ஈனத் தலைவர்
லலித் மோடியின் நிர்வாகத் திறனை அகில உலகமே புகழ்ந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இந்தியப் பல்கலைக்கழங்கள் அவருக்கு டாக்டர் பட்டமளிக்கலாம். ஏதாவது வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தங்கள் மேலாண்மை மாணாக்கர்களுக்கு கெளரவ பேராசிரியராக இவரை அழைத்து வகுப்பெடுக்கச் சொல்லலாம். பின்னே, கொஞ்ச சாதனையா இது? விலைவாசி, வேலையின்மை, பற்றியெறியும் ஈழம் பற்றிய கவலைகளை மறந்து மொத்த தேசத்தையும் டிவிக்கு முன் உட்கார வைத்தது அரும் சாதனையல்லவா?!
அப்துல் கலாம் அளவிற்கு தினமும் பள்ளி மாணவர்களைச் சந்திக்கிறேன். நான் விசாரித்த வரையில் 99% சிறார்கள் ஐ.பி.எல் ஆட்டங்களின் தீவிர ரசிகர்கள். தொழிலதிபர்கள் இடமும் வலமும் நடிகைகளை உட்கார வைத்துக்கொண்டு ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் முத்த மழை பொழிந்ததும், வர்ணனையாளர் 'சீயர் கேர்ள்'ஸை தன் தோள் மீதும், மடி மீதும் உட்கார வைத்துக்கொண்டு பேசியதும், மந்த்ராபேடி உள்பாடியோடு ஸ்கேட்டிங் செய்ததும் குழந்தைகள் குறித்து வியாபாரிகளுக்கு எவ்வித கவலைகளும் இல்லை என்பதை பறை சாற்றியது.
***
குற்றம், நிஜம் போன்ற நிகழ்ச்சிகளின் போக்கு குறித்து 'கும்கீ'யோடு பேசிக்கொண்டிருந்தேன். கள்ளக்காதல், ஆள் கடத்தல், சைக்கோ கொலைகள், ஆவி, பில்லி சூன்யம், ஏவல், அமானுஸ்ய மனிதர்கள், மர்ம சாமியார்கள்தான் 'ரா' மெட்டிரியல்கள். மிரட்டலான ஓப்பனிங், இண்டர்வெல் பிளாக், க்ளைமாக்ஸ் என சினிமாவின் பார்முலா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கடை பிடிக்கப்பட்டுகிறது. இதில் 'சித்தரிக்கப்பட்டவைகள்' என்ற பெயரில் தனி போர்ஷன் வேறு. செருப்பால் அடிக்க வேண்டிய பல மூட நம்பிக்கைகளை மக்கள் உணமையென்று நம்புகிற அளவிற்கு இந்நிகழ்ச்சிகள் சித்தரிப்பது குறித்து கவலைப்பட்டார். தூங்கப் போகிற நேரத்தில் ஒளிபரப்பாகிற இம்மாதிரி கோட்டிக்கார நிகழ்ச்சிகளை குறைந்த பட்சம் குழந்தைகளோடாவது பார்க்க வேண்டாம் என்பது அடியேனின் வேண்டுகோள்.
***
நண்பர் ஹரிகிருஷ்ணன் 'மணல்வீடு' இலக்கிய இதழ்கள் அனைத்தையும் அனுப்பி இருந்தார். முதல் இதழைப் புரட்டியதும் ஓஸியில் படிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. அத்தனை நேர்த்தியான இதழ். என் வாசிப்பு மட்டத்தை தாண்டிய ஒரு உச்சஸ்தாயி மொழியிலும், நடையிலும் இருக்கிற பத்திரிகை. நவீன இலக்கிய இயங்கிகள் பலரது படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. நம்முடைய கென், அய்யனார் போன்றவர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
"முடியலத்துவத்தை அனுப்பி வையுங்கள். பிரசுரிக்கலாம்" என்றார் ஹரி. நல்ல சாப்பாட்டு இலையில் 'நரலையா' வைப்பது? ம்ஹூம்!
ஆண்டுச் சந்தா நூறு ரூபாய்தான். நான் செலுத்தி விட்டேன்.
***
'மினி டைகர்ஸ்' அணி துவக்கப்பட்ட காலத்தில் அதன் கடைசி பேட்ஸ்மேனாக இருந்து, படிப்படியாக துவக்க ஆட்டக்காரராகி, பின் அணித்தலைமையை ஏற்ற நெடிய வரலாறு என்னுடைய கிரிக்கெட் நோஸ்டால்ஜியாவில் இருக்கிறது. அப்பேர்பட்ட என்னை ஒரு ஆட்டத்தில் பன்னிரெண்டாவது ஆட்டக்காரராக அறிவித்த போது ஏற்பட்ட உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கோடிக்கணக்கான தெருமுனை கிரிக்கெட்டரில் ஒருவனான எனக்கே இதை தாங்க முடியவில்லையெனில், வாழ்நாள் முழுக்க கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்துவிட்டு தேசிய அணியில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்திலேயே தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முதல் தர கிரிக்கெட்டர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அந்த துயர் படிந்த நாட்களின் நினைவைத்தான் ஆகாஷ் சோப்ரா ' பியாண்ட் த ப்ளூஸ் ' என்ற நூலில் வடித்து வைத்திருக்கிறார். ஒரு அத்தியாயம்தான் படித்தேன். முடியலை.
***
சிவராமன் அண்ணாவின் சிறுகதைப் போட்டிக்காக நாளது தேதி வரை மூன்று சிறுகதைகள் எழுதி, மூன்றும் திருப்தி ஏற்படுத்தாமல் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. சிவராமன், ஜ்யோவ் போன்றோரது இலக்கிய ரசனையும், பிற்காலத்தில் புத்தகமாய் வரும் அபாயம் இருக்கின்ற பயமும் கதை எழுதுவதில் ஒரு தடங்கலாய் இருப்பதை உணர முடிகிறது. பரிசல், நர்சிம் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் கதையினை எழுதியாக வேண்டும் என்கிற அற்ப வன்மம் வேறு. 'வெளங்குவியா நீ?' என்கிறாள் கேண்டி. இது அதிகாரத்தின் உரையாடல் அல்லவா?!
***
இனத்தலைவரென்பதை
எழுத்துப் பிழையாக
ஈனத் தலைவரென
எழுதிய பெயிண்டர்
நமுட்டுச் சிரிப்போடு
அழிக்கிறான்!
என்றொரு முடியலத்துவத்தை போன ஜென்மத்தில் விகடனில் எழுதி இருந்தேன். என்னதான் பிரபாகரன் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தன் மகனை விடுதலைப்போரில் களப்பலி கொடுத்து விட்டு, தானும் பலியான நாட்களில், தமிழினத்தலைவர் நம்பர் 10, ஜன்பத் சாலையில் தன் பிள்ளைகளுக்கு பதவி கேட்டு பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார். இனத்தலைவரா, ஈனத்தலைவரா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Comments
போச்சே போச்சே இந்த முறை எதையும் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு
குசும்பன்
//சிவராமன் அண்ணாவின் சிறுகதைப் போட்டிக்காக நாளது தேதி வரை மூன்று சிறுகதைகள் எழுதி, மூன்றும் திருப்தி ஏற்படுத்தாமல் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. //
சமூகத்து ஒரு சிறு விண்ணப்பம் அதை அப்படியே அலேக்காக பார்சல் செஞ்சு kusumbuonly@gmail.com க்கு அனுப்பி வைக்கவும். யாராவது பாவப்பட்ட குசும்பன் என்று பெயரில் தருமிகள் உபயோகித்துக்கொள்வார்கள்:)))
அதான் சொல்லிவிட்டீர்களே.. இதுல தனியா வேற சொல்லணுமா..?
நான் சந்தித்த பலரும் இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்க ஆரம்பித்தால் அது போரடிப்பதாக கூறி விட்டு கிரிக்கெட் போட்ட்கலை பற்றி பேச அஆரம்பித்து விடுகின்றனர்.
இத்த்கைய நிலைகளில் வருங்கால சந்ததியினர் வளருவது ரொம்ன கொடுமையன விஷயம்.
எழுத்துப் பிழையாக
ஈனத் தலைவரென
எழுதிய பெயிண்டர்
நமுட்டுச் சிரிப்போடு
அழிக்கிறான்!//
நெத்தியடி செல்வா.. :-)
** கேபிள் சார் பதிவை படிச்சிட்டு நீங்க ட்வெல்த் மேன் ஆனா கதைய இன்னும் விலாவரியா எதிர்பார்த்தேன்,...
***அப்புறம் நீயா நானா ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...
சியர் கேர்ள்ஸ்.. ரசிகனை கேவலப் படுத்த வேறு ஒன்னும் செய்ய வேண்டாம். இதைப் பார்க்கவா நேரிலும் டிவி முன்னாடியும் தவம் இருக்கிறான். இதைப் பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்பறாங்கன்னா என்ன வெங்காயத்துக்கு கிரிக்கெட் போட்டின்னு சொல்லி ஏமாத்தனும்? அதான் மானாட மயிலாட இருக்கே.
அந்த குற்றம், நிஜம் நிகழ்ச்சி மிகப் பெரும் மோசடி. நான் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.
கவிதை சூப்பரு.. :)
சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். :)
இதில சந்தேகம் என்ன செல்வா?அதேதான்.
குறிப்பாக, “குற்றம் நிஜம்”, ”ஐ.பி.ல்”.
திரும்பவும் படிக்கப் போகிறேன்.
ஆமா இந்த கிரிக்கெட்டுலாம் முடிஞ்சிருச்சா.?
தமிழினத்தலைவர்...?!! அந்த வார்த்தைய கேட்டாலே சிரிப்பா வருது செல்வா
வீம்புக்கு வெள்ளாவி வச்ச கதயா லலித் மோடியின் அவதாரங்கள்.பண பலமிருப்பதால் கிரிக்கெட் போர்டை ஒரு வழி பன்னாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது.எது எப்படியோ அஸாருதீன் புண்ணியத்தில் எங்களை போன்ற பிடிவாதக்காரர்கள் கிரிக்கேட்டை மறந்ததும் நல்லதாகப்போயிற்று.
முடியலத்துவத்தை அனுப்பி வையுங்கள்.அச்சில் ஏற்றுவதும்,ஏற்றாதததையும் அவர்கள் விருப்பத்திற்க்கு விட்டுவிடுங்கள்.ஏன் இப்படி தேவையில்லாத வார்த்தைகள்.
சரி இந்த வார்தைக்கு எவ்வளவு பேருக்கு அர்த்தம் தெரியும்?
(முடியலத்துவம் படித்து ரசிக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்ல வரும் தொனி மாறுகிறதே....)
தமிழினதலைவர் என்ற வார்த்தையை அவர்கள் சமீபத்திய தேர்தலில் கூட பயன்படுத்தவில்லை.மனசாட்சி என்று ஏதுமில்லா கூட்டத்தில் அதீத நம்பிக்கை வைத்து ஏமாறுவது ஈழதமிழன் மட்டுமல்ல...நாமும்தான்.
உரையாடல் சிறுகதைப் போட்டி குறித்த உங்கள் தயக்கம்தான் என் தயக்கமும்!
அப்படியென்றால்....பரிசலை பரிசலே முந்தும்படியான அபாரமான ஒரு சிறுகதை தயாராகிக்கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.
எழுத்துப் பிழையாக
ஈனத் தலைவரென
எழுதிய பெயிண்டர்
நமுட்டுச் சிரிப்போடு
அழிக்கிறான்!//
முடியலத்துவம்..!
நச்.
நல்ல சிறுகதையாகவே ஒன்றை நிச்சயம் தாருங்கள். (படித்து நாங்களும் முயற்சிப்போம்ல)