ஜெய்ஹோ!
நாம் வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை. நம் நடு முதுகில் பூட்ஸ் தடங்கள் இல்லை. நம் வார்த்தைகள் எண்ணப்படவில்லை. நம் சந்திப்புகள் உளவு பார்க்கப்படுவதில்லை. நம் மதிய தூக்கத்திற்கு பங்கம் வந்ததில்லை. வசதியாக பின் பக்கம் சாய்ந்து இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தின் சுதந்திரச் சுவை நம் நாக்கில் ஊற குறைந்தபட்ச காரணங்கள் எதுவுமில்லை. நாளைய விடுப்பில் நண்பர்களோடு பிக்னிக் போகலாம், பதிவு போடலாம், அலமாரியைச் சுத்தம் செய்யலாம், தமனாவின் தத்துவ பேட்டியினைப் பார்க்கலாம், வருகிற தேசபக்தி எஸ்.எம்.எஸ்களை பார்வர்டு செய்யலாம். ஜெய்ஹோ!
Comments
வேற என்னத்த செய்ய/ சொல்ல
ஜெய்ஹோ!
அவர்களின் வலிகளும் அழுகைகளும் போர் அடிக்கிறது எனச்சொல்லி ரிமோட்டில் சேனல் மாற்றலாம்.
என்ன சொல்லியும் உரைக்கப் போவதில்லை நமக்கு.இன்ஷா அல்லா.
//அலமாரியைச் சுத்தம் செய்யலாம்//
இங்கு இதைத்தான் செய்ய முடியும்,
ஜெயஹோ!
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க நண்பா...
ஜெய்"கோ" னு வேணா நாம சொல்லலாம்..! :)
வீட்டுக்கு ஒரு குழந்தையை அடிமைப்படுத்த வில்லை.
நாம் சொகுசு வாழ்கை நடத்தி மற்றவர்களை போராட சொல்லவில்லை.
தனி நாடு கேட்டு ரவுடி தனம் செய்யவில்லை.
நம் கொடுமை தாங்காமல் வெளிநாட்டிற்கு சென்றவர்களை மிரட்ட வில்லை.
லட்சகணக்கான மக்களை கேடயமாக்கி நாம் மட்டும் பிழைத்தால் போதும் என்று சுயநலமாக இருக்கவில்லை.
ஜெய் ஹோ.