செம்புலம்

செம்புலம் என்ற சிற்றிதழை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஓரெயொரு கையெழுத்துப் பிரதியோடு முதல் இதழிலேயே நின்று போய்விட்ட அருமையான சிற்றிதழ். அதன் ஆசிரியர் செல்வேந்திரனுக்கு அப்போது வயித்துக்குகே வழி இல்லாததால் கொள்முதலை விட விற்றுமுதலே நல்லது என வியாபாரி ஆகி விட்டார்.

இன்று என் பழைய பனை ஓலைகளைக் குடைந்து கொண்டிருந்தபோது அகஸ்மாஸ்தாய் அகப்பட்டுக் கொண்டது செம்புலம். அதன் உள்ளடக்கம் இன்றெனக்கு வியப்பைத் தருகிறது. பதினெழு வயதில் அதன் தரத்திற்கான என் மெனக்கேடல் எவ்வித கவனிப்பும் இல்லாமல் போய்விட்டதில் மெல்லிய வருத்தம் இருக்கிறது.

எடிட்டோரில்
சொல்வெட்டுக்கள்
வனம்புகுதல் - கவிதைத் தொகுதி - இலக்கிய விமர்சனம்
சாத்தான்குளத்தில் காண்டாமிருகம் - தொல்லியல் கட்டுரை
'ஜெயமோகனுக்கு வாசிக்கத் தெரியவில்லை' - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் நேர்காணல்
புகையுது - புகைப்பிடித்தலுக்கு எதிரான அபாய சங்கு ஊதும் சமூகக் கட்டுரை
பெண்ணுடல் - சில மருத்துவ உண்மைகள்
இணையதளங்கள்

மேற்படி செம்புலத்தின் ஜெராக்ஸ் பிரதிகள் வேண்டுவோர் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்.

Comments

எனக்கும்.. ஸ்கேன் செஞ்சு அனுப்பி வைங்க ப்ளீஸ்
selventhiran said…
ஸ்கேன் வடிவமே தொந்தரவில்லாதது. அனைத்தையும் படிக்க இயலாவிட்டாலும் பொன்னீலன் நேர்காணல் அருமையாக இருக்கும். விரைவில் ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்.
Karthikeyan G said…
Free-na எனக் ஒன்னு.
:)
செல்வா, ‘செம்புலம்‘ பிரதி என்னிடம் உள்ளது. வெளிவந்த போதோ வாங்கிப் படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் தேடியெடுத்து படித்து பின்னர் எழுதுகிறேன்.

- பொன். வாசுதேவன், மதுராந்தகம்.
na.jothi said…
ஸ்கேன் பண்ணி பதிவா போட்டா
வேனும்றவங்க pdf கோப்பா மாத்திக்கலாம்
என் மெனக்கேடல் எவ்வித கவனிப்பும் இல்லாமல் போய்விட்டதில் மெல்லிய வருத்தம் இருக்கிறது.

சில மெனக்கெடல்கள் கவனிக்கப் படாமல் போய் விட்டாலும், அதனால் கிடைக்க கூடிய அனுபவம் பிறகு செய்யும் வேலைகளில் உபயோகமாகும்.

(இதை நான் பல முறை என் வேலைகளில் அனுபவித்துள்ளேன்.)
Unknown said…
எனக்கும் அனுப்ப முடியுமா...
kanagagopi@gmail.com
//புன்னகை said...
ஸ்கேன் பண்ணி பதிவா போட்டா
வேனும்றவங்க pdf கோப்பா மாத்திக்கலாம்
//

அதானே....!

ஸ்கேன் கூட செய்ய வேண்டாம் பதிவாக்கிவிடுங்களேன் :)
Anonymous said…
please upload the pdf file
Unknown said…
எனக்கும் வேணும்யா. vijayagiri2882008@gmail.com. முடிஞ்சா தொடர்ந்து இணைய இதழா நடத்தலாம். எழுதுற வேலைய மட்டும் பாருங்க. வடிவமைக்கிறதெல்லாம் நான் பாத்துக்குறேன்.