தமிழ்நாட்டிலிருந்து ஒரு பர்கா தத்!

திலகவதி: "சன் நியூஸ்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்"

நான்: "சந்தோஷம்"

திலகவதி: "அவ்வளவுதானா?!"

நான்: "அவ்வளவுதான்... வேறென்ன...?!"

திலகவதி: "எல்லாரும் ஆழம் தெரியாமல் காலை விடாதேங்கறாங்க..."

நான்: "அறிவுரைகளை நம்பாதே... நீ எங்கும் ஜெயிப்பாய்..."

சில நாட்களுக்கு முன்பு திலகவதியுடனான தொலைபேசி உரையாடல் இப்படித்தான் இருந்தது. சி. திலகவதி என்ற பெயர் விகடன் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். பேஷன், டெக்னாலஜி, யூத் சமாச்சாரங்களை இடது கையால் எழுதிக்கொண்டே சுனிதா வில்லியம்ஸ், அமர்தியா சென் போன்றோர்களின் பேட்டிகளை வலது கையால் எழுதும் திறமைசாலி. பாலிவுட் பிரபலங்களான ப்ரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், தீபிகா படுகோனின் பேட்டிகளை வெளிவராத படங்களுடன் ஜஸ்ட் லைக் தட் எழுதிக் குவிப்பாள். செய்திக்கான வேட்கை எப்போதும் அவளிடம் குறைவில்லாமல் இருப்பதைக் கண்டு பிரமித்து வம்படியாக நண்பனானவன் நான்.

சன் நியூஸில் சேர்ந்த இந்த சில நாட்களிலேயே சந்திராயன் நேரடி ஒளிபரப்பு, காஞ்சிபுரம் கல்குவாரி கொத்தடிமைகள் - சிறப்புப் பார்வை, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு, கல்பாக்கம் ரேடியேஷன் என பின்னிப் பெடலெடுத்துக்கொண்டிருக்கிறாள். இதுமாதிரி செய்திகளால் அதற்குள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டாள். அவளது வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது கீழ்கண்டவைகளைத்தான்...

* அடுத்தவர்களது அபிப்ராயத்திற்காகவும், கேலிக்காகவும் ஒருபோதும் கலங்குவதில்லை.

* எந்த புதிய சூழலிலும் தன்னைப் பொறுத்திக்கொள்ளுதல்.
* கிடைத்தது போதும் என்றோ, எதற்கு ரிஸ்க் என்றோ எதிலும் திருப்தியோடு இருந்து விடுவதில்லை.

* எதையும் கற்றுக்கொண்ட பிறகுதான் செய்தாக வேண்டும் என்றால் நாம் அதை செய்யவே முடியாது என்று துணிந்து களத்தில் இறங்குவது.

* டெக்னாலஜி அப்டேஷன்.

திலகா இன்னும் பல உயரங்களை நிச்சயம் அடைவாள். அப்போதும் அவளை ஒரு கூட்டம் கேலி செய்து கொண்டுதானிருக்கும்.

Comments

//எதையும் கற்றுக்கொண்ட பிறகுதான் செய்தாக வேண்டும் என்றால் நாம் அதை செய்யவே முடியாது என்று துணிந்து களத்தில் இறங்குவது/

அருமை !


வாழ்த்துக்கள் சொல்லுங்க திலகாவிற்கு என் சார்பாகவும் :)
selventhiran said…
வாங்க ஆயில்யன், கண்டிப்பாக சொல்லிடலாம்...
பரணி said…
திலகவதி இப்போ விகடன்ல இல்லையா ? இல்ல ரெட்டைக் குதிரை சவாரியா? அப்படி ரெண்டு இடத்திலும் ஒரே சமயம் வேலை பார்க்க முடியுமா?எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் .
செல்வா திலகா பத்தி நீங்க எழுதினத படிக்கரப்பவே சந்தோஷமா இருக்கு.

எம்புள்ள எப்படில்லாம் வரனும்ன்னு ஆசப்படறேனோ அப்படில்லாம் திலகா இருக்க மாதிரி ஒரு ஃபீலிங். :)

மறக்காமல் இதை திலகாவிடம் சொல்லிடுங்க செல்வா...
selventhiran said…
பரணி, திலகவதி தற்போது சன் டி.வியில்தான். ரெட்டை சவாரி இல்லை.

பிரமாதம் நந்து... பொதுவாக பெண் பிள்ளைகளை மீடியாக்களுக்கு அனுப்புகின்ற துணிச்சல் தந்தைமார்களுக்கு இல்லை. உங்களது வாழ்த்தை தெரியப்படுத்தி விடுகிறேன்.
Karthikeyan G said…
சன் டிவியில் சுயமரியாதை கிராமம் பற்றிய அவரது செய்தி தொகுப்பு பார்த்தேன்.thats goood. மாற்றத்தை விரும்பாத சன் நியூஸில் கொஞ்சம் மற்றம் இவரால் வரட்டும்.

வாழ்த்துக்களை தெரிவிக்கவும்!!
selventhiran said…
வாங்க கார்த்திகேயன், வருகைக்கு நன்றி.