எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

என் நினைவின் ஆழத்தில் துழாவி எடுத்த பதிவர்கள் இவர்கள். நான் பதிவெழுத துவங்கிய நாட்களில் பின்னூட்டங்களிட்டு உற்சாகப்படுத்தியவர்கள். இன்னும் துழாவினால் பெயர் பட்டியலைப் பெரிதாக்க முடியும். ஆனால், இத்தனைப் பெயர்களை நினைவுபடுத்த முடிந்ததையே பெரும் சாதனையாகக் கருதி அமைகிறேன். சமீப காலமாய் இவர்களை இந்தப் பக்கம் பார்க்க முடிவதில்லை. அவ்வளவு மோசமாகவா எழுதுகிறேன் என்ற கேள்வி ஒவ்வொரு முறை எழுதும்போதும் ஏற்படுகிறது. அவங்ககிட்டவே கேட்டா என்ன? ஸ்டார்ட் மீஜீக்...

பினாத்தல் சுரேஷ்
அனுசுயா
சேதுக்கரசி
தூயா
செந்தில்
இசக்கி முத்து
கதிரவன்
சீமாச்சு
மெலட்டூர் இரா. நடராஜன்
முகவை மைந்தன்
சிந்தாநதி
மலைநாடன்
வவ்வால்
தெக்கத்திக்காட்டான்
வதிலை முரளி
நந்தா
வெங்கட்ராமன்
நளாயிணி
உலகம் சுற்றும் வாலிபி
தென்றல்
பத்மகிஷோர்
பாலசந்தர் கணேஷ்
விஎஸ்கே
ஜோ
காட்டாறு
மனதின் ஓசை
எல்.டாஸூ
முத்துக்குமரன்
ஆனந்த் நிரூப்
ஜி
மதி கந்தசாமி
ஜி. ராகவன்
ஜி. முத்துக்குமார்
நிலவு நண்பன்
ஆழியுரான்
சேவியர்
சந்தோஷ்
ஜெஸிலா
கல்வெட்டு (எ) பலூன்மாமா
ஸ்ரீதர்வெங்கட்
டோண்டு ராகவன்
இளா
சிந்தன்
பொன்ஸ் பூர்ணா
விக்னேஷ்
கோபிநாத்
சுதர்ஸன் கோபால்
அறிவியல் பார்வை
பீ 'மோர்கன்'
துளஸி கோபால்
லொடுக்கு
முத்துலெட்சுமி
சத்தியா
வெற்றி
ஜீவி
பாட்டியன்
தங்ஸ்
சத்தியராஜ்குமார்
வடுவூர்குமார்
வெட்டிப்பயல்
சர்வேசன்
வல்லிசிம்ஹன்
கஸ்துரி
தேவ்
டெல்பின்
யோகன்பாரீஸ்
பால்
தருமி
சில்லு
அய்யனார்
வாய்ஸ் ஆஃப் விங்ஸ்
ப்ரெண்ட்லி பயர்
செல்வநாயகி
சிநேகிதன்
மோகன் தாஸ்
அப்பாவி இந்தியன்
மங்கை
பாரி-அரசு
ஆயில்யன்
பரணி
நந்து/நிலா
பட்டிக்காட்டான்
த. அகிலன்
லோஷன்
ஆட்காட்டி
சுரபதி
ராமச்சந்திர உஷா
சிங்கைநாதன்
தமிழ் பிரியன்
மஞ்சூர் ராசா
கட்டப்பொம்மன்
ராப்
பிரகாஷ்
செய்யது முகம்மது ஆஸாத்
ஜெ. நம்பிராஜன்
ஜோசப் பால்ராஜ்
முகவைத் தமிழன்
ச்சின்னப்பையன்
ஆனந்த்
நாதஸ்
கார்த்திக்
ஆ. கோகுலன்
சிலேட்
தமிழ்நதி
தாமிரா
ரமேஷ் வைத்யா

Comments

அந்த வதிலை முரளி தான் நான். இப்போது முரளிகண்ணன் என்ற சொந்தப்பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஞாபகம் வைத்திருந்ததற்க்கு நன்றிகள்.
அண்ணே பல பழைய பெரும் பதிவர்கள் எல்லாம் வந்து பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் அதுதான் உங்கள் எழுத்தின் சிறப்பு அல்லது தனித்தன்மை...
அப்பாடா என் பெயர் இல்லை !
:))))))
மீ த ஃபர்ஸ்ட்டு...

(இதெல்லாம் உற்சாகத்துல சேர்த்துக்கறது இல்லையாமே :-) )
வருவாங்க.. பொறுங்க..

வாழ்த்துக்கள்
நீங்கள் குறிப்பிட்டுள்ள பலர் இன்னும் ப்ளாக் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்களை நீங்கள் உற்சாகபடுத்தி வருகிறீர்களா?

ஒருவேளை உங்களை கவரும் வகையில் அவர்கள் ஒரு பதிவு கூட எழுதுவதில்லையா?

என்னவோ போங்க தோணுச்சு கேட்டுடேன்!
ஆஹா மீ த பர்ஸ்ட்டூ :))
Anonymous said…
இப்படி ஒரு பதிவு போடுவீங்கனு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா, நானும் இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.

என் பேரும் நீங்க கொடுத்திருக்கிற பெரும் பதிவர்கள் பட்டியல்ல வந்திருக்குமே ;)
நல்ல வேளை என் பேர் இல்லை

:))
எத்தனை பேர்களோ அத்தனை பின்னூட்டம் உறுதி.

இதுல கணேஷ்-ங்கற பேர் இருந்திருந்தா 100 பின்னூட்டம் எக்ஸ்ட்ரா கெடச்சிருக்கும்.

நீங்க எழுதின கடைசி பேர் - லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். அவரு விஷயத்துல உங்க கேள்வி எனக்குமுண்டு!
selventhiran said…
ஓ... மன்னிக்கவும் முரளிகண்ணன். பெயர் பட்டியலில் ஒருவர் கிடைத்துவிட்டார்.

தமிழன் - கறுப்பி, வந்தவய்ங்க தல தெறிச்சி ஓடிட்டாய்ங்களோன்னு ஒரு ஐயப்பாடு :)

வாங்க கோவியார்... மறதில உட்டுட்டேன் போலருக்கு.

வாங்க சென்ஷி.

வாங்க அறிவே தெய்வம்.

வால், இந்த தேர்தல்ல உமக்கு ஒரு சீட் வாங்கித் தர்றம்யா...

வாங்க ஆயில்யன். ஆமாம் ஆயில்யன்னா என்ன அர்த்தம்? பெயர்க்காரணம் ப்ளீஸ்...

வெயிலான், உங்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் போடச் சொல்லிரவா... :)

மங்களூர்னாலே நமக்கு பயம் உண்டுங்களே... :)
Thamira said…
ஹைய்யா.. என் பேர் இல்லன்னு பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா அதையும் ஏற்கனவே போட்டுருக்காங்க.. பதிவெழுதறதைவிட பின்னூட்டம் போட ரொம்ப சிந்திக்க வேண்டியதா இருக்குது. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ.. (உண்மையில் சில நாட்களுக்கு என்னை உங்கள் கடை என்றில்லை வேறு எங்கும் கூட பார்த்திருக்கமாட்டீர்கள்.. அது மேலும் சில நாட்கள் தொடரும்..)
அடடா.... என் பேர் இருக்கக்கூடாதுன்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்... அவ்வ்வ்.

சரி விடுங்க.. இனிமே படிச்சிட்டு எஸ்ஸாகாமே பின் போட்டுடறேன்.. கணேஷ் அளவுக்கு இல்லேன்னாலும் ஒரே ஒரு பின் போடறேன்... ஓகேவா...

:-))
// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஹைய்யா.. என் பேர் இல்லன்னு பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா அதையும் ஏற்கனவே போட்டுருக்காங்க..
//

தாமிரா பேர்தான் இருக்கே

என் பேர் இல்ல.. நான் பெரியாள் இல்லையா.. ரெகுலரா வர்றேன்னான்னு சொல்லுங்க செல்வா
செல்வேந்திரன்,கொஞ்சம் பெயர் தெரியும் படியான பதிவராக ஆகிவிட்டால் பலருக்கு கால் தரையில் பாவுவதில்லை.
அவர்களுடைய பதிவுக்கு வந்து பின்னூட்டம் அளிக்கும் நபர்களுக்குக் கூட நன்றியோ பதிலோ அளிக்க மாட்டார்கள்.
பின்னர் உங்கள் பதிவுகளைத் தேடி வந்து படித்து....பின்னூட்டி........

விளங்குனாப்புலதான்..

புதியவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள்,அவர்களும் மகிழ்வுடன் உங்களைத் தொடர்ந்து படிப்பார்கள்.
விக்னேஷ் என போட்டிருப்பது என்னை தானா?
அடப்பாவி மக்கா..இப்படியா கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்குறது..;)
அடடா..நான் google reader வழியாக உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிச்சிட்டுத்தான் இருக்கறேன் செல்வேந்திரன்.உங்க பதிவுக்கு வராம (வந்தாலும் பின்னூட்டம் போடாம) போறதுக்கு முழுமுதல் காரணம் என்னோட சோம்பேறித்தனம் தான்.

அதே காரணத்தாலதான், நான் பதிவுகள் எழுதியும் பல மாசங்கள் ஆகுது..

உண்மையில் உங்க பதிவுகள் எல்லாம் நல்லாவே இருக்குதுங்க. பதிவுலகத்தால உங்களுக்கு கிடைச்ச நட்பு வட்டாரம் பற்றி படிச்சப்ப சந்தோசமா இருந்தது.

சில பதிவுகளுக்கு பின்னூட்டம் போட நினைத்ததுண்டு..(குறிப்பா..உங்க அதிரடி ‘ஜட்டி’ கதை; கேரளத் திருவிழாவில நீங்க பாத்த விற்பனைப்பெண் & கேவலமான போலீஸ் பற்றிய பதிவு பிடிச்சிருந்தது; மெலட்டூர் நடராஜன் விழாவுக்கு போனப்ப சந்திச்ச ‘அவன்’ பத்தின பதிவு..நான் ஹோமோ பற்றி முன்னொரு பதிவு போட்டிருந்தப்ப, நீங்க கெரகம்,அவங்களால தொந்தரவுதான்னு பின்னூட்டம் போட்டிருந்தீங்க..அது,’அவன’ மனசில வச்சுத்தானு நினைச்சுக்கிட்டேன்)

தொடர்ந்து பின்னூட்டமிட முயற்சிக்கிறேன்..

என்னையும் ஞாபகம் வைச்சிருக்கறதுக்கு நன்றி !!
இந்த பதிவிலும் என் பெயர் இல்லை!

இதுக்கு பிறகு போட்ட பதிவிலும் இல்லை! ஆகையால் எனக்காக ஒரு பதிவு போடாதவரை செல்வேந்திரனுக்கு நோ கமெண்ட்! என்பதை கமெண்ட் போட்டு சொல்லிக்கிறேன்!
வெ.சா. மேத்தாவைப் பத்திச் சொல்லும்போது சொன்னதுதான் ஞாபகம் வருது (29 வயதானவர்கள் யார் வேண்டுமானாலும் ஜனாதிபதி ஆகலாம் என்பது மாதிரி மேத்தா என்றாவது ஒரு நாள் கவிதை எழுதலாம்). ஒருவேளை அந்த மாதிரி அவங்களும் நினைச்சு முதல்ல உங்களை ஊக்கப்படுத்தியிருப்பாங்களோ :)
உள்ளேன் ஐயா. . .
ராஜா,
என் பெயரையும் நினைவு வெச்சிருந்து போட்டதற்கு நன்றி. விகடன் இதழ்களில் முடியலத்துவமும், அப்பாவுக்கு ரஜினி சார் ரொம்ப தோஸ்து கதையையும் படிச்ச பின்னாடி, செல்வேந்திரன் எங்கேயோபொயிட்டாருன்னு புரிஞ்சுப் போச்சு..

இப்ப உங்க எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்கிறேன்..

நல்லா எழுதுகிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கோ..

அன்புடன்
சீமாச்சு...
ஆயில்யன் எங்க ஊர்க்காரர். மயிலாடுதுறை.. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததால் “ஆயில்யன்” என்று புனைப்பெயரில் எழுதுகிறார்.

ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசியில் வருவதால் அவர் பதிவின் பெயர் கடகம்.

என் அன்புத்தம்பியும் அவரே ஆவார்.

அன்புடன்
சீமாச்சு
செல்ஸ், என்னையும் நினைவு வைத்திருப்பதற்கு நன்னி. பின்னுட்டங்களைப் பொறுத்தவரையில் நான் மட்டுமல்ல, பல மூத்த பதிவர்கள், பதிவு நன்றாக இருந்தால் அல்லது கருத்து சொல்ல வேண்டி இருந்தால் பின்னுட்டம் போடாமல் இருப்பதில்லை. என்னுடைய கொள்கை புதியதாய் பதிவிட வந்தவர் ஆர்வமாய், ஆக்கப்பூர்வமாய் எழுதி என் கண்ணில் பட்டு எனக்கு பிடித்திருந்தால் கட்டாயம் பின்னுட்டம் உண்டு.

அப்படியே வால் பையன் கேட்ட கேள்வியை நானும் ரிப்பிட்டுட்டு, இன்னும் ஒரு கேள்வி, புதியதாய்
எழுத வந்தவர்களை நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்களா?
Unknown said…
பட்டியல்ல என் பேர பாக்கும் போது சந்தோசமா இருக்கு..

உங்க பதிவுகள படிச்சுட்டு தான் இருக்கேன், தொடர்ச்சியா பின்னூட்டம் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரலை. கண்டிப்பா இனிமேல் தொடர்புல இருக்கேன்..

(ஆமா அந்த "பட்டிக்காட்டான்" நான் தானே..)
;)
மறக்கமுடியுமா? http://tinyurl.com/FromPasumaiVikatan"


//கோபிநாத் said...
அடப்பாவி மக்கா..இப்படியா கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்குறது..;)
//

ரிப்பிட்டு...

//கதிரவன் said...
அடடா..நான் google reader வழியாக உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிச்சிட்டுத்தான் இருக்கறேன் செல்வேந்திரன்.உங்க பதிவுக்கு வராம (வந்தாலும் பின்னூட்டம் போடாம) போறதுக்கு முழுமுதல் காரணம் என்னோட சோம்பேறித்தனம் தான். //

ரிப்பிட்டு...ரிப்பிட்டு...

PS: போட்டாவுல (மலையாள) ஹீரோ மாதிரி இருக்குறீங்க..!
தப்புதாண்ணே, மன்னிச்சு விட்ருங்க.
ஆணிக்களோட அளவு அதிகமாயிருச்சுங்கிறது ஒரு காரணம், அதோட ஆபிசுல பதிவப் படிக்க முடியல ( இந்த எக்னாமிக் ரெசெஷன் எல்லாம் முடியட்டும்,முத இந்த வேலைய மாத்தனும் என்னா கம்பெனி இது)

வீட்டுக்கு வந்தா பல வேலைகள், என் வலைப்பதிவுல நான் பதிவுகள் எழுதிக் கூட பல நாட்கள் ஆகிருச்சு.
ஆனால் நான் விரும்பிப் படிக்கும் பதிவர்களுள் நீங்களும் ஒருவர். எல்லாப் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இட முடியாமல் போய்விடுகிறது.
விரைவில் நிலம சரியாயிரும்னு நினைக்கிறேன்.
Anonymous said…
சல்லிப்பயலே செல்வேந்திரா

*******************************
அன்புத்தம்பி (பாரு எவ்வளவு அன்பா கூப்பிட்டிருக்கேன். இப்போ இப்படி கூப்பிட வச்சுட்டியே?!)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றாலும் 'ப்டை' வந்து அரிப்பெடுத்தால் மருத்துவரிடம் போகாமல் இருக்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும்


உன் தோளில் மாலைகள் விழுந்தால் அது மடத்துக்கு கிடைத்த மரியாதை அல்லவா? மடச்சீடர்கள் எல்லாம் புகழ் பெறுவதும் பாராட்டுதலகளைப் பெறுவதும் மடத்தலைவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருமென்று உனக்குத் தெரியாதா?

உன்னைப் போன்ற 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியயகும்' என்ற ம்னப்பக்குவம் இல்லாத கவுஞர்களின் மனநிலை எனக்குத் தெரியாதா தம்பி?!

'முடியல்த்துவம்' உருவாகிய காலகட்டத்திலெயே தமிழை அடுத்த கட்டத்துக்கு தாயம் போடாமலேயே நகர்த்தும் நெம்புகோள் கவிதை இதுதானென்று நான் கட்டியக் கூறவில்லையா?

நான் சொன்னதைத்தானே இப்போது ஆனந்த விகடன் அங்கீகரித்திருக்கிரது. நான் சொன்னபோதே பாராட்டில் மகிழாத நீ ஆவி சொன்னதால் ஆனந்தக் கூத்தாடும் மடமையை என்ன செய்வது?

எப்படியோ, மடக்கண்மணிக்ளே, கவுஞர்களே, கும்மிகளே

ஒரு கவுஜை வந்ததுக்கே பிரேமைக் கும்மியவர்களுக்கு முழுமையான பாராட்டு விழா வாய்ப்பு

யாரெல்லாம் பங்கெடுத்து செல்வேந்திரனை வாழ்த்தப் போகிறீர்கள். பாராட்டு விழாவிம் முக்கிய நோக்கமாக கடைசியில் ஏற்புரை வழங்கும்போது செல்வேந்திரன் முடியலைன்னு சொல்லணும்

தொடங்குங்க மக்கா!!
ஆசிப்மீரான்

*************

உன் பதிவை விட நீளமாக உண்மைத் தமிழன் அளவுக்கு உனக்குப் பின்னூட்டமிட்ட என் பெயரை முதலில் இட நீ மறந்ததை மறதியில் நடந்ததாக் கருதவில்லை. மமதையில் நடந்ததாகவே கருதுகிறேன். இப்படியெல்லாம் செய்து விட்டால் கவிமடத் தலைமையை மறைத்து விட்டு மடச் சீடர்க்ள் ஒத்துழைப்போடு மடத்தைக் கைப்பற்றலாமென மனப்பால் (அது என்ன எழவு பால்டே?!!) குடிக்காதே?!

மரியாதையாக நடிகர் சங்கத்துக்கு ஜெயமோகன் எழுதிக் கொடுத்தது மாதிரி மன்னிப்புக் கடிதம் எழுதி அனுப்பு. இல்லையேல்... என்ன எழவைடே செய்ய முடியும் ??

நல்லா இருடே!!

கவிமடத் தலைவன
நான் சொன்னதைத்தானே இப்போது ஆனந்த விகடன் அங்கீகரித்திருக்கிரது. நான் சொன்னபோதே பாராட்டில் மகிழாத நீ ஆவி சொன்னதால் ஆனந்தக் கூத்தாடும் மடமையை என்ன செய்வது?//


நியாயமான கேள்வியா தெரியுதே!

நீங்களும் சராசரி தானே செல்வா

அண்ணாச்சீ போட்டு தாக்கிட்டாரே!

Popular Posts