எதிர்வினை

என்னுடைய பின்னூட்டங்கள் சமயங்களில் பதிவுகளை விடப் பெரியதாக அமைந்துவிடுவது உண்டு. அப்படிப்பட்ட சில பின்னூட்டங்களையே பதிவாகப் போட்டு இன்றைய தினத்தை ஓப்பேற்றலாம் என்றிருக்கிறேன்.

சந்திரமெளலீஸ்வரரின் பதிவு ஒன்றிற்கு http://chandramowlee2.blogspot.com/2008/05/blog-post_18.html
ஒரேயொரு ஆடவனின் அன்புக்கு பாத்திரமாகக் கடைசிவரை இருந்து வாழ்ந்தவர்களை 'காதல் பரத்தையர்' என்றும், பொருள் தேடும் நோக்கில் காமத்தை விலைக்கு விற்றவர்களை 'வேசிகள்' என்றும் அழைத்து வந்தது தமிழ்ச்சமூகம். மன்னர்களுடைய அரண்மனைகளில் நூற்றுக்கணக்கான தாசிகள் இருந்தனர். அவர்கள் மன்னனை மட்டுமல்லாது, விருந்தினர்களையும், போர்க்காலங்களில் போர் முனைக்குச் சென்று வீரர்களையும் உற்சாகமூட்டியது வரலாறு. புத்தருடைய தவத்தைக் கலைக்க அவரது தந்தை கத்தோதனர் விலைமாதரை நாடி இருக்கிறார். வைசாலி குடியரசில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அதை அரசாங்கமே வளர்க்கவும், அவள் பருவமடைந்த பின் அரச குடும்பமே அவளை அனுபவிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது. புத்த சரித்திரத்தில் புகழ் பெற்ற 'அம்பாபாலி' இப்படிப்பட்ட ஒருவள்தான். ஆண்டவனுக்குச் சேவை செய்த தேவரடியார்கள் பிற்காலத்தில் பக்தர்களுக்கும் சேவை செய்யத் தொடங்கி தேவதாசிகள் ஆனார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழ்க்கை முறையாக இருந்திருந்தால், வேசி, பரத்தை, கணிகை, தேவதாசி, விபச்சாரி, சேடி, தாசி போன்ற வார்த்தைகளே தோன்றி இருக்காது.

விபச்சாரம் உலகின் புராதன தொழில். விபச்சாரம் சமூகக் குற்றங்களைக் குறைக்கும் உயவுப் பொருளாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை முறைப்படுத்த அரசாங்கம் தவறியதன் விளைவுதான் தமிழகம் / இந்தியா எய்ட்ஸில் முன்னணியில் இருக்கக் காரணம். கற்பிதங்களும், உணர்ச்சி வசப்பட்ட விவாதங்களும் தொடர்ந்து நம்மைப் படுகுழியில்தான் தள்ளி வருகிறது. விபச்சாரிகளுக்கு முறையான உடல் சோதனைகள் செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டு, பாதுகாப்பான உடலுறவிற்கான சாதனங்களும் வழங்கப்பட்டு வரும் தேசங்களில் இருப்பதை விட பாரத மணித்திருநாட்டில் எயிட்ஸ் அதிகம் இருப்பதை எவரால் மறுக்க இயலும்?!

போர்க்கப்பலில் சென்னை வந்த ஐரோப்பிய ராணுவ வீரர்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு, கால் கேர்ள்ஸை அழைத்து வந்து 'மாமா வேலை' பார்க்கத் தயாராக இருக்கும் அரசாங்கம் அதே சேவையைத் தன் சொந்த குடிமகனுக்கு மறுப்பது எந்த வகை நியாயம்?!

கோவி. கண்ணன் பதிவு http://govikannan.blogspot.com/2007/05/blog-post_18.html

கோவிக்கண்ணன், கிறித்துவர்கள் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வேளை தவறாமல் தொழுகின்றனர். இந்துக்கள்...?! உங்களது ஆத்திரம் தமிழுக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் ஏற்பட்டதா? ஆலயங்களில் தேவாரமும், திருவாசகமும் பாடப்பட்டால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ன?! பல வருடங்களாக ஆலயத்திலே சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து வந்ததால், சமஸ்கிருதம் வளர்ந்துவிட்டதா?! நீங்களும், நானும் சமஸ்கிருதத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டோமா என்ன?!

தமிழை வளர்க்க இதுவல்ல வழி. முதலில் அறிவியல் தழிழை வளருங்கள். அலுவலகங்களில் பேசவும், அறிக்கை அளிக்கவும் தமிழைப்பயன்படுத்துங்கள். பண்டைய தமிழ் இலக்கியங்களை எளிய மொழியில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள். அதை விட்டு விட்டு தேவாரத்தை கொழுத்துவேன். திருவாசகத்தை எரிப்பேன் என்பதெல்லாம் வேட்டியை அவிழ்த்து தலைப்பாகை கட்டிக்கொள்வது போல கேலிக்கூத்து ஆகிவிடும். அப்புறம் ராமதாஸ் மாதிரி அடிக்கடி "உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே" பிரச்சனைகளை அணுகாதீங்க.. உடம்புக்கு நல்லதல்ல.

தமிழ்தானே வளரும். அதற்குரிய தகுதியும் வளமும் அதற்கு உண்டு. வளர்க்கிறேன் பேர்வழி என்று அதன் வேர்களுக்கு வெந்நீர் உற்றாதீர். ப்ளீஸ்.

Comments

//தமிழ்தானே வளரும். அதற்குரிய தகுதியும் வளமும் அதற்கு உண்டு. வளர்க்கிறேன் பேர்வழி என்று அதன் வேர்களுக்கு வெந்நீர் உற்றாதீர். ப்ளீஸ்.//
நல்லாதான் இருக்கு..
தலையும் புரியல, காலும் புரியல.

அவுங்க பதிவ படிச்சுட்டு இங்கே வந்தா, உங்க பதிவு ம்றந்து போச்சுது.. மறுபடியும் அங்கே போனா அவுங்க பதிவு மறந்து போயிருச்சுங்.. ஷ்ஹ்
நல்ல வினை.

(பின்னூட்டத்தையே பதிவாக்கி புட்டிய வாழ்த்துகள்)
வணக்கம் நண்பா

உங்கள் முதல் கருத்து ஏற்புடையதே. எய்ட்ஸ் மட்டும் அல்ல பாலியல் குற்ற்ங்களுக்கும் அதுதான் காரணம்.

இந்த நாட்டில், நம் சினிமா கதாநாயகியைவிட கவர்ச்சியாக உடையணிகிறார்கள். ஆனால் இங்கே பாலியல் குற்றம் என்பது மிக அரிதாக இருக்கிறது.

.............................

//...பஞ்சபூதங்களின் செயல் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே
அந்த மேன்மை கலைகள் தமிழினில் இல்லை..//

பாரதியும் சொன்னான். வழிமொழிகிறேன்.
அருமையான கருத்துள்ள பின்னூட்டங்கள்!

உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்து போகிறேன்.
//செல்வேந்திரன் said...


கோவிக்கண்ணன், கிறித்துவர்கள் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வேளை தவறாமல் தொழுகின்றனர். இந்துக்கள்...? உங்களது ஆத்திரம் தமிழுக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் ஏற்பட்டதா? ஆலயங்களில் தேவராமும், திருவாசகமும் பாடப்பட்டால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ன? பல வருடங்களாக ஆலயத்திலே சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து வந்ததால், சமஸ்கிருதம் வளர்ந்துவிட்டதா? நீங்களும், நானும் சமஸ்கிருதத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டோமா என்ன?

தமிழை வளர்க்க இதுவல்ல வழி.. முதலில் அறிவியல் தழிழை வளருங்கள். அலுவலகங்களில் பேசவும், அறிக்கை அளிக்கவும் தமிழைப்பயன்படுத்துங்கள். தமிழிலக்கிய எளிய மொழியில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள். அதை விட்டு விட்டு தேவாரத்தை கொழுத்துவேன். திருவாசகத்தை எரிப்பேன் என்பதெல்லாம் வேட்டியை அவிழ்த்து தலைப்பாகை கட்டிக்கொள்வது போல கேலிக்கூத்து ஆகிவிடும். அப்புறம் ராமதாஸ் மாதிரி அடிக்கடி "உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே" பிரச்சனைகளை அணுகாதீங்க.. உடம்புக்கு நல்லதல்ல.

தமிழ்தானே வளரும். அதற்குரிய தகுதியும் வளமும் அதற்கு உண்டு. வளர்க்கிறேன் பேர்வழி என்று அதன் வேர்களுக்கு வெந்நீர் உற்றாதீர். ப்ளீஸ்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்//

மன்னிக்கவும், அந்த பதிவில் உங்களுக்கு மறுமொழி இடாமல் விட்டதற்கு அப்போது நேரமில்லாமல் போனதுமட்டுமின்றி, வடமொழிக்கு வால்/வாள் பிடித்தவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்ததால் பிறகு கவனிக்காமல் இருந்துவிட்டேன்.

எனது அந்த பதிவின் ஆதங்கம், கோயிலுக்குள் பாட முடியாத தேவாரம் / திருவாசகம் நமக்கு தேவையா என்பதே. அதற்கும் தமிழை வளர்ப்பதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தமிழ் அதுவும் இறைவனுக்கு என்று பாடப்பட்ட தமிழ் பாடல்கள் புறக்கணிக்கப் படுகிறதே என்கிற (வெப்ப)பெருமூச்சுதான். சிதம்பரத்தில் பாடக்கூடாது என்று பூட்டிவைக்கப்பட்ட திருமுறைகளில் கரையான்களுக்கு காணிக்கையாக்கியது போக கிடைத்தது பணிரெண்டு திருமுறைகள் மட்டுமே அதில் தேவாரம் திருவாசகம் அடக்கம், மேலோட்டமாக தலைப்பைப் படித்தால் தேவாரம் திருவாசம் மீது எனக்கு வெறுப்பு இருப்பது போலவும், நத்திக கருத்தாகவும் தோன்றும். மாயத் தோற்றம் !
Sanjai Gandhi said…
கோவியாருக்கு போட்டிருக்கும் பின்னூட்டம் சூப்பரோ சூப்பரு.. சிந்தாமல் சிதறாமல் வழிமொழிகிறேன்..
shri Prajna said…
ரெண்டுமே அருமையான கருத்துக்கள்...

Popular Posts