில் கூட இந்த வரிகளைப் படித்ததாய் நினைவு.
தல உங்க பேஃவரிட் சமாச்சாரத்தை பற்றி ஏற்கனவே எதாவது பதிவு போட்டிருந்தால் சுட்டி கொடுக்கவும்.
“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொலைப் பாறைகள் இருக்கிறது. அதில் இப்படி எழுதி வைக்கலாம்னு ஆசைப்படறேன்.
“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”
அல்சரே வந்துவிட்டது. //
சூப்பர்,செல்வேந்திரன்.