தமிழிலக்கிய அத்தாரிட்டி - II

தென்மாவட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தாம் உயரதிகாரிகளாக இருக்கிறார்கள். வல்லத்துக்காரனையும், ஸ்டீமர் போட்டுக்காரனையும் ஓரே நாளில் நிகராக்கியது சுனாமி. தென்கொரியாவில் மொபைல் கம்பெனி மானேஜர் தன் குலத்தொழிலான வலை பின்னும் வேலைக்குத் திரும்பி விட்டார். திரைகடல் ஓடி கோடிகளைச் சேர்த்தவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்து அரசு மருத்துவமனைகளின் துருவெறிய கட்டில்களில் படுத்துக்கிடக்கிறார்கள்.

காலம் மேட்டையும், பள்ளத்தையும் சமன் செய்கிறது.

***

மே தினம்.

சாருநிவேதிதாவின் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் எதிர்முனையில் ரமேஷ் வைத்யா!

"உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாரு..!"

"எனக்கு ஏனய்யா வாழ்த்து சொல்கிறீர்"

"நீர்தானய்யா கடுமை உழைக்கிறேன், கடுமையா உழைக்கிறேன்னு எழுதறீரு..."

"டொய்ங்ங்..."

- மேற்படி ஹாஸ்யம் வலைஞர்கள் மத்தியில் உலவுகிறது. விசாரித்துப் பார்த்ததில் மேற்படி சம்பவம் நிகழவே இல்லையாம். உண்மையோ பொய்யோ கேட்கவே ரசனையாக இருக்கிறதல்லவா?!

***

நவீன கவிஞர்களுள் முக்கியமானவர் கவிஞர் தென்பாண்டியன். உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களில் அவ்வப்போது தட்டுப்படுவதுண்டு. 'மிதக்கும் காடு' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இணையத்திலும் ஒரு கடையைப் போட்டிருக்கிறார் என்பது இன்றுதான் தெரிந்தது.

***

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த விஷயம் சிலருக்கு புரியவில்லையென்பதால் கீழ்க்கண்ட விளக்கம் அவசியமாகிறது.

எழுத்தாளனை அவனது எழுத்தின் ஆகிருதிக்காகக் கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு அவர் இவ்வளவு படிக்கிறார், எழுத்தாளர்களோடு பழகுகிறார், சார்த்தரை கரைத்திருக்கிறார், பூஃக்கோவை முழுங்கி இருக்கிறார், மார்குவேஸை தலைக்கு வைத்துப் படுக்கிறார் என்பது மாதிரியான சுயகற்பனைகளினால் கட்டமைக்கப்படுகிற பிம்பத்தை வைத்துக்கொண்டு பூ போடாதீர்கள். தவிர ஒருவன் இதையெல்லாம் படித்துவிட்டதாலேயே உயர் ரசனைகள் உடையவனாகி விடுவான் என்பதும் சுத்த பேத்தல். உங்கள் ஆராதனை சிலரை தமிழிலக்கிய அத்தாரிட்டியாக மாற்றி விடுகிறது. உடனே கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு வகுப்பெடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதிலும் வலையெனும் வேலி தாண்டி குரைக்க திராணி இல்லாதவர்களின் வெற்றுக்கூச்சலை சகிக்க முடியவில்லை.

சுகுமாரன் மொழிபெயர்த்த உலக கவிதைகள், எம்.ஜி. சுரேஷின் புத்தகங்கள், சாருவின் கோணல் பக்கங்கள், எஸ்.ராவின் அயல் சினிமா மாதிரி சமாச்சாரங்களைப் படித்தாலே ஒருவன் அதில் வருகிற எழுத்தாளர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து காலம் தள்ளி விட முடியும். நாம் ஒன்றும் அவர்களின் கழுத்திற்குப் பின்னால் நின்று கொண்டு அவர் என்ன படிக்கிறார் என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.

எது நல்ல எழுத்து என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும். வாத்தியார்கள் அல்ல!

Comments

சாருவைப் பற்றிய குறிப்பு செம குசும்பு
Ashok D said…
//சுகுமாரன் மொழிபெயர்த்த உலக கவிதைகள், எம்.ஜி. சுரேஷின் புத்தகங்கள், சாருவின் கோணல் பக்கங்கள், எஸ்.ராவின் அயல் சினிமா மாதிரி சமாச்சாரங்களைப் படித்தாலே ஒருவன் அதில் வருகிற எழுத்தாளர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து காலம் தள்ளி விட முடியும்//
இதல்லாம் படிக்கறது கொஞ்சம் அறிவார்ந்த ஃபிகர்ஸ் கிட்ட மொக்கை போடறதுக்குதான் செல்வா... jokes apart

இப்புத்தகங்களை விடுங்க.. உங்கள நீங்களே (அதாவது என்னைய நானே வேடிக்கை பாத்தாக்கா நெறைய புரிஞ்சிக்கலாம்... அறிஞ்சிக்கலாம்.. அள்ளிக்கலாம்)

அது சரி செல்வா.. உங்களுக்கு யார் மேல கோபம் (j?p?)

சாருவை பற்றி அந்த joke தேவையா செல்வே?
மணிஜி said…
என்னய்யா சொல்ல வருகிறீர்..2ன்னு இருக்கு.அப்ப இன்னும் வருமோ?பீர் சமீத் ”ஒண்ணுக்கு” ஏற்பாடு பண்ணட்டுமா?
மணிஜி said…
சாத்தானை முழுங்கி..
பூக்கூடையை கடித்து..
தர்பூஸை தலைக்கு வைத்து..

என்ன தம்பு...
//கற்பனை நீட்டல்//

சாருநிவேதிதாவின் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் எதிர்முனையில் ரமேஷ் வைத்யா!

"உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாரு..!"

"எனக்கு ஏனய்யா வாழ்த்து சொல்கிறீர்"

“காலையில 6 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் மாங்கு மாங்கு உழைக்கிறீர், உமக்கு சொல்லாம யாருக்கு சொல்றது, மேலும் எழுத்தாளர் தினம்னு ஒண்ணு இல்ல, இருந்தாலும் வாழ்த்து உமக்கு சொல்ல மாட்டேன்”

“எங்கய்யா இருக்க, இரு கத்தியோட வர்றேன்”

(யாரும் டென்ஷன் ஆவாதிங்க, அதான் கற்பனைன்னு போட்டுடேன்ல)
ramesh வைத்யா மேட்டர் உண்மைன்னு அவரே என்கிட்ட சொன்னாரு.

கடைசி பாரா அருமை.
கம்மியா படிக்கிறவங்கல்லாம் எப்பிடி ஜல்லியடிக்கிறது???
Ashok D said…
//“எங்கய்யா இருக்க, இரு கத்தியோட வர்றேன்”//

எதுக்குன்னா ’வால்’ல ஒட்ட நறுக்கனும்.

(இதுவும் கற்பனைதான்)
செல்வேந்திரன் நீங்கள் சொல்லுவது முழுதும் ஏற்புடையதாய் இல்லை. தமிழிலக்கிய அத்தாரிட்டி என சொல்லிக்கொள்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஒருவரின் எழுத்துக்களில் மட்டும் அழகிருந்தால் போதாது, குணத்திலும் வேண்டும். நான் நிறைய படிக்கிறேன், படித்திருக்கிறேன் என சொல்லுபவன் படித்தவன் எனும் தகுதியை அந்த கணத்திலேயே இழந்து விடுகிறான்.

பிடித்தவர்களை பாராட்டுவதோ, பின்பற்றுவதோ தவறில்லை என நினைக்கிறேன். துதி கூடாது என்பது மிகச்சரி.

துதி பாடிகள் கண்டிப்பாய் அதைவிட சிறந்த ஒன்றுக்கு விகு சீக்கிரம் மாறி விடுவார்கள் என்பது ஊரறிந்த உண்மை...

பிரபாகர்.
வணக்கம் செல்வா,
நல்ல இடைவெளி விட்டு ஒரு பதிவு, அதுலயும் இவ்வளவு கோவம்! ஏன்? document பண்ணமுடியாத அயோக்க்யத்தனங்களால் நம்மை கோபப்படுத்திவிட்டு நாம் உணர்ச்சிவசப்படுவதை மட்டும் பதிவு செய்துவிடும் அயோக்ய சிகாமணிகளின் சில்மிஷங்களை புறம் தள்ளுவதே சிறப்பு! கவிஞர் கலாப்ப்ரியா வாழ்த்துக்குப்பப்புறம் நல்ல பதிவுக்காக காத்திருக்கோம்! அந்தக் கேணப்பயலுக மேல கோவப்பட்டு டைம வேஸ்ட் பண்ணீட்டீங்களே! வாங்க வாங்க, நாம் கொண்டாடவும் கோவப்படவும் தகுதியுள்ளவர்கள் திசைக்கு செல்லலாம்!!
//எது நல்ல எழுத்து என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும். //
சரியான வார்த்தைகள்.
அண்ணே!!! நானெல்லாம் கிசு கிசு, ஜோக்ஸ் படிக்கிறதோட சரி தினத் தந்தி படிக்கிற பய புள்ள.....
கிருபாநந்தினி said…
//தென்மாவட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தாம் உயரதிகாரிகளாக இருக்கிறார்கள்.//
இந்த வரிகளில் சந்தோஷத்துக்குப் பதிலாக அங்கலாய்ப்பு தெரிகிறதே!
Karthikeyan G said…
// சாருநிவேதிதாவின் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் எதிர்முனையில் ரமேஷ் வைத்யா!
"உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாரு..!"
"எனக்கு ஏனய்யா வாழ்த்து சொல்கிறீர்"
"நீர்தானய்யா கடுமை உழைக்கிறேன், கடுமையா உழைக்கிறேன்னு எழுதறீரு..."
"டொய்ங்ங்..." //

அவர் எழுத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அவரது எழுத்தை/கருத்தை கண்டபடி விமர்சனம் செய்யுங்கள்.. அவர் உழைக்காமல் சும்மா இருக்கிறார் என்பது போல் சொல்கிறீர்களே. :(

அடுத்தது பாரதி, கம்பன் போன்ற எழுத்தாளர்களின் கல்லறைகளுக்கு சென்று அவர்களுக்கு "உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்" சொல்லி கிண்டலடித்த கதையை சொல்வீர்களோ..
//அவர் உழைக்காமல் சும்மா இருக்கிறார் என்பது போல் சொல்கிறீர்களே. :(//

உழைக்காமல் இருக்குறவங்களுக்கு யாராவது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சொல்வாங்களா!?
Anonymous said…
எது நல்ல எழுத்து என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும் - மிகவும் ஆபத்தானது.தமிழ் வாசகர்கள் சரோஜா தேவி கதைகளை ஒப்பிலா இலக்கியம் என்று தலைமேல் வைத்துக் கூத்தாடினால்?
selventhiran said…
வாங்க பாபு சார்...

அசோக், அதை ஜோக் என்று நீங்களே சொல்கிறீர்கள். எல்லாரும் சிரிக்கட்டுமேன்னு ஒரு பகிர்வு.

தண்டோராண்ணே... புரியுதுண்ணே

டீடெய்ல்டு ரிப்போர்ட்டுக்கு நன்றி வால்!

கேபிள் அண்ணே, அவரு பேச்சு... விடிஞ்சா போச்சு...

மங்களூர் அண்ணே, சில பேரோட லிங்ஸ் அனுப்புறேன். லிவிங் எக்ஸாம்பிள்!

பிரமாதமாகச் சொன்னீர்கள் பிரபாகர்!

தங்கமணிண்ணே, நம்மள விட கோவக்காரரா இருக்கீங்க...

ஸ்ரீ வருகைக்கு நன்றி.

பித்தன் வருகைக்கு நன்றி.

கிருபாநந்தினி, நெகட்டிவ் அப்ரோச்!

கார்த்திகேயன், உங்க பிரச்சனை எனக்கு புரியுது.

யோவ் அணாணியாகப்பட்டவரே...அப்ப சரோஜா தேவி எழுதுனது 'இலக்கியம்' இல்லைங்கறீங்களா...?! அதையே நெட்டுல எழுதறவங்களை 'குருவே சரணம்'கிறீங்க... போங்க பாஸூ போய் ஊறுகாய் வாங்கி கொடுங்க...

Popular Posts