சுவர்ணமால்யா

பாகவத மேளா போன்ற அழிந்து வரும் கலைகளை குறைந்தபட்சம் இணையத்திலாவது ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிளாக் எழுதவே துவங்கினேன். கொஞ்சம் பிரயத்தனப்பட்டு நான் எழுதிய ஓரே கட்டுரையும் அதுதான். சொற்ப நபர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டது என்றபோதும் பல்வேறு இணைய இதழ்களில் வெளியானதில் திருப்திபட்டுக்கொண்டேன்.

கடவுள் நோயுற்றிருந்த நாளொன்றில் நான் பாகவத மேளா பார்க்க மெலட்டூர் கிளம்பினேன். அன்றிரவு ஊரில் இருந்து ஒரு சாவுச் செய்தி வந்தது. என்னை ஒருதலையாய்க் காதலித்த ஒரு பெண் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். நான் எடுத்துச் சென்ற புகைப்படக் கருவிகள் பழுதாகி பெரும் பொருளாதார சேதத்தை விளைவித்தது. மிதமிஞ்சிய வெயிலில் எனக்குக் கடும் காய்ச்சல் கண்டது. இவையெல்லாவற்றையும் விட பெரிய சோதனை 'அவனை' சந்தித்ததுதான்.

அவன் ஒரு நாட்டியக் கலைஞன். கலாஷேத்திர மாணவன். கும்பகோணத்தில் நாட்டியப்பள்ளி ஒன்றினையும் நடத்தி வருகிறான். தமிழ் நாட்டுப் பிரபலங்கள் பலரது பிள்ளைகள் அவனிடம் நாட்டியம் பயில்கின்றன. வெகுஜன இதழ்களில் அவ்வப்போது அவனது பேட்டிகள் வெளியாவது உண்டு. புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் கும்பகோணம் வந்தால் அவன் வீட்டில்தான் விருந்து. பாகவத மேளாவிற்குப் பார்வையாளனாகத் தன் மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தான். வயது முப்பத்திரண்டு இருக்கலாம். அம்சமான மனைவி, அழகான குழந்தைகள்.

நான் பத்திரிகைக்காரன் எனத் தெரிந்ததும் அவனுக்குத் தெரிந்த பத்திரிகையாளகளின் பலரது பெயர்களைச் சொல்லி விசாரித்தான். எவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பின் பேச்சு பாகவத மேளாவின் சிறப்புகள், நடனக் கலைஞர்களுக்குள் இருக்கும் அரசியல், கலாஷேத்ராவின் சாதனைகள் என்று போனது. வார்த்தைக்கு வார்த்தை அபிநயம் பிடித்து பெண் போலவே பேசினான். நடனக் கலைஞன் என்பதால் அவனது உடல்மொழியும் மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். எனது விசிட்டிங் கார்டைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றான்.

அன்றிரவே துவங்கி விட்டது அவனது அழிச்சாட்டியம். ஹாய், பாய் என்று மெஸெஜ் அனுப்பத் துவங்கினான். நானும் நட்பினை நல்ல முறையில் பேணுகிறவன் போலிருக்கிறது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் நாளாக, நாளாக அவன் அனுப்பும் மெஸெஜூகளின் த்வனி அவனது நோக்கம் வேறு என்பதைப் புரிய வைத்துவிட்டது. ஆனாலும், சிந்தனைவாதிகளாயிற்றே நாம். ஹோமோசெக்ஸில் நாட்டம் உள்ளவன் என்பதற்காக ஒருவனை அவமானப்படுத்தி விட முடியுமா?! அவனை அழைத்து நீங்கள் இதுமாதிரியான தொந்தரவுகளை நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் அனுப்புகிற விஷயங்களில் எனக்கு ஆர்வம் இல்லை என மிகுந்த நயத்தக்க நாகரிகத்துடன் விளக்கினேன். கேட்டானில்லை.

அதற்குப் பிறகு அவனது மெஸெஜூகளும் நள்ளிரவு அழைப்புகளும் எல்லை மீறவே எனது தொலைபேசி எண்களை மாற்றினேன். ஆனாலும் எனது எண்களைக் கண்டுபிடிப்பது அவனுக்குச் சிரமமாக இல்லை. நிறுவனங்கள் மாறியபோதும் விடாமல் என்னைத் துரத்தினான். இப்போது நாகரிகம் எல்லாம் என்னை விட்டுப் போய் தரக்குறைவாகத் திட்டி பதில் அனுப்பத் துவங்கினேன். எனக்கு உச்ச கட்ட அதிர்ச்சியாக ஒரு மெஸெஜ் அனுப்பினான் "என் மனைவியைப் புணர விருப்பமா?!" என்று...

இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்பதனால் இதை உன் மனைவிக்குத் தெரியப்படுத்த போகிறேன் என்று போனில் கூப்பிட்டுச் சொன்னேன். இனிமேல் ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன் எனக் கதறிக் கதறி அழுதான். நம்பி மன்னித்தேன்.

இன்று ஒரு மெஸெஜ் அனுப்பி இருக்கிறான். "சுவர்ணமால்யா என் வீட்டில் மூன்று தினங்கள் தங்க இருக்கிறார். உங்களுக்கு விருப்பமெனில் ஏற்பாடு செய்யவா?!"

இதுமாதிரியான ஆட்கள் வீட்டிற்கு விருந்திற்கு வந்தால் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கிறது பாருங்கள். சுவர்ணமால்யாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்த விபரத்தைத் தெரியப்படுத்த இருக்கிறேன்.

Comments

ஒரு எட்டு வருடங்களுக்கு முன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஜெயா டீவியில் ஹரி-கிரி அசெம்பிளி நிகழ்ச்சியில் துபாயில் இருந்து வருடம் தோறும் வந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக பேட்டி அளித்தார். தான் நல்ல நிலமையில் இப்போது இருந்தும் விடாமல் நடத்தக் காரணம் என் முன்னோர்களின் வழி வந்தது அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் என்றும் சொன்னார். பெயர் தியாகராஜன் என்று நினைவு.

உங்கள் பதிவில் அக்கட்டுரை எங்கு உள்ளது என லிங்க் குடுத்தால் படிக்க ஏதுவாக இருக்கும்.
? said…
//இன்று ஒரு மெஸெஜ் அனுப்பி இருக்கிறான். "சுவர்ணமால்யா என் வீட்டில் மூன்று தினங்கள் தங்க இருக்கிறார். உங்களுக்கு விருப்பமெனில் ஏற்பாடு செய்யவா?!"//

எல்லாம் சரி, ஒரு விடயம் எனக்கு புரியவில்லை... இது இணையத்தில் பகிர்ந்து கொள்ளதக்க விடயம் எனக் கருதுகிறீர்களா?
Anonymous said…
அந்த‌ ஓ.பு ந‌ட‌ன‌க்க‌லைஞ‌ர் ச‌ரியான‌ வ‌டிகால் இல்லாத‌ கார‌ண‌த்தினால் அவ‌தியுறுகிறார் என்றே தோன்றுகிற‌து.. ஆனாலும் அவர் உங்க‌ளுக்குக் கொடுத்த‌ ம‌ன‌ உள‌ச்ச‌ல் ம‌ன்னிக்க‌ முடியாதது.. வெளிநாடுக‌ளில் இருப்ப‌து போன்ற‌ PLU அமைப்புக‌ள் இவ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் ந‌ல்ல‌ தீர்வாக‌வே இருக்கும். இத‌ன் துவ‌க்க‌ம் ச‌ட்ட‌ அங்கீகார‌மே...!
Suresh said…
அருமையான பதிவு நண்பரே ....
வணக்கம் நண்பரே.. நல்ல பதிவு. இதுபோன்ற மிக மோசமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை பனகல் பூங்காவில் மாலை நேரங்களில் (ஞாயிறு தவிர) ஓய்வெடுக்கச் செல்லும் இளைஞர்க்களை, இது போன்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் மொய்த்துக் கொள்வது வாடிக்கை. இதைப் பற்றி வாரைத்ழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளேன். ஒரு பயனுமில்லை.
pudugaithendral said…
மனதுக்கு வேதனையாக இருக்கிறது.
/சுவர்ணமால்யாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்த விபரத்தைத் தெரியப்படுத்த இருக்கிறேன்.//

(அமைதியா இருடா கார்க்கி. வாய் விட்டு மாட்டிக்காதா..) அண்னே எனக்....(டேய்.. சும்மா இருடா..)
ஜீவா said…
******எப்படி என்றாலும் வெளியிடமாட்டீர்கள் என்பது தெரியும்**********


செல்வேந்திரனுக்கு

மிக கடுமையாக எனது கண்டணத்தை பதிவு செய்து கொள்கிறேன், எவனோ ஒருவன் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்கிறான் என்றால் அதை அப்படியே பதிவு செய்வீர்களா, அதையும் தமிழிஷ் போன்ற அனைவரும் படிக்ககூடிய பகுதியில் வெளியீடுவிர்களா??
என்ன தான் விரும்புகிறீர்கள், உங்களின் தற்பெருமைகளை அனைவருக்கும் விளம்பர படுத்துவதா?? இல்லையெனில் வித்தியாசமாக இருப்பவன் என்பதை காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவே எதிர்மறையாகவே சிந்திக்கும் மனோபாவமா ???

உங்களைவிட "அவன்" என்பவன் மிகச்சிறந்தவனே, தனது ஆசைகளை வெளியிட்டு முயற்சித்து பார்த்தவன்.தவறு என்றாலும் கூட

குறிப்பு : இப்படிபட்ட குப்பைகளை பார்க்ககூடாது என்றுதான் உங்களுடனான follow up நிறுத்தினேன். ஆனாலும் தமிஷ்யில் பார்த்ததால் இப்பொழுது சொல்ல வேண்டியதாகிவிட்டது. எனக்கான நேரமும் வீணானது தெரியும்.இருந்தாலும் சமுக அக்கறைதான் . (நீங்கள் சொல்வது போல)
Anonymous said…
செல்வா,

தவறு செய்தவனின் பெயரைப் போடாமல், சுவர்ணமால்யாவின் பெயரை பகிங்கரமாக போட்டது எந்த விதத்தில் சரியென்று தெரியவில்லை?
நந்தா said…
ஒரு சின்ன சந்தேகம் செல்வேந்திரன். இது உண்மையிலேயே நடந்ததா?

அல்லது பதிவில் ஏதேனும் வித்தியாசமாய் முயற்சி செய்து பார்த்தீர்களா???
Joe said…
நம்பர் மாத்துனாலும் தொடர்ந்து கண்டுபுடிச்சு பேசுனாருங்கிரதேல்லாம் நம்ப முடியலையே? அம்புட்டு அழகா செல்வா நீயி?

சிந்தனைவாதி என்று பெருமையடித்துக்கொள்ளும் நண்பர், அந்த நாட்டியக்காரரை அவன், இவன் என்று விளித்தது ஏனோ?
Thamira said…
நான்கு பதிவுகளையுமே படிச்சாச்சு செல்வா.. விதவிதமான கருத்துகள், சிந்தனைகள்.. இன்னும் நிறைய பகிருங்கள் உங்கள் எண்ணங்களை.. காத்திருக்கிறேன்.
Karthikeyan G said…
நீங்கள் விரைவில் இத்தகைய மனஉளைச்சல் தரும் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நலம் பெற வேண்டும்.

This type of activities of few HOMOs may become reason for the 'HOMOPPHOBIA' among other part of public.
Karthikeyan G said…
நீங்கள் விரைவில் இத்தகைய மனஉளைச்சல் தரும் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நலம் பெற வேண்டும்.

This type of activities of few HOMOs may become reason for the 'HOMOPPHOBIA' among other part of public.
selventhiran said…
அன்பின் அப்துல்லா அவரது பெயர் மெலட்டூர் நடராஜன். அவரது பேச்சைக் கேட்டபின்னர் தான் நானும் மெலட்டூர் செல்லும் ஆர்வம் கொண்டேன். லிங்க் இணைத்துள்ளேன். http://selventhiran.blogspot.com/2007/05/blog-post_12.html

நந்தவனத்தான் இது பகிர்ந்து கொள்ளக்கூடியதுதான்.

அணானி,அருமையான கருத்தை ஏன் அணானியாய்ச் சொல்கிறீர்கள்?!

நன்றி சுரேஷ்.

ஆம் பிரேம். பலருக்கும் இது மாதிரி பல விதமான அனுபவங்கள். பின்னூட்டமிட விரும்பாத பல நண்பர்கள் இமெயிலில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைத் தெரிவித்திருந்தார்கள்.

புதுகை தென்றல் வீசியதற்கு நன்றி!

கார்க்கி என்றாலே குசும்புதானே...?!

ஜீவா உங்களது கருத்து பற்றிய எனது அபிப்ராயத்தை தனிப்பதிவிடுகிறேன். அது என்ன "எப்படியும் என்றாலும் வெளியிடமாட்டீர்கள் என்பது தெரியும்.." என்றொரு துவக்கத்துடன் எழுதி இருக்கிறீர்கள். என் ஆண்மையிலும், நேர்மையிலும் சந்தேகம் வேண்டாம்.

வெயிலான் உங்கள் கருத்து சரி. முதலில் ஒரு தலைப்பு தீர்மானித்து வைத்திருந்தேன். அது அவ்வளவு கவுரவமாக இல்லையென்று மாற்றினேன். கொஞ்சம் கவனம் கொண்டிருந்திருக்க வேண்டும்.

நந்தா, உண்மையில் நடந்தது இல்லை. நடந்து கொண்டிருக்கிறது.

ஜோ, எனது எண்களைக் கண்டுபிடிப்பதுதான் தமிழ்நாட்டின் மிகச்சுலபமான பணி. தமிழ் அச்சு ஊடகங்கள் அனைவரும் அறிந்த பெயர். அவன், இவன் என்று எழுதியதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் எனக்குக் கோபமில்லை. ஆனால், விருப்பமில்லாதவரை வருடக்கணக்காகத் துரத்தும்போது வருகிற எரிச்சல் இப்படித்தான் வெளிப்படும்.

தாமிரா அண்ணா, நேரமும் பொறுமையும் எப்படி ஒரு சேர வாய்த்திருக்கிறது உங்களுக்கு?!

கார்த்திக்கேயன் தகவலுக்கு நன்றி.
நந்தா said…
பின்னூட்டங்களிலிருந்து இதை ஒரு வித்தியாசமான முயற்சியாய் அல்லாமல், அனுபவ பகிர்வாய்தான் நீங்கள் இட்டதாய் நான் கருதுகிறேன்.

நான் கலாச்சாரக் காவலன் கிடையாது. இருப்பினும் சுவர்ணமால்யாவை வைத்து இங்கே எழுதப்பட்ட பதிவு மிகக் கண்டிப்பாய் ஒரு முற்போக்குத் தனம் கிடையாது. வெகு அப்பட்டமான பாமரத்தனம்.

பிரபலங்களை மிக முக்கியமாய் நடிகைகளை தன் சந்தோசத்திற்காய் "தெரியுமா மாப்ளை அவளுக்கு இவ்ளோவ் ரேட்டாம்டா" என்ற ரீதியில் பேசித் தன் சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் மகா அப்பட்டமான பாமரத்தனமாய்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது.

உங்களிடமிருந்து இந்த பாமரத் தனத்தை எதிர்பார்க்க வில்லை.

http://blog.nandhaonline.com
கண்ணியமாக எழுதி இருக்கிறீர்கள். அந்த நபர் கண்டிக்கப்பட வேண்டியவரே.
நானும் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள் பதிவை, இதுவே நான் உங்கள் பதிவிற்கு வரும் கடைசி வருகையை கூட இருக்கலாம்.

யாரோ ஒரு ஓரினச்சேர்க்கை காரர் நட்பு பற்றி எழுத நீங்கள் எந்த உரிமையில் சொர்ணமால்யா (பிரபல) நடிகை பெயரை பயன் படுத்தலாம்.

சிறு விளம்பரம், செயற்கை புகழ் விரும்பி இப்படி தலைப்பு வைக்கும் உங்களின் சிறு பிள்ளை தனத்தை என்ன என்று சொல்வது.

மிகுந்த கண்டனங்களுடன்

குப்பன்_யாஹூ
King... said…
தலைப்பை மாற்றியிருக்கலாம் (அவரது பெயரை பதிவில் எழுதாமல் விட்டிருக்கலாம்) இருக்கவே இருக்கிறது லேபிள் புனைவு என்று ஒன்று, அதுதான் தேவையற்ற கேள்விகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் இலகுவான விடயம், but அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்கள்!
Anonymous said…
///
இப்படிபட்ட குப்பைகளை பார்க்ககூடாது என்றுதான் உங்களுடனான follow up நிறுத்தினேன். ஆனாலும் தமிஷ்யில் பார்த்ததால் இப்பொழுது சொல்ல வேண்டியதாகிவிட்டது. எனக்கான நேரமும் வீணானது தெரியும்.இருந்தாலும் சமுக அக்கறைதான் . (நீங்கள் சொல்வது போல)
///

இதை எழுதுனவர் அவர் ப்ளாகுல என்ன எழுதுறார்னு போய்ப் பாத்தா, கவிதைங்கற பேர்ல மொத்தமும் வலை-வழிச்-சுயஇன்பம். இவரெல்லாம் கலாச்சாரக் காவலர் அவதாரம் எடுப்பதைக் கண்டால் ஆசனவாய் வழியாகத்தான் சிரிக்க வருகிறது.

சொர்ணமால்யாவுக்குக் காட்டுகிற அக்கறையை ஏன் இவரைப் போன்றவர்கள் நமிதாவுக்கும் ஷகிலாவுக்கும் காட்டுவதில்லை? நமிதாவையும் ஷகிலாவையும் அரசுப் பேருந்து போல பப்ளிக் ப்ராப்பர்டியாக எண்ணுகிற பொதுப் புத்தி உள்ள இவர்களால் எப்படி இப்படிக் கேட்க முடிகிறது?

நமிதாவுடன் ஒரு ராத்திரி தங்கலாம் என்று சொல்லி ஒரு தொழிலதிபரிடம் (புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆகிடுறான், கெரகம்டா) மூண்று பவுன் நகையையும் 15,000 பணத்தையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இதை நமிதாவின் பெயரோடுதான் நான் படித்த வாரம் இருமுறை வரும் புலணாய்வு ஏடு எழுதியிருந்தது.

நமிதாவை வைத்து ஒருவன் மோசடி செய்தால் அது செய்தி. அது என்ன வடிவத்தில் வேண்டுமானால் வரலாம். ஆனால் செல்வேந்திரன் தனக்கு நிகழ்ந்த ஹேரஸ்மெண்ட்டைக் குறித்து எழுதினால் வரிந்து கட்டிக்கொண்டு கண்டிப்பது... நல்லா இருங்கடே... நல்லா இருங்க...

ராலசீமா மஹேந்திர ரெட்டி
rmreddy_1973@gmail.com
(கெரகம், ஒரு ப்ளாகு தொடங்கனும். எப்படீன்னு தான் தெரியல)
செல்வேந்திரன்!

எனக்கும் இந்தப் பதிவு பிடிக்கவில்லை.

அந்த நாயை செருப்பால் கூட அடித்திருக்கலாம்.

அந்த நடிகையின் பேரை அவன் அவமானப்படுத்தியிருக்கலாம். நீங்களுமா?

கொஞ்சம் நிதானித்திருக்க வேண்டும். உங்களின் எழுத்துக்களில் ஆர்வமுள்ளவனாகவே இதை எழுதுகிறேன்.
ஜீவா said…
குறிப்பு : இப்படிபட்ட குப்பைகளை பார்க்ககூடாது என்றுதான் உங்களுடனான follow up நிறுத்தினேன்///

மன்னித்து கொள்ளுங்கள் செல்வா, ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தைகளை தவறுதலாக பயன்படுத்திவிட்டேன், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் , மிக வருத்தத்துடன்
ஜீவா said…
///முகம் தெரியாத Anonymous said...

. இவரெல்லாம் கலாச்சாரக் காவலர் அவதாரம் ///

அப்படின்னா என்னங்கண்ணா ????

ராலசீமா மஹேந்திர ரெட்டி
rmreddy_1973@gmail.com
(கெரகம், ஒரு ப்ளாகு தொடங்கனும். எப்படீன்னு தான் தெரியல)///

அய்யா திட்ட தெரியுது ,ஆனா பிளாக் தொடங்க தெரியலியா---??
நல்லா இருக்குதுங்க உங்க காமெடி படம் :)
என்ன நடக்கிறது..?!
Thamira said…
மாதவராஜ் உட்பட பலரும் அதையே குறிப்பிடுவதால் இதை எழுதத்தோன்றுகிறது. செல்வாவின் ஏன் அமைதி காக்கிறார் என்று விளங்கவில்லை.

பதிவில் 'சுவர்ணமால்யா'வின் பெயரை களங்கப்படுத்துவது அந்த குறிப்பிட்ட நபரேயன்றி செல்வா அல்ல. மேலும் அந்த நபர் இவரை கவர்வதற்காக கூறிய பொய்யாகவும் இருக்கலாம், அதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதைப்போலத்தான் இறுதியில் 'சுவர்ணமால்யா'வுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இதை தெரியப்படுத்த‌ இருப்பதாக செல்வா கூறுகிறார்.

இருப்பினும் பெய‌ருக்குப் ப‌திலாக‌ 'ஒரு ந‌டிகை' என்று குறிப்பிட்டிருந்தாலும் அவ‌ர் சொல்ல‌ நினைத்த‌தை சொல்லியிருக்க‌முடியும் என்ப‌தை ஒப்புக்கொள்கிறேன். செல்வாவுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ன் என்ற‌ முறையில் இந்த‌ வார்த்தையை சொல்ல‌லாம் என‌ நினைக்கிறேன். ப‌ப்ளிஸிடிக்கே ஆசைப்ப‌டாத, வாழ்க்கைக்கான நேர்மையை ஓரளவு புரிந்தவரும், அதன் படி வாழ முயல்பவருமான அவ‌ரை நோக்கி சீஃப் ப‌ப்ளிஸிடிக்காக‌ இதைச்செய்தார் என்று கூறுவது நிச்ச‌ய‌ம் பொருந்தாத‌ தாக்குத‌லே..
SurveySan said…
ஹ்ம். எல்லாம் ஓகே, ஆனா பலரும் சொன்ன மாதிரி, நடிகை பேரை இப்படி தலைப்பா போட்டிருக்க வேண்டாம்.

பொறுப்பில்லாத எழுத்து :)
Anonymous said…
// (அமைதியா இருடா கார்க்கி. வாய் விட்டு மாட்டிக்காதா..) அண்னே எனக்....(டேய்.. சும்மா இருடா..) //

கார்க்கி நீங்க தொழிலதிபரா? இல்லையே? அப்புறம் எப்படி உங்களுக்கு ...., சரி விடுங்க.
என்னங்க இது, இதுக்கு முன்னாடி யாருமே சொர்ணமால்யாவோ இல்லாவிட்டால் மற்ற நடிகைகள் பெயரையோ பயன்படுத்தியதில்லையா? (இது போன்ற விஷயங்களுக்குக்கூட).

ஆஹ்.. ஒரு நடிகையின் பெயரை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்..
Boston Bala said…
புனைவு என்று டேக்/கேடகிரி கொடுத்திருந்தால் பொலிடிகலி கரக்டா பாராட்டி இருப்போம்ல!

இப்ப பாருங்க கண்டிக்க வேன்டியதாப் போச்சு
kishore said…
அவர் தனக்கு நேர்ந்ததை எழுதிஇருக்கிறார் ... இதை அவர் சுய விளம்பரத்திற்காக செய்தார் என்பது ஒப்புகொள்ள முடியாது... அப்படி அவர் செய்து இருந்தாலும் ஒரு குண்டுசி விளம்பரத்துக்கு கூட ஒரு நடிகை தேவபடும் போது இவர் பயன்படுத்தியது எனக்கு தப்பா தெரியுலங்க.. இவர் மேல் பாயும் நல்ல உள்ளங்கள் தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசி நாளிதழ்கள், வார இதழ்கள் , மாத இதழ்கள் எல்லாமே நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை செய்தி ஆக்கியும் , புகை படமாகவும் வெளி இட்டு சுய லாபம் தேடி கொள்வது உங்களுக்கு தெரியாததா? உங்கள் கோபம் ஏன் அவர்கள் மேல் இல்லை... இதே நடிகை பற்றி சில நாட்களுக்கு முன் செய்தி வந்து பத்திரிகைகளும் அதை முதன்மை படுத்தி வெளிiட்டு தங்கள் சுய லாபத்தை தேடிகொள்ளவில்லையா? அது சரி... எந்த நடிகைய பத்தி அந்தரங்க செய்து வரும்னு காத்திருந்து வாங்குறதே நாம தான..