டெஸ்டிமோனியல்

ஆர்க்குட்டில் அத்துவிட்டது மாதிரி நான் திரிந்த காலத்தில் எழுதிய டெஸ்டிமோனியல்களில் சில...

யுவராஜ் (மென்பொருளாளர்)

புவன ராஜா (வெல்க தமிழ்!) பிறந்த ஊரைக் கேட்டா தமிழ்நாடே அதிரும். அவர் நமீதா, ஸ்ரேயா, நயன்தாரா, த்ரிஷா போன்றவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ஆல்பத்தில் போடவில்லை என்பதிலிருந்தே அவரது பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் நாள் ஹைதரபாத்தில் இருந்திருந்தால் நிஜாம் ஆகியிருப்பார்.

ஜனனி (விளம்பர மாடல்)

கண்களால் சிரிக்கிறாய்
இதயத்தால் பேசுகிறாய்
புன்னகையால் வருடுகிறாய்
பொய் சொன்னால்
நம்பித் தொலைக்கிறாய் :)

சி. முருகேஷ் பாபு (பத்திரிகையாளர்)

கனிவான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்துவிடலாமென நினைக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் இனிய மனிதர். பால்யத்தின் நினைவுகளைத் தூண்டும் அற்புத சிறுகதைகள், கவிதைகளுக்குச் சொந்தக்காரர். எழுத்தைத் தவிர உபதொழிலாக செய்வது பிறரை உற்சாகப்படுத்துவது. சமீப காலமாக ரொம்ப 'நாணயமானவராகவும்' இருக்கிறார். (பின்குறிப்பு: டெஸ்டிமோனியலுக்காக தாங்கள் மணியார்டரில் அனுப்பிய தொகை ரூபாய் நூறு போதுமானதாக இல்லை. ஒரு ஐம்பது ரூபாய் சேர்த்து அனுப்பியிருக்கலாம்)

தி. விஜய் (புகைப்படக் கலைஞன்)

தம்பி விஜய்க்கு இன்னும் ஏன் டெஸ்டிமோனியல் எழுதவில்லையென்று கேள்வி கேட்டு உலகெங்கிலுமிருந்து பல ஸ்க்ராப்புகள் வந்துகொண்டிருப்பது நீங்களனைவரும் அறிந்ததே! சிறிய டெஸ்டிமோனியலில் அடங்கி விடுவதல்ல அவரது புகழ். அவருடைய புகழை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதிவைத்துவிட்டு அதன் பக்கத்திலேயே அவரை உட்கார வைப்பதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும்.

ஜீவிகா (எனது தங்கை)

ஜீவி எனது ஓரே அருமைத் தங்கை. அமைதியான பெண். எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு. அத்தனை வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்பவள். சமையலில் நளபாகம். ரங்கோலி, எம்ப்ராய்டரி, இண்டிரியர் என எதைச் செய்தாலும் கலைநயத்தோடு செய்வாள். மிகவும் கலகலப்பாகவும், பழக எளிமையானவளாகவும் இருக்கும் எனது சகோதரிக்கு டெஸ்டிமோனியல் எழுதுவதில் இருக்கும் ஒரே சிரமம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்ல வேண்டி இருப்பதுதான்..... ஸ்...ஸ்.... அப்பாடா...முடியலம்மா... ஜீவி...

கேண்டி (தோழி)

1) எத்தனவாட்டிதான் ஒனக்கு டெஸ்டிமோனியல் எழுதுறது.... ஒன்னோட இம்சை தாங்கமுடியாம... நீ தூங்கிட்டியான்னு ஒங்க அம்மாச்சிகிட்ட போன் பண்ணி கேட்டுட்டுதான் குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்புவாங்கன்றத டெஸ்டிமோனியல்ல எழுதினா நீ கோபப்படுவியா என்ன?!

2) இவள்புகழைப் பாட
மொழிக்குப் போதியவலிமை இல்லை...
வயலின் கொடுங்கள்
வாசித்துக் காட்டுகிறேன்...

- எழுத ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை பகிரங்கமாக ஓப்புக்கொள்ளும் உத்தமஜாதி எழுத்தாளன்

Comments

//2) இவள்புகழைப் பாட
மொழிக்குப் போதியவலிமை இல்லை...
வயலின் கொடுங்கள்
வாசித்துக் காட்டுகிறேன்...//

கலக்கல் :))
சும்மா நச்சுன்னு இருக்கு செல்வா :)
:)).... விதவிதமா யோசிக்கிறிங்க... மேலும் எழுதவும் எங்களை போன்றா இரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்...
selventhiran said…
சென்ஷி, அவசரப்பட்டு புகழ்ந்து விட வேண்டாம்... எப்போதோ படித்த ஒரு கவிதையைத்தான் கொஞ்சம் தட்டி நிமிர்த்தி இருக்கிறேன்.

வாங்க பிரேம் நன்றி.

விக்கி, உள்குத்து எதுவும் இல்லையே
surapathi said…
தல ....சூப்பர் தல .. இன்னும்ம் நிறையா போட்ட எங்கல மாதிரி control c contrl v ikku use ful aa இருக்கும் ........
selventhiran said…
வாங்க இட்லி வடை...
Ganesan said…
நல்லா எளூதுரிங்க‌