வருகிறேன்
நாளிதழ்களில் 'நிறுவனங்களில் ஆட்குறைப்பு' செய்திகளைப் போலவே தவறாமல் இடம் பெறும் மற்றொரு செய்தி 'உடல் உறுப்புகள் தானம்'. விபத்துகளில் அடிபட்டு கிட்டத்தட்ட இறந்துவிட்டவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதைத் தாண்டி தற்போது நீண்ட நாட்கள் நினைவு திரும்பாத நோயாளிகள், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அனுமதி கேட்டு தினமும் விண்ணப்பங்கள் குவிகின்றனவாம். மண்ணுக்குள் வீணாகப் போகும் உறுப்புகள் மனித இனத்திற்கு பயனாகும் என்பதும் அது குறித்த விழிப்புணர்வும் வரவேற்கத்தக்கதே. ஆனாலும் பராமரிக்க முடியாத காரணத்தால் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வருவது கருணைக் கொலை கூட அல்ல... கொலைதான்... ஹிதேந்திரன் விவகாரத்தில் மீடியாக்கள் காட்டிய அதீத ஆர்வம் ஏற்படுத்தி பக்க விளைவுதான் இது.
காப்பாற்றவே முடியாத நோயினால் துன்புறுபவர்களின் கருணைக்கொலை கோரிக்கைகளை நிராகரிக்கிறார்கள். ஆனால் மரணத்தை வெல்ல துடிப்பவர்களின் அனுமதி இன்றி உடல் உறுப்புகளைத் தானம் செய்வது யானையைக் கொன்று தந்தத்தை எடுப்பது போலத்தான் படுகிறது.
***
கோயம்புத்தூரில் மகாக் கேவலமான சாப்பாடு ரூ.35/-க்கு கிடைக்கும். சுமாரான சாப்பாடு ரூ.45/-க்கு கிடைக்கும். நல்ல சாப்பாடு எங்கேயும் கிடைக்காது. ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை எக்குத்தப்பாய் ஏறிப்போய் இருப்பதால் இப்போதெல்லாம் கையேந்தி பவன்களில் கூட்டம் அம்முகிறது. ஒரு காலத்தில் சைக்கிள் ரிக்ஷாக் காரர்களும் கூலிக்காரர்களும் மட்டுமே சாப்பிட்டு வந்த கையேந்தி பவன்களில் தற்போது டை கட்டிய எக்ஸிகியூட்டிவ்களும், காரில் வந்து காருக்குள்ளேயே வைத்து சாப்பிட்டு விட்டு செல்லும் ரெண்டும் கெட்டான் தர குடும்பங்களின் கூட்டமே எப்போதும் இருக்கிறது. குறைவான விலை, விரைவான சேவை, கூடவே நல்ல சுவை என்பதால் வருகிறார்கள். நான் வழக்கமாய் சாப்பிடும் கையேந்தி பவனில் இரண்டு கூலிக்காரர்கள் பேசிக்கொண்டார்கள் " போற போக்க பாத்தா கார்காரவுக கைவண்டி இழுக்கவும் வந்துடுவானுங்க போலருக்கு...."
***
பைக் வாங்குவதற்கான தகுதி பதினெட்டு வயதிலே வந்து விட்டது என்றாலும் வசதி வந்தது என்னவோ இப்போதுதான். இந்த பணவீக்கக் காலத்தில் எழுபதாயிரம் கொடுத்து யூனிகார்ன் வாங்கித்தான் ஆகவேண்டுமா? என தமிழக முதல்வரைத் தவிர அனைவரும் கேட்டு விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில் "இந்த பொருளாதார சரிவு மாறலாம். பழைய நிலைக்கே திரும்பலாம். ஆனால், இளமை?!" ஏற்கனவே முதுமையின் முகவரிகள் என் முகத்தில் எழுதப்பட்டு வருகிறது. மோட்டார் பைக்கில் இந்தத் தமிழகத்தை மட்டுமாவது முழுவதும் சுற்றி வரும் ஆசை "மோட்டார் சைக்கிள் டைரீஸ்" பார்த்த காலத்தில் இருந்தே இருக்கிறது. முன்பைக் காட்டிலும் தற்போது தமிழகம் முழுக்க எக்கச்சக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கூடிய விரைவில் கிளம்ப இருக்கிறேன்.

Comments
அப்போ அந்த நோட்டீஸ் போர்டை மாத்தலாமே...
தாத்தா வீட்டுக்கான அட்ரெஸ்லாம் அங்கே ஏங்க எழுதி வைக்கிறிங்க... கஜினி படத்துல சூர்யா கூட முகத்த மிச்சம் விட்டு வைச்சிருந்தாரு...
வாழ்துக்கள்.
காவேரி கணேஷ்
சென்னைக்கும் ஒரு விசிட் அடிங்க செல்வா :)
வாழ்த்துக்கள் புது பைக் வாங்கியதற்கு
இப்போதைய IT Employees நிலை அப்படி தான் உள்ளது.
இப்போதைய IT Employees நிலை அப்படி தான் உள்ளது//
அப்படீ ஒன்னும் மோசமா இல்லீங்க.... நீங்க கவலைப்பட தேவையில்லை :)
தவறான கருத்து செல்வேந்திரன். வீட்டு முறைப்படி தயரித்த மெஸ் சாப்பாடு தேடிச் சாப்பிட உங்களுக்குத் தெரியல. கலக்டர் அலுவலக்ம் எதிரில் இருக்கும் CS meals ஹோட்டலும், நவோதயா அருகில் இருக்கும் கீதா கபேயும், டாடாபாட்டில் இருக்கும் ஆச்சி மெஸ்ஸும் பேச்சுலர்கள் அதிகமும் சாபிடும் இடம்.
ஹோப் பகுதியில் இருக்கும் ஏராளமான மெஸ்கள் ஹாஸ்டலுக்கு வெளியே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல உணவிடும் இடங்கள்.
அசைவம் சாப்பிட இன்னும் அதிக இடங்கள் இருக்கின்றன. என் மொபைல் எண் உங்களிடம் இருக்கும். அழையுங்கள்.