நீயா? நானா?
பத்து நாட்களுக்கு முன் 'நீயா? நானா?' டீமிலிருந்து அழைத்து நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டு பேச விருப்பமா என்றார்கள். விருந்தினராகக் கலந்துகொள்ளும் அளவிற்கு என்ன தகுதி இருக்கிறது?! தவிரவும், டாக் ஷோக்களில் பேசும் அளவிற்கு நாவன்மையும் நமக்கில்லை என்பதறிந்து ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்த்தேன். நான்காவது முறை லைனில் வந்தவர் இயக்குனர் ஆண்டனி. "சார்... யாரோ தப்பா தகவல் கொடுத்துருப்பாய்ங்க... நான் அவ்வளவு வொர்த் ஆசாமி இல்லீங்க...ச்சின்னப்பையன்..". "விகடனில் உங்க கவிதைகளைப் படிச்சிருக்கேன். அதுபோதும் உங்களைச் சொல்ல... கிளம்பி வாங்க..." வைத்துவிட்டார்.
தயங்கி, தயங்கி விடுப்பு வாங்கி, உதறல்களோடு ஏ.வி.எம் வந்தடைந்தேன். கோ-ஆர்டினேட்டர்
"அன்றாட வாழ்வில் போலித்தனம்" போன்றதொரு தலைப்பினை சொல்லி இருந்தார். ஒன்றிரண்டு பாயிண்டுகள் வைத்திருந்தேன். நிஜத்தில் தலைப்பு "இந்தியக்குடும்பங்களின் நாடகத்தனம் இயல்பானதா? தவிர்க்க வேண்டியதா?" வெளங்கிரும்... நான் பன்னிரெண்டு வருடங்களாய் அனாதை. 1997ல் என் தாயின் மரணத்திற்குப் பின் எங்கள் குடும்பம் சிதறுண்டு போய்விட்டது. இந்த லட்சணத்தில் குடும்பங்களைப் பற்றி நான் என்ன பேச?
நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினராகக் கவிஞரும், நடிகருமான சினேகன். கோபிநாத், ஆண்டனி, சினேகன் ஆகிய மூவரும் ரொம்ப இயல்பாகவும், பழக எளிமையானவர்களாகவும் இருந்ததால் கொஞ்சம் உதறல் குறைந்தது. ஆனாலும், மைக் முன்னால் நின்று "மைக் டெஸ்டிங்... ஒன், டூ, த்ரி..." சொல்வதென்றால்கூட நான்கைந்து தடவை திணறுகிற வர்க்கத்தைச் சார்ந்தவனென்பதால், ஆரம்பத்தில் தடுமாறி அப்புறம் கைத்தட்டல்களோடு முடித்தேன்.
அனேகமாக 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் இளவயது விருந்தினர் நானாகத்தான் இருப்பேன். என்னை ஏன் விருந்தினராகத் தேர்வு செய்தார்கள் என்பதற்கு கோபிநாத்தின் விளக்கம் அருமையானதாகவும், பெருமையானதாகவும் இருந்தது.
ஒளிபரப்பாகும் நாள் சொல்கிறேன். ப்ளீஸ்... பார்த்துடுங்க....
Comments
சத்தியமா இப்போ சிரிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஆனால் இது ஆனந்த சிரிப்பு. பெருமையாயிருக்கு செல்வா. வாழ்த்துகள் :)
நானெல்லாம் கத்தார்ல இருக்குறதால எங்க செல்வேந்திரன பார்க்கமுடியாது
தயவு செய்து அந்த நிகழ்ச்சி வந்த பிறகு அதன் வீடியோ அனுப்பவும்
வாழ்த்க்கள்
அன்புடன் அருணா
முடிந்தால் லிங்க் அனுப்புங்க :))
அனுஜன்யா
செல்வா, இது தான் அந்த சிரி(ற)ப்பு செய்தியா???
சத்தியமா இப்போ சிரிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஆனால் இது ஆனந்த சிரிப்பு. பெருமையாயிருக்கு செல்வா. வாழ்த்துகள் :)
May 15, 2009 8:02 AM
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
இன்றிலிருந்து நீங்களும் செலிபிரட்டி லிஸ்டில் சேருவதால் உங்கள் போட்டோவில் கையெழுத்திட்டு எனக்கு ஒன்னு அனுப்பி வைக்கவும்!
//
வாலுக்கு அனுப்பும்போது எனக்கும் ஒண்ணு :))
நிகழ்ச்சி ஒளிப்பரப்பும் நாள் என்றென்று சொல்லி விடுங்கள் பார்க்க ஆவளோடு கார்த்திருக்கிடறேன்.
வாழ்த்துக்கள் !
செல்வா, நம்மல்லாம் ஒரே குடும்பம், வாழ்த்துக்கள்.
right selection by Gopi/Antony team.
awaiting the episode AARVAMUDAN...
well wisher
sundar
Hearty Congratulations.
எப்போ ஒளிபரப்பாகுதுனு சொல்லு. தவறாம பாக்குறேன்.
கோபிய நேரில் பாத்தீங்களா? கொடுத்து வச்சவங்க நீங்க!
கண்டிப்பா உங்க நிகழ்ச்சிய பார்ப்பேன்:)
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!
வெங்கடேஷ்
thiratti.com
செல்வேந்திரன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!!!
இன்றிலிருந்து நீங்களும் செலிபிரட்டி லிஸ்டில் சேருவதால் உங்கள் போட்டோவில் கையெழுத்திட்டு எனக்கு ஒன்னு அனுப்பி வைக்கவும்!//
எனக்கும் ஒண்ணு :))
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
பாதம்பட்ட மண்ண ஒடனே அனுப்புங்க பல்லு வெளக்கணும்.
திலும்பி நில்லுங்க. சொறிஞ்சே ஆகணும்.
வாழ்த்துக்கள்!
enna sagaa? ippadi asingapaduthararu ungala?
anyway congrats man.. (sorry, no tamil fonts)
வாழ்த்துக்கள்.
நானும் காத்திருக்கிறேன்.
(நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுவதற்கு ஏதுவாக கொஞ்சம் முன்னாடியே)
அனைத்து நல்லுள்ளங்களின் சார்பாக வாழ்த்துக்கள் செல்வா....
கலக்குங்க!
பிரபலமானவர்களின் வலைப்பூக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
அதுவும் நல்ல விதமாக புகழ்பெறுபவர்களை...
ஏனெனில் இங்கு பிரபல திருடன், பிரபல கொலைகாரன் போல பல பிரபலமானவர்கள் இருக்கிறார்களே...
உங்களின் எழுத்துக்களை தாண்டி, உங்களையும் ரசிக்கும் என்னை போன்றவர்கள் உள்ளவரை, இப்படி பேசாதீர்கள்..
ஒளிபரப்பாகும் தேதியை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த வரி மனதை என்னவோ செய்துவிட்டது. எத்தனையோ நல்ல நண்ப்ர்களை பெற்றுள்ள நீங்கள் இப்படி குறிப்பிட்டுள்ளது வருத்தமாக உள்ளது.
இன்று வரை ஒரு பின்னூட்டம் வாயிலாக கூட உங்களிடம் பேசாவிட்டாலும், உங்களை ஒர் நண்பனாகவே பார்த்து வந்தேன், உங்கள் பதிவுகளை படிப்பதன் மூலம். ஆகவே, இந்த வரியினை மனதிலிருந்தும், பதிவிலிருந்தும் நீக்குமாறு வேண்டுகின்றேன்.
- கோபிநாத்
பிரேம், நீ என் சகோதரன். ஆனந்தப்படாமல் வேறு என்ன செய்வாய்?!
வால், நான் உங்க அன்புத் தம்பி.
வசந்த், நிச்சயம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.
பாண்டி-பரணி, தங்கள் அன்பிற்கு நன்றி!
நன்றி கதிரவன்.
அருணா, நான் ரொம்ப ரொம்ப சின்னப்பையன்.
மங்களூரார் சக ஊழியனை கலாய்க்க வேண்டாம்.
நன்றி பரத்.
ஆளவந்தான் நிச்சயம் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.
அனுஜன்யா, அதென்ன அல்வாவை சுடுபடுத்தி சாப்பிட்டீர்களாமே..?! இது புதுசால்ல இருக்கு...
ஆயில்யன், தங்கள் அன்பிற்கு நன்றி!
முத்துராமலிங்கம் நன்றி!
ச்சின்னப்பையன் நன்றி!
சரவணகுமரன் நானும்தான்.
சாமிநாதன் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.
வந்தியதேவன் (சூப்பர் பேருல்ல...) நன்றி!
மயில், நீங்க என் அண்ணி.
பரிசலண்ணே நாம இப்படி பூக்களைக் கொண்டு சண்டையிடுவது புதிதல்ல...
சுந்தர், தங்கள் அன்பில் மகிழ்கிறேன்.
நன்றி பாலகுமார்.
வாங்க வெட்டிப்பயல், நிச்சயமா கொடுக்கிறேன்.
விக்கி போன்ல சொல்லிடறேன்.
நன்றி ஆர்.ஆர்.
நன்றி சுரேஷ்
நன்றி தமிழ்மங்கை
நன்றி வெங்கடேஷ்
அகநாழிகை உங்கள் அன்பிற்கு நன்றி!
நன்றி மண்குதிரை.
வெயிலான் நம்ம மசினகுடி விவாதங்களில் பதினைந்து எபிஸோட் போடலாம் இல்லையா?
அண்ணாச்சி வழக்கம்போல நீங்க பில் கொடுக்க விடமாட்டீங்க... அப்புறம் என்ன பார்ட்டி?
அன்பின் பாசகி அதென்ன 'ஜி'. உங்கள் அன்பிற்கு நன்றி.
ரமேஷ் அண்ணே, கலாய்க்காதீங்க...
லதானந்த் சார், சமயங்கள்ல நீங்க யாரைத் தாக்கறீங்கண்ணே எனக்குப் புரியறதில்ல. நெம்ப கொளப்பமா இருக்கு. ஆனாலும் உங்களோட நிபந்தனையற்ற தூய பேரன்பிற்கு நன்றி!
நண்பனே கார்க்கி, இன்று நான்; நாளை நீ
நன்றி தீப்பெட்டி.
நன்றி அறிவுமணி.
மாதவராஜண்ணே, தம்பிய ரொம்ப நாளா மறந்துட்டீங்க போலருக்கு...
நன்றி கருவெளி.
நன்றி ஐகேன்.
நன்றி சுரேகா.
நன்றி பாலராஜன் கீதா
நன்றி செல்வகுமார்
கனககோபி தங்கள் அன்பிற்கும், அவதானிப்பிற்கும் நன்றி.
ராகவேந்திரன், தப்புதான். அன்பிற்கு நன்றி.
அமிர்தாவின் அம்மா நன்றி.
கார்த்திகேயன் ஜி நன்றி.
நன்றி சுரபதி.
அன்பின் கோபிநாத், தங்களது பின்னூட்டம் நெகிழ்வூட்டுகிறது. தங்களின் அன்பிற்கு நன்றி.
பின்னூட்டங்களிலும், நேரிலும், போனிலும், மின்னஞ்சல்களிலும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரது அன்பிலும் அகம் மகிழ்கிறேன்.
Not sure how to write it in Tamizh. Will figure it out soon.
Writing this right after Neeya Naana. Amazing thoughts, very simple and effective communication. Really enjoyed it.
One thing that was confusing ( Trust me,neither I'm asking you a question nor I'm questioning your thoughts)is your comment on online friends (lets call remote friends). I do see lots of fans and friends in your blog. (just my egoistic thoughts) In my opinion the concept is not new. The tool set that are getting used these days are modern. Remote friendship is ancient. for example Pisiranthaiyar and KopernjCholan.
I understand it was a comparison between .......
Anyways good to see you shine.
Good luck.
Caps.
comments. Hats off to you, People like yourself can only give life to your Tamil language. I am against one of your comments, people use Orkut and Facebook to have contacts with the far away friends. I am in US, still i have contacts with all my friends who was with me from my childhood.
Keep posting your work.
PG
First of all sorry for writing in english.. I am G from Florida , my native is madurai. Nice to meet u in blog. I ve read ur write ups in vikatan..
Really nice and touching... and nice to see u in neeya naana my fav talk show.... i really liked ur speech ..its from heart and one thing i want to tell u is "orkut" is mainly for to contact/search/ being touch with old friends when we are in various state/nation not only searching new friends.
Just my 2cents..
Anyway hats off to u ...
Friend
பின் குறிப்பு: 'சிறு வயதிலேயே சாதனை' என்பது ஒரு ஓவர் ரேட்டேட் கான்செப்ட் என்பதாலும் , வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் உங்கள விட்டு போல என்பதாலும் , தாங்கள் எந்த தவறான முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் மிகுந்த பதற்றத்துடனும் , தாழ்மையுடனும் கேட்டு கொள்கிறேன்.
தன்னால் முடிந்ததை செய்வோர் சங்கம்