வடக்கு வாசல்

திலகவதிக்கு ஒருமுறை டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். 'டெல்லி அறிமுகம் இல்லை. யாராவது தெரியுமா?!' என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். டெல்லியில் அன்றும் இன்றும் எனக்குத் தெரிந்த ஓரே நபர் 'பெண்ணேஸ்வரன்'தான். அவரும் இணையப் பக்கங்களின் வழியேதான் அறிமுகம். ஒரிரு விமர்சனக் கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தியவர் என்பதைத் தாண்டி பழக்கம் இல்லை.

மிகுந்த தயக்கத்திற்குப் பின் அவருக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பி உதவமுடியுமா என்று கேட்டிருந்தேன். நான் குறிப்பிட்டிருந்த தேதிகளில் மீரட்டில் அவருக்கு நாடக அரங்கேற்றமும், ஆல் இண்டியா ரேடியோவிற்காக ஒரு ஒலிப்பதிவும் இருக்கிறது என்பதால் திலகவதியைச் சந்திக்க முடியாது. ஆனாலும் குற்றமில்லை எனது எண்களுக்குத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று பதில் கடிதம் வந்தது. எந்த நம்பிக்கையும் இல்லாமல் திலகவதியிடம் எண்களைக் கொடுத்தேன். அவளும் டெல்லிக்குக் கிளம்பினாள்.

டெல்லி ரயில் நிலையத்தில் அவளை ரிசீவ் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். நவீன வசதிகள் கொண்ட அறையில் தங்கவைக்கப் பட்டாள். உயர்ந்த உணவு வகைகள் வழங்கப்பட்டது. டெல்லிக்கு வந்த வேலை முடியும் வரை ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலை முடிந்ததும் அவளுக்கு டெல்லி சுற்றிக்காண்பிக்கப்பட்டது. ராஜ உபச்சாரம். பைசா செலவில்லாமல் மிகுந்த பத்திரமாக அவள் சென்னைக்குத் திரும்பினாள். இதுதான் பெண்ணேஸ்வரன் எனும் மனிதனின் விருந்தோம்பல்.

தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கு டெல்லி என்றதும் பெண்ணேஸ்வரன் முகம்தான் நினைவுக்கு வரும். சாருவின் கோணல் பக்கங்களிலும், ஜெயமோகனின் இணைய தளத்திலும் இவர் பற்றிய குறிப்புகளைப் படித்திருக்கிறேன். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடகக் கலைஞர் எனப் பல முகங்கள் அவருக்கு. அவரது வடக்குவாசல் இதழை இரண்டாண்டுகாலமாய் சந்தா ஏதும் செலுத்தாமல் படித்து வருகிறேன் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு உண்டு. ய.சு. ராஜன் என்பவரின் கட்டுரையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பிரமாதமான இலக்கிய இதழ். மிகுந்த பொருளாதார இழப்புகளுக்கு இடையில் நான்காண்டுகளாகப் பத்திரிகையைப் பிடிவாதமாக நடத்தி வருகிறார். வடக்குவாசலின் குறிப்பிடத் தக்க அம்சங்களுள் ஒன்று அதன் அட்டை. அதில் இடம் பெறும் புகைப்படங்களும் வடிவமைப்பும் தமிழின் எல்லா இலக்கிய இதழ்களையும் விஞ்சும். நல்ல எழுத்துக்களைத் தேடிப்படிக்கும் என் இணைய நண்பர்களுக்கு அவரது வடக்குவாசலை சிபாரிசு செய்கிறேன்.

Comments

செல்வா, சிலருக்கு இயல்பாவே 'பெண்ணேஸ்வரன்' மாதிரி பிரதி பலன் எதிர்பார்க்காம உதவி பண்ற குணம் இருக்கும். முன்னாடி கிராமத்துல பொறந்து வளர்ந்தவங்களுக்கு அந்த குணம் இயல்பாவே இருக்கும். இப்போ நகரமயமாகரதுனாலே அங்கும் அந்த குணம் குறைஞ்சுகிட்டே வருது. நிறைய ரயில் பயணம் போறவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். நீண்ட தூர ரயில் பயணங்கள்ள நாம சந்திக்கிற கிராமத்து காரங்களோட பேச்சுக்கும்/உதவற குணத்துக்கும் போலியா வேஷம் போடற நகரத்துக்கரங்களோட பேச்சுக்கும்/உதவற குணத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
செல்வா, சிலருக்கு இயல்பாவே 'பெண்ணேஸ்வரன்' மாதிரி பிரதி பலன் எதிர்பார்க்காம உதவி பண்ற குணம் இருக்கும். முன்னாடி கிராமத்துல பொறந்து வளர்ந்தவங்களுக்கு அந்த குணம் இயல்பாவே இருக்கும். இப்போ நகரமயமாகரதுனாலே அங்கும் அந்த குணம் குறைஞ்சுகிட்டே வருது. நிறைய ரயில் பயணம் போறவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். நீண்ட தூர ரயில் பயணங்கள்ள நாம சந்திக்கிற கிராமத்து காரங்களோட பேச்சுக்கும் போலியா வேஷம் போடற நகரத்துக்கரங்களோட பேச்சுக்கும்/உதவற குணத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
கிரி said…
//பெண்ணேஸ்வரன்//

என்னங்க பெயர் வித்யாசமா இருக்கு.... புனைப்பெயரா!
ஒற்றுப் பிழை ஒன்றே ஒன்று!

”உணவு வகைகள் வழங்கப் பட்டது”
அல்ல. ”வழங்கப் பட்டன.”
பெண்ணேஸ்வரன் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறது. அறிமுகத்திற்கு நன்றி செல்வா!
வடக்கு வாசல் இதழை நானும் ஓசியில் படித்திருக்கிறேன்.

நல்ல நேர்த்தியாக வடிமைப்பு கொண்ட இதழ் .

வடக்கு வாசல் புதிதாக இணைய தளமும் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். அந்த முகவரி அறிந்தால் கொடுக்கமுடியுமா நண்பா
Anonymous said…
சனிமூலை!

நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:

சனிமூலை,

வாசகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!

http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/

சினிமா விரும்பி

http://cinemavirumbi.tamilblogs.com
டில்லின்னு ஒரு நாடு இருக்குற விசயமே இப்ப நீங்க சொல்லி தான் தெரியும்.
Thamira said…
நன்றி செல்வா.. இவர் குறித்து ஏற்கனவே கேள்வியுற்றிருக்கிறேன்.
வடக்கு வாசல் இதழ் துவக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.

அன்றிலிருந்து இன்றுவரை பல முன்னேற்றம் இதழில் தென்படுகிறது(முகப்பு அட்டை உட்பட)

பெண்ணேஸ்வரன் மிக இனிமையானவர்.

அவரைப் பற்றிய கட்டுரைக்கு நன்றி செல்வேந்திரன்.
பரத் said…
அறிமுகத்திற்கு நன்றி !!
எங்கயோ பார்த்த பெயரா இருக்கேன்னு நினைச்சேன்."வடக்கு வாசலை" ஞாபகப் படுத்திய பதிவுக்கு நன்றி செல்வேந்திரன் .
Anonymous said…
உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் சொற் பிழைகள் பிரச்சினைதான் மலிவாக இருக்கும்.
இப்போது "சுய தம்பட்டமும்" (யாருக்கும் தெரியாதது போல ) வெகு மலிவாக கிடைக்கிறது. போதுமடா சாமி!!!

நண்பரின் கணினி என்பதால், நாளை பார்க்கலாம்.,
ஆமாம் செல்வா. இப்போது பரவாயில்லை. எப்படி இருக்கிங்க?
செல்வா...எப்படியிருக்கீங்க... நா.இரமேஷ் குமார். உங்களது தொலைபேசி எண் என்னிடம் இல்லை...நினைவில் இருக்கிறேனா?
ICANAVENUE said…
அறிமுகத்திற்கு நன்றி! மாறுபட்ட படைப்பாக உள்ளது வடக்கு வாசல்
selventhiran said…
வணக்கம் அன்பின் ரமேஷ்குமார், உங்களை எப்படி மறக்க முடியும்? எக்மோர் வாசலில் தங்களை தம்பதி சமேதரராக பார்த்தது இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது. அப்புறம் அன்பொழுக நீங்கள் வாங்கிக்கொடுத்த காபியும்.

இன்றும் திலகவதியுடன் பேசும்போது கீரை ஸ்பெஷலிஸ்ட் எப்படி இருக்கிறார்? என்று கேட்கத் தவறுவதில்லை.

எனது எண்கள் 9003931234

உங்களது எண்களைப் பிடிப்பது எனக்கு சுலபம். விரைவில் அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
Unknown said…
பெண்ணேஸ்வரன் பத்தி நீங்க எல்லாரும் சொல்வது சரிதான். இப்படி தமிழில் தட்டச்சு செய்ய வழிவகை இல்லாத போன நுற்றாண்டில் ஒருநாள் நண்பர் சுரேஷ் (பெண்ணேஸ்வரன்இன் மனசாட்சி ) வழியாக சந்திக்க நேர்ந்தது. ௰ (10) பக்கத்தையும் தானே அடித்து கொடுத்தார்.....அதில் தொடங்கி.......எங்கள் கல்யாண பத்திரிகையை தமிழில் வடிவமைத்து கொடுத்தது வரை நிறைய நிகழ்வுகள். . (வடக்கு வாசல் பதிப்பகத்தின் முதல் வெளி வேலை எங்கள் அழைப்பிதல் தான். வடக்கு வாசலும் உங்கள் வாழ்கையும் வளரனும்-ன்னு வாழ்த்திக் கொடுத்தார்.........). அவரை நினைவு படுத்தியதிற்கு மிக நன்றி......இதோ தொலைபேசியை எடுத்தாச்சு........
Unknown said…
அப்புறம் பெண்ணேஸ்வரன் -ங்கிறது தருமபுரியில் இருக்கும் ஒரு சாமி பெயர்ன்னு நண்பர் சுரேஷ் சொன்னதாக நினைவு.....சரியாக தெரிய வில்லை.
செல்வா, வணக்கம்.
வடக்கு வாசல் ‘பென்னேஸ்வரன்‘ என்ற ‘கேபி‘ பற்றிய பதிவிற்கு நன்றி. பென்னேஸ்வரன் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் முக்கியப் பணியில் இருந்தவர். நண்பர்களிடையே வயது வித்தியாசமின்றி பழகக்கூடியவர். யதார்த்தா நாடகக்குழுவின் வாயிலாக அவரது நாடக முயற்சிகள் பரவலாக அறியப்பட்டவை. கிருஷ்ணகிரி அவரது சொந்த ஊர். அவரது நட்பு பாராட்டும் குணமும், விருந்தோம்பலும் டெல்லிக்கு செல்லும் இலக்கிய வட்டாரங்கள் அனைவரும் அறிந்ததுதான்.

- பொன். வாசுதேவன்