கண்ட்ரோல் சியும், கண்ட்ரோல் வியும்

பிடிக்கிறதோ இல்லையோ மீடியாவில் இருப்பதால் 'அப்டேட்' செய்து கொள்ள குமுதம் மாதிரியான இதழ்களைப் படித்துதான் ஆகவேண்டி இருக்கிறது. அரசு பதில்களை தவிர்த்து வேறு எதுவும் தேறாது. எப்போதாவது தளவாய் அண்ணன் இலக்கியவாதிகள், கலைஞர்கள் யாரையாவது நேர்காணல் செய்திருப்பார். மிச்சதெல்லாம் மிகுந்த எரிச்சல் ஏற்படுத்தும் பகுதிகளும் பக்கங்களும்தான். நடப்பு இதழ் குமுதத்தில் தளவாயும் தன் பங்கிற்கு என்னை எரிச்சலாக்கினார். நவம்பர் மாத உயிர்மையில் அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுளின் உதவியாளர்கள்' என்ற கட்டுரையை அப்படியே கட், காப்பி பேஸ்டாக்கி கூடுதலாக முத்துலிங்கத்தின் மகன் சஞ்சயின் புகைப்படத்தை மட்டும் இணைத்து கிட்டத்தட்ட ஒரு நேர்காணலைப் போன்ற தோற்றமளிக்கும் ஒரு வஸ்துவை எழுதி இருந்தார்.

'பாம்புகளுக்கு என்னைப் பிடிக்கும்' என்ற அந்த செய்தியை நீங்களும் வாசித்திருப்பீர்கள். சில்லாயிரம் பேர் படிக்கும் இலக்கியப் பத்திரிகையிலிருந்து பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகைக்கு செய்தியைக் கடத்துவது ஒன்றும் புதிதல்ல என்ற போதும் அதற்காக ரீரைட் கூட செய்யாமல் அப்படியே பயன்படுத்தி இருப்பதுதான் என் கோபத்திற்கு காரணம்.

இலக்கியவாதிகளை நேர்காணல் செய்வதில் சுகதேவ், கடற்கரய், மணா போன்ற ஸ்பெஷலிஸ்டுகளுக்கு இணையானவர் தளவாய் சுந்தரம். தமிழ்நாட்டு வெகுஜனப்பத்திரிகைகளில் தமிழிலக்கிய செய்தியாளர்களாகவே அறியப்பட்டவர்கள் இருவர்தான். ஒருவர் தளவாய் அண்ணன் மற்றொருவர் மு.வி. நந்தினி. மு.வி. நந்தினி தற்போது அச்சு ஊடகத்தில் இயங்குவதில்லை என அறிகிறேன். எஞ்சி இருக்கும் இவரும் இப்படி போட்டுத் தாக்கினால் வருத்தப்படாமல் என்ன செய்வது?!

Comments

Anonymous said…
செல்வேந்திரன்,
கன்டென்ட் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த வார இதழில் குழந்தை சிவப்பாகத்தான் இருக்கிறது ஏன் பச்சைக் குழந்தை என்று சொல்லுகிறோம் என்று ஒரு ஜோக்குக்கு ஒரு பக்கம் வீனடிக்கப் பட்டிருக்கிறது.

இணையத்தில் பரிசல், அதிஷா, தாமிரா, வெண்பூ போன்ற திறமைசாலிகள் எழுதத் தளம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எழுத ஆள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். என்ன செய்ய?
selventhiran said…
வாங்க வடகரை வேலன், வருகைக்கு நன்றி.

கிழஞ்செழியன் hhhhhhhhhhhhhhhhh
இதற்கு என்ன அர்த்தம்?
Anonymous said…
அட்றா...அட்றா...மூ.வி.நந்தினி பத்தி சொன்னீங்க, தளவாய் ஆம்பளை ஆச்சே..அவரை எப்படி புகழ்ந்தீங்க
selventhiran said…
லாவண்யா என்பது உங்களது சொந்தப் பெயராக இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
நல்லவேளை நான் இணையத்துலே (குமுதம்) படிப்பதால், எனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் படித்துவிட்டு மத்ததை சாய்ஸில் விட்டுவிடுவேன்....
selventhiran said…
வாங்க ச்சின்னப்பையன்... நானும் அப்படித்தான் பண்ணலாம்னு இருக்கேன்.