Wednesday, March 11, 2009

முப்பெருந்தேவியர்


எங்கள் தெருவிற்கு அவர்கள் புதிதாய் குடிவந்தார்கள். அவர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள். ஒருத்திக்கு என் வயது. மற்ற இருவருக்கும் என்னைவிட ஒரிரு வயது குறைவாக இருக்கலாம். மூன்று பேரும் அழகாய் இருந்ததால் என் வயதொத்த இளைஞர்களால் தெருவில் கூட்டம் அம்மும். பைக்கில் எட்டு போடும் அளவிற்கு வசதியோ அல்லது இறுக்கமான சட்டையை அணிந்து ஆகிருதி காட்டும் வனப்போ இல்லாததால் எப்போதும் தலையணை சைஸ் புத்தகத்தைக் கையில் கொண்டே அந்த வீட்டை ஒரு நாளுக்கு ஒன்பது முறையேனும் கடப்பது என் வழக்கம்.

மற்ற இளைஞர்கள் 'பொறுக்கி'களென்றும் நான் 'படிப்பாளி'யென்றும் அவர்களால் கருதப்பட்டுவிடுவேன் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் இல்லை. முதலில் அந்தப் பெண்களின் அம்மா நான் கடக்கையில் 'தம்பி தூரமா...?!' என்பார். நான் அமைதியாக 'லைபரரிக்கு' என்று சொல்லிக் கடப்பேன். பிறகு லலிதா, பத்மினி, ராகினியரின் புன்னகைகள் கிடைக்க ஆரம்பித்தது. மெள்ள என்னிடம் பழக ஆரம்பித்தார்கள். என்னை மேதையென்று காண்பிக்க ஓஷோவின் துணையை நாடினேன்.

'ஓஷோ' பற்றிய அறிமுகம் இல்லாததால் மூத்தபெண் தன் பவளவாய் திறந்து 'ஒஷோ புக் இருந்தா கொடேன்... படிச்சுட்டுத் தர்றேன்'. வாக்கியத்தை முடிப்பதற்குள் 'என் இளமைக்கால நினைவுகள்' கொண்டு வந்து கொடுத்தேன்.

நாட்கள் நகர்ந்தது. ஒரு வாரம் கழித்து புத்தகத்தைக் கேட்டேன். 'இன்னும் படிக்கலடா...' என்றாள். பத்து நாட்கள் கழித்துக்கேட்டேன் 'ரிவிஷன் டெஸ்டு நடக்குதுடா...' சரி இனி அவளே கொடுக்கும்போது வாங்கிக்கொள்ளலாம். ஓயாமல் கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

மூன்று மாதம் ஆகியும் புத்தகம் திரும்பிய பாடில்லை. இடையில் புஜபல பராக்கிரமன்களில் ஒருவன் மூத்தவளுடன் ஜாடைமொழி பேசும் அளவிற்கு முன்னேறி இருந்தான். முதலுக்கே மோசம். ஒரு நாள் வெகுண்டெழுந்து அவள் வீட்டிற்குப் போய் "எங்கே என் புத்தகம்" என்றேன்.

"டேய் நீ என்னடா... எப்ப பாத்தாலும் புக்கு... புக்குன்னுட்டு. அத எங்க டாமி கிழிச்சிடுச்சி..."

"......"

"என்ன அமைதியா இருக்கே...?!"

"உங்க வீட்ல 'டாமி'தான் எல்லாருக்கும் படிச்சி சொல்லுமா...?!"

"......."

"நீ நாய்கிட்ட கொடுத்து படிக்கச் சொல்லுவன்னு தெரிஞ்சிருந்தா.... கொடுத்துருக்கவே மாட்டேன்டி"

"செல்வா...ப்ளீஸ்... விடேன்"

"நீங்க மூணு நாய் இருக்கும்போது இன்னொரு நாய் எதுக்குடி?!"

"செல்வா, வார்த்தைய அளந்து பேசு... கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள விட்டா இப்படித்தான்..."

"யாரடி நாய்னு சொன்ன... நீதான்டி எவன் கெடைப்பான்னு ஊர் மேயுற நாயி..."

வார்த்தைகள் தடிக்க... நடுவீட்டில் இருந்து ஓடி வந்த தாய் "வெளிய போடா நாயி..." என்று இரைந்தாள்.

நான் ஒரு ஸ்டூலை ஆத்திரத்துடன் உதைத்துவிட்டு நெஞ்சு பொங்க வெளியே வந்தேன்.

டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னிலே மகிழ்ந்து, தன்னிலே சுய ஒளி பெற்ற நாயாக வாலாட்டிக்கொண்டிருந்தது.

17 comments:

செல்வேந்திரன் said...

பரிசலின் 'இரவல் புத்தகங்கள்' தொடர்பான பதிவைப் பார்த்தபின் பழைய ஞாபகம் நினைவைக் கிளறி எழுத வைத்துவிட்டது.

அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

என்னாச்சு பாஸ்

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க ...

இரா.சிவக்குமரன் said...

///அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.///எனக்கும் இந்த பழக்கம் இருக்கு. கூடுமானவரைக்கும் புத்தகம் இரவல் வாங்கறதில்லை.(வாங்கிட்டாலும் என்னவோ குடுத்துர்ற மாதிரி......)

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

எழுத துவங்கும் முன் எழுத்துக்கான (எழுதுவதற்காக) களத்தை தேடி அலைவது வழக்கம்...
களத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது போக போக புரிகிறது...

பின்பு கதையும் நிகழ்வாகிறது...
நிகழ்வுகள்... கதையாகிறது...

சரிதானே...

வால்பையன் said...

//டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னிலே மகிழ்ந்து, தன்னிலே சுய ஒளி பெற்ற நாயாக வாலாட்டிக்கொண்டிருந்தது.//

வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள்!
நானும் வாலுள்ள நாய் தான்!
பார்த்து வச்சிகோங்க!

லதானந்த் said...

2

அமிர்தவர்ஷினி அம்மா said...

"டேய் நீ என்னடா... எப்ப பாத்தாலும் புக்கு... புக்குன்னுட்டு. அத எங்க டாமி கிழிச்சிடுச்சி..."

"......"

"என்ன அமைதியா இருக்கே...?!"

"உங்க வீட்ல 'டாமி'தான் எல்லாருக்கும் படிச்சி சொல்லுமா...?!"


ரசித்து சிரித்தேன்.

டாமியோ இந்த லவ்கீக பிரச்சனையில் தலையிடாமல் தன்னிலே மகிழ்ந்து, தன்னிலே சுய ஒளி பெற்ற நாயாக வாலாட்டிக்கொண்டிருந்தது.
:)-

தாமிரா said...

ஆனாலும் நீங்க கொஞ்சம் கடுமையான ஆளுதான் போலிருக்குது.. பெண்களிடம் இப்பிடியா நடந்துகொள்வது..?

சரவணகுமரன் said...

:-)

மாதவராஜ் said...

பாக்யராஜின் படம் ஞாபகம் வந்தாலும், ரசித்தேன்.

//ஆனாலும் நீங்க கொஞ்சம் கடுமையான ஆளுதான் போலிருக்குது.. பெண்களிடம் இப்பிடியா நடந்துகொள்வது..?//
ஆஹா... செல்வேந்திரன் ஜாக்கிரதை!!!!

தமிழன்-கறுப்பி... said...

என்னங்க இப்படி திட்டிட்டிங்க பாவம் அந்தப்பொண்ணு... ;)

தமிழன்-கறுப்பி... said...

நானெல்லாம் வாங்கின புத்தகத்தை திருப்பி கொடுக்கலைன்னா கொலையே பண்ணிடுவேன்...

VIKNESHWARAN said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்...

மங்களூர் சிவா said...

"மெள்ள" மெல்ல

மங்களூர் சிவா said...

/

அறிவிப்பு:

எனக்கு புத்தகங்கள், சி.டிக்கள் இரவல் வாங்கினால் திருப்பிக்கொடுக்கும் பழக்கம் இல்லை. எனவே, நான் எதையாவது இரவல் கேட்டால் நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
/

:)))

மங்களூர் சிவா said...

/
VIKNESHWARAN said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்...
/

விக்கி அனுபவமா??

உமாஷக்தி said...

அடப்பாவி செல்வா..புக் போனா வேற வாங்கிக்கலாம் பெண்கள் மனதை நோகச் செய்யலாமா?