Wednesday, May 13, 2009

ஜெம்ஸ் முட்டாய்

ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஒலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்.
பீறிடும் ரத்தம் பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யூபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
என்73 என்றால் சும்மாவா?

***

ஓடிப்போன மகளைக்
காவல் நிலையத்தில்
கண்ட தகப்பன்
மொய்க்கவர் ஏங்கே கிடைக்குமென
ஏட்டய்யாவை விசாரித்தார்
எனக்கெதுக்கு கவர்?
அப்படியே கொடுங்களென்றார் அவர்.

***

எப்போதோ
பேசத் துவங்கிவிட்டோம்
நீயும் நானும்
இன்னும் பேசத்தான்
பழகவில்லை

***
'ணங்'கென
ஒலியெழுப்பும்
காபித்தம்ளர்
முந்தைய நாள்
ஊடலை ஓசையோடு
அறிவிக்கிறது உலகிற்கு!

***

யுவான்சுவாங்
வந்து போனது
எல்லோருக்கும்
தெரிகிறது
பாவம்
பாட்டன் பெயர்தான்
பலருக்கும் தெரிவதில்லை!

26 comments:

முரளிகண்ணன் said...

தலைப்பு?

மண்குதிரை said...

1.நல்லா இருக்கு

2.நல்லா இருக்கு

3.அழகா இருக்கு

4.நல்லா இருக்கு

5.இதற்கு முன்பு எங்கயோ படித்திருக்கிறேன்

ICANAVENUE said...

முதற்கவிதை நீங்கள் ஏற்கனவே பதிந்து விட்டீர்களே? இருந்தாலும் உங்கள் எல்லாக் கவிதைகளும் மிக நன்றாக உள்ளது!

கார்க்கி said...

அதென்ன அபப்டி ஒரு தலைப்பு? எனக்கு சின்ன வயசுல பக்கத்து வீட்டு ஆண்ட்டி வாங்கி தருவாங்க.. அந்த நினைப்பு வந்துடுசு...

ஆண்ட்டிடிடி..ச்சே

ஜெம்ஸ் மிட்டாய்ய்ய்ய்ய்..

இரா.சிவக்குமரன் said...

///என்73 என்றால் சும்மாவா?///
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அண்ணன் செல்வா அவர்காள் நோக்கியா எண்73 வாங்கியுள்ளார்கள்.

///'ணங்'கென
ஒலியெழுப்பும்
காபித்தம்ளர்
முந்தைய நாள்
ஊடலை ஓசையோடு
அறிவிக்கிறது உலகிற்கு!///

ஹும், என்னாத்த சொல்ல?!...

Cable Sankar said...

n72 கவிதை அருமை..

தாரணி பிரியா said...

1. புது போன் வாங்கிட்டிங்களா
2. அவருக்கு பொண்ணு இல்லாம இருக்குமுங்க‌
3 , 4 & 5. சூப்பர்

kartin said...

chweeeeet!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிறப்பானவை. ஏற்கனவே பதிவாக வந்தவையா? பத்திரிகைகளில் வந்தவையா? படிச்சா மாதிரியே இருக்குது..

வசந்த் ஆதிமூலம் said...

///'ணங்'கென
ஒலியெழுப்பும்
காபித்தம்ளர்
முந்தைய நாள்
ஊடலை ஓசையோடு
அறிவிக்கிறது உலகிற்கு!///

இதே கருத்தில் இக்கவிதையை பல வருடங்களுக்கு முன்பே வார இதழில் படித்த ஞாபகம்.

ச.பிரேம்குமார் said...

மீள்பதிவா செல்வா?

மங்களூர் சிவா said...

எல்லாமே புரியுது அதனால இதெல்லாம் 'கவுஜ'ன்னு ஒத்துக்க முடியாது!

(அதுக்காக கவிதைன்னும் ஒத்துக்க முடியாது)

:)))

ஆயில்யன் said...

//எப்போதோ
பேசத் துவங்கிவிட்டோம்
நீயும் நானும்
இன்னும் பேசத்தான்
பழகவில்லை
///

கலக்கல் :))

மாதவராஜ் said...

ஒன்றிரண்டை ஏற்கனவே படித்தது போல் இருந்தாலும் ரசித்தேன்.

யுவான் சிங்... பாட்டன்...
முக்கியமான விஷயத்தைச் சொல்கிறது.

வாழ்த்துக்கள் தம்பி.

Raghavendran D said...

அத்தனை கவிதைகளும் அருமை :-)

surapathi said...

//ஓடிப்போன மகளைக்
காவல் நிலையத்தில்
கண்ட தகப்பன்
மொய்க்கவர் ஏங்கே கிடைக்குமென
ஏட்டய்யாவை விசாரித்தார்
எனக்கெதுக்கு கவர்?
அப்படியே கொடுங்களென்றார் அவர்.
//
ithu mattum than putithu ...yeninum anaithum arumai...

ஆ.முத்துராமலிங்கம் said...

நீங்க உண்மையிலே பின்நவீனத்துவவாதிதாங்க... அப்படியொரு தலைப்பு!! வச்சிருக்கீங்க.

கவிதைகள் நல்லா இருக்கு 'நறுக்குள்'

புதுகைத் தென்றல் said...

ரசித்தேன்

yathra said...

கவிதைகள் நல்லா இருக்குங்க.

செல்வேந்திரன் said...

வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றி!

முடியலத்துவம் என்கிற லேபிளில் பதிவாகிற என் கவிதைகள் அனைத்தும் விகடனில் வெளியான 'முடியல'த்துவம் தொடரில் இடம் பெற்றவை. அவ்வகையில் சுமார் 70 கவிதைகள் அடியேனால் எழுதப் பெற்று 15 வாரங்கள் வந்தது.

பரிசல்காரன் said...

கலக்கல்!

வெங்கிராஜா said...

முதல் கவிதை அருமைங்க!

D.R.Ashok said...

நல்லாயிருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

சல்லிக்கற்களும் & ஜெம்ஸ் முட்டாய்

அருமை கவிதைகள்

TAARU said...

என்73 - வார்த்தை பிரவாகங்கள் அட்டகாசம்.

யுவன் சுவாங் - வலக்கன்னத்தில் அறைந்தார் போல் சொன்னாய் நண்பா!!!! அருமை...

தமிழ்நதி said...

"எப்போதோ
பேசத் துவங்கிவிட்டோம்
நீயும் நானும்
இன்னும் பேசத்தான்
பழகவில்லை"

இது பிடித்திருக்கிறது மிகவும். யாரையோ நினைவுபடுத்துவதனாலோ என்னவோ:)