'பச்சை மனிதன்' என்னவானான்?
'காவிரிக்காக ஒரு சினிமா' என்ற அறிவிப்போடு 'பச்சை மனிதன்' துவக்கப்பட்டது. மக்களே அதன் தயாரிப்பாளர்களென பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. 2005 - ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டம். அதற்கான அனுமதிச்சீட்டுக்களை ரூ.10/-க்கு விற்பனை செய்து அதன் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது. இந்த அறப்பணியில் ஏராளமான கல்லூரி இளைஞர்களும் தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர்.
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் சேரன், இயக்குனர் லிங்குசாமி, பச்சை மனிதனின் இயக்குனர் ஷரத் சூர்யா ஆகியோரை அறங்காவலர்களாகக் கொண்டு 'பச்சை மனிதன் அறக்கட்டளை' துவக்கப்பட்டது. முதற்கட்டப்படப்பிடிப்பு வேலூர் பகுதிகளில் நடந்து முடிந்த செய்திகள் வார இதழ்களில் வெளியாகி இருந்தது. விவசாயிகளும், மாணவர்களுமே நடிகர்களாக நடித்தனர். "இந்தப்படம் காவிரி விவகாரத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் அவலங்களை இந்திய இதயங்களுக்கு தெரியப்படுத்தும் திரைப்பட மனுவாக இருக்கும்" என்று அதன் இயக்குனர் அறிவித்திருந்தார்.
ஆனாலும், பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளின் காரணமாக படம் பாதி தயாரிப்பில் முடங்கி விட்டது போலும். பணம் கட்டாததால் இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. .காவிரிப் படுகை விவசாயிகளுக்காக ஓங்கி ஓலித்திருக்க வேண்டிய குரல் அநியாயமாக அமுங்கிவிட்டது பெரிய சோகம். நல்ல முயற்சிகள் தோல்வியைத் தழுவிவிடுவது சமூகத்தின் தோல்விதான்.
அறங்காவலர்களான லிங்குசாமி, சேரன் போன்றவர்கள் கொஞ்சம் முயற்சியெடுத்து படத்தினை வெளிவரச் செய்தால் போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.
Comments
மக்கள் சினிமாவுக்கு வருவது பொழுதுபோக்குக்காக.அங்கு மக்கள் பிரச்சனைகளை காட்டினால் வரவேற்பு இல்லை.என் காசக் கொடுத்துட்டு நான் அழனும் என்பது ஒருகாரணம்
(உளவியல்)
“டாக்குமெண்டரி” என்பார்கள்.
பல பேர் தோற்றுப் போனார்கள்.
கசப்பான யதார்த்தம்/உண்மை.
பத்திரிக்கைகள்/தொ.காட்சிதான் சரியான மீடியா இப்போது.
அந்த காலத்திலேயே சினிமா ஆரம்பிப்பதற்கு முன் “பிஹாரில் வெள்ளம்””பஞ்சாபில் பஞ்சம்” போடுவார்கள்.இந்த “வார் பிக்சர்” முடிந்தவுடந்தான் உள்ளே வருவார்கள் மக்கள்.
மிகவும் சரி .அப்படியே மக்கள் பிரச்சினை பற்றி பேசினாலும் இவர்கள் விரும்பி பார்ப்பது ஹீரோ அரசியல்வாதியை எதிர்த்து போரிட்டு ,பேசும் வசனங்களை மட்டுமே .சாமான்ய தமிழனின் கவலைகள் எல்லாம் ,குழாயில் தண்ணி வரல,டயத்துக்கு பஸ் வரல ,என்று தன்னுடைய அன்றாட தேவைகளைப் பற்றியதே.
உங்களப் பத்திதான் போட்டு இருக்கேன்...
வந்து பாருங்க,..
வாழ்த்துக்கள்... :-)
வெங்கடேஷ்
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நைந்து போன நிலையில் குப்பையில் போட்டேன்!
நண்பர் விஜய் கோபால்சாமி அவர்களுக்கு,
திரு.சரத் சூர்யா என்னுடைய நண்பர் அவர் தஞ்சை மக்களுக்காக எடுக்க நினைத்த படம்தான் பச்சை மனிதன், போதுமான நிதி இல்லாமல் செலவினங்கள் கூடிபோனதால் எடுத்தவரை அப்படியே இருக்கிறது மேலும் , இதன் இதன் கணக்கு அனைத்தும் பச்சை மனிதன் அறக்கட்டளை வசம் இருக்கிறது.
இதில் பதிக்கப்பட்டது சரத் சூர்யா என்ற அப்பாவி மனிதன் மற்றும் அவர் குடும்பம், இன்றுவரை இந்தப்படத்தை எடுத்து முடித்தபின்தான் அடுத்த படம் எடுப்பேன் என வைராக்கியமாக வாழ்கிறார் , மேலும் திருவிழாக்களில் பொம்மை விற்றுத்தான் தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் , நம்மைபோல் நண்பர்கள் கொடுத்த படம் எடுத்தவரை ஆனா செலவு போக மீதி அப்படியே இருக்கிறது ,
சேரன் , லிங்குசாமி எவ்வளவோ சொல்லியும் இந்த படத்திற்கு அப்புறம்தான் நான் சினிமாவிற்குள் வருவேன் என ஒரு சன்யாசி போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் , தற்போது விஜய் டி.வி ஒரு மணி நேர படமாக கொடுத்தால் வெளியுடுவதாக சொன்னதால், படத்திற்கான இறுதி வடிவத்திற்காக சேலம் சென்றிருக்கிறார்.
மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம், அவர் சேலத்திலிருந்து வந்ததும் உங்களிடம் பேச சொல்கிறேன், அவருடைய உண்மையான ஆதங்கமே யாருமே இன்னைக்கு வரைக்கும் கேள்விகேட்காம இருக்காங்க என்ற வருத்தம்தான்..
அன்புடன் ,
கே.ஆர்.பி.செந்தில்
Mobile:+91-9884267049
http://www.krpsenthil.blogspot.com/
இதை பார்த்தேனும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நன்று.