ஜெய்ஹோ!

நாம் வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை. நம் நடு முதுகில் பூட்ஸ் தடங்கள் இல்லை. நம் வார்த்தைகள் எண்ணப்படவில்லை. நம் சந்திப்புகள் உளவு பார்க்கப்படுவதில்லை. நம் மதிய தூக்கத்திற்கு பங்கம் வந்ததில்லை. வசதியாக பின் பக்கம் சாய்ந்து இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தின் சுதந்திரச் சுவை நம் நாக்கில் ஊற குறைந்தபட்ச காரணங்கள் எதுவுமில்லை. நாளைய விடுப்பில் நண்பர்களோடு பிக்னிக் போகலாம், பதிவு போடலாம், அலமாரியைச் சுத்தம் செய்யலாம், தமனாவின் தத்துவ பேட்டியினைப் பார்க்கலாம், வருகிற தேசபக்தி எஸ்.எம்.எஸ்களை பார்வர்டு செய்யலாம். ஜெய்ஹோ!

Comments

ம்
வேற என்னத்த செய்ய/ சொல்ல
ஜெய்ஹோ!
...இன்னும் முதுகு சொறியலாம்.கிசுகிசு பேசலாம்.கள்ள விஸ்கி அடிக்கலாம்.
அவர்களின் வலிகளும் அழுகைகளும் போர் அடிக்கிறது எனச்சொல்லி ரிமோட்டில் சேனல் மாற்றலாம்.
என்ன சொல்லியும் உரைக்கப் போவதில்லை நமக்கு.இன்ஷா அல்லா.
Thamira said…
அப்ப வேறென்னதான் பண்ணலான்றீங்க.?
selventhiran said…
மங்களூர் சிவா, ராஜாசந்திரசேகர், அசோக், ஆமூகி, பித்தன் வருகைக்கு நன்றி!
கிருபாநந்தினி said…
சரி, நீங்களும் ராஜா சந்திரசேகரும் மட்டும் வேறென்ன செய்வதாக இருக்கிறீர்களாம்? ஹூம்... பிளாகில் எழுதுறவங்க எல்லாருமே ஊருக்கு உபதேசம் பண்றதுல கில்லாடிங்கப்பா!
Unknown said…
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....
Anonymous said…
Super
நமது அண்டை நாடான இந்தியாவில் சுதந்திரதினம் கொண்டாடப்படும்போது என்று முடியும் என்று நினைத்தேன்
//நம் மதிய தூக்கத்திற்கு பங்கம் வந்ததில்லை//
//அலமாரியைச் சுத்தம் செய்யலாம்//
இங்கு இதைத்தான் செய்ய முடியும்,
ஜெயஹோ!
Anonymous said…
வாவ்!

ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க நண்பா...


ஜெய்"கோ" னு வேணா நாம சொல்லலாம்..! :)
Anonymous said…
ஒரு “லாம்” எடிட் ஆகியிருக்கிறதே?
Unknown said…
நாம் சொந்த மக்களிடம் இருந்து காசு பிடுங்கவில்லை.
வீட்டுக்கு ஒரு குழந்தையை அடிமைப்படுத்த வில்லை.
நாம் சொகுசு வாழ்கை நடத்தி மற்றவர்களை போராட சொல்லவில்லை.
தனி நாடு கேட்டு ரவுடி தனம் செய்யவில்லை.
நம் கொடுமை தாங்காமல் வெளிநாட்டிற்கு சென்றவர்களை மிரட்ட வில்லை.
லட்சகணக்கான மக்களை கேடயமாக்கி நாம் மட்டும் பிழைத்தால் போதும் என்று சுயநலமாக இருக்கவில்லை.

ஜெய் ஹோ.

Popular Posts