புண்ணரசியல்

ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம் போன்றவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்த லிஸ்டில் சுஜாதாவைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தபோதும், சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள். படுகிறவர்கள். இவர்கள் தங்களது அடையாளங்களை முற்றிலும் துறந்தபோதும் பகுத்தறிவாளர்களென்றும், முற்போக்குச் சிந்தனையாளர்களென்றும் தங்களைக் காட்டிக்கொள்கிற கூட்டம் இவர்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை முன் வைக்காமல் இவர்களது பிறப்பை முன் வைத்து கழிவறை வாசகங்களால் அர்ச்சனை செய்தவர்கள் இன்றைய சமூக நீதிக் காவலர்கள். ஒரு படைப்பாளி தன் நேர்மையை நிரூபணம் செய்யும் பிரயத்தனத்திலேயே ஆயுளைக் கழிக்க வேண்டி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் சாபம்.

சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. படத்தில் காட்டிய மூன்று தீவிரவாதிகளும் முஸ்லீம்களே என்பதுதான் இந்த வெண்ணெய் வெட்டிகள் முன் வைக்கும் வாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்பதைச் சித்தரிக்கும் இந்துத்வா மனோபாவம் கமல்ஹாசனுக்கு என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கமல்ஹாசன் மதச்சார்பற்றவர் என்பதை அவர் தன் சொல்லால், செயலால், படைப்பால் நிரூபணம் செய்துகொண்டிருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும். சினிமாவிலும், இலக்கியத்திலும் யதார்த்தம் இருக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிற அறிவு ஜீவி முண்டங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுப்பதேன்? சிறுபான்மை, மனித நீதி என்றெல்லாம் இவர்கள் அரை நூற்றாண்டு காலமாய் அடித்து வரும் ஜல்லியால்தான் இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க இயலவில்லை. கட்டுப்படுத்தும் சட்டங்களை, கடுமையான தண்டனைகளை தொடர்ந்து விமர்சிக்கிற இதே துப்பு கெட்டவர்கள்தாம் பாராளுமன்றத் தாக்குதலின்போதும், மும்பைத் தாக்குதலின் போதும் தேசத்தின் பாதுகாப்பையும் கேலி செய்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் மறக்க வேண்டியதில்லை.

மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம். ஆனால் தீவிரவாதம் அப்படியல்ல. அதற்கு மதத்தைப் பரப்புதல், எதிரிகளை வேரறுத்தல் என நேரடிக் காரணங்களும் நாடு பிடித்தல், கலாச்சாரங்களை அழித்தல் போன்ற மறைமுக காரணங்களும் நிரம்பியது. 'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே. ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிர வாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது. இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.

கந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியவர்கள், மும்பைபிலும், கோவையிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள், மும்பையில் பொதுமக்களை குருவிகளைப் போல சுட்டுக்கொன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள். மேற்கண்ட பயங்கரங்கள் மொத்த தேசமும் ரத்தமும் சதையுமாய் எதிர்கொண்டது. இதன் கொடிய முகங்களைச் சித்தரிக்கும் போது இதனைச் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிற ஜிகாத்தின் குழந்தைகள்தாம் என்பதைச் சொல்ல எவனுக்குப் பயப்பட வேண்டும் ?!

நாமெல்லாம் பிரிவினைவாதிகள் இல்லையென்றபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குச் சப்பைக்கட்டு கட்டும் கம்மனாட்டிகளைக் கண்டால் ஆத்திரம் பொங்கி ஜெரிமி பெந்தாமை அழைக்க வேண்டி இருக்கிறது. அரசியலைப் பாடமாகப் படித்தவர்களின் கடவுள் ஜெரிமி. பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி என்ற கோட்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் அவர். ஜெரிமி சொன்னதை ஒரு பயலும் கேட்கவில்லை. அதன் விளைவாக செசன்யா துவங்கி நாரிமன் வரை மிஸ்டர் பொதுஜனம் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். அதென்ன கோட்பாடு?!

ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார். இந்த ஒருவரின் மகிழ்ச்சிக்காக 99 பேரையும் ஒடுக்க வேண்டியதில்லை என்பது ஜெரிமியின் வாதம். இதுதான் இந்தியாவில் நிகழ்கிறது. மைனாரிட்டிகளைக் குறித்தே கவலைப்படும் அரசாங்கங்களால் ஒடுக்கப்பட்ட 99 பேர் பொங்கி எழும்போது அந்த ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

நான்கு பேர் நகர் புகுந்து நானூறு பேரைச் சுடுவதை ஒரு கூட்டம் மனித நீதியின் பெயரால் நியாயம் கற்பித்துக்கொண்டிருக்குமானால் அந்த எழவைப் பேசுகிறவனையும் சேர்த்தல்லவா ஒழிக்க வேண்டும். மனிதனுக்கே இல்லாத உரிமை மிருகங்களுக்கு எதற்கு என்று கமல் எழுப்பும் கேள்விதான் உ.போ.ஒருவனின் நேரடி அரசியல். இதைப் புரிந்து கொள்ள முடியாத ஈர வாரியல்கள் நுண்ணரசியல், புண்ணரசியலென்று புண்ணாக்குத் தனமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல.

Comments

Mohandoss said…
//காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை//

நீங்க இதில் உபோஒ-வனைப் பற்றிப் பேசலைன்னே நினைக்கிறேன். இந்தப் படத்தை எல்லாம் தூக்கி வைச்சிக் கொண்டாடாதீங்க. படம் படு மொக்கையா இருக்கு!

அப்புறம் பூனைக்குட்டி வெளியில் வருது பாருங்க அடக்கி வைங்க ;)
selventhiran said…
அன்பின் மோகன், பத்தியின் நோக்கம் உ.போ.ஒ - நல்ல படமா என்பதைக் குறித்ததல்ல. அதன் அடிநாதம் 'இந்துத்வா' என்றும் தீர்ப்பெழுதுகிற, தீவிரவாதத்தை நியாயப்படுத்துகிற முயற்சிகளுக்கெதிரான என்னளவிலான எதிர்வினை. அவ்வளவே!

பூனைக்குட்டி...?! சத்தியமாகப் புரியவில்லை நண்பரே...
Karthikeyan G said…
சூடான பின்னூடங்களை பெறுவதற்காக..
ஸாரி செல்வேந்திரன், இந்தப் பதிவை ரசிக்கவே முடியவில்லை. உங்கள் கருத்தை எவ்வளவு தீவீரமாகவும், அழுத்தமாகவும் சொல்லலாம். அதுதான் உரையாடல்களை ஆரோக்கியமாக்கும். ஆனால் ஏராளமான தடித்த வார்த்தைகள் அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கின்றன. உங்களிடமிருந்து அப்படியெல்லாம் வருவது வருத்தமளிக்கிறது.
செல்வா, சுஜாதா எப்பொழுது எழுதியது என்று நினைவில் இல்லை. அவர் சொன்னது,'தீவிரவாதம் என்றால் அது தீவிரவாதம் மட்டுமே,அதில் இந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம்' என்றெல்லாம் இல்லை என்றார். இதைப் போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் எதிர் வினையாற்றிக்கொண்டிருந்தால், உங்களுக்குள் இருக்கும் வேறு நல்ல படைப்புகளுக்கான தளம் இடம் மாறிப்போகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள,'ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம்' இந்த நால்வரும் இது போன்ற விமர்சனங்களை தாண்டிப் போக கற்றவர்கள். இவ்வளவு ஆவேசம் வேண்டாமே!
Ashok D said…
//பூனைக்குட்டி வெளியில் வருது பாருங்க அடக்கி வைங்க ;)//

இது ஆதிக்கவாதிகளின் எதிரான குறியீடாய் இருக்கலாம்! என் கருத்து.

விகடன் பதிவு(100%) யாரையும் புண்படுத்தாமல் இருந்தது. இந்த பதிவிலும் 99% வெற்றி உங்களுடைதே..

keep it up...
மணிஜி said…
வினவை கேட்டால் வெளிவரும் விபரங்கள் அதிர்ச்சி தருமோ செல்வா?
Sanjai Gandhi said…
அட்ரா... அட்ரா... :))
ரைட்டு.... இங்கிட்டும் என்ன நடக்குதுன்னு பார்க்கிறேன்!
Unknown said…
///சுஜாதாவைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தபோதும்///
சுஜாதா தீவிர வைணவர் என்றாலும், சமூகத்தின் மீது பொறுப்புணர்ச்சி இல்லாமல் இருந்தவரில்லை. அந்த வசன அமைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் செல்வா... கொஞ்சம் பிழையான அர்த்தம் தருகிறது.

மற்ற படி... மூஞ்சியில் அடித்திருக்கிறீர்கள் செல்வேந்திரன்.. உ.போ.ஒ வில் வரும் கமலின் ஒரு நக்கல் சிரிப்புக்குக் கூட இந்துத்துவா அர்த்தம் கற்பித்திருக்கிறார் ஒருவர்.(நீங்களும் அவரைத்தான் குறிவைத்து இருக்கிறீர்கள் என்பது புரிகிறது). அவரது விமர்சனம் கமலுடைய படைப்பைச் சாடாமல் முழுக்க முழுக்க கமலின் பிறப்பைச் சாடுவதாயே அமைந்திருந்தது. பேசாமல் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டேன்
Unknown said…
///'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே///
இதெல்லாம் அவர்களுக்கு உறைக்காது செல்வா... நாளைக்கே உங்களை ‘இந்துத்துவாவின் பிதாமகன்' என்று சித்தரித்து கதை வரைவார்கள் கவனம்
velji said…
you are right!i didn't see the movie but read some articles.as you said they are not justified.
peaceful co-existence is possible but dirty politics won't allow that!
துணிச்சலான விமர்சனம் நண்பா...

வாழ்த்துக்கள். சட்டம் எல்லோருக்கும் பொது, தீவிரவாதத்துக்கு உடனே தண்டனை.... இதுதான் இன்றைய முதல் தேவை.

பிரபாகர்.
Thamira said…
பின்னூட்டக்கருத்துகளை அறிய..
சல்லிப்பயல் என்று சொல்லிக் கொள்வதால் மற்றவர்க்ளையும் அதே தொனியில் பொதுவில் திட்டுவது நல்லதா சகா?

இந்த லிஸ்டில் மணிரத்னம் எப்படி சேர்ந்தார்? என்னைப் பொறுத்தவரை அவர் இதில் சேர்க்க தேவையில்லை.
மணிஜி said…
/ மோகன்தாஸ் said...
//காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை//

நீங்க இதில் உபோஒ-வனைப் பற்றிப் பேசலைன்னே நினைக்கிறேன். இந்தப் படத்தை எல்லாம் தூக்கி வைச்சிக் கொண்டாடாதீங்க. படம் படு மொக்கையா இருக்கு!

அப்புறம் பூனைக்குட்டி வெளியில் வருது பாருங்க அடக்கி வைங்க ;//

ஏ..அப்பா சிரிப்பு வருதப்பா?
மணிஜி said…
This comment has been removed by a blog administrator.
//நீங்கள் குறிப்பிட்டுள்ள,'ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம்' இந்த நால்வரும் இது போன்ற விமர்சனங்களை தாண்டிப் போக கற்றவர்கள். இவ்வளவு ஆவேசம் வேண்டாமே!//

double repeatu...

//ஆனால் ஏராளமான தடித்த வார்த்தைகள் அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கின்றன. உங்களிடமிருந்து அப்படியெல்லாம் வருவது வருத்தமளிக்கிறது.//

ithukum repeatu..
லேபிள் பொருத்தம் .. ஆனா அது யாருக்குண்ணே ..

நிறைய பேருக்கு கொடுக்கணூமே..
selventhiran said…
நான் பிராமணன் இல்லையெனும் டிஸ்கியைப் போட மறந்து விட்டேன்.
Karthikeyan G said…
Sorry.. please ignore my previous comment. I jst now saw the 'too personnel' comment has been deleted by a blog administrator. :)
என்னளவில் இது செல்வாவின் எதிர்வினை அல்லது பார்வை என்று கூட சொல்லலாம்!
காட்டமான வார்த்தைகள் தீவிரவாதத்தையும் அதை ஆதிப்பவர்களையும் சாடுவது பொல் தான் இருக்கிறது!

பார்பனிய சொறிதல் எவ்வளவு நாளைக்கு தான் அரிப்பை தீர்க்கும்னு தெரியல!
ஆண்மைத் தனமான கோபத்திற்கு தலை வணங்குகிறேன்.
செல்வா, கட்டுரையோடு எனக்கு உடன்பாடில்லை.

அதிலும் அந்த 99 பேர் ஒருவன் உதாரணம் மிக மிக ஆபத்தானது. உலகில் பல பகுதிகளிலும் அதுதான் நடக்கிறது (இலங்கை உட்பட!).
ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம்'ஆகிய நால்வரையும் ஒரே கூட்டில் அடைப்பதை நான் எதிர்க்கிறேன். சுஜாதா,மணி ரத்தினம் வேறு விதம். கமல், ஞானி வேறு விதம். சுஜாதா,மணி ரத்தினம் இருவரும் அறிவு ஜீவி ஒப்பனையிட்ட பார்ப்பனீய பாதுகாவலர்கள். தம் லட்சியத்தையும், ஹிடன் அஜெண்டாவையும் (பார்ப்பனீய பாதுகாப்பு மற்றும் பார்ப்பனரல்லாதவர்களின் வெற்றிகளை ம்லினப்படுத்துவது.(உம். சுஜாதாவின் எத்தனையோ கதைகள். ஹீரோ பார்ப்பானாக இருப்பான். வில்லன் நான் பிராமினாக இருப்பான். உம். மணிரத்தினத்தின் இருவர்

ஆனால் கமலும், ஞானியும் யதார்த்தவாதிகள் . பஹு ஜன விரோதிகள். உண்மையான ச‌மூக அக்கறை கொண்டவர்கள்
ஒரு ரகசியம் சொல்கிறேன். பிரச்சினையில் இருந்துதான் பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடைக்கும். அதிகப்படி மாம்பழம் உண்டு மந்தம் தட்டிப்போனால் அதற்கு வைத்தியம் மாங்கொட்டையை சுட்டு உண்பதுதான்.

பார்ப்பன கூட்டம் செய்த அட்டூழியத்தை விவரித்ததோடு, அவற்றிற்கு எதிராக போராடிய பார்ப்பன மேதைகளும் உண்டு. உ.ம் பாரதியார்.

Note: I admit Kamal and njaani to this list
பதிவைப் படித்தேன் நண்பா.
selventhiran said…
மாதவராஜ் அண்ணா, நாம் தேர்ந்தெடுக்கும் ஆயுதங்களைப் போலவே வார்த்தைகளையும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்று பதிலூட்டம் போடலாம் என நினைத்தேன். ஆனால், நம் சமனநிலையைக் குலைக்கிற அளவிற்கா எதிரி அனுமதிப்பது என்று இப்போது வருத்தப்படுகிறேன். கொஞ்சம் கீழ்த்தரமானப் பிரயோகங்களைப் பிரயோகிக்காமல் இருந்திருக்க வேண்டும். சுட்டியமைக்கு நன்றி!

சிவா, நீங்கள் சொல்வது சரிதான்.

அசோக், அன்பிற்கு நன்றி.

வாங்க தண்டோரா அண்ணே...

சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)

ஊர்சுற்றி, ஒரு பைனாக்குலர் வச்சுக்கோங்க... உ.போ.ஓ தமிழகம் முழுவதும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

கிருத்திகன் குமாரசாமி, சரியான கவனிப்பு. கடவுள் நம்பிக்கை எனும் விஷயத்தில் மட்டும் சுஜாதா சேர்த்தி.

வேல்ஜி, படத்தை சீக்கிரம் பாருங்கள். இணையக் கூத்துக்கள் இன்னும் சிரிப்பைத் தரும்.

நன்றி பிரபாகர்.

வாங்க ஆமூகி.

கார்க்கி மற்றவர்களின் பதிவை இந்நேரம் படித்திருப்பீர்கள்.

செந்தில் நாதன் சமயங்களில் தடித்த வார்த்தைகள் வந்து விடுகிறது.

சூரியன், இப்பல்லாம் அவங்களே எடுத்து அடிச்சிக்கிறாங்க.

வால் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க மங்களூரார்.

விக்கி வருகைக்கு நன்றி.

ஜ்யோவ், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சித்தூர். எஸ். முருகேசன் வருகைக்கு நன்றி.

நர்சிம், பரிசலைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.
Sanjai Gandhi said…
//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)//

அடப்பாவிகளா.. இருங்க இந்த கமெண்டை கேண்டிக்கு மெயில் அனுப்பறேன்.. என் பொழப்புல ஏன்யா லாரி லாரியா மண்ணள்ளிப் போடப் பாக்கறிங்க? அது பர்மா தேக்கு இல்ல ராசா.. அசாம் சூப்பர் டீ.. :))
//மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல.

அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம்.

ஆனால் தீவிரவாதம் அப்படியல்ல.

அதற்கு மதத்தைப் பரப்புதல், எதிரிகளை வேரறுத்தல் என நேரடிக் காரணங்களும் நாடு பிடித்தல், கலாச்சாரங்களை அழித்தல் போன்ற மறைமுக காரணங்களும் நிரம்பியது.//

இந்தப் பகுதி இன்னும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு எழுதுயிருக்கலாம்..
மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் செல்வா..!

பதிவின் நோக்கத்தை அவைகள் மட்டுப்படுத்துகின்றன..!
தீவிரவாதிகள் எல்லாம் நாடுபிடிக்கும் லட்சியத்தோடு இருக்கிறார்கள். கருவிலிருந்து குழந்தையை எடுத்து கொல்பவர்களும் அவர்களை தூண்டிவிடும் கம்மனாட்டிகளும் ஆட்சி அதிகாரம் என்கிற ஆசை இல்லாமல் சாமியாரகவே வாழ்கிறார்கள் என்பதுதானே உங்கள் கருத்து நண்பரே!

உங்கள் 99 சதவிகித லாஜிக்படி திண்ணியத்தில் தலித் மக்களின் (அவர்களும் இந்தியாவில் மைனாரிட்டிகள் தானே) வாயில் பீயை திணித்தவனுக்கும் உங்கள் ஆதரவு உண்டு அல்லவா?

//நான் பிராமணன் இல்லையெனும் டிஸ்கியைப் போட மறந்து விட்டேன்//

நான் பார்ப்பனன் அல்ல. ஆனால் பார்ப்பனீயவாதி என்றுதானே சொல்ல வந்தீர்கள்.
//ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார்//


இந்தியாவில் -

சாதிரீதியாக பார்த்தால் பார்ப்பனர்கள்/பனியாக்கள் மைனாரிட்டி.
வர்க்கரீதியாக பார்த்தால் அம்பானிகளும், டாடாவும், மிட்டலும் மைனாரிட்டி.
மொழிரீதியாகப் பார்த்தால் (மத்திய அரசு உயர்பதவியில் இருக்கும்) மலையாளிகள் மைனாரிட்டி.
தொழில் அடிப்படையில் பார்த்தால் பொட்டித் தட்டும் ஐ.டிக்காரர்கள் மைனாரிட்டி.

இவர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வராதபட்சத்தில் முஸ்லீம்களும் தலித்துகளும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று நினைப்பது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா!

அது ஏன் என்று என் போன்ற கம்மனாட்டிகளுக்கு உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.
This comment has been removed by the author.
இஸ்லாம் மீதிருக்கும் தங்களின் ப‌ல‌நாள் காழ்ப்புண‌ர்ச்சிக்கு ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டாக‌ ம‌ல‌ர்ந்திருக்கிற‌து இந்த‌ ப‌திவு.

சில‌ இட‌ங்க‌ளில் உங்க‌ள் எடுத்துக்காட்டுக‌ள்..ஐயாம் சாரி செல்வா..ச‌கிக்க‌லை.

//மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம்.//

சுஜாதா அந்நிய‌ன் எழுதுன‌ வ‌ச‌ன‌ம் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது..

த‌ப்பு என்ன‌ ப‌னிய‌ன் சைஸா...மீடிய‌ம் லார்ஜ்..ன்ட்டு....விளைவுக‌ள் எப்போதுமே எக்ஸ்ட்ரா லார்ஜு தான்.
அதிலை said…
என் கண்டனத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எந்த தீவிரவாதியும் இஸ்லாமியனாக இருக்க முடியாது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட சில பல புத்தகங்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... இன்றைய தீவிரவாதிகள் செய்யும் ஒரு செயலையும் இஸ்லாத்தின் அடிப்படையில் இருந்து ஆமோதிக்க முடியாது.. யார் இதை "இஸ்லாம் தீவிரவாதம்" என்று அங்கீகரித்தது? இதை செய்யும் பயங்கரவாதிகள்... அதை ஈசியாக நீங்களும் ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் அவர்களை "இஸ்லாமிய" தீவிரவாதிகளாகவும் உலகின் எல்லா பாயம்கரவாததிட்கும் அவர்கள் காரணம் என்றும் சொல்வது ஒரு சமுதாயத்தின் மீது நீங்கள் உமிழும் நஞ்சாகவே கருதுகிறேன்.. மட்டுமல்ல அவர்கள் கூற்றை ஆமொதிப்பதன் மூலம் அவர்கள் கொள்கையையும் ஆமொதித்தாகவே கருதவேண்டி உள்ளது...
இஸ்லாத்தின் கோட்பாடுகளை கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் இஸ்லாதிக்கு உட்படடதாக இருக்கும் பட்சத்தில் தாரளமாக கூவுங்கள் இது "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று.. உங்களால் இஸ்லாமிய கோட்பாடுகளை ஆதாரமாக்க முடியவில்லை இன்றால் இதை தீவிரவாதம்/பயங்கரவாதம் என்று மட்டும் கூறுங்கள்.. மதத்தை சேர்க்காதீர்கள் .. இதை செய்ய உங்களுக்கோ கமலுக்கோ எந்த ஊடகங்களுக்கோ அதிகாரம் இல்லை... அது கண்ணியமும் இல்லை...
துப்பாக்கியால் ஒருவனை சுட்டு கொன்றால்..கொன்றவன் அதை அல்லாஹுக்காக செய்தேன் என்றால் உடனே நீங்கள் ஆமோதித்து அவனை "இஸ்லாமிய" தீவிரவாதி ஆக்கி விடுகிறீர்கள்... குடும்பதலைவி முதல் பிஞ்சு குழந்தையாய் வரை கற்பழித்து துகிலுரித்து கூட்டமாக எரிதுக்கொன்றல்... சிம்ப்ளி கலவரம்... இல்லையா?
இந்த இரண்டு வித பயங்கரவாதிகளையும் நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை.. ஆனால் நீங்கள் மத தீவிரவாதி ஆக்கி கௌரவபடுதுகிறீர்கள்...

எத்தனையோ படிக்கிறீர்கள் இஸ்லாம் பற்றியும் படியுங்கள் நண்பரே... நான் நிச்சயமாக நம்புகிறேன்.. you have limited knowledge and lot of emotions in this particular issue... If I am not right.. then "Get well soon selva"
இஸ்லாம் மீதிருக்கும் தங்களின் ப‌ல‌நாள் காழ்ப்புண‌ர்ச்சிக்கு ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டாக‌ ம‌ல‌ர்ந்திருக்கிற‌து இந்த‌ ப‌திவு.

சில‌ இட‌ங்க‌ளில் உங்க‌ள் எடுத்துக்காட்டுக‌ள்..ஐயாம் சாரி செல்வா..ச‌கிக்க‌லை.

//மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம்.//

சுஜாதா அந்நிய‌ன் எழுதுன‌ வ‌ச‌ன‌ம் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது..

த‌ப்பு என்ன‌ ப‌னிய‌ன் சைஸா...மீடிய‌ம் லார்ஜ்..ன்ட்டு....விளைவுக‌ள் எப்போதுமே எக்ஸ்ட்ரா லார்ஜு தான்.
Unknown said…
இந்துத்வம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்று சொல்லி லாவகமாக குண்டுவெடிப்புகள் மட்டுமே தீவிரவாதம் என்று பசப்ப பார்க்கிறீர்கள்.


மசூதிகளை தகர்த்தல், கூட்டம் கூட்டமாக சிறுபான்மையினரை கொலை செய்தல், தாயின் வயிற்றை கிழித்து குழந்தையை கொலை செய்தல், தலித்களின் வாயில் மலம் வைத்தல், மாட்டை திinரதற்காka தலித்களை உயிரோடு எரித்தது, பாதிரியாரையும் அவர்தம் குழந்தைகளையும் கொளுத்தியது போன்ற இன்ன பிற செயல்கள் உங்கள் கணக்கில் எந்த தலைப்பில் வரும்....?
Unknown said…
நீங்கள் அயோக்கியனா , பொறுக்கியா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் பார்ப்பனியவாதி என்று மட்டும் புரிகிறது.
Unknown said…
// மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. //

கழுதை விட்டையில் பெரிய விட்டைக்கும், சின்ன விட்டைக்கும் என்ன வித்தியாசம் ?

விடுங்கள் பரவாயில்லை. கொஞ்சம் கோபாவேசமாக எழுதி விட்டால் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
செல்வா ,
நான் பாஸ்கர்சக்தி. உங்களிடமிருந்து இவ்வளவு முதிர்ச்சியற்ற கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை . தடித்த் சொற்களையும்தான். மதக்கலவரமும் , தீவிரவாதமும் ஒன்றல்ல என்பது என்ன வாதம் செல்வா? `ரத யாத்திரை' என்ற அக்கிரமம்தானே மும்பை குண்டுவெடிப்புகளுக்கு விதை? பாபர் மசூதி இடிப்பு என்ன தேசபக்தி நிரம்பிய செய்கையா? அப்புறம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 99 பேருக்கான நியாயம்..அதிர்ச்சியூட்டுகிறது.இலங்கையில் நம் தமிழருக்கு நடந்தது எல்லாம் அந்த் தத்துவத்தின் படி சரி என்றல்லவா ஆகிறது? நீஙகள் யோசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
அநிச்சையா கோவப்பட்டு தட்டீட்டீங்க! கோவம் வடிந்த பிறகு பகுத்து பாருங்க! நீங்க எததெ தப்புன்னு சொல்றிங்களோ, அதையெல்லாம் ரைட்டுன்னு இந்த மேதாவிகளே முன்ன செய்திருக்காங்க! கொடுத்தது திரும்பி வருது! அவ்வளவுதான்!

பல நூறு ஆண்டா மநு சொன்னபடிக்கு மாடு மேய்ச்ச சல்லி பயக நாம! இன்னொரு 1000வருஷத்துக்கு நமக்கு மட்டும் வக்கில் வேலை பார்ப்போம் செல்வேந்திரன்!!
Unknown said…
செல்வா ஏன் இத்தனை வன்மம்? உங்கள் வார்த்தைகளின் தீவிரத்தன்மையால் நீங்கள் சொல்ல வந்த விதயங்கள் பதியவில்லை, ஆனால் நண்பரே, மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் முடிச்சுப் போடுவது சரியன்று. மனிதர்களை இரக்கமின்றி கொன்றொழிக்கும் யவருமே தீவிரவாதிகள், பயங்கரவாதிகளே...ஹிந்துத்வா கருத்துக்களை தீவிரமாக அவதானிப்பவர்களும் பயங்கரவாதிகளே...மதம் என்பது அன்பை விதைக்கவே அன்றி ஆட்களை கொல்ல அல்ல..இந்த நூற்றாண்டின் சோகம் ஜாதி என்ற பெயரிலும் மதம் என்ற பெயரிலும் மனிதர்கள் தங்களை அழித்துக் கொண்டிருப்பதுதான். என்று அமைதி திரும்பும் இவர்கள் எல்லா இஸ்லாமியர்களையும் கொன்றொழித்த பிறகா? உங்கள் 99:1 எடுத்துக்காட்டு விஷயமாக சரிதான், ஆனால் அதன் பின் இருக்கும் வலி எத்தகையது என்பது தெரியும்தானே உங்களுக்கு? சதத் ஹசன் மண்டோவை வாசித்துப் பாருங்கள் செல்வா. கண்ணீர் துளிகள் விழாமல் எந்தப் பக்கங்களையும் நீங்கள் கடந்து போக முடியாது. அந்த சோகம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, தீர்வு ஏதுமில்லாமல் நாம் மதம் பற்றியும் மனிதம் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கலாம்...(ஸாரி கொஞ்சம் நீண்ட பின்னூட்டமாகிவிட்டது, இன்னும் என்னால் முடிக்க ஏலவில்லை)
Unknown said…
//உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க // முனைந்தாலும் - அது அப்படி அல்ல என்பதை இரண்டு தடவைக்கு மேல் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளச் சொல்லலாம். இத்திரைப்படம் தீவிரவாதத்திற்கு எதிர்வினை ஆற்றுகிறதே அன்றி எவ்வித மத அடையாளத்தையும் எங்கும் விட்டு விட முனையவில்லை.
நாயகனின் பெயர் ஷேக் தாவூத் அல்லது முகமத் அல்லது அன்வர், இப்படி எதாவது இருக்கலாம், இல்லாமலும் போகலாம் அது நம் கற்பனைக்கே, தீவிரவாதம் என்பது புரையோடிப்போய்க்கிடக்கும் விதயம், அறப்போர் எல்லாம் இதற்கு சரி வராது, ஆயுதம் எடுத்தவனை ஆயுதத்தால்தான் அழிக்க வேண்டும் என்பது தான் இதன் ஒன் லைன். தவறான அவதானிப்புக்களுக்கு நாம் மதிப்பு அளிக்கவேண்டாம். உங்கள் விமர்சனம் சரியாக இருந்த போதிலும் சில புரிதல்கள் இல்லாமல் இருப்பதாலும் நீர்த்த்ப் போய்விட்டது. செல்வா வன்முறை கொடியது அது வார்த்தைகளால் இருந்தாலும் கூட...
அருமையான உன்மைகளை எழுதி இருக்கிறிர்கள், தடித்த வார்த்தைகள் தெவையில்லை நன்பரே.
சகதியில் புரண்டு எழுந்து வந்து குலைக்கும் நாய்கள் போல அவர்கள் கூறீனாலும் அல்லது குரைத்தாலும், நாமும் ஏன் நாயாக மாறவேண்டும். இந்துக்களை எதிர்ப்பது பகுத்தறிவு, பார்ப்பனர்களை எதிர்ப்பது முற்போக்கு என மாயைக்கு அடிமைகள் என நினைத்து ஒதுங்குவது, பயத்தால் அல்ல. அவர்களின் சகதி நம்மீது ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதால். நாம் நல்லினக்கம் காண்போம், அவர்கள் சாதி இல்லை என்று கத்தி சாதி வளர்ப்பார், நாம் மனித நேயம் வளர்ப்போம், அவர்கள் மதம் இல்லை என்று மக்களை கூறுபோடுவார்கள். நாம் நமது வேலைகளை பார்ப்போம்.
மிக மோசமான கருத்தாக்கம்..
Anonymous said…
//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)//

//சஞ்ஜெய் அண்ணா, அந்த பர்மியப் பெண்ணின் நினைவாகவே இருக்கிறேன் :)//

அடப்பாவிகளா.. இருங்க இந்த கமெண்டை கேண்டிக்கு மெயில் அனுப்பறேன்.. என் பொழப்புல ஏன்யா லாரி லாரியா மண்ணள்ளிப் போடப் பாக்கறிங்க? அது பர்மா தேக்கு இல்ல ராசா.. அசாம் சூப்பர் டீ.. :))

ஒரு சீரியஸ் பதிவு போட வேண்டியது, அதுல என்ன அஸ்ஸாம், பர்மா கும்மி?

நான் ஒரு eye witness இருக்கறதையே மறந்துட்டு என்னாது இது? :)
இப்படி எழுதியிருக்கிறீர்களே...உங்களை அறிவுஜீவி வரிசையிலிருந்து விலக்கி விடப்போகிறார்கள்!
SRI DHARAN said…
இந்தியனாக இருக்கும் ஒவ்வொருவனும் நீங்கள் சொல்வதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும். இந்த எழுத்தில் இருக்கும் வைராக்கியம் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்மையில் இருக்க வேண்டும். அற்புதம்!
Anonymous said…
வெட்கப்பட்கிறேன் - இத்தனை வ்ன்மமும் துவேஷமும் மனதில் நிரப்பிக் கொண்டிருந்தவ்னை மனதில் தூக்கி நடந்ததற்காக..

எப்படி..இந்துத்வாவினால் வரும் லாபமும் நட்டமும் உங்களுக்கா? அப்படியானால் இந்த மண்ணில் பிறந்த எங்களுக்கு? உன் 99:1 உதாரணம் அதி அற்புதம். இராம கோபாலன்க்ளுக்கும் உனக்கும் என்ன மசுரைப் புடுங்குன வித்தியாசம் இருக்கு? நல்லா இருடே!!

தாசு சொன்ன மாதிரி இப்பவாவது பூனைக்குட்டி வெளியில் வந்ததே?
Anonymous said…
This comment has been removed by the author.
Anonymous said…
This comment has been removed by the author.
selventhiran said…
அண்ணாச்சி,

ஆத்திரம் வேண்டாம். இஸ்லாமியர் என்ற வார்த்தையைப் பிரயோகிக்க நேர்ந்தால் அத்துடன் சகோதரன் என்பதையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன், குறுகிய தேசியம் ஆபத்தானது என்பதை பால பாடமாகக் கற்றவன் நான். உண்மையில் தேசியவாதம் என்பதே அபத்தம் என்று நம்புகிறவன். அதையெல்லாம் விட தங்களை துலுக்கன் என்று ஒருவன் அழைத்ததற்காகத் தனிமனிதனாக முஷ்டியை முறுக்கிக்கொண்டு இறங்கினவன். எனக்கு மதங்கள் இல்லை.

நீங்களும் நானும் அண்டை வீட்டுக்காரர்கள். நமக்குள் சண்டை வருவது வேறு. நம் இருவர் வீட்டின் கூரையின் மீதும் வானில் இருந்து குண்டு விழுவது வேறு. மும்பை, டில்லி, கோவை தாக்குதல்களில் இறந்தவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல. வெடிக்கின்ற குண்டு இஸ்லாமியர்களையும் சேர்த்துத்தான் அழிக்கிறது.

இந்து, மூஸ்லிம், ஏன் இந்தியன் என்பதைக் கூட விடுங்கள். மானுடன் என்றளவில் உலகின் எந்த மூலையில் மானுடம் நசுக்கப்பட்டாலும் கதறுகிறவனாக இருப்பவன் நான். ஜெரிமி பெந்தாமின் கருத்தில் இருக்கிற வன்மத்தை மாற்றி எழுதி இருக்கிறேன். சிறுபான்மையை அழிக்கச் சொன்னார். அவர் வாழ்ந்த நாடும் காலமும் அப்படி. ஆனால், ஒரு பக்கச் சார்பின் ஆபத்தாக அதை நான் மாற்றி எழுதி இருக்கிறேன்.

இந்தக் கட்டுரையை ஒரு மீள்வாசிப்பு செய்யும்படித் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இதை பதிவிடும்போது 'நீங்கள் ஒருவராவது இந்தக் கட்டுரைக்கு இந்துத்வா சாயம் பூசமாட்டீர்கள் என்று நம்பினேன்.

என் கருத்துக்கள் உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் வெருத்தாலும் நான் உங்கள் தம்பிதான். கொஞ்சம் லேட்டான 'ஈத் முபாரக்'

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

இருவருக்கிடையே விவாதங்கள் நடக்கும் போது அதை சண்டையாக மாற்றுபவர்கள் இணையத்தில் அதிகம் என்பதால் இந்த தனிப்பட்ட கடிதத்தை பதிலூட்டமாகவும் பயன்படுத்திக்கொள்கிறேன். மனச்சோர்வில் என்னால் சரியான பதிலை அனுப்ப இயலவில்லை.
thiru said…
அன்பின் செல்வேந்திரன்,

பயங்கரவாத அரசியல் பற்றி ஒரு பொதுசனத்திற்கு இருக்கும் பார்வை கூட கவிஞரான உங்களுக்கு இல்லாமல் போனது வருந்ததக்கது.

//'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே.//

அதாவது இந்துத்வா பயங்கரவாதம் இந்தியாவிற்குள் குடியிருக்கிற இஸ்லாமியர்களை, பல்லினங்களை கொன்று கங்கை நீரை குடித்து ஏப்பம் விட்டால் அது உள்நாட்டு பிரச்சனை. அதனால் அது பயங்கரவாதமில்லை.

//ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிரவாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது.//

அப்படியா?

//இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.//

:) வாழ்க இந்துத்துவம். அண்டை நாடுகளில் குழப்பங்களை உருவாக்கி அறுவடை செய்கிற உளவுநிறுவனங்களை எப்போது இந்தியர்களில்லை என்று முடிவு செய்தீர்கள்?

மலேகானில் பிடிபட்டது யார்? தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் குண்டு வைத்து மாட்டியது யார்? மண்டைக்காடு? அயோத்தி? பம்பாய் கலவரம்? குஜராத்... மறதி மட்டுமில்லாவிட்டால்...ம்ம்ம்
நான் மீள்வாசிப்பு செய்துவிட்டேன். எந்த நம்பர் செருப்பால் யாரை அடிப்பது என்று குழப்பமாக இருக்கிறது. என்ன செய்யட்டும்?
Jazeela said…
உங்களிடமிருந்து இப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை செல்வேந்திரன். :-( நீங்கள் தந்த அத்தனை உதாரணங்களும் அபத்தமே! இந்த பதிவை மீள்வாசிப்பு செய்ய வேண்டியது நீங்கதான். வரிக்கு வரி இஸ்லாமிய தீவிரவாதியென்று எழுதியிருக்கிறீர்களே? இஸ்லாமென்றால் அமைதியென்று பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? தீவிரவாதத்தோடு மதத்தை முடிச்சிப் போடுவது ஏன்? //சமயங்களில் தடித்த வார்த்தைகள் வந்து விடுகிறது. // வரும் வரும் ஏன் வராது? சகோதரன் என்று வாயளவில் வார்த்தையளவில் பேசுபவர்களுக்கு இப்படியான வார்த்தைகள் வந்து விடுவதில் ஆச்சர்யமென்ன? மிகுந்த வருத்தம் :-(
TBCD said…
//தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார்//

ராச பக்சே உங்கள மாதிரி ஆளைத் தான் தேடுறாராம்.

பாயிண்டு பின்னுறீங்களே ! :(
selventhiran said…
மன்னிக்கவும் கார்த்திக்கேயன்.ஜி, தங்களது பின்னூட்டத்தில் எனக்கும் அண்ணாச்சிக்குமிடையே உரசல் ஏற்படுத்தும் முகாந்திரம் இருப்பதாக எனக்குப் படுகிறது. பிரசுரிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.
selventhiran said…
ஆழி, உங்களுக்கும் எனக்குமான உரையாடல் ஒருபோதும் சுமுகமாய் இருக்க வாய்ப்பில்லை.
சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள்// '
அசோகமித்ரன் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போல் இருக்கிறது. அடையாளத்தை முற்றிலும் துறந்துவிட்டார்கள் என்பது உங்களது புரிதல். அதில் இருக்கும் முரண்களை சுட்டிக்காட்டுபவர்கள். நீங்கள் காத்திரமான படைப்பென்று பஜனை பாடலாம், பூஜிக்கலாம் எல்லாருக்கும் அந்த நிர்பந்தமோ, தேவையோ கிடையாது.

//சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.//

பதைபதைப்புக்கு உள்ளாகி இருப்பது நீங்கள்தான். எந்த வெண்ணை வெட்டியும் காண்பிப்பது மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகளுக்காக என்று மூக்குச் சிந்தவில்லை. வலையில் வந்த மாற்று விமர்சனங்கள் எல்லாம் கமலின் பாத்திரம் பேசும் வசனங்களில் இருக்கும் அபத்தங்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அதனூடாக இயங்கும் பெரும்பான்மைவாத மயப்படுத்தப்பட்ட குரூரத்தையே சுட்டிக்காட்டுகிறது. நீங்கள்தான் திட்டுவதற்கு வசதியாக இருக்கிறது என்று அந்த மூன்று தீவிரவாதிகளை முன்னுக்கு வைக்கிறீர்கள்

//இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும்// பிரவின் தொகாடியா சொல்வதும் இதைத்தான். இதே குரல்களை இன்னும் பல இடங்களில் கேட்கமுடியும். அவர்கள் எல்லாம் இந்த ராஷ்ட்ரியத்தின் சுயம் சேவக்குகளாக இருந்தால் யாமறியேன் பராபரமே. ஏனென்றால் மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை இந்து தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டபோதுதான் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று பேசவே பட்டது. அதுவரை எந்த உறுத்தலும் இல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதி என்று பேசித்திரிய முடிந்தது. ஊடகங்களும், செய்தித்தாள்களும் சொல்வதை அப்படியே நம்பும் பத்தோடு பதினொன்றாக இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். தினமலர்த் தேசியவாதி இருப்பது உங்கள் உரிமை. அனைவருக்கும் அந்த அபத்தம் தேவை இல்லை.

மண்டைக்காடு கலவரம், ரதயாத்திரை, பாபரி மசூதி இடிப்பு, கோவை குண்டு வெடிப்புக்கு முன்னான சம்பவங்கள்,மாலேகான் குண்டுவெடிப்பு,தென்காசி குண்டுவெடிப்பு, இதெல்லாம் என்ற அகண்ட பாரத கனவின் தடங்களா. புனிதப்போர் ஜிகாத் என்று சொல்லும் இஸ்லாமியர்களை குறித்து எகிறிக்குதிக்கும் நீங்கள் அதற்கு சற்றும் குறைவில்லாத குஜராத் இன அழிப்பையும் அயோத்தி கலவரத்தையும் தீவிரவாதம் இல்லை என்று சொன்னால் நீங்கள் அப்பட்டமான இந்துத்துவவாதி இல்லை அந்தகருத்தாடல் வெறியன் என்றே சொல்லுவேன்.
இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க முடியாமல் போனதற்கு மனித உரிமைகள் என்று கூப்பாடு போடுபவர்களால் அல்ல. அது அரசின் கையாலாகாத தனத்தின் விளைவே. தீவிரவாதத்தின் காரணிகளை உண்மையாக, உளப்பூர்வமாக கண்டறிந்து அதை களைய முற்படாது அரசியல் லாபங்களுக்காக நீட்டித்துக்கொண்டிருப்பதே ஆகும். கடுமையான சட்டங்கள் ஆயிரம் இயற்றப்பட்டன. அவை யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன? அவை எவற்றிற்கு எதிராக இயற்றப்பட்டதோ அவர்களின் மீது பாயாது அரசியல் எதிரிகளின் மீதே பாய்ந்தது. தாடியும் இஸ்லாமியப்பெயரும் இருந்தாலே போதும் என்கவுண்டர் செய்யலாம் என்று இயங்குபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் பட்டத்திற்கு வரமாட்டார்களா? அப்பட்டமாக அதிகாரத்தை ஆதரிக்கும் உங்கள் மனநிலை அடக்குமுறையின் மீதும் அதன் மீதான வன்முறையின் மீதானதுமான ஈர்ப்பையை சுட்டுக்காட்டுகிறது

//பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.//

இலங்கையில் உண்டு. அமைதிப்படை இலங்கையில் போய் என்ன செய்தான். நாடு பிடித்துக்கொண்டிருந்தான். தமிழீழப் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டிருந்தான்.தமிழ்ப் பெண்களின் யோனிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.அமைதிப்படை அங்கிருந்த காலத்தில் ஈழத்தில் மரணித்தவர்கள் எல்லாம் தானாக தற்கொலை செய்து கொண்டார்களா என்ன?

//இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே//
இந்தியாவில் தீவிரவாதம் வளருவதற்கு முக்கியமான காரணம் இந்துத்துவா என்பதை ஒத்துக்கொள்வீர்களா?காரணிகளை காணாமல்,வினைகளை காணாமல், எதிர்வினையை மட்டும் கேள்விக்குட்படுத்துவது எவ்வகையிலும் அறமாக இருக்காது. எல்லா அரசுகளும் எல்லை விரிவாக்கமும் ஆக்கரிமிப்பும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான எதிர்வினைதான் தீவிரவாதம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளை அமெரிக்காவும் மேற்குலகும் சுரண்டமால் சூறையாடமல் இருந்தால் நீங்கள் சொல்லும் உலகத்தீவிரவாதத்திற்கே இன்று வேளை இல்லை.

//முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல//

நீர் அயோக்கியனும் அல்ல, பொறுக்கியும் அல்ல.மக்களின் பெயரால் அதிகாரத்தின், அரச வன்முறையின் பாசிசத்தின் ரசிகன்
நான் முன்னர் ஆங்கிலத்தில் இட்டிருந்த பின்னூட்டம் தவறாகிவிடுமோ என்று அஞ்சி....தமிழில்!

நீங்கள் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள்.

எனக்கும் அதன் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களில் ஒப்புதல் இல்லையென்றாலும்..

நீங்கள் செய்தது சரி என்று நம்பினால்..

உங்களை நம்புகிறவர்களுக்கு விளக்கவேண்டாம்.
உங்களை சந்தேகிக்கிறவர்களுக்கு
விளக்கி பிரயோஜனமில்லை.

கருத்தைச்சொல்லிவிட்டீர்கள்.
கவலைப்படாதீர்கள்.
வாழ்த்தோ விமர்சனமோ வாங்கிக்கொண்டு இருங்கள் !

நமக்கு வேலை நிறைய இருக்கிறது.

அன்புக்குரியவர்களை கண்டிப்பாக இழக்க வாய்ப்பில்லை!
Unknown said…
செருப்பு பதிவர் என்று உங்களுக்கு சுகுனா பட்டமளிதிருக்கிறார். வெகு பொருத்தம். ஜமாய்ங்கோ.
candy said…
may i know parmiya pen whose that

by candy
Darren said…
உன்னைப்போல் ஒருவனை விட படு குப்பையாக இருக்கிறது உங்கள் பதிவு.
தீவிரவாதத்திற்கு நீங்கள் இந்தப் பதிவில் கொடுத்துள்ள விளக்கமும், 99:1 விகிதமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை செல்வா. அதோடு உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. ஜீரணிக்க சிரமமாக உள்ளது.
Your quotation of Jermy applies to "paarppaniayavaathikaL" too ?!

For your info, As there is no Religion by name "Hindu" (The name given by foreigners), the real minority in India are the "paarppaaniyavaathikaL" only
அன்பு செல்வேந்திரன்,

உங்களின் இந்தப்பதிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சத்தியமாக உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

//இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும்.// இந்த உங்களின் வரிகளை நீங்கள் தான் மீள்...மீள்பார்வை செய்ய வேண்டும்.

வெள்ளைத் தோலன் சொல்லிவிட்டதாலேயே,அதை அப்படியே நம்புகிற பேதையா நீங்கள்? நடைமுறைக்கும் சத்தியத்திற்கும் ஒத்துவராத ஆதிக்கவாதத் தத்துவங்கள் அவை என்று ஏன் உங்கள் புத்திக்குப் புரியவில்லை.

கமலஹாசன் என்கிற ஒரு ஆளுமை (காப்பியடித்து) சொல்வதாலேயே, "தீவிரவாதத்தை ஒழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் தீவிரவாதம் தான்" என்ற அபத்தக் கருத்து உண்மையாகிவிடாது.

உண்மையில், தீவிரவாதத்தை ஒழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் சரியான விரைவான, ரிபீட்,சரியான,விரைவான நீதி தான்.

உண்மையில் சரியான, விரைவான நீதி பல அரச பயங்கரவாதங்களுக்குக் கிடைத்திருந்தால், பல பயங்கரவாதங்கள் ஒருவேளை தடுக்கப்பட்டிருக்கலாமோ?

நான் உங்களை நண்பராகக் கருதியே இத்தனையும் எழுதுகிறேன்.

எல்லா வகை தீவிரவாதங்களையும் கண்டிக்கிற 'மனிதனாக" மீண்டு வாருங்கள்,ப்ளீஸ்.
ijaz said…
Muslimkal theviravaathikalaha irukalam Aanal Islamiyrkal Iruka 100% vaipre illai