சல்லிக்கற்கள்

எஜமானனை
வளைக்கும் வேலைக்காரி
துணுக்குகளை
எதிர்கொள்கையில்
எத்தனை முயன்றும்
துளிர்த்துவிடுகிறது கண்ணீர்!

***

கிராமம் பெயர்ந்த
கிழவியொருத்தி
வெற்றிலை பிடுங்கும்
பேரனிடம்
'மாடு முட்டுமென'
பயமுறுத்துகிறாள்.
எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!

***

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

***

விண்ணப்பங்களை
நிராகரிக்கையில்
உறுத்தல்கள்
ஏதுமில்லையா?
சபாஷ்!
நீங்கள் ஒரு
மேலாளர் ஆகிவிட்டீர்.

***

Comments

\\கிராமம் பெயர்ந்த
கிழவியொருத்தி
வெற்றிலை பிடுங்கும்
பேரனிடம்
'மாடு முட்டுமென'
பயமுறுத்துகிறாள்.
எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!
\\\

நல்லாயிருக்கு..;)
//எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!//
அருமை அட்டகாசம்..
சங்கமம்- அழியாத கோலங்கள்'ல சேர்த்திருக்கேன்
\\வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

\\

நிதர்சனம்
Karthikeyan G said…
முடியலத்துவம் asusual.. Super 0 Super!!
anujanya said…
எல்லாமே நல்லா இருக்கு செல்வா. முதல் கவிதை (ஆம், இது கவிதை தான்) ரொம்ப நல்லா இருக்கு.

அனுஜன்யா
அனைத்தும் நன்று,, நறுக்கென்று!!
//எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!//

வெத்தலை கேட்ட மாடு எட்டுமாடு இறங்கி போகுமுல்ல!ன்னு சமாளிக்க வேண்டியது தான்!
//மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.//


அடுத்த தடவை சந்திக்கும் போது நீங்கள் அதெல்லாம் பேசுங்க!
டீக்காசு நான் குடுக்குறேன்!

கவுஜயும் நானே எழுதிக்கிறேன்!
முதல் கவிதை சரியா புரியல!

விளக்க முடியுமா!
அந்த கவிதை கோவித்து கொள்ளாத பட்சத்தில்!
The second one is too good..
I have added it to படித்தது / பிடித்தது series in my site..
http://www.writercsk.com/2009/05/40.html
கவிதை, முடியலத்துவம், கவுஜ என கலந்து கட்டு அடிச்சாச்சா...?! அருமை செல்வா
Deepa said…
அனைத்தும் அருமை. குறிப்பாக, முதல் இரண்டும்.
Thamiz Priyan said…
கலக்கலா இருக்கு!
//மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்//

super..
இதுவரை நீங்க எழுதின ‘முடியலத்துவம்’ வரிசைல இந்தக்கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குதுங்க செல்வா

பி.கு: //நீங்கள் ஒரு மேலாளர் ஆகிவிட்டீர்// இதுல ஏதோ இலக்கணப்பிழை இருக்குதோ ??
இதுவரை நீங்க எழுதின ‘முடியலத்துவம்’ வரிசைல இந்தக்கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குதுங்க செல்வா

பி.கு: //நீங்கள் ஒரு மேலாளர் ஆகிவிட்டீர்// இதுல ஏதோ இலக்கணப்பிழை இருக்குதோ ??
//எந்த மாடு
எட்டு மாடி
ஏறிவரும்?!//

நன்று!
1 எல்லா துறையிலும் தொடர்கிறது

2 நல்லா இருக்கு

3. ரொம்ப அருமை. மிகவும் ரசித்தேன்.

4. இதுவும் நல்லா இருக்கு
ny said…
மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

எனக்கொரு friend வேணுமுங்க இப்படி !!
manalveedu said…
vanakkam
nerudatha vananam unga kavithail ilaiodm yellal vasippu surasiyathaium kanamana yeluthu vanmaium thannil vaithirrukkirathu.
harikrishnan
manalveedu
நீங்க எப்பவுமே சூப்பர்தான்..!

- நான் கோவை வந்திருந்தப்ப , உங்களைச் சந்திக்க நினைத்தேன். சஞ்சய், நீங்க சென்னை போயிட்டதா சொன்னதால மிஸ்ஸாயிடுச்சு!

Popular Posts