கங்குலி - இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம்
தேசத்திற்காகப் போரிடுவதாகட்டும், விளையாடுவது ஆகட்டும் இரண்டிலுமே செய்நன்றி எதிர்பார்க்க முடியாது என்பார் என் தந்தை. மக்களும் அரசாங்கமும் எளிதாக மறந்து விடுவார்கள். அல்லது கண்ணை மூடிக்கொண்டு கேலி செய்வார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் செளரவ் கங்குலி. கங்குலி குறித்து எழுதினால் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் என்பதால் கங்குலியைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இன்று ச.ந. கண்ணனின் இந்தப் பதிவு என்னை உசுப்பிவிட்டது.
கங்குலி இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம். இன்றைய இந்திய அணியின் வெற்றிகள் அவர் இட்ட பிச்சை. கிழட்டுப் பயலுகளை வைத்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் அவர் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள்தான் அவரது மோசமான முடிவுக்கு காரணமாகி விட்டது. நாளது தேதி வரை வீரர்கள் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வந்த மாநிலவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் தலையீட்டையும் ஒழித்துக்கட்டினார். அணித்தேர்வில் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்குமே அதிகப் பங்களிப்பு இருக்க முடியும் என்பதைத் தன் ஆளுமையால் உறுதி செய்தார். இன்றைய நட்சத்திரங்களான வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், மகேந்திரசிங் டோணி போன்ற இளம் தலைமுறை கிரிக்கெட்டர்களின் கிரிக்கெட் வாழ்க்கையைத் துவக்கி வைத்தவர் கங்குலி. ஒரு கிரிக்கெட்டருக்கு இருக்க வேண்டியது திறமைதானே தவிர அனுபவம் இல்லை என்பதை இந்த உலகிற்குப் புரிய வைத்தவர் அவர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய அணியில் இடம் பிடிக்கக் காரணமாய் இருந்தார். இந்திய அணிக்கு வழங்கப்பட்டு வந்த வள,வளா கொழ, கொழா பயிற்சியை மாற்ற வெளிநாட்டு பயிற்சியாளர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தவரும் கிரேக் சாப்பலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவும் காரணமாய் இருந்தவரே கங்குலிதான்.
சச்சின் என்னதான் மேஸ்ட்ரோ என்ற போதும் தலைமைப் பதவியில் சோபிக்க முடியாதவர். பதவி வேண்டாம் என்று ஓடியவர். ஆனால், சோதா டீமை வைத்துக்கொண்டு பெரு வெற்றிகளைக் குவித்தவர் கங்குலி. இன்றளவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் அவர்தான். சர்ச்சைப் புயல்கள் அவரை வட்டமடித்த போதும் அணிக்கான முடிவுகளைத் தெளிவாக எடுத்தவர். ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் பீனிக்ஸாய் புறப்பட்டு வந்து தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தார்.
கங்குலி இறுதிக்காலங்களில் நடத்தப்பட்ட விதம் மிகுந்த கேவலத்திற்குரியது. அவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போதும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரை மொத்த தேசமும் கேலி செய்து கொண்டிருந்தபோது கூட வாய் திறவாதவர் 'அடிக்கடி ஹேர்ஸ்டைலை மாற்றினால்தான் தேர்வுக்குழுவிற்குப் பிடிக்குமோ என்னவோ' என்று பேட்டியளித்தது ஒரு கிரிக்கெட்டர் வாழ்வின் மிகப்பெரிய சோகம்.
இன்றளவும் இந்தியாவின் இணையற்ற பேட்ஸ்மேன்கள் சச்சினும் செளரவும்தான். உலகின் தலை சிறந்த பத்து பேட்ஸ்மேன்களைப் பட்டியலிட்டால் கங்குலியின் இடம் தவிர்க்க முடியாததது. பத்தாயிரம் ரன்களைக் குவித்த ஒரு பேட்ஸ்மேனை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த இந்தியர்களால் மட்டும்தான் முடியும். கங்குலி கிரிக்கெட் வாரியத்தின் பெருச்சாளித் தனத்தை எதிர்த்தற்காகவும், ஆண்மையோடும் ஆக்ரோசத்தோடும் தேசத்திற்காக விளையாடியதாலும் இன்றளவும் கேவலப்படுத்தப்பட்டு வருகிறார். அவரது ஓய்விற்குப் பின் அவரது சேவையைக் கவுரவிக்க ஒரு 'டீ பார்ட்டி' நடத்தக்கூட வாரியத்திற்கும் விருப்பமில்லை. அவரால் வாழ்வு பெற்றவர்களுக்கும் விருப்பம் இல்லை.
என் வாழ்நாளில் கங்குலியைப் போன்ற தன்னம்பிக்கையுடைய ஒரு மனிதனைக் கண்டதில்லை. அவர் இந்திய இளைஞர்களால் ஊன்றிப் படிக்க வேண்டிய ஆதர்சம். ஆனால், இளைஞர் குழாமோ ஊடகங்கள் ஏற்படுத்தும் தோற்ற மயக்கங்களின் வழி அவரை அணுகுகிறது. கங்குலி குறித்த புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்பதுதான் என் நெடுநாள் ஆவல். கங்குலியின் ஓய்விற்குப் பின் ஏற்பட்ட அயற்சியில் அப்பணி கொஞ்சம் முடங்கி விட்டது. உசுப்பிவிட்ட கண்ணனுக்கு நன்றி!
Comments
தவறு!
தன்னம்பிக்கையோடும் ஆக்ரோசத்தோடும் விளையாடிய மனிதனை என்று இருக்கவேண்டும்!
தவிரவும், இன்று இது ஒரு திறமையான வியாபாரமாக மட்டுமே ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விளையாட்டு என்ற அர்த்தத்தில் இருந்து 'கிரிக்கெட்' விலகிப் போய் வெகுநாட்களாகிவிட்டது.
சாறை பிழிந்து, சக்கையை கரும்புக்கே துப்பிவிடும் நாடல்லவா.
"ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் பீனிக்ஸாய் புறப்பட்டு வந்து தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தார். "
அதுவும் against all odds and அவரின் இலக்கு பணமும் அல்ல. கிரிக்கெட் பயிற்சிக்கே Mercedez Benzil வந்தவர். புத்தகத்துக்கு ஆவலுடன் waiting..
அன்புடன்
மாசற்ற கொடி
நன்றி.
http://enmaganezhilan.blogspot.com/2009/03/blog-post_29.html
மாதவராஜ் அண்ணே, நமக்குள்ள எப்படி சிங்க் ஆகுது பார்த்தீங்களா?!
inainthukolkireen.
ஆக்ரோஷம் மிக்க அணித்தலைவர் என்றார் கங்குலியே தான்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இரண்டு அடி முன்னே வைத்து அடிப்பார் பாருங்கள் ஆறு...! அப்படியான ஆறு ஓட்டங்களை இனி கிரிக்கெட் உலகில் பார்க்க முடியாது என்று நம்புகிறேன்.
கடைசிக் காலத்தில் கங்குலி சரியாக நடாத்தப்படாதது, அதுவும் முழு போர்ம் இல் இருந்த போது அப்படி நடாத்தியது கண்டிக்கத்தக்கது.
ஆனால் கங்குலியின் ஆக்ரோஷமான அணித்தலைமையை பல வீரர்களுக்கு பிடிக்கவில்லை போலும், அதனால் தான் கங்குலிக்கு ஆதரவாக பெரியளவான கருத்துக்கள் வரவில்லை.
கண்ணன் அவர்கள் அந்த பதிவை எழுதியதற்கு முன்பு கங்குலி அப்படி சொன்னதற்கு காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தொடர்ச்சியாய் பெற்ற வெற்றிகள் அவற்றில் உள்ளூர் எத்தனை, வெளியூர் எத்தனை அaதிலும் குறிப்பாக ஆசியா கண்டத்தைத் தாண்டி வேறு வகை பிட்சுகளில் இந்தியாவின் வெற்றி புள்ளி விவரங்கள் ஆகியவை பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு போட்டிருந்திருக்கலாம்.
நியோ ஸ்போடர்ட்சில் இந்தியா விளையாடிய மேட்சுகளை தொடர்ந்து போட்டுக் கொணுதான் இருப்பார்கள். கொஞ்சம் பொறுப்பா அதை பார்த்தால் தேவலை. எப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் வைத்துக் கொண்டு விளையாடி ஜெயித்துக் கொடுத்திருக்கிறார் என்பது தெரிய வரும்.
தனது விளையாட்டுக் காலத்தின் பெரும்பாலான காலங்களில் சரியான கீப்பர் / பேட்ஸ்மேன் இல்லாமல் எத்தனை பேரை பரிட்சித்து பார்த்திருப்பார் என்று தெரியும். இப்போதைய அணியின் மிகப்பெரிய பலம் கீப்பர் ஒரு பேட்ஸ்மேனாய் இருப்பது.
அப்போதெல்லாம் 5 பேட்ஸ்மேன் 5 பவுலர் 1 கீப்பர் என்ற மெத்தட்தான். இப்போதைய இந்திய அணியின் இந்தளவிலான வளர்ச்சிக்கு சர்வ நிச்சயமாய் கங்குலியின் பங்கை மறக்க முடியாது.
அவரைப்போல் ஆளுமைத்திறன் வேறு யாருக்கும் வராது..
முதல் விக்கெட் இணையில் சச்சின் கங்குலி போல ஒரு இணையை பார்க்கவே முடியாது!
10000 ரன்களை கடந்த வீரன்..
ஒருநாள் செஞ்சுரியில் சச்சினுக்கு அடுத்தபடியில் சில காலம் இருந்தவர்.
அன்வரின் சாதனையை முறியடிக்க முயன்றவர்.
இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி வெற்றிகளை ஈட்டியவர்.
வாய்பேச்சினால் இந்திய அணியை குறைத்து பேசும் அந்நிய வீரர்களுக்கு தைரியமாக பதிலடி கொடுப்பவர்.
எனக்கு கங்குலியை மிக அதிகம் பிடிக்கும்!
அவருக்கு ஒரு பாராட்டு விழா கூட நடத்தாதது மிக வேதனையான விஷயமே!
உங்கள் பதிவு என்னைக் கவர்ந்தது!
நன்றி நண்பரே!
intha vikatan kavithai asathal!!!
Vetri Nadai Podungal
intha vikatan kavithai asathal!!!
Vetri Nadai Podungal
www.balavin.wordpress.com