சரவல் கோட்டம்

தீராநதியில் தாம் தொடர்ந்து எழுதி வரும் பத்தியில் 'எம். ரிஷான் ஷெரீப் நல்ல கவிஞர்' என்று குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். எழுத்தியக்கத்தில் தம்மை முன்னிறுத்திக்கொள்ளத் துடிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு முத்துலிங்கத்தைப் போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் பாராட்டுக்கள் மிக முக்கியம். இந்தப் பாராட்டின் கனத்தை உணர்ந்து ரிஷான் இன்னும் இன்னும் உழைப்பார் என்று நம்புவோமாக!

***

டெல்லி சென்ற தம் குழுவின் போராட்டத்திற்கு அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றோர் ஆதரவு அளிக்கவில்லை என்று ஜூவிக்கு அளித்த பேட்டியில் வருத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். லீனா மணிமேகலை. மிகுந்த எரிச்சல் அளிக்கும் இந்தப் பேட்டியின் எதிர்வினையாகப் பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறேன். நாளை பதிவிடுகிறேன்.

***

அதே டெல்லி போராட்டத்தின் போது மாலதி மைத்ரியை ரமேஷோ அல்லது ப்ரேமோ ரோட்டில் போட்டு அடித்தார்கள் என்ற பொருள்படும்படியான கிசுகிசு ஒன்றினை நக்கீரனில் படித்தேன். இப்போதெல்லாம் இலக்கியக் கிசுகிசுக்களுக்கும் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிப்பது மெலிதான மகிழ்வைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் இலக்கியவாதிகளுக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்து வருவதின் அறிகுறிகள் இவை.

***

'காவல் கோட்டம்' நாவலை 'ஆயிரம் பக்க அபத்தம்' என்று பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். அவர் இத்தனை ஆத்திரப்பட்டு எதையுமே எழுதியதில்லை. முற்போக்கு எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் கொண்டாடும் இந்நாவலை சுளுக்கு எடுத்திருக்கிறார் எஸ்ரா. தீவிர வரலாற்று ஆய்வும் களப்பணியும் கொண்ட எஸ்ராவிடம் சு.வெங்கடேசனின் பாச்சா பலிக்கவில்லை போலிருக்கிறது.

விஜயாவில் மேய்ந்துகொண்டிருந்தபோது காவல் கோட்டத்தினை எடுத்துப் புரட்டினேன். இரண்டுப் பக்கங்களுக்கு மேல் ' மு டி ய ல....' ஆனால் தொடர்ந்த சர்ச்சைகளின் மூலம் 'காவல் கோட்டம்' பலரது கவனத்தை ஈர்த்திருப்பதை நேற்றும் இன்றும் விற்பனையான நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணிக்க முடிகிறது.

Comments

இவை அனைத்தும் தீராநதியில் வந்த கட்டுரைகளா?
Anonymous said…
// தீராநதியில் தாம் தொடர்ந்து எழுதி வரும் பத்தியில் 'எம். ரிஷான் ஷெரீப் நல்ல கவிஞர்' என்று குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர்
அ. முத்துலிங்கம். //

மிக்க மகிழ்ச்சி. ரிஷானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!
Anonymous said…
நானும் இந்த புதினத்தின் சில பக்கங்களை தமிழினி பத்திரிக்கையில் படித்துவிட்டு இந்த புத்தகத்தை வாங்கினேன். எனக்கும் எஸ்.ராவின் விமர்சனத்தோடு உண்டன்படு உள்ளது நான் எஸ்.ரா அளவிற்க்கு தேர்ந்த வாசகன் இல்லையென்றாலும் இந்த நாவல் சலிப்பூட்டுவதாகவே உள்ளது. நான் படித்த வரை எஸ்.ரா இந்த அளவிற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததில்லை.
I can tell it has ruffled quite a few feathers, based on the response to his criticism.
Ganesan said…
கவிஞர். லீனா மணிமேகலை. மிகுந்த எரிச்சல் அளிக்கும் இந்தப் பேட்டியின் எதிர்வினையாகப் பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறேன். நாளை பதிவிடுகிறேன்.


இப்படி ஓரு தாக்குதலா?

பார்போம் எப்படி வருகிறதென்று

Popular Posts