பீனா

பீனா நகரின் புகழ்மிக்க பெண்கள் கல்லூரியில் படிக்கிறாள். பகுதி நேர வேலையொன்றிற்கு சில மாணவிகள் தேவைப்பட்டதால் அந்தக் கல்லூரிக்குச் சென்றிருந்தபோது அறிமுகம். துறுதுறுப்பான பெண். நவீன உடைகளும் நல்ல ஆங்கிலமும் அணிந்திருந்தாள். அவளையே நியமனம் செய்து, பணிகள் குறித்து விளக்கிவிட்டு வந்தேன்.

அடுத்தடுத்த வாரங்களில் பணி குறித்த நிலவரங்களைக் கேட்க அழைத்தால் தொலைபேசியை எடுப்பதில்லை. சரி கல்லூரிக்குச் சென்று பார்க்கலாம் என்றால் விடுப்பு, ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று விதம் விதமான பதில்கள். ஒரு மாதம் ஓடி விட்டது. கம்பெனியிலோ கொடுத்த வேலை என்னவாயிற்று எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தினமும் அழைத்துக்கொண்டும் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டும் இருந்தேன். பலனில்லை.

ஒருநாள் அவளை 'காபி டே'யில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் பதறியபடிக் கிளம்பினாள். அவளை வழிமறித்து 'மானம் கெட்ட கிழி' கிழித்தேன். "உனக்கு இஷ்டம் இல்லையென்றால் முடியாது என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே... நான் உன்னைத் தேடி நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன்... நீ காபி ஷாபில் சோவாறிக் கொண்டிருக்கிறாய்... பிரின்ஸிபலைப் பார்த்து பேசப்போகிறேன்"

"ப்ளீஸ் ஸார்... திட்டாதீங்க... நா ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்டேன்... நாளைக்கே உங்க வேலைய முடிச்சிக் கொடுத்துடறேன்" என கெஞ்சினாள். சரி போகட்டும் என விட்டுவிட்டேன். மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி கதைதான். போனையும் எடுக்கவில்லை. வேலையும் நடக்கவில்லை. இனி வேலைக்காகாது என கல்லூரிக்கே சென்று அவளைச் சந்தித்தேன். மீண்டும் அதே புராணம் "ப்ளீஸ் ஸார்... திட்டாதீங்க... நா ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்டேன்... நாளைக்கே உங்க வேலைய முடிச்சிக் கொடுத்துடறேன்".

"அப்படி என்னதான் உனக்குப் பிரச்சனை" என்றேன். நடந்தது இதுதான். ஸ்டூடண்ட் சேர்மனான அவள், பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழா ஒன்றினை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாள். கல்லூரி நிர்வாகம் தற்போதைய நிதி நிலைமையைக் காரணம் காட்டி பொருளுதவி செய்ய இயலாது என கைவிரித்து விட்டது. ஆனபோதும் விடாமல் சக மாணவியர்களிடம் தலைக்கு இவ்வளவு என பணம் வாங்கி விழாவை நடத்தி இருக்கிறாள். செலவு கையைக் கடித்துவிட்டது. திட்டமிட்டதைவிட எழுபத்தைந்தாயிரம் ரூபாய் அதிகம் ஆகிவிட்டது. சவுண்டு சிஸ்டம், பேக் டிராப், லேசர் காட்சி அமைத்தவர்கள் ஆகியோர்களுக்கு பாக்கி. பலமுறைக் கேட்டும் பணம் கிடைக்காததால் மரியாதைக் குறைவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். அதிலும் ஒருவர் நள்ளிரவில் அழைத்து "கொடுத்துக் கழிடீ அல்லது ...." என்றெல்லாம் பேசினாராம். கண்ணீரோடு சொல்லி முடித்தாள். "எடாத எடுப்பு எடுத்தா படாத பாடு படனும்னு எங்கூர்ல சொல்லுவாய்ங்க..."என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தேன்.

"சார் ஏதாவது ஐடியா சொல்லுங்க சார்... காலேஜ் முழுக்க மானம் போகுது... அப்பாகிட்ட சொன்னா தலையில அடிச்சிக்கிட்டு அழுறாரு..."

கொஞ்ச நேர யோசனைக்குப் பின் சொன்னேன். "முதலில் மொத்த வரவு, செலவுக்கணக்கை நேர்மையோடு எழுதி பிரதி எடுத்துக்கொள். மாணவிகளைச் சந்தித்து செலவு அதிகம் ஆகிவிட்ட காரணத்தைச் சொல்லி விரும்புபவர்கள் பணம் கொடுத்து உதவும்படிக் கேட்டுக்கொள். கல்லூரி நிர்வாகத்தினரிடம் கணக்கினைக் காட்டி உனது இக்கட்டான நிலைக்கு உதவும்படிக் கேட்டுப்பார். கல்லூரி பழைய மாணவிகளில் பலர் நகரத்தில் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களையும் சந்தி. ஒருவேளை உன் பிரச்சனை தீரலாம்" பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து இன்று அழைத்திருந்தாள். "சார் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன்... மூவாயிரம்தான் ஷார்ட்டேஜ்... அப்பாவே தர்றன்னு சொல்லிட்டார். ரொம்ப தேங்க்ஸ் சார்... இன்னிக்கு ஈவ்னீங் உங்கள பாக்க முடியுமா..."

"என்ன விஷயம்?!"

"சார் எம்.பி.ஏ டிப்பார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து "சேலஞ்சஸ் இன் ரிட்டெய்ல் செக்மெண்ட்"னு ஒரு கான்பரன்ஸ் ஏற்பாடு பண்ணிருக்கோம். சுமார் முப்பது காலேஜ்லருந்து ஸ்டூடண்ட்ஸ் வர்றாங்க....

Comments

ஆஹா...!
சின்னதாய், அழகான பதிவு.
மனிதர்களை புரிந்து கொள்வதற்கும், நேசிப்பதற்கும் எவ்வளவு இருக்கிறது இங்கு!
பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அதற்கான விடை கிடைக்கும்.

உங்களிடம் பகிர்ந்தபின் சரியான வழி காண்பித்துள்ளீர்கள்.

வெல்டன் செல்வா.
Unknown said…
dear selvendiran,

Ur articles are very nice.

Especially PEENA.

But titles are not so attractive. Just accidentally happen to see ur blog.

look into titles

kadaisipakkam.blogspot.com
அழகா சொல்லியிருக்கீங்க.
selventhiran said…
மாதவராஜ்
இராகவன்
அம்ரிதவர்ஷிணி
விஜே
கோபிநாத்
வருகை தந்த அனைவருக்கும் நன்றி!
CS. Mohan Kumar said…
இந்த பதிவு இப்படி முடிகிறேதே :

//சுமார் முப்பது காலேஜ்லருந்து ஸ்டூடண்ட்ஸ் வர்றாங்க.... //

முழுசாய் இல்லாத மாதிரி எதுவோ விடுபடுற மாத்ரி தோணுது