இயற்றலும் ஈட்டலும் காத்தலும்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த உலகில் பணம்தான் இறையாண்மையும், கர்வமும் மிக்கதாக இருப்பது புரியவருகிறது. அதனிடத்தில் பக்தியும், பயமும், மரியாதையும், அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடத்தே மட்டுமே அது இருக்க விரும்புகிறது. அபிப்ராயத்திற்காகவும், அன்பிற்காகவும், கவுரவத்திற்காகவும் தன்னைப் பிரயோகிப்பவர்களிடத்தில் ஒரு போதும் இருக்க விரும்புவதில்லை. பணத்தைக் கையாள்வது அன்பிலாப் பெண்ணுடன் வாழ்வதைக் காட்டிலும் சிரமமானதாக இருக்கிறது.

எதிர்படும் எவரையாவது நிறுத்தி “நில்லுங்கள்... உங்கள் பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்? சரியாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றால் எவரிடமும் பதில் இல்லை. தன் பையில் / பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவு கூடத் தெரியாத அளவிற்கு திரியும் பழக்கம் வந்துவிட்டது நமக்கு.

தினமும் இன்றைய செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்வதும் அன்றைய நாளின் முடிவில் எவ்வளவு செலவு செய்தோம் என்ற கணக்கினைப் பார்ப்பதும் வழக்கொழிந்து விட்டது. ஒரு ஐஸ்க்ரீமையோ, தந்தூரி சிக்கனையோ, பத்திரிகையையோ வாங்குகையில் அதன் மதிப்பிற்கு உகந்த பணத்தைத்தான் செலவழிக்கிறோமா என்ற பிரக்ஞையின்றி விசிறி அடிக்கிறோம்.

கடந்த மாதத்தில் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தினசரி ஆகும் செலவுகளைக் குறித்துக்கொண்டே வந்ததில் நான் எத்தனைப் பெரிய ஊதாரி என்பது புரிய வந்தது. மேன்ஷனில் வாழும் திருமணமாகாத இளைஞனாகிய நான் ஒரு நாளைக்கு ரூ.562/- என்ற வீதத்தில் செலவு செய்திருக்கிறேன்.

உணவு
4062.00
பெட்ரோல்
1290.00
சினிமா (டிக்கெட் செலவு மட்டும்)
437.00
திருமணம் மற்றும் பரிசு பொருட்கள்
220.00
அலுவல் நிமித்தம் நிகழ்ந்த செலவு
400.00
காஸ்மெடிக்ஸ், முடி திருத்தல், துணி துவைத்தல்
737.00
இணையம்
165.00
கல்விச் செலவு
950.00
ஊருக்கு அனுப்பிய தொகை
5000.00
கடன் கொடுத்தது
700.00
செல்போன் பில்
750.00
இதழ்கள்
10.00
புதிய ஆடைகள்
680.00
அறை வாடகை மற்றும் மின்சாரம்
1150.00
இதர
300.00
செப்டம்பர் மாத மொத்தச் செலவு
16851.00
“எழுதிப் பார்க்காதவன் கணக்கு அழுதுப் பார்த்தாலும் தீராது” என்று அப்பா அடிக்கடி சொல்வார். அது எத்தனை உண்மை என்பது ஒரு மாத கணக்கை எழுதிப் பார்த்ததிலேயே புரிந்து விட்டது. புத்தியோடு பிழைக்கலாம் என்றிருக்கிறேன்.

Comments

இதழ்களுக்கு வெறும் பத்து ரூபாய்தான் செலவிட்டீர்களா?

என்ன கொடுமை இது?
Karthikeyan G said…
//புத்தியோடு பிழைக்கலாம் என்றிருக்கிறேன். //
இனிமேல் நானும். :)
selventhiran said…
பரிசல்,

விகடன் மற்றும் குமுதம் குழும இதழ்கள் யாவும் உள்ளூர் ஏஜெண்ட் நண்பர்களால் அன்பளிக்கப்படுகிறது.

உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களுக்கு ஆண்டுச் சந்தா காட்டி இருக்கிறேன்.

இவைகளைத் தவிர்த்து வாங்கும் இந்தியா டுடே, தி வீக், அவுட் லூக் குழும இதழ்களுக்கும், தினசரிகளுக்கும் அலுவலகமே பணம் கொடுத்து விடுகிறது.

பெண்ணேஸ்வரன் போன்ற சிற்றிதழ் நண்பர்களும் அவர்களுடைய இதழ்களை அன்பு கூர்ந்து அனுப்பி வைக்கிறார்கள்.
உயிர்மை, கவிதாசரண், சதுக்கபூதம், மணல் புத்தகம், மனித உரிமை காவலன், ஓம் சக்தி, புதிய ஜனநாயகம், புதிய கலாசாரம், கல்கி, அம்புலி மாமா, கோகுலம், சண்டே இன்டியன் ஆகியவை படிப்பதை மறைத்தது ஏனோ? தன்னடக்கமா?
கேள்வி 2: இதன் மூலம் கிடைக்கும் மாத வருமானம் எவ்வளவு?
selventhiran said…
உயிர்மைக்கு ஆண்டுச் சந்தா செலுத்தி இருக்கிறேன். அதனைத் தவிர்த்து தாங்கள் குறிப்பிடும் இதழ்கள் எதையும் வாங்குவதில்லை. நண்பர்களின் கதைகள் / கவிதைகள் பிரசுரமாகிய தகவல் கிடைத்தால் எந்த இதழானாலும், என்ன விலையானாலும் வாங்கி விடுவது உண்டு.

மணல் புத்தகத்தின் முதல் இதழை ரமேஷ் அண்ணாவின் வீட்டில் கண்டெடுத்தேன். அதன் முதல் பக்கத்தில் "கோணங்கிக்கு அன்புடன் சங்கர்" என சங்கர் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். என்றாவது ஒரு நாள் கோணங்கியை சந்திப்பேன். அப்போது ஒப்படைக்கலாம் என்று வைத்திருக்கிறேன்.
//புத்தியோடு பிழைக்கலாம் என்றிருக்கிறேன். //
இனிமேல் நானும். :)
வலைச்சரத்தில் சுட்டியதற்கு நன்றி பரிசல்!
Disappointed to see the 5k sent home under the expenditure :(

700 Rs enna varakkadana ? :)

Anputan
Singai Nathan

Popular Posts