BLink
இன்றைய பிஸினஸ்லைன் நாளிதழுடன் BLink என்றொரு புதிய இணைப்பிதழ் வெளியாகியுள்ளது. அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய பிரிவுகளில் கட்டுரைகளைத் தாங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளிவரும்.
முதல் இதழே அட்டகாசமாய் இருக்கிறது. டாபுளாயிட் வடிவில் துள்ளலான வடிவமைப்பில் 24 பக்கங்கள். இந்த இணைப்பின் ஆசிரியர் வீணா வேணுகோபால் பரந்து பட்ட வாசிப்பு கொண்ட இலக்கிய ஆர்வலர். அவரது would You Like Some Bread With That Book? புத்தக ஆர்வலர்களின் கவனம் பெற்ற நூல். ஒருவகையில் எனக்கு Ergo-ஐ திரும்ப வாசிக்க வாய்த்த மனநிறைவு.
இன்று பிரபலமாகி வரும் இலக்கியத் திருவிழாக்களை நடத்துவதன் சிக்கல்களை அலசும் ராஸ்மி பிரதாப்பின் கட்டுரையும், ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவின் க்ளிஷேக்களை மென்பகடி செய்யும் நந்தினி நாயரின் கட்டுரையும் தவறவிடக்கூடாதவை. ராஸ்மியின் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்: http://www.thehindubusinessline.com/features/blink/the-books-dont-tally/article5614144.ece

Comments
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
படிக்க முயற்சி செய்கிறேன்
www.malartharu.org