பேரரசு எனும் மகாகவி

"பல்லு மொளச்சா புட்டி பாலு புள்ளக்கி அந்த வகையில் நான் யோககாரண்டி" என்ற கவித்தெறிப்பில் பிறந்த மகாவரியின் ஆச்சர்யத்திலிருந்தே தமிழ் சமூகம் இன்னும் விடுபடாத நிலையில் அடுத்தடுத்து பாடல்களை புனைந்து வந்த குத்துப்பாடல் பிதாமகன் பேரரசு, பாடல்கள் எழுதுவதோடு தம் கடமை முடிந்து விட்டது என நிணைக்கும் பிற கவிஞர்கள் போல் அல்லாது தன் தேனினும் இனிய குரலில் பாடியும் கலையின் உன்னத வடிவத்தை அடைந்திருக்கிறார். பழனி திரைப்படத்தின் 'லோக்கு லோக்கு லோக்கலு நான் லோக்கலு' எனத் தொடங்கும் பாடலின் ஆரம்ப வரிகள் ஏதோ பகிரங்க வாக்குமூலம் கொடுப்பது போல இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வரிகளில் பல நெம்புகோல் வரிகளை நீங்கள் எதிர்கொள்வது நிச்சயம். "கொத்து கொத்து பரோட்டா... கொத்திகிட்டு வரட்டா
முட்டை முட்டை பரோட்டா மொக்க மொக்க தரட்டா" என சுசித்ரா தன் வத்தல் குரலில் கேட்கும்போது பத்து நாளா நிக்காம போறவன் கூட எட்டு பரோட்டா கேட்டு வாங்கி சாப்பிடுவான். பாடல் முடியும் போது 'பக்கா லோக்கலுடி'ன்னு பஞ்ச்சோடு முடிக்கிறார் பேரரசு. தொடர்ந்து பேரரசுவின் பாடல்களை விழிவிரிய ஆய்ந்து வரும் ஒரு ஆய்வு மாணவன் என்ற வகையில் என்னால் இப்போதைக்கு சொல்ல முடிந்தது ' பேரரசு வீட்டு கட்டுத்தறியும் குத்துப்பாட்டு எழுதும்'. இங்கே கிடைக்கிறது கேளுங்கள் பயங்கொள்ளுங்கள்!

Comments

Boston Bala said…
கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பத்ற்கேற்ப, ஆலமரம், நெல்லி மரம், வாழை என்று குறியீடுகளால் கவிதை நெய்யும் வித்தகர் அல்லவா எங்கள் பேரரசு!!!! :D
கவிப்பேரரசு இவரா, வேற ஆளா?

அண்ணாச்சி ஒத்துகிட்டா கவுஜ மடத்துல ஒரு சூப்பர் பதவி கொடுக்கணும் இந்த ஆளுக்கு.

முட்டை பரோட்டா, மொக்கை தரட்டா, இக்கவுஜ வரிகளுக்காகவே முடியலத்துவத்திலேயும் பட்டம் தரலாமே ப்ரொபஸர் செல்வேந்திரன்?
ரொம்ப நாட்டு மக்களுக்கு உபயோகமான பாடல் வரிகளை கேட்டு அதை மத்தவங்கள கேட்கனும்னு நினைச்சு லிங்க் குடுத்திருக்கிற உங்கள பாராட்ட வரிகளே இல்ல :)
அருமையான குத்துப்பாட்டு - பேரரசு பாடும் பாடல்
selventhiran said…
ஹா ஹா வாங்க பாஸ்.பாலா, ஜெகதீசன்.
பினாத்தலாரே நான் கொத்தனாய் இருப்பதால் பேரரசுவிற்கு 'கவிமடக்குத்தன்'னு கொடுக்கலாமான்னு அண்ணாச்சி கடுதாசி போட்ருக்கேன்.

அனுசுயா, ஏதோ நம்மால முடிஞ்ச சேவை

சீனா, ஸ்மைலீஸ் போட மறந்துட்டீங்களாக்கும்

Popular Posts