'ஓஹோ'

சம்பவம் - 1

எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்கும் கடையொன்றில் நண்பர் 'கே'யை தற்செயலாகப் பார்த்தேன். அதி நவீன ஐ-பாட் ஒன்றினை வாங்கிக் கொண்டிருந்தார். 'இதுதான் இப்ப இருக்கிறதிலே ரொம்ப லேட்டஸ்ட்' என்றார்.

'ஏற்கனவே ஒண்ணு வெச்சிருந்தீங்களே?!'

'அத என் வொய்புக்கு கொடுத்திட்டேன்.'

'ஓஹோ'

சம்பவம் - 2

அலுவலக வேலைக்காக ரிஜிஸ்டர் அலுவலகம் சென்றிருந்தேன். நண்பர் 'எக்ஸ்' பரபரப்பாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்.

'சார்... இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?'

'ஒரு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வந்தேன்.'

'எதாவது பிராபர்டியை விக்கப் போறீங்களா?' மெல்லிய தயக்கத்துடன் கேட்டேன்.

'ச்சே..ச்சே இல்லீங்க...கருமத்தம்பட்டில 'சுஸிலான்' பக்கத்துல ஒரு ஆறு செண்ட் காலிமனை சல்லிசா வந்திச்சி... அதான் முடிச்சிரலாம்னு...'

'ஏற்கனவே அந்த பக்கம் கொஞ்சம் இடம் வாங்கி இருந்தீங்களே?!'

'ஆமாமா... அதுவும் இருக்கு... இதுவும் இருக்கட்டுமேனு... வாங்கிப் போடுறேன்.'

'ஓஹோ'

சம்பவம் - 3

'எ' ஒரு கல்லூரி மாணவன். குடிகார தந்தை குடும்பத்தைக் கவனிக்காத காரணத்தினால் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டு படிப்பைத் தொடர்பவன். எங்கள் நிறுவனத்தில் தினமும் காலை எழு மணி முதல் ஒன்பது மணி வரை செய்கிற பகுதி நேர பணியொன்றிற்கு வந்து கொண்டிருக்கிறான். அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக மாலைகள் அணிந்து, சந்தனம் தெளிக்கப்பட்ட புத்தம்புது பல்சரில் வந்து இறங்கினான்.

'என்னடே வண்டி புதுசா இருக்கு...?!'

'ஆமா சார் நேத்திக்குதான் எடுத்தேன்'

'அப்படியா... அப்பா வாங்கி கொடுத்தாரா...?!'

'இல்ல சார். நானே வாங்கிட்டேன். இன்ஸ்டால்மெண்ட்ல.'

'டெளன் பேமண்ட்?!'

'பதினெட்டாயிரம் கொடுத்தேன் சார்'

'ஓஹோ'

நண்பர்களே,

சம்பவம் ஒன்றில் காணப்பட்ட நபர் 2004ஆம் ஆண்டில் தன் மனைவியின் பிரசவ வகைக்காக என்னிடத்தில் அவசர கடனாக ரூ.10,000/- வாங்கினார். தற்போது அவரது குழந்தை நகரின் உயர்தர பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கிறது. என் பணம்...?! நாளது தேதி வரை 'ஓஹோ'

சம்பவம் இரண்டில் காணப்பட்ட அன்பர் இதற்கு முந்தைய சொத்தினை வாங்க கொஞ்சம் பணம் குறைந்த போது மூன்று நாள் தவணையில் திருப்பித் தருவதாக ரூ.20,000/- வாங்கினார். சொத்து வாங்கி ஆறு மாதங்கள் கழித்து ஐந்தாயிரமும், அதற்கடுத்த மாதங்களில் இரண்டு முறை தலா ஆயிரமுமாக மொத்தம் ரூ.7,000/- திரும்ப தந்திருக்கிறார். மீத பணம்...?! 'ஓஹோ'

சம்பவம் மூன்றில் காணப்பட்ட இளைஞர் தனது ஹாஸ்டல் பீஸை பல மாதங்களாகியும் கட்டாததால் கிழிந்த பாயும், அழுக்கு ஜீன்ஸூகளோடும் வெளியேற்றப்பட்ட நாளொன்றில் என்னைச் சந்தித்தார். அவருக்கு ஒரு வேலையும், தங்க இடமும், பல்சர் வாங்குவதற்கு முந்திய தினம் வரை தலா ஒரு வேளை உணவும், அவ்வப்போது கல்விச் செலவுக்கான பணமும் அடியேனின் நித்தியப்படி. இதைத் தவிர்த்து புரொஜக்ட் செய்ய படிப்பு முடித்த பின்னர்தான் தரமுடியும் என்ற முன்னறிவிப்போடு வாங்கிய கடன் ரூ.2,000/- பணம் வருமா?! 'ஓஹோ'

அத்தியாவசிய தேவைக்கு மேல் இருக்கும் உபரி பணம், தேவை இருக்கிற ஒருவருக்கு பயன் படட்டுமே என்ற அபிப்ராயத்தில், நண்பர்கள் எப்போது கேட்டாலும் கடன் கொடுப்பதுண்டு. இந்த பைத்தியக்காரத்தனத்தினாலே சேமிப்புகளை இழந்தேன். என் வாழ்நாளில் ரமேஷ் வைத்யாவிடம் ஒரு முறை கடன் வாங்கியதே முதலும் கடைசியும். அவர் என் கூடப் பிறக்காத அண்ணன் என்றபோதும் ஒவ்வொரு இரவும் உறுத்தல் இருந்தது.

ஒரு மடிக்கணிணி வாங்க மூன்று வருடங்களாய் முக்குகிறேன். முடியவில்லை. திசையெட்டும் வங்கிகள் இருக்கிறது. நாளொன்றிற்கு கடன் வேண்டுமாயென நான்கு அழைப்புகளாவது வருகிறது. கேட்டால் கொடுத்து உதவ ட்அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கடன்பட வாழ்தலின் கசப்பினை நினைத்து தவிர்க்கிறேன். வாங்கிய கடன்கள் குறித்த உறுத்தல்கள் எதுவுமில்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இவர்களைக் குறித்து கேண்டியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.

'நீ ஒரு கேனை' என்றாள்.

'ஓஹோ'

Comments

Anonymous said…
நீங்க எட்டாவது வள்ளல் என்று புரிகிறது செல்வேந்திரன். அதை நீங்களே சொல்லி கொள்வது தான் இடிக்கிறது.
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்(அதிபர் இல்லீங்கோ)
கடன் கொடுத்து கலங்கினார் செல்வேந்திரன்.
SK said…
அவுங்க உண்மைய தெளிவா ஒத்த வரில சொல்லிடாங்க.. :)

நானும் என் பேர செல்வா'நு மாத்த முடியுமான்னு பாக்குறேன். :)

தலை அப்படியே ஒரு பத்தாயிரம் கடன் கொடுத்தா நல்ல இருக்கும்.. அக்கௌன்ட் வேண்ணா அனுப்பறேன்..
ஆமாம்னே.... நானும் இங்கே ஒரு பைக்கு வாங்க முக்குறேன்.
கேண்டி சொன்னா சரி தான் நண்பா.
சம்பவங்களை படிக்கும்போது இதற்கும் லேபிளுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் நினைத்தேன் நண்பா.. சரியா சொல்லி இருக்கீங்க.. என் தோழி ஒருவர் அடிக்கடி சொல்லுவார்.. நட்பு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க கூட பண விவகாரம் வச்சுக்கவே கூடாதுன்னு. உண்மைதான்..
கொடுக்கிற கை எப்பவும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். கொடுத்துவிட்டு திண்டாடுபவர்கள் அதிகம் பேர். முடிவு கேனை என்கிற பெயர்.
நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
Anonymous said…
//நீ ஒரு கேணை என்றாள் கேன்டி//

நான் நென்ச்ச மாதிரி இல்லாம் வெவரமாத்தான் இருக்கா அவ :-)
Ganesan said…
'ஓஹோ

ஹோகயா
Anonymous said…
arumai selvendran enakum ithu pola nadanthu irukirathu, i can understand how you feel
Ganesan said…
கடன் பெற்றாற் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதெல்லாம் இப்பொழுது கடன் கொடுத்தவர் தான் கலங்க வேண்டும்.
RaGhaV said…
'ஓஹோ'க்கள் அத்தனையும் அருமை..

விடுங்க செல்வா.. இந்த உலகமே இப்படித்தான்.. ;-)

கேண்டியிடம் என் பாராட்டுக்களை தெரிவியுங்கள்.. சரியான கமென்ட்.. :-)
Anonymous said…
செல்வா,

அவசரச் செலவுக்கு ஒரு 50000 தேவைப் படுகிறது. இரண்டு நாட்களில் தந்து விடுகிறேன்.

தனியாக இருக்கும்போது தேவைகள் குறைவு. கல்யானம் ஆனதும் வேறு செல்வேந்திரனை நான் காணவேண்டி வரும்.

நீ இப்பொழுது இருக்கும் நிலையில்தான் 20 வருடங்களுக்கு முன் நானிருந்தேன். ஆனால் என் தங்கமணியால்தான் கொஞ்சம் சொத்து சேர்ந்தது.

முழுவதும் காசு சேர்த்துவீடு வாங்குவதென்றால் எக்காலம் இயலும்? இல்லை தொழில்தான் செய்ய இயலுமா?

ஆனால் கடன் வாங்குதலும் திரும்பக் கழித்தலும் கட்டுக்குள் இருக்க வேண்டும். ஆடம்பரத்திற்காக வாங்கும் கடன்கள் தனக்குத்தானே பறித்துக் கொள்ளும் சவக்குழிகள்.
BEST FUNDS ARUN said…
கலியுக வள்ளல் செல்வா வாழ்க. சீக்கிரம் நான் கூட புது ஆபீஸ்க்கு டேபிள் ஷேர் எல்லாம் வாங்க வேண்டும். உங்க அட்ரஸ் கொஞ்சம் கொடுங்க



ஹி ஹி சும்மா தமாசு.


ஆமா உங்க பெயருக்கு அகராதில இளிச்சவாயன் என்று போட்டுருக்கு.
அப்புதிய
ஆஹா ஒஹோ பேஸ் பேஸ்

உங்க சண்டையில எங்கிட்ட வாங்கின ஐம்பதாயிரத்தை மறந்துடாதிங்க!

சும்மா லுலுலாயிக்கு!
ஆகா...

செல்வேந்திரன்.. படிக்கும் போது மனசு கஷ்டமா இருக்கு.. எனக்கும் இது போன்ற சில சம்பவங்கள் உண்டு.. நீங்க 'கேனை' இல்லை... இளகிய மனம் படைத்தவர்....நானும் தான் :)

இனி மேல் தயவுசெய்து விழிப்பாக இருக்கவும்...நானும் தான்..
Anonymous said…
Selva,
my money is my money.
your money is my money.
so, be cool.
Anonymous said…
'ஓஹோ'
-Vibin
Anonymous said…
திரு எப்பவும் சரியாத்தான் சொல்லுவாங்க...
எனக்கும் இது போல சம்பவங்கள் நடந்துள்ளன செல்வா. அப்போதிலிருந்து யார் கடன் கேட்டாலும் கொடுப்பதில்லை. அப்படி கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றாலும் அது தானம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்
MSK / Saravana said…
எல்லாரும் செல்வா அண்ணனுக்கு ஒரு "ஓ" போடுங்க..
MSK / Saravana said…
//கடன் நெஞ்சை முறிக்கும்//

ரசித்தேன்.. :)
Deepa said…
சான்ஸே இல்லை. நீங்கள் ஒரு ”ஓஹோ” மனிதர். அதைத் தான் கேண்டி செல்லமாக அப்படிக் கூறியுள்ளார்.

எனக்கு ஒரே ஒரு அனுபவம் இப்படி.

நான் சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு நண்பர் JCP( Java certification) முடித்தால் இன்னும் அதிக சம்பளம் கிடைக்கும், என் காதலியைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அழாக்குறையாகக் கூறியதில் மனமிரங்கி ஒரு மாத சம்பளத்தை அப்படியே கொடுத்தேன். அப்போது அந்த மூவாயிரம் பெரிய தொகை எனக்கு.
ஒரு மாதத்திலேயே அதிக சம்பளத்துக்கு அவர் வேறு வேலைக்குப் போனதும் அந்தத் தேர்வை எழுதாமலே விட்டார். ஆனால் 100 200 ரூபாயாக அவர் நினைத்த போது என் பணத்தை யாரிடமாவது கொடுத்தனுப்புவார்.
Thamira said…
எப்பிடியும் ஆஹான்னு நாலு பேரு பின்னூட்டம் போட்டிருப்பாங்க.. நானும் என் பங்குக்கு..

ஆஹா.!
நீங்க நொம்ப்ப்ப நல்லவரு!
:)

கடன் வாங்கிய பிறகு கடன் கொடுத்தவரு விசாரிக்கிறாறேன்னு தெரிஞ்சும்கூட தைரியமா தெளிவா பதில் சொன்ன அந்த 3 பார்ட்டீங்களும் நொம்ப்ப்ப நல்லவங்க :))
selventhiran said…
அணானி, என்ன பண்றது? உங்களை மாதிரி ஆட்கள் சொல்றதில்லங்கிறதுனால 'நமக்கு நாமே மாமே'ன்னு கிளம்ப வேண்டியதா இருக்கு. அது சரி... பணத்தை எப்ப திருப்பி தரப்போறீங்க?

அமிர்தவர்ஷிணி அம்மா, கலக்கம் இல்லை. வருத்தம் உண்டு. இன்னும் கூட கொடுக்க தயாராகத்தான் இருக்கிறேன் (றோம்) ஆனால், இக்கட்டான சூழ்நிலைகளுக்கு... ஐபாட் வாங்க இல்லை.

எஸ்கே அண்ணே, பத்தாயிரத்த வச்சிகிட்டு ஜெர்மனில என்ன பண்ண போறீங்க?!

நை.நை, பைக்கெல்லாம் உடனே வாங்கிடுங்க... தள்ளிப்போட்டா ரொம்ப தள்ளிப் போயிடும். - அனுபவ மொழி

விக்கி, உன்னை சொல்லி குற்றமில்லை.

வாங்க கார்த்திகைப்பாண்டியன். பணமே விவகாரம்தான்.

வாங்க ஜின்.

அண்ணாச்சி, இருங்க... இருங்க... அய்யனார்ங்கிற ஆர்.டி.எக்ஸ்கிட்ட பேசிக்கறேன்.

ஹா... ஹா காவேரி, கவுண்டபெல் ஞாபகம் வந்துட்டார்.

வாங்க கோபி.

வாங்க அணாணி, கமெண்ட் போட்டுட்டு கீழ உங்க பேரையும் போடலாமில்ல.

ராகவேந்திரன் :)

வடகரை அண்ணாச்சி (ரெண்டு அண்ணாச்சிகள் கமெண்டும் வந்ததால் இப்படி கூப்பிடறேன்) அருமையா சொன்னீங்க... அவ வந்தப்புறம்தான் எதும் தங்காரம் மிஞ்சும் போலருக்கு...

வாங்க இளா.

அருண், கமெண்ட் பாதில நிக்குது.

வாங்க மங்களூரார்.

ஸ்ரீதர் வருகைக்கு நன்றி.

வால், உங்ககிட்ட நான் வாங்கினது ஒரு லட்சமாச்சே...

அப்துல்லாண்ணே, பெருநகர் திரும்பியாச்சா?!

தீனா ஆஹா!

வாங்க பாலகுமாரன்.

வாங்க ச்சின்னப்பையன். அப்புறம் உங்க தல ஜெயிச்சதுக்கு ஒண்ணும் கவனிப்பில்லயா...?!

வாங்க அணானி,

வாங்க விபின்.

மயில், அக்காவும் தங்கச்சியும் என்னைய கலாய்க்கறீங்களா...

ஆமாம் பிரேம். வராதுன்னு முதல்லயே நினைச்சிட்டா துக்கமில்ல.

வாங்க சரவணகுமார்.

ஓ வாங்க தீபா...

ஆதிண்ணே கவிதை மேட்டர் என்னாச்சி?!
ஓஹோ..!!

கடன் வாங்காவோ, கொடுக்கவோ கூடாதுங்க. அப்படி தப்பி தவறி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடனே மறந்துட வேண்டியதுதாங்க.
Thamiz Priyan said…
ஓஹோ!... இதனால் தான் கடன் வாங்க கொடுக்கக் கூடாதுன்னு தீர்மானமா வச்சு இருக்கேன்.. அப்பிடியும் நயமா பேசி அடிச்சிக்கிட்டு போய்டுறாங்களே... ;-))
Anonymous said…
///Labels: கடன் நெஞ்சை முறிக்கும்///

கடன் நெஞ்சை முறிக்கிறது இருக்கட்டும்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


எலும்ப முறிக்கிறதுக்கு முன்னாடியாவது அந்த மூணு பேருகிட்டேந்தும் கொஞ்சம் தூரமா வந்துருங்க....
very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
SK said…
பத்தாயிரம் மட்டும் தான் சொன்னேன். ஈரோவா கொடுத்தா வேணாம்னா சொல்ல போறேன்.
ஆதவா said…
இப்படி உதவுகிறவரா இருக்கிறது தெரிஞ்சா, நான் முன்னமே திக் ஃப்ரண்ட் ஆயிருப்பேனே!!!!

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல....
Saminathan said…
பொதுவாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா...
மேவி... said…
நான் கடன் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் .....
அன்புள்ள செல்வேந்திரன்,

இதுவரை 42 பின்னூட்டங்கள் என் கணக்கு சொல்கிறது.
என்னை மாதிரி பதிவ படிச்சிட்டு என்ன பின்னூட்டம் சொல்வதுன்னு தெரியாம நாலைந்து முறைக்கு மேல உங்க பதிவ கடந்து போனவங்க நிறைய இருக்கனும்! ஒரு பதில் ஜோக் அல்லது ஒரு மறுப்பு அதெல்லாம் வேலைக்காவாது. விஷியம் பெரிசு!! இதுக்கு ஒரு நல்ல முடிவு கொண்டுவரனும்.

அது ஏன் நல்ல முடிவுன்னா? உதவி கொடுக்கற அளுக குறைவு! அதை மறுபடியும் குறைச்சு அருகிப்போகும் இனமாக்குவது தப்பு! இந்த மூனு பேர்த்தால நீங்க நண்பர்களுக்கு உதவி செய்யறத குறைச்சா; இவங்கள வள்ளுவர் கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லி திட்டுவாரு. அதாவது
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம்
உண்பதூம் இன்றிக்கெடும்!

இது மோசமான சாபம்! அறம் பாடினதுக்கொப்பு! அதனால என் மனசுக்கு தெரிஞ்ச ஞயாயம் என்னன்னா? "மொல்ல மொல்ல மெரட்டி, ஃபுல் பணத்தையும் வாங்கிடுங்க - தாட்சண்யமே பாக்ககூடாது!

அப்புறமா, தகுதியானவனுக்கு "டைமுக்கு திருப்பி குடுக்கலன்னா வெட்டியே போடுவேன்னு" சொல்லி குடுங்க. ஏன்னு பாத்திங்கன்னா நம்முளுது மூன்றாம் உலக நாடு, கெரகம் இப்பிடித்தான் இருக்கும்! இந்த ஐ.டி கூலிக்காரனுகதான் சம்பளந்தான் எச்சு, மற்றபடி நம்மளயெல்லாம் கறுப்பன்னுதான் வெச்சிருக்கறானுகன்னு தெரியாம் அடுத்தவன் வயிறெரியறமாதிரி ஆடுவானுங்க! அதனால கண்டீசனா சொல்லி குடுத்த பணத்தை திருப்பி வாங்குங்க! அப்புறம் நியாயமான ஆளுக்கு குடுத்து வாங்குங்க! உதவறது நல்ல பண்புங்க!
Athisha said…
கடன் நெஞ்சை முறிக்கிறது

:-(
Kumky said…
இந்த பின்னூட்டங்களிலிருந்து, வாங்கிய கடனை இரு மடங்காக கொடுக்க வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.அதை என்னிடம் சொல்லிவிட்டு கொடுக்கவும்.

சரி பண விவகாரத்தை விடுங்க.கடன் கேட்டா இருக்கு அல்லது இல்லைன்னு சொல்லவேண்டியதுதான.
நீங்க திரும்ப கொடுத்துடுவீங்களா?
அப்படின்னா நான் கடன் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?
வெரிகுட் சார் இப்படிதான் இருக்கனும்.
radhakrishnan said…
good

post.kadan natpaiyum murikkume.

radhakrishnan.

Popular Posts