Thursday, March 26, 2009

நேயன் விருப்பம்

கழிப்பறையில்
முழங்காலும்
குளிக்கையில்
முழங்கையும்
இடிக்கிறது
இடிபட வாழ்தலின்
இன்றைய தினம்
துவங்கியாகி விட்டது.

தனிப்பெரும்
நகருக்குத்
திணையில்லாத
குறையைப் போக்குகின்றன
முருங்கைப்பூக்கள்.

அடுத்தவன்
விஷயத்தில்
மூக்கை
நூழைக்க வேண்டாமென்பதால்
நாக்கோடு
நிறுத்திக்கொண்டேன்.

விண்ணப்பங்களை
நிராகரிக்கையில்
உறுத்தல்கள்
ஏதுமில்லையா?!
சபாஷ்!
நீங்கள் ஒரு
மேலாளர் ஆகிவிட்டீர்கள்.

'தீ'யென
எழுதப்பட்ட
வாளிக்குள்
மணல்தான்
இருக்கிறது.

17 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

//'தீ'யென
எழுதப்பட்ட
வாளிக்குள்
மணல்தான்
இருக்கிறது.//

வெளியில் நிற்கிறது.

அத்தாங்க outstanding..!

நட்புடன் ஜமால் said...


மு
தா

ம்

முரளிகண்ணன் said...

அருமை. முதல் தத்துவம் மிக அருமை

KaveriGanesh said...

செல்வா என‌

எழுதப்பட்ட உடலுக்குள்

ஞானம்

இருக்கிறது

முரளிகண்ணன் said...

முதல் தத்துவம் மிக அருமை

வால்பையன் said...

//தனிப்பெரும்
நகருக்குத்
திணையில்லாத
குறையைப் போக்குகின்றன
முருங்கைப்பூக்கள்.//

இங்கே திணை என்பது எதை குறைக்கிறது தலைவா?

மாதவராஜ் said...

தம்பி!

நன்றாகவே இருக்கிறது. கோவை மாநகரில் உங்கள் வாழ்வின் தருணங்கள் பிடிபடுகின்றன.

//
'தீ'யென
எழுதப்பட்ட
வாளிக்குள்
மணல்தான்
இருக்கிறது.//

படிமம் உறக்கிறது. வாழ்த்துக்கள்.

அதுசரி, அதென்ன முடியலத்துவம்?j

பரத் said...

//'தீ'யென
எழுதப்பட்ட
வாளிக்குள்
மணல்தான்
இருக்கிறது.//
super!!

yathra said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

ICANAVENUE said...

மிக அருமை!!

அதிலை said...

அனைத்தும் அருமை

தமிழன்-கறுப்பி... said...

இது உங்களுக்கே உரிய விசயமாச்சே சும்மாவா...?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைத்தும் அருமை

முதலும், கடைசியும் அடி தூள்

மங்களூர் சிவா said...

nice kavidhai

செல்வேந்திரன் said...

ஸ்வாமி வாங்கோ...

ஆஹா ஜமால், பின்னிட்டீங்க.

முரளிகண்ணன் வாங்க.

காவேரி சத்தமா சொல்லாதீங்க.

யோவ் வால், எழுதுனவங் கிட்டயே வெளக்கம்லாம் கேக்கப்பிடாதுய்யா... நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்க வேண்டியதுதான்.

மாதவராஜ் அண்ணே, நான் பிரதியங்காரக மாசானமுத்து என்ற பெரும் எழுத்தாளனின் சீடனாக இருந்தது உங்களுக்குத் தெரியாது. அவர் நவீனத்துவம், ரியலிஸம், மாஜிக்கல் ரியலிஸம், சர்ரியலிஸம், பின் - நவீனத்துவம் போன்ற பல்வேறு பட்டறைகளில் கல் உடைத்து எதுவும் பெயராததால், 'நமக்கு நாமே மாமே' என்ற கொள்கை முழக்கத்துடன் உருவாக்கிய புதிய பாணிதான் 'முடியலத்துவம்'. அவரது ஆரம்ப கால முடியலத்துவத்தை சாமான்யன் அணுகவே முடியாது. ஆனால், அவரது சீடனான நான் 'டைல்யூடட் முடியலத்துவம்' எழுதத் துவங்கினேன். சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வாரங்கள் விகடனில் தொடராக வெற்றி நடை போட்டது. உலகெங்கிலும் சுமார் பதினைந்து பேர் அதை படித்திருப்பார்கள். அவர்களது கதி குறித்த தகவல்கள் ஏதுமில்லை.

நிற்க... தமிழ்நாட்டில் மிக லகுவான கவிதைகள் எழுதும் கவிஞர்கள் அருகி வரும் வேளையில் முதல் வாசிப்பிலேயே புரியும் துணுக்கு வகைக் கவிதைகள் இவை. கவித்துவம் பொங்கும் வரிகள் இல்லை என்ற போதும் கவிதைகளை வாசிக்கத் துணியும், துவங்கும் புதிய வாசகனுக்கு ஒரு 'ஸ்டார்ட்டர் பேக்' வகையரா கவிதைகள் இவை. வாசிப்பின் படிநிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த எப்படி ராஜேஷ்குமாரும், சுபாவும், பாலகுமாரனும் பயன்பட்டார்களோ அதன்படியே பயன்படும் ஒரு 'பெய்ட்'. பெய்ட் என்பதை 'எலி ஈர்ப்பான்' என்று மொழிபெயர்த்திருக்கிறேன். எப்படி நம் சாமர்த்தியம்?!

பரத்

யாத்ரா

ஐகேன்

அதிலை

தமிழன் கறுப்பி

அமிர்தவர்ஷிணி

மங்களூரார் - வருக... வருக...

மங்களூர் சிவா said...

/
சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வாரங்கள் விகடனில் தொடராக வெற்றி நடை போட்டது. உலகெங்கிலும் சுமார் பதினைந்து பேர் அதை படித்திருப்பார்கள். அவர்களது கதி குறித்த தகவல்கள் ஏதுமில்லை.
/

அதானே பாத்தேன் ஒருத்தன் உயிரோடதான்பா இருக்கேன்!!

ஸ்ரீதர் said...

ப்ச்...என்ன சொல்ல ....கலக்குறீங்க.வாழ்த்துகள்.