சரிவுப் பாதையில் புத்தக விற்பனை


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனையும் வாசிப்பு பழக்கமும் அதிகரித்துவருகிறது போன்ற கருத்தாக்கங்கள் நிலவி வருகிறது. அது குறித்து அடியேன் மேற்கொண்ட கள ஆய்வின் முடிவுகள் முற்றிலும் அதிர்ச்சிகரமானது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை அதிகரித்து வருவது புத்தகத் திருவிழாக்களில் மட்டும்தானே அல்லாது ஆண்டு முழுவதும் புத்தக விற்பனை செய்து வரும் நூல் நிலையங்களில் அல்ல. அதற்கான முதல் காரணம் புத்தகங்களின் விலை. புத்தகச் சந்தைகளில் மட்டுமே பத்து முதல் பதினைந்து சதவீத தள்ளுபடியில் வாங்க முடியும் என்பதற்காகவே வருடம் முழுவதும் காத்திருந்து புத்தகம் வாங்கும் பழக்கம் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. விற்பனையாகிற புத்தகங்களிலும் பெரும்பாலும் சுயமுன்னேற்றப் புத்தகங்களும், ஆறே வாரத்தில் அம்ஜத்கான் ஆவது எப்படி போன்ற வஸ்துக்களுமே.

இரண்டாவது காரணம் விகடன், கிழக்கு போன்ற ஜாம்பவான்கள் உள்ளடக்கம் மற்றும் மார்க்கெட் தேவையைக் கருத்தில் கொள்ளாது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்ப்பது போல எண்ணிக்கைக்காகப் புத்தகங்களை வெளீயிடுவதும் அவை தரத்தில் மிகவும் சுமாராக இருப்பதும் ஒரு காரணமாகத் தெரிகிறது. இரண்டு பிரசுரங்களும் காட்டும் அசுரவேகத்தில் 'மற்றுமொரு மணிமேகலை'யாகிவிடும் அபாயம் தென்படுகிறது.

முன்னெப்போதும் இருந்ததைவிட கடந்த ஆறு மாதங்களில் புத்தக விற்பனை பெருமளவு சரிந்திருக்கிறது என்பது கொசுறு தகவல்.

Comments

உண்மைதான் சகா.. புத்தக கண்காட்சியிலே விற்பனை இந்த வருடம் 20% குறைந்திருக்கிறதாம். ஏதாவது செய்ய வேண்டும். நிறைய இளைஞர்கள் அவர்கள் விரும்பும்படியான புத்தகங்கள் தமிழில் குறைவு என்கிறார்கள்.
அதிலை said…
வாசிப்பு ஆங்கிலத்துக்கு மாறி விற்பனையும் மொழி மாறி விட்டதாக படுகிறது!
//தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை அதிகரித்து வருவது புத்தகத் திருவிழாக்களில் மட்டும்தானே அல்லாது ஆண்டு முழுவதும் புத்தக விற்பனை செய்து வரும் நூல் நிலையங்களில் அல்ல//
இது உணமையாக இருக்களாம்
இந்த வருடம் புத்தக்காட்சியில் புத்தக விற்பனை குறைந்ததற்கு சூழ்நிலைதான் மக்களுக்க வேறு பிரச்சனைகளும் தின்டாட்டங்களும் இருந்தன
Karthik said…
//நிறைய இளைஞர்கள் அவர்கள் விரும்பும்படியான புத்தகங்கள் தமிழில் குறைவு என்கிறார்கள்.

வழிமொழிகிறேன்...! :)
selventhiran said…
நண்பா கார்க்கி, தமிழில் துறைசார் நூல்கள் என்ற சமாச்சாரமே இல்லை. இன்றும் தொழில் முனைவோர்க்கு வழிகாட்டும்படியா 'ஊறுகாய் தயாரிப்பது எப்படி' வகையரா புத்தகங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.

அதிலை, ஆங்கில புத்தகங்களின் விற்பனை நிலவரம் குறித்த தரவுகள் இல்லை. விசாரிக்கலாம்.

ஆ. முத்துராமலிங்கம் நீங்கள் சொல்வது ஒரு வலுவான காரணம்தான்.

வாங்க முரளிகண்ணன்.

கார்த்திக் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிற பத்து புத்தகங்களைப் பட்டியலிட்டு ஒரு பதிவு போடுங்கள். சுவாரஸ்யமாய் இருக்கும்.

Popular Posts