சிவிங்கிப்புலி

1939-ல் இரண்டு அமெரிக்க இளைஞர்கள் இந்தியா வந்தனர். வருகையின் நோக்கம் இந்திய குறுநில மன்னர்களின் ஏகபோக ராஜபோக வாழ்வு முறையினை புகைப்படங்கள், காணொளிகள் மூலம் நேசனல் ஜியாகிரஃபிக்காகப் பதிவு செய்வதே. இந்தியாவெங்கும் அவர்கள் அலைந்து திரிந்து எடுத்த ஆவணப்படங்கள் ‘Life with an Indian Prince' எனும் பெயரில் வெளியாயின.

சிவிங்கிப்புலிகளையும், வல்லுறுகளையும் பழக்கப்படுத்தி வேட்டையாடுவது ராயல் குடும்பத்து இளவட்டங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சிவிங்கிப்புலிகளைப் பயன்படுத்தி சமவெளி மான்களை வேட்டையாடும் இந்த காணொளி இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. சிவிங்கிப்புலியின் கண்களைக் கட்டி, உடலைக் கயிற்றால் பிணைத்து அதன் சுயவேட்டை சுடுகறியை அபகரிக்கிற காட்சியோடு காணொளி முடிகிறது. சுரண்டல் என்று வந்து விட்டால் இந்திய மன்னர்கள் மனிதன், விலங்கு என்ற பாகுபாடெல்லாம் பார்த்ததில்லை என நினைத்துக்கொண்டேன்.

இந்த இணைப்பில் அந்த அரிய வீடியோ உள்ளது

Comments

இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...
Kasthuri Rengan said…
// சுரண்டல் என்று வந்து விட்டால் இந்திய மன்னர்கள் மனிதன், விலங்கு என்ற பாகுபாடெல்லாம் பார்த்ததில்லை என நினைத்துக்கொண்டேன்.//

ஹ ஹா ஹா ...
வயிதரிச்சல்
அப்போ அவங்க
இப்போ வெள்ளை வெட்டி கதர் சட்டை போதும்..

Popular Posts