இளம் எழுத்தாளர்களுக்கு...


பெயர்: ஜெகதீஸ்
ஊர்: மானாமதுரை
வயது: 10
கல்வி: 4ஆம் வகுப்பு
வேலை நேரம்: காலை எழு மணி முதல் இரவு பன்னிரெண்டு மணி வரை
விடுமுறை: வருடத்திற்கு இரண்டு நாட்கள்
மாத வருமானம்: ரூ.300/-

வ.ஊ.சி மைதான தள்ளுவண்டிக் கடைகளில் பணியாற்றும் சிறார்கள் குறித்த தகவல்களைப் பெரும் பிரயத்தனத்தோடு கேண்டி சேகரித்து வருகிறாள். பெரும்பாலும் பத்துவயதைத் தாண்டாத சிறுவர்கள். வறுமை வண்டி வண்டியாய்த் தேங்கிக்கிடக்கும் மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களைச் சேர்ந்த இவர்களின் அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ.300/- அதாவது நாளொன்றுக்கு ரூ.10/-. வேலை நேரம் சுமார் பதினெழு மணி நேரம். தங்கள் பால்யம் சுரண்டப்படுவதறியாமல் வெள்ளந்தியாய் சிரிக்கும் இவர்களுக்கு இப்போதைக்கு கதைகள் மட்டும் சொல்லிவருகிறோம்.

***

சுகதேவ்: இளைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

வல்லிக்கண்ணன்: எழுத விரும்புகிறவர்கள், யாரையும் பின்பற்றாமல் சுயமாக எழுத முயற்சிக்க வேண்டும். எழுதுவதை விட அதிகம் படிக்க வேண்டும். தற்காலத் தமிழ் இலக்கியம் மட்டுமின்றிப் பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களையும் அறிமுகம் செய்வது நல்லது. உலக இலக்கியத்திலும் பரிச்சயம் அவசியம். முக்கியமாக, எழுதும் அனைத்தும் அச்சில் வரவேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. தன்னம்பிக்கையோடு உழைத்துக்கொண்டிருந்தால் வெற்றி நிச்சயம்.

***

அனாணிகளுக்கு ஒரு வேண்டுகோள். எத்தனைக் கேவலமான பின்னூட்டங்களையும் பிரசுரிப்பவன் நான். அதற்குக் காரணம் சக மனித அபிப்ராயங்களின் மீதான மரியாதை. அப்படி இருக்கையில் மூகமுடிகள் அணிந்து பின்னூட்டமிட வேண்டிய அவசியமென்ன... ?!

***
பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதுகள் எப்படித்தான் வழங்கப்படுகின்றன என்ற என் நெடுநாள் கேள்விக்கான விடையைத் தேடிக் கண்டுகொண்டேன்.

விருதுகளுக்குத் தகுதியான நபர்களை உரிய ஆதாரங்களுடன் பரிந்துரைக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது. மாநில அரசுகள் அதைத் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கிறது. ஒவ்வொரு துறையும் விருதுக்குத் தகுதியானவர் என்று கருதுகிற நபர்களின் முழுவிபரங்களை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கின்றன. அவற்றை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறது மாநில அரசு. அந்தப் பட்டியலை மத்திய அரசின் குழு ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கிறது.

அப்படியென்றால் விவேக்கின் பெயரைப் பரிந்துரை செய்தது எந்தத் துறையாக இருக்கும்?!

Comments

விவேக்கை பரிந்துரை செய்தது அப்துல்கலாமாக இருக்கும்!
ICANAVENUE said…
Sorry Selvendran, i forgot to add. Can you not publish my phone no and ID in comments. Thanks.
அப்படியென்றால் விவேக்கின் பெயரைப் பரிந்துரை செய்தது எந்தத் துறையாக இருக்கும்?!

கொடுக்க வேற யாரும் இருந்திருக்க மாட்டாங்களோ என்னவோ. அல்லது ஒருவேளை இதுக்கும் டார்கெட் வெச்சு இத்தனை பேரை செலக்ட் பண்ணனும்னு இருக்குமோ? இந்த டவுட் ஏன்னா நயன்தாரா 'கலைமாமணி'யாம்,அதுக்காக சொல்றேன்.
Anonymous said…
சாகிதய் அகாதமிக்கு உன் பெய்ரைப் பரிந்துரைக்கணூம்ன்னா என்ன செய்யணும்னு சொல்லு.
///பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதுகள் எப்படித்தான் வழங்கப்படுகின்றன என்ற என் நெடுநாள் கேள்விக்கான விடையைத் தேடிக் கண்டுகொண்டேன்///.

எப்பிடி செல்வா இப்பிடி பச்ச புள்ளயா இருந்திருக்கீங்க? இவ்ளோ நாளா?
வல்லிக்கண்ணன் அந்த பேட்டி தினமணியில் வந்ததுதானே. நல்ல கருத்து பகிர்வுக்கு நன்றி.

அவருடைய ''புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' மூலம்தான் நா பி, கா நா சு, சி மணி, கு ப ரா, சி சு செ, போன்ற மூத்த இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது.
/
வேலை நேரம் சுமார் பதினெழு மணி நேரம். தங்கள் பால்யம் சுரண்டப்படுவதறியாமல் வெள்ளந்தியாய் சிரிக்கும் இவர்களுக்கு
/

:(((((((

Popular Posts