வாசிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?!
வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் ஒருவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் "உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!" என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்.
அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். பின்னூட்டமாகவோ, தனி மெயிலிலோ, எஸ்ஸெம்மெஸ்ஸாகவோ (நன்றி: பரிசல்) , போஸ்ட் கார்டிலோ எழுதிப் போடுங்கள். சிறந்த பட்டியலுக்கு ஆச்சர்ய பரிசுகள் காத்திருக்கின்றன.
பரிசுகளை ஸ்பான்ஸர் செய்பவர்: அன்பர் ஈரவெங்காயம், பொருளாளர் - கொங்குமண்டல இணைய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு.
பரிசுகளை அனுப்பிவைக்கும் செலவினை ஏற்றுக்கொள்பவர்: சஞ்ஜெய், பெருநாட்டாண்மை கழகத்தின் (அதாங்க காங்கிரஸ்) போர்வாள்
யாவரும் கலந்து கொள்ளலாம். எவ்வித வரம்பும் இல்லை. கடைசி தேதி 30-03-09.
கீழ்கண்ட நபர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ளும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஆசீப்மீரான்
வடகரை வேலன்
ஜா. மாதவராஜ்
பைத்தியக்காரன்
கார்க்கி
ஆதிமூலகிருஷ்ணன் (டைப் அடிக்கும்போதுதாம்யா தெரியுது... எவ்ளோ பெரிய பேரு...)
வெயிலான்
சேவியர்
உமா ஷக்தி
அஜயன் பாலா
கலாப்ரியா
பரிசல்காரன்
லக்கிலூக் (உமக்கு ஏற்கனவே ஒரு பரிசு பெண்டிங் இருக்குது. ஒத்துக்குறேன். கொடுத்துர்றேன்)
கும்கீ
ரமேஷ் வைத்யா
முரளிகண்ணன்
கோவி.கண்ணன்
லதானந்த்
ஆழியுரான்
வா. மணிகண்டன்
வால்பையன்
பிறவிக்கவிஞன் பிரேம்குமார்
அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். பின்னூட்டமாகவோ, தனி மெயிலிலோ, எஸ்ஸெம்மெஸ்ஸாகவோ (நன்றி: பரிசல்) , போஸ்ட் கார்டிலோ எழுதிப் போடுங்கள். சிறந்த பட்டியலுக்கு ஆச்சர்ய பரிசுகள் காத்திருக்கின்றன.
பரிசுகளை ஸ்பான்ஸர் செய்பவர்: அன்பர் ஈரவெங்காயம், பொருளாளர் - கொங்குமண்டல இணைய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு.
பரிசுகளை அனுப்பிவைக்கும் செலவினை ஏற்றுக்கொள்பவர்: சஞ்ஜெய், பெருநாட்டாண்மை கழகத்தின் (அதாங்க காங்கிரஸ்) போர்வாள்
யாவரும் கலந்து கொள்ளலாம். எவ்வித வரம்பும் இல்லை. கடைசி தேதி 30-03-09.
கீழ்கண்ட நபர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ளும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஆசீப்மீரான்
வடகரை வேலன்
ஜா. மாதவராஜ்
பைத்தியக்காரன்
கார்க்கி
ஆதிமூலகிருஷ்ணன் (டைப் அடிக்கும்போதுதாம்யா தெரியுது... எவ்ளோ பெரிய பேரு...)
வெயிலான்
சேவியர்
உமா ஷக்தி
அஜயன் பாலா
கலாப்ரியா
பரிசல்காரன்
லக்கிலூக் (உமக்கு ஏற்கனவே ஒரு பரிசு பெண்டிங் இருக்குது. ஒத்துக்குறேன். கொடுத்துர்றேன்)
கும்கீ
ரமேஷ் வைத்யா
முரளிகண்ணன்
கோவி.கண்ணன்
லதானந்த்
ஆழியுரான்
வா. மணிகண்டன்
வால்பையன்
பிறவிக்கவிஞன் பிரேம்குமார்
Comments
1. Fountainhead by Ayn Rand
2. Conversations with God by Neale Donald walsh
3. The Alchemist by Paulo Coelho
4. பொன்னியின் செல்வன்
5. மெர்குரி பூக்கள்
6. Atlas shrugged by Ayn Rand
7. Shantharam by Gregory David Roberts
8. Little prince by Antoine de Saint
9. Man's search for meaning by Viktor Frankl
10.Way of peaceful warrior by Dan Millman
மிக நல்ல புத்தகங்களின் பெயர்கள் வெளி வருவதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆவலுடன் காத்திருக்கிறேன்
பத்து புத்தகம் தானே!
பத்து வார ஆனந்தவிகடன் அப்படியே பத்திரமா வீட்ல இருக்கு!
இன்னும் பாத்திரகாரன் வரல போல!
2. Kite Runner
3. Swami & Friends
4. My Experiments with Truth
5. Wings of Fire
6. Five point someone
7. The Alchemist
8. Alice in Wonderland
9. Adventures of Tomsawer
10.Who moved my cheese
venky
2.தாய்
3.ஜமீலா
4.அன்னை வயல்
5.வெண்ணிற இரவுகள்
6.ஏழு தலைமுறைகள்
7.பன்கர்வாடி
8.சம்ஸ்காரா
9.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
10.மோகமுள்
அதுக்குள்ள பத்து ஆகிவிட்டதே... இன்னும் நிறைய இருக்கே.செல்வேந்திரன்! குறைந்தது இருபத்தைந்து என வைத்து இருக்கலாம்.
2.கம்ப இராமயணம்,
3.பாரதியார் கவிதைகள்,
4.சத்திய சோதனை,
5.தாயுமானவர் பாடல்கள்,
6.Brave new world-Aldous Huxley
7.The After death Experience-Iyan Wilson,
8.How to win friends & influence people-Dale Carnegie
9.பொன்னியின் செல்வன்,
10.ரத்தம் ஒரே நிறம்,
11.மோகமுள்
பத்தில் எல்லாம் அடங்காதுங்க...
சரி ஏதாவது நல்ல விசயமாத்தான் இருக்கும்.
சரி இந்தாங்க என்னோட பத்து
அப்படின்னு பட்டியலிட நான் இன்னும் நிறைய படிக்கலீங்க. இப்பதான் பேபிகிலாசு..
2.Gone with the wind
3.A study in scarlet
4.பொன்னியின் செல்வன்
5.சித்திரபாவை
6.The day of the Jackal
7.பார்த்திபன்கனவு
8.கீதை (விளக்கமுடன்)
9.பைபிள் (விளக்கமுடன்)
10.குரான் மற்றும் நபிமொழிகள் (விளக்கமுடன்)
கடைசி மூன்றும் ஒப்புக்காக அல்ல ... திறந்த மனதுடன் அவற்றைப்படிப்பது இன்று அவசியமாகிறது
விரைவில் பட்டியலுடன் வருகிறேன்
“வனங்களில் வினோதங்கள்”
முடியலத்துவம் சிறப்பு.
நானும் நண்பர்களோடு சாளரம் என்ற கையெழுத்து இதழ் ஒன்றை முயற்சித்தேன்.
அந்த நினைவுக்கு நன்றி!
முடிந்தால் நமக்கும் மெயிலில் அனுப்புங்கள் mankuthirai@gmail.com
எல்லா பத்தியையும் வாசித்தேன்.
முடியலத்துவம் சிறப்பு.
நானும் நண்பர்களோடு சாளரம் என்ற கையெழுத்து இதழ் ஒன்றை முயற்சித்தேன்.
அந்த நினைவுக்கு நன்றி!
முடிந்தால் நமக்கும் மெயிலில் அனுப்புங்கள்
எமில் தூர்க்கேமின் வரிகளை ரசித்தேன்.
வணக்கம். என் பெயரை பரிந்துரைத்தற்கு நன்றி. என்னளவில் எல்லா புத்தகங்களுமே பொக்கிஷங்கள்தான், அதில் பத்தை வகைப்படுத்துவது பெரும்பாடு...ஆனாலும் மனதில் முதலில் தோன்றியதை பட்டியலிடுகிறேன். புத்தக சேகரிப்பு என்பது ரசனை சார்ந்ததும் கூட. எனக்குச் சிறுகதைகள், புதினங்கள் மற்றும் கவிதைகள் மிகவும் பிடிக்கும் எனில் அவ்வகையில் நிறைய புத்தகங்கள் வாங்கியிருப்பேன். ஆனால் புத்தகங்கள் நம் வாசிப்பு தளத்தின் நீள அகலங்களை விரிவாக்கியபடியே இருக்கும். நம் தேடல்கள் அற்புதமான ஒரு இடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். புத்தகங்களின் வாசனை எனக்கு மிகப் பிடிக்கும், அதில் தொலைந்து போகவே என்றென்றும் விரும்புவேன்.
இவை என் சிற்றறிவிற்கு எட்டிய எளிய பட்டியல் -
புயலிலே ஒரு தோணி / கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்
பாரதி புதையல் பெருந்திரட்டு - ரா.அ. பத்மநாபன்
காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி
புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]
மோகமுள் - தி. ஜானகிராமன்
வனவாசம் – கண்ணதாசன்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா
தம்மபதம் (5 தொகுதிகள்) ஓஷோ
தாய் – மாக்ஸிம் கார்க்கி
செம்மீன் – தகழி சிவசங்கரமன் பிள்ளை
- உமா ஷக்தி
2. Sreerangathu Dhevathaigal (Sujatha)
3. Pudhumaipithan sirukadhaigal
4. Mercury Pookal (Balakumaran)
5. Puranaanooru
6. Paalveedhi (Abdul Rahman)
7. Kanneer Pookal (Mu.Metha)
8. Erode Thamizhanban kavidhaigal
9. Kalyanji Kavithaigal
10. Agi (Mukunth Nagarajan)
1, motor cycle diaries-che
2, witch of portobello-paulo coelho
3, harry potter series by j k rowling for the great writing style and its campaign fr love
4, das kapital - karl marx
5, people, works things by gasset (i'm not sure about the author name meethi list appurama anuparen
அழைப்புக்கு நன்றி. பொதுவாக எனக்கு இப்படியான பட்டியல்களில் உடன்பாடில்லை. காரணம் நான் பைத்தியக்காரன். எதிலும் நிலை இல்லாதவன். கொண்டாட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பேன். இதுதான் என பின்னூட்டமிட்ட அடுத்த விநாடியே அதை மறுக்கவும் செய்வேன்.
என்றாலும் நண்பா, உங்களுக்காக 30ம் தேதிக்குள் அவசியம் பின்னூட்டமிடுகிறேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
2. ஆத்மாநாம் கவிதைத்தொகுப்பு
3. நகுலனின் நினைவுப்பாதை, நவீனன் டைரி மற்றும் கசிதைத்தொகுப்பு
4. ஜி நாகரதஜன் சிறுகதைகள் மற்றும் நாவல்கள்
5. ஜெயகாந்தன் அனைத்து சிறுகதைகள்,நாவல்கள், குறுநாவல்கள்,
6. வண்ணதாசன் கிறுகதைகள்
7. வண்ணநிலவன் சிறுகதைகள் நாவல்கள்
8. ஆதவன் அனைத்து சிறுகதைகள், நாவல்கள்
9.கு.அழசிரிசாமி, தி.ஜா, மௌனி, புதுமைப்பித்தன் அனைத்து எழுத்துகள்
10 மனுஷ்யபுத்திரன், சுகுமாரன் அனைத்து கவிதைகள்
11. ராமகிருஷ்ணனின் உறுபசி
12. ஜெயமோகனின் ஏழாம் உலகம்
13. ப சிங்காரம் இரு நாவல்கள்
14. சாரு நிவேதிதா நாவல்கள்
15. சம்பத்தின் இடைவெளி,,,,,,,,
16.நாஞ்சில் நாடன், தஞ்சை பிரகாஷ், ஞானக்கூத்தன், தேவதச்சன், சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி,யூமாவாசகி, கலாப்பிரியா,,,,,,,,,,,,
இன்னும் பல முக்கிய புத்தகங்கள், எழுத்தாளர்கள் மேற்சொன்னவையிலிருந்து விடுபட்டிருக்கு
குறைஞ்சது ஒரு 350 பிரதிகள், 150 எழுத்தாளர்கள் தமிழில் தீவிர இலக்கியத்தில் கட்டாயம் வாசிக்கப்படவேண்டும்
புத்தகங்கள் என்று பொதுவாக குறிப்பிட்டு விட்டீர்கள். தமிழா ஆங்கிலமா என குறிப்பிட்டு இருக்கலாம். கதை, கட்டுரை, கவிதை என்று எதை எழுத... இருப்பினும் நல்ல விஷயம்தான் இது. படிக்காததை படித்துத் தெளியவும், புதியவற்றை அறியவும் உதவும்.
எனது பத்து நூல்கள் (இது நிறைவான எண்ணிக்கை அல்ல). வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டியது என்பதால், பிள்ளைகள், மனைவி இவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் எனக்கு தோன்றுகிற பட்டியல் இது.
1.திருக்குறள்
2.சத்திய சோதனை
3.வால்கா முதல் கங்கை வரை
4.தமிழர் பண்பாடு
5.கிரியா தமிழ் அகராதி (அல்லது) பவானந்தர் சொல்லகராதி
6.பெரியார் சிந்தனைகள் தொகுதி
7.Intimate Behaviour by Desmond Morris
8.Motor Cycle Diaries - Se Querra
9.தாய் – மக்ஸிம் கார்க்கி
10.பாரதியார் கவிதைகள்
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
Thanks..id adhilai007@gmail.com
2. அறிஞர் அண்ணாவின் சட்டமன்றப் பேச்சுக்கள்
3. பெரியார் இறுதிப் பேருரை
4. துணையெழுத்து – எஸ். ராமகிருஷ்னன்
5. நெஞ்சுக்கு நீதி – கருணாநிதி
6. தமிழுக்கு நிறமுண்டு – வைரமுத்து
7. கடல் புறா - சாண்டில்யன்
8. டிஸ்கவரி ஆஃப் இந்தியா – ஜவகர்லால் நேரு
9. சிக்கன் சூப் ஃபார் த சோல்
10. நான் கண்ட ரஷ்யா - கலைவாணர்
11. ஆமுக்த மால்யத – கிருஷ்னதேவராயர் (தெலுங்கு)
12. நான் கிருஷ்னதேவராயன் – ரா.கி. ரங்கராஜன்
13. காந்தளூர் வசந்தகுமாரன் – சுஜாதா
14. த வொயிட் டைகர் – அரவிந்த் அடிகா
15. உடையார் – பாலகுமாரன்
16. கண்ணகி புரட்சிக் காப்பியம் – பாரதிதாசன்
17. குடும்ப விளக்கு – பாரதிதாசன்
18. குற்றாலக் குறவஞ்சி – திரிகூடராசப்பர்
19. ஆயிரந்தீவு அங்கயற்கன்னி – கண்ணதாசன்
20. உன் வீட்டுக்கு வந்திருந்தேன் வால்ட் விட்மன் – ஈரோடு தமிழன்பன்
21. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
22. மால்குடி டேஸ் – ஆர்.கே. நாராயணன்
23. நறுக்குகள் (ஹைகூ) – காசி ஆனந்தன்
24. ஒரு அகதியின் பாடல் – வ.ஐ.ச. ஜெயபாலன்
25. ஐயாம் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
26. துப்பறியும் சாம்பு – தேவன்
27. சார்லி சாப்ளின் – ராண்டர் கை
28. வருசநாட்டு ஜமீன் கதை – வடவீரப் பொன்னையா
29. சேலஞ்ச் – நக்கீரன் கோபால்
30. சொல்லாததும் உண்மை – ப்ரகாஷ்ராஜ்
பட்டியலில் வராத நூல்களும் உண்டு.
இவற்றுள் பல என்னிடம் இருப்பவை. சில தேடிக்கொண்டிருப்பவை. 14 வருடங்களாகத் தொடரும் வாசிப்புப் பழக்கத்தில் இவற்றுள் சில எனது ரசனைக்கு வெளியே சென்றிருந்தாலும், நான் ஒரு நூலகம் அமைத்தால் இவை முப்பதும் கண்டிப்பாக அதில் இடம்பெறும். பகிர்வுக்காக மட்டுமே இந்தப் பின்னூட்டம். தயவுசெய்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம்.
The sound of falling leaves – qurratualin Hyders
இது ஒரு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற உருது எழுதாளர் எழுதியது. இந்த நாவல் மட்டும் அல்ல, அவரின் மற்ற நாவல்களும் மனித வாழ்க்கை முறை, கலாச்சாரம், வலி, புதிய அணுகுமுறை எல்லாம் இருக்கும். ஒரு நூறாண்டு கால பதிவுகளை அவர் எழுத்தில் காணலாம்.
War and peace - LeoTolstay
இது எல்லோரும் அறிந்த ரஷ்ய எழுத்தாளரின் புத்தகம் , போரும் அதை ஒட்டிய நிகழ்வுகளும், புதிய உலகை நமக்கு அறிமுகம் செய்யும்.
You Can Win – Shiv Khera
மிக நல்ல சுய முனேற்ற புத்தகம், எளிய ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் படி இருக்கும், கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புக்.
One Step Ahead – Michael Grose
குழந்தை வளர்ப்பு பற்றிய புத்தகம், இதே போல் தமிழில் டாக்டர் விஸ்வநாதன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
Train to Pakistan – Khushwant Singh
குஸ்வந்த் சிங்கின் மற்ற புத்தகங்களும் அவரின் ஆங்கிலமும், நகைச்சுவையும் ஒரு வாசகனாக எல்லோருக்கும் பிடிக்கும்.
பாலங்கள் : சிவசங்கரி
மூன்று தலை முறை பெண்களை பற்றிய எழுத்துகள், பெண்கள் மன நிலை, வாழ்க்கை முறை, கால மாற்றத்தில் மாறும் உணர்வுகள், அழகிய எழுத்து. இவரின் ஓவர் டோஸ் புக் மற்றொரு அருமையான நாவல்.
சாண்டில்யன் - அனைத்து புத்தகங்களும்.
ஒன்று சொல்லி மற்றதை விட்டு படிக்க போகும் வாசகர்கள் தவறவிட வேண்டாம் என்ற நல்ல எண்ணம்தான்.
வாஷிங்டனில் திருமணம் - சாவி
திருமணம் எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்றும், அந்த இடத்துக்கே நம்மை அழைத்து செலலும்.
காமத்தில் இருந்து கடவுளுக்கு - ஓஷோ
ஓஷோ எழுதுவதையும், அவரின் பேச்சுகளை கேப்பதும் மிக அருமையான அனுபவம்.மிக மெல்லிய நகைச்சுவையுடன் அவரின் எழுத்துகள் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கும்.
திருக்குறள் - வள்ளுவர்
கண்டிப்பா படியுங்கள், ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தம் தரும்.
இது போக மற்ற பத்து புத்தகங்களா இல்லாமல் பத்து எழுதாளர்களாக வைத்து கொள்வோம்.
சுஜாதா - என் இனிய இயந்திரா, ஸ்ரீ ரங்கத்து தேவதைகள், என் எதற்கு எப்படி மாற்றம் பல.,
லக்ஷ்மி - இனிய உணர்வே என்னை கொள்ளாதே, காவிரியை போல, மற்ற எல்லா
நாவல்களும்,
தி, ஜானகிராமன் - மோக முள்,
ராஜநாராயணன் - பெண் மனம், நாட்டுபுற பாலியல் சிறுகதை, கோபால புறத்து மக்கள்,
மற்றும் பல.,
சாரு நிவேதா - கோணல் பக்கங்கள், ஜீரோ டிகிரி
ஜெயமோகன் - ஏழாவது உலகம் ( நன் கடவுள் படம்பா)
தகழி - செம்மீன்,
ரமணி சந்திரன் - எல்லா புத்தகங்களும் பெண்களால் விரும்பி படிக்கபடுவன.
அனுத்தமா - மிக இயல்பான எழுத்துகளுக்காக
அனுராதா ரமணன் - ஜன ரஞ்சக எழுத்துக்கள்
ரா .கி.ரங்கராஜன் - மிக பிரபலமான ஆங்கில நாவல்களை தமிழில் வாசிக்க இருக்கும்
ஒரே வழி.
கல்கி - பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு,
மற்றும்
இடமிருந்து, நேரமும் இருந்தால் கீழ்கண்டவை -
Shakespeare – Much Ado Above Nothing, As you like it, All’s well that ends well, etc..
Milton – paradise lost
New invention of life – all volume for kids
shortcuts to mathematics
The power of your subconscious mind
ராஜாஜி - ராமாயணம்
மற்றும் அவசியம் இருக்க வேண்டியது,
பாரதியார் கவிதைகள்
பகவத் கீதை,
ஸ்ரீமத் பாகவதம்
பஞ்சதந்திரம் கதைகள்
முல்லா கதைகள்
காந்தியின் சுய சரிதை
ராமாயணம்
மஹாபரதம்
கம்பர்
வள்ளலார் வாழ்க்கை வரலாறு
பட்டினத்தார் பாடல்கள்
அரேபியன் நைட்ஸ்
அனைத்து தமிழ் புத்தகங்களும்
இப்போதைக்கு இது போதும், மற்றவை பிறகு.
கடைசி பஞ்ச் : வாசித்து பழகுங்கள், உங்களை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள்.
அழைப்பை ஏற்று பட்டியலை அனுப்பியிருக்கிறேன். வழக்கம்போல் இது இறுதியானதல்ல என்பதையும் தெரிவிக்கிறேன்.
ஒரு விஷயம்.
சிறந்த பட்டியலுக்கு பரிசு என்பது தேவையா? நடுவர் குழு அதை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று யோசியுங்கள். வாசிப்பு என்பது அவரவர் சூழல், வாழ்க்கை, அனுபவம், அதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை சார்ந்தது.
அப்படியிருக்க ஒருவரின் பட்டியலை சிறந்தது என சொல்வதன் மூலம் மற்றவரின் வாசிப்பு அனுபவத்தை, வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டுமா? யோசிக்கவும்.
இனி --
1. ஜெர்மன் ஐடியாலஜி - காரல் மார்க்ஸ் (தமிழில் முன்னேற்ற பதிப்பிகம் இந்த நூலை முன்னர் வெளியிட்டதா என்று தெரியவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. இன்றைய தத்துவப் போக்குகள் -இருத்தியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்னை அமைப்பியல்வாதம், பின்னை நவீனத்துவம்... - அனைத்துக்கும் இந்த நூலை ஒருவகையில் முன்னோடியாக சொல்லலாம். வெறும் பொருளாதார மேதையாக மட்டுமே சுருக்கி அறியப்படும் காரல் மார்க்ஸின் தத்துவ வீச்சு, வாசிப்பவர்களை அதிர வைக்கும். என்னவொரு கவித்துவமான நடை! ஆனால், பயிற்சி + அர்ப்பணிப்புடனேயே இதை வாசிக்க முடியும்)
2. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - பிரடிரிக் எங்கெல்ஸ் (இனக்குழுவாக இருந்த மனிதன் குடும்பம் என்ற அமைப்புக்குள் எப்படி சென்றான், தனிச்சொத்தை சம்பாதிக்கும் எண்ணம் எப்படி அவனுக்கு வந்தது, அரசு எப்படி தோன்றியது என்பதை இந்த நூல் விளக்குகிறது. முன்பு முன்னேற்ற பதிப்பகம் இருந்தபோது 2 அல்லது 3 ரூபாய்க்கு கிடைத்த நூல் இது!)
3. ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ் - சார்லஸ் டார்வின் (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், உலகை உலுக்கிய நூல் இது. இன்றைய நமது சிந்தனைகளுக்கும், அறிதலுக்கும், புரிதலுக்கும் இந்த நூலே அடிப்படை. ஆங்கிலத்தில் மலிவுப் பதிப்பாக கிடைக்கிறது)
4. இண்டர்பிரிடேஷன் ஆஃப் டிரீம்ஸ் - பிராய்ட் (ஆங்கிலத்தில் கிடைக்கிறது. தமிழில் சிலர் இந்த நூலை மொழிபெயர்த்திருப்பதாக நினைவு. உளவியல் சார்ந்த பார்வையில் மனிதனை அறியலாம், புரிந்து கொள்ளலாம், மனம் சார்ந்த பிரச்னைகளை குணப்படுத்தலாம் என்பதை முதன்முதலில் முன்வைத்த புத்தகம். இந்த புத்தகத்தின் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. என்றாலும் இந்த நூலை வாசிக்காமல், உளவியல் உரையாடலை தொடர முடியாது)
5. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் (பாரதி பதிப்பகம் உட்பட பல பதிப்பகங்கள் இந்த நூலை மலிவு விலையில் பதிப்பித்திருக்கின்றன; பதிப்பித்தும் வருகின்றன. அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்)
6. இந்திய தத்துவயியல்: ஓர் எளிய அறிமுகம் - தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (பதிப்பகத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால், இப்போது இரண்டு பதிப்பகங்கள் இருவரின் மொழிபெயர்ப்பில் தனித்தனியே இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. சிந்தனை தோன்றிய காலத்திலேயே தத்துவபோக்குகளும் தோன்றிவிட்டன. நம்நாட்டில் இருந்த, மறைந்த, மறைக்கப்பட்ட தத்துவங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது)
7. புதுமைப்பித்தன் கதைகள் - புதுமைப்பித்தன் (அவரது சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், முற்றுப் பெறாத நாவல், என சகலமும் இதில் அடக்கம். காலச்சுவடு, புதுமைப்பித்தன் பதிப்பகம் உட்பட பல பதிப்பகங்கள் இவரது தொகுப்பை வெளியிட்டிருக்கின்றன)
8. நீலகேசி - சக்கரவர்த்தி நாயினார் பதிப்பித்த தொகுப்பு. (தமிழ்தாத்தா உ.வே.சா. இந்த நூலை மட்டும் ஏன் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கவில்லை என்பது முக்கியமான அரசியல். தமிழகத்தில் கிடைத்த ஒரேயொரு சுவடியிலிருந்து இந்த நூலை சக்கரவர்த்தி நாயினார் பதிப்பித்திருக்கிறார். அந்த சுவடியில் கவனமாக 3 ஓலைகள் காணாமல் போயிருந்தன. எனவே நூலிலும் அந்த 3 ஓலைகளில் இருந்தவை இருக்காது. சென்னை வர்த்தமான் பதிப்பகம் சுருக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆனால், முயன்று தேடினால் சக்கரவர்த்தி நாயினார் பதிப்பித்த தொகுப்பு கிடைக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். தர்க்க முறையும், வாத - விவாத - உரையாடல்களும் இந்த நூலின் சிறப்பு. மிக மிக முக்கியமான நூல் இது. நீலி, பழையனூர் நீலி என்றெல்லாம் சமயச் சான்றோர்கள் ஒரு பெண் பேயை குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீலி யார் என்பது இந்த நூலை வாசித்தால் தெரியும். அவரை ஏன் பேயாக 'இந்துமதம்' மாற்றியது என்பதும் புரியும். அது தனிப்பதிவுக்கான விஷயம் என்பதால்....)
9. பாபர் நாமா - பாபர் (தமிழில் இதன் மொழிபெயர்ப்பு வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆங்கிலத்தில் பென்குயின் நிறுவனம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. சுயசரிதை நூல்களில் இதற்கு தனியிடம் உண்டு. ஒரு பிச்சைக்கார சிறுவன் - நாடோடி, கிழிந்த ஆடைகளுடன், உணவுக்கு வழியில்லாமலும், குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமலும் ஆப்கானிஸ்தானத்திலிருந்து இந்தியாவுக்கு நடந்தே வந்தான். வந்தவன் இந்தியாவில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபித்தான். அதுதான் மொகலாய பேரரசு!)
10. காமசூத்ரம் - வாத்சாயனர் (முழுமையான தொகுப்பை வாசிப்பதே நல்லது. விற்பனையில் கிடைக்கும் தமிழ் நூல்கள் சுருக்கப்பட்டவை)
பின்குறிப்பு: இறுதியாக, இப்படியான பட்டியல்களின் வழியே க.நா.சு, இறந்தும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கிறேன் :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
2. தேவன் சிறுகதைகள்
3. முதலில் இரவு வரும்/ ஆதவன்
4. வில்லிபாரதம்
5. ஜானகிராமன் சிறுகதைகள்
6. நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை/ நாஞ்சில்நாடன்
7. மானுட வாழ்வு தரும் ஆனந்தம் / கோபிகிருஷ்ணன்
8. அநாதை/ ஹெப்சிபா யேசுதாசன்
9. ரஷ்யச் சிறுகதைகள் முதல் தொகுதி
10. கமலாம்பாள் சரித்திரம் / ராஜம் ஐயர்
பத்துப் புத்தகம் என்பதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலையா?
இதைப் பரிசுக்கான என்ட்ரியாகக் கருத்தில்கொள்ள வேண்டாம்.
2) தேவன் கட்டுரைகள்/ சிறுகதைகள். -Alliance
3)இன்னும் மனிதர்கள்- சேஷையா ரவி
4)ஜே ஜே சில குறிப்புகள்
5) A science in its youth. (Tamil translation) Russian publication.
6)பிரமிள் கவிதைகள்
7)பெயரற்ற யாத்ரீகன் (Translation of Zen poems)
8) முகவீதி - ராஜ சுந்தரராஜன்
9) விண்ணளவு பூமி - தேவதேவன்
10) The Prophet - Khalil Gibran
11) நீராலானது - மனுஷ்யபுத்திரன்
12)தலைகீழ் விகிதங்கள்
13)என் கடவுளும் என்னை போல் கருப்பு - கோசின்ரா
14)ந.பிச்சமூர்த்தியின் கலை:மரபும் மனிதநேயமும்
15)தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு கோமு
வால்காவிலிருந்து கங்கை வரை
உயிர்த்தேன்
கண் தெரியாத இசைஞன், தேவதச்சன்
கோணங்கி
ஜெய மோகன்
எஸ் ராம கிருஷ்ணன்
வண்ணதாசன்
வண்ணநிலவன்,ப்ரேம் ரமேஷ்
அக்னி நதி, நீலகண்ட பறவையைத்தேடி
யவனிகா, குட்டி ரேவதி,பூபதி,
பதிவாவே போட்டுட்டேன் சார்...!
2. Feast of the Goat - Mario Vargas Losa
3. Borges - Short Stories
4. Alice Munro - Collected short stories.
5. Kafka on the shore - Haruki Murakami
6. Raymond Carver - Short Stories
7. 18 Atchakkodu - Asokamitran
8. Thanneer - Asokamitran
9. Ezham Ulagam - Jeyamohan
10. Invisible Cities - Italo Calvino
http://sandanamullai.blogspot.com/2009/04/blog-post_03.html
Singapore Story - Lee Kwan Yew
The Pillars of the Earth - Ken Follet
அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - மாத்தளை சோமு
மாநீ - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
அரிகோ - ஆசிரியர் பெயர் நினைவில்லை (நர்மதா பதிப்பகம்?)
பணங்காட்டு அண்ணாச்சி - ஸ்டெல்லா ப்ருஸ்
பொன் அந்தி - எஸ். பாலசுப்பிரமணியன்
The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinationals - Nick Robins
தேவன்,,,,,,,துப்பறியும் சாம்பு.லக்ஷ்மி கடாட்சம்
எம் எஸ் வி......அனைத்துக் கதைகளும்..
சுஜாதா........................”’’’’’’’
பாலகுமாரன்.......உடையார்
ரா.கி. ரங்கராஜனின் அனைத்து மொழிபெயர்ப்பு நாவல்கள்
எஸ் ஏ பி......சொர்க்கம் ஒன்று நரகம்,மூன்று,
ஜாவர் சீதாராமனின் அனைத்துக் கதைகளும்.........
எண்டமூரி வீரேந்திரனாத்.......மொழிபெயர்ப்பு கதைகள்
வேர்கள்----------கிருஷ்ணமணி
இதயக்கோவில்......லக்ஷ்மி ராஜரத்தினம்
மிதிலா விலாஸ்.......லக்ஷ்மி
தேவன்,,,,,,,துப்பறியும் சாம்பு.லக்ஷ்மி கடாட்சம்
எம் எஸ் வி......அனைத்துக் கதைகளும்..
சுஜாதா........................”’’’’’’’
பாலகுமாரன்.......உடையார்
ரா.கி. ரங்கராஜனின் அனைத்து மொழிபெயர்ப்பு நாவல்கள்
எஸ் ஏ பி......சொர்க்கம் ஒன்று நரகம்,மூன்று,
ஜாவர் சீதாராமனின் அனைத்துக் கதைகளும்.........
எண்டமூரி வீரேந்திரனாத்.......மொழிபெயர்ப்பு கதைகள்
வேர்கள்----------கிருஷ்ணமணி
இதயக்கோவில்......லக்ஷ்மி ராஜரத்தினம்
மிதிலா விலாஸ்.......லக்ஷ்மி