பிளவுஸ் அணியாத புரொபசர்
அஜீத்குமார் அடித்ததோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருந்த கிரீடம் திரைப்படம் குறித்த என் அபிப்ராயத்தை 'தல' தப்புமா? என்ற பதிவில் எழுதி இருந்தேன். அதை அஜீத் ரசிகர்கள் தங்களது வலைதளத்தில் இணைத்திருந்தார்கள். புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்தால், கொஞ்சம் தப்பிப்பார் என்ற என் அபிப்ராயத்தையும் அதில் எழுதி இருந்தேன். விஷ்ணுவர்த்தனின் பில்லா கொஞ்சம் நிமிர்த்தி கொடுத்த மார்கெட்டை 'ஏகனில்' எக்கச்சக்கமாய் தொலைத்திருக்கிறார் அஜீத்.
தமிழ் சினிமாவிற்கென்று இருக்கின்ற சாபக்கெடுகள் அனைத்தையும் ஓன்று திரட்டி ஓரே படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஏகன் ஒர் எளிய உதாரணம். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே கொஞ்சம் மெண்டல்தானோ என்ற சந்தேகம் வருகிறது. போக்கிரியின் டெம்ப்ளெட்டில் தனக்கேயுரிய கோமாளித்தனங்களையும் சேர்த்துக் கிண்டியதில் 'கோமா' ஸ்டேஜில் இருக்கிறது படம்.
அஜீத் ஏகனாய் இருப்பார் என்று போனால் ஏகமாய் இருக்கிறார். குறுக்குவாட்டில் வளர்ந்து வகை தொகை இல்லாமல் வயிறு தள்ளிக்கொண்டு சிரமப்பட்டு அடித்து உதைத்து ஓடி ஆடி காதலித்து ஓய்கிறார். பிளவுஸ் அணியாத புரொபசராக நயன்தாரா தன் பரந்த முதுகை படம் நெடுக காட்டுகிறார். பொய் சொல்லப் போறோம் படத்தில் தேவதை மாதிரி தெரிந்த பியா, பிசாசு போல தெரிகிறார். என்னதான் கோர்ட் சூட் அணிந்து துப்பாக்கியெல்லாம் வைத்திருந்தாலும் வில்லன் சுமனைப் பாக்கும் போது பத்து பைசா இருந்தா தர்மம் பண்ணலாமேங்கிற நெனைப்புதான் வருது. கதை அப்படிங்கிற ஏரியாவைப் பத்தி எது எழுதினாலும் அது கதைங்கிற வார்த்தைக்கே அவமானம் என்பதால் தவிர்த்து விடுகிறேன். 'மல்லிகா ஐ லவ் யூ' பாடலில் மட்டும் யுவன் சங்கர் என்ற மானஸ்தன் எட்டிப் பார்க்கிறார்.
அஜீத்குமாரின் நலம் விரும்பியாக ஓரெயொரு யோசனைதான் "வயசுக்கும் வயித்துக்கும் தகுந்த ரோல் பண்ணுங்க சார்...!"

Comments
ஹா ஹா ஹா... ஜெயராம் மாதிரி லூசி ஃப்போபசர் இருந்தா அப்படிதான்...
சூப்பரு!
நூறு சதவீதம் உண்மை...........தமிழ் சினிமா இப்படி தலை விரி கோலமாய் மாறிவிட்டது............
இந்தப் படத்துல கதையைத் தேடுவது மைசூர்பாகுல மைசூரத் தேடுவது மாதிரி. தேடிக்கிட்டே இருபீங்க.
// ஹா ஹா ஜூப்பரு
ஆஸாத் அண்ணே, வயிறு போற போக்க பாத்தா அஜீத் நாட்டாமையாத்தான் நடிக்க வேண்டி இருக்கும் போலருக்கு....
அப்படி என்ன புதுசா சொல்லிட்டீங்க.கழக முண்டம் அன்பழகனைக் கூட புரொஃபசர் என்று சொல்றாங்க.அது கூட பிளவுஸ் போடாம திரிகிற கழுதை தானே.
வாங்க ஷேர் பாயிண்ட், வருகைக்கு நன்றி!
//கதை அப்படிங்கிற ஏரியாவைப் பத்தி எது எழுதினாலும் அது கதைங்கிற வார்த்தைக்கே அவமானம் என்பதால் தவிர்த்து விடுகிறேன்//
இந்தப் படத்துல கதையைத் தேடுவது மைசூர்பாகுல மைசூரத் தேடுவது மாதிரி. தேடிக்கிட்டே இருபீங்க.
//
இப்ப வர்ற எல்லாப் படத்துக்கும் இது பொருந்தும் போல இருக்கே !!!