Wednesday, July 11, 2007

ரஜினியும் அப்பாவும்

“ரஜினி! - இந்தப் பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர் அப்பாவின் பால்ய நண்பர். சாத்தூர்காரர். இருவருக்கும் அப்படியொரு நெருக்கம். எனது அப்பாவின் மிகக்குறுகலான நட்பு வட்டத்தின் அடுத்த மனிதர் வேல்சாமி நாயக்கர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்ட பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர் அப்பாவை விட ஐந்து வயது சிறியவர். வேறு ஊரைச் சேர்ந்தவர். தெலுங்கர். அவரும் இவரும் சிறிய வயதில் ஒரே தீப்பெட்டிக் கம்பெனியில் போர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். என் அப்பா உள்ளூரிலே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். என்னதான் வேல்சாமி கோடீஸ்வரர் என்றாலும் நட்பில் ஒரு பிசிராந்தையார். எத்தனை பெரிய வேலை என்றாலும் அப்பாவிற்கோ எங்களுக்கோ ஒன்று என்றால் உடனே வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது நேற்று வரை.

வேல்சாமியின் தொழில் வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய சக தொழிலதிபர்கள் ரஜினிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும், வேடிக்கைப் பேச்சும் ரஜினியை அவர்பால் ஈர்த்திருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசுகையில் வேல்சாமியின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ரஜினி ஒரு வெடி வியாபாரி போல மாறு வேடமிட்டு அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவை திறந்த எனது தந்தையிடம் “வேல்சாமி நாயக்கர் அனுப்பி வைத்தார். ஒரு திருவிழாவிற்கு வெடி செய்ய கொஞ்சம் வெடிபொருட்கள் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் குழப்பமான எனது தந்தை "வேல்சாமி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்திற்கு புறம்பான எதையும் அவன் பேச மாட்டான். நானும் செய்வதில்லை. சரி.. வந்தது வந்து விட்டீர்கள். வேல்சாமியின் பேரைச் சொல்லியதற்காக இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலை முதல் பஸ்ஸில் உங்கள் ஊரைப் பார்த்து கிளம்புங்கள்" எனச் சொல்லி அவர்களுக்கு நள்ளிரவில் உணவு தயார் (உப்புமா) செய்து கொடுத்து, படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார் எனது தந்தை. தம் வாழ்நாளில் 'மிஸ்ஸியம்மா' தவிர்த்து வேறு சினிமா பார்த்தறியாத அவருக்கு ரஜினியை எப்படி தெரியும்?

பொழுது விடியும்போது அவர்களைக் காபியோடு எழுப்பிய எனது தந்தை ஒரு சைக்கிள் ரிக்‌ஷா அமர்த்தி பேருந்து நிலையம் வரை கொண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் வேல்சாமி நாயக்கரைச் சந்தித்த ரஜினி எனது தந்தையின் விருந்தோம்பல் பண்பையும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத பண்பையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்திருக்கிறார். வந்திருந்தவர் யாரென்றே தெரியாதபோதும் உபசரித்ததை சிலாகித்த ரஜினி, அடுத்தமுறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவை திறந்த எனது தந்தையிடம் "நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். ஒரு ஷூட்டிங் வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்குத் தெரிந்தால் கூட்டம் கூடி விடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். மீண்டும் அதே உப்புமா... அதே காஃபி. அதே எளிய உபசாரங்கள். சாமான்யன், சூப்பர் ஸ்டார் யாராக இருந்தாலும் ஒன்றுதான். பெரியோரை வியத்தலும் இலமே.. சிறியோரை இகழ்தலும் இலமே என்ற எனது தந்தையின் குணம் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.

உண்மையில் என் தந்தை பணக்காரர்களிடம் பழகுவதை விரும்புபவர் இல்லை. ஒரே விதி விலக்கு வேல்சாமி நாயக்கர். ரஜினி விஷயத்தில் ரஜினிதான் என் தந்தையை வம்படியாக நண்பராக்கிக் கொண்டார். எத்தனையோ முறை தமது வீட்டிற்கு அழைத்தும் அவர் போனதில்லை. ஆனால் அவரே தொழில் நிமித்தமாக சென்னைக்குச் செல்ல நேர்ந்தால் லதா ரஜினிகாந்திற்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், தடியங்காய் அல்வா (செளந்தர்யாவிற்கு ரொம்ப பிடிக்குமாம்) வாங்கிச் செல்ல தவறியதேயில்லை. அவர்கள் வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அவசர வேலை என்று நழுவி விடுவார். ஒரு முறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது எதிர்பட்ட பத்திரிக்கையாளர் ரஜினி என்ன சொன்னார் எனக்கேட்டபோது "உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்கச் சொன்னார்" என வேடிக்கையாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தாராம். அவருக்கு தினமணி பேப்பர் என்றால் அவ்வளவு பிரியம். ஒரு முறை முள்ளும் மலருமில் ரஜினியின் நடிப்பு அபாரம் என்று தினமணி பாராட்டி எழுதியபோதுதான் ஒத்துக்கொண்டார் ரஜினி ஒரு நல்ல நடிகர் என்று.

ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது 'உங்களுக்கு கிடைச்ச மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருந்தா. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்'. குழந்தை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்திற்கே சொல்லி கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கிறார் உங்களை"ன்னு அடிக்கடி சொல்வார். எப்போதாவது சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த நிறைய திண்பண்டங்களை வாங்கி வருவார்கள். எவ்வளவு வம்படியாக எங்களிடம் இனிப்பைத் தினித்து சாப்பிடச் சொன்னாலும் எங்கள் அப்பாவின் கண்ணசைவு சம்மதம் இல்லாமல் அதை நாங்கள் வாயில் வைத்ததாய் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது திருவிழா செலவுக்கு வச்சுக்கோங்க என எங்கள் பையில் பணத்தை திணிப்பார். அவர் ஊருக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்து கிளம்பும் சமயத்தில் 'அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்' என அவரது கையில் திணித்துவிட்டு ஓடி, ஓளிந்து கொள்வோம்.

பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம். தனது பிரைவசி, நிம்மதி இரண்டும் கெடுவதாக அவர் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருந்தினார். அவருக்கு ஆறுதலளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும், நாங்களுமாக பதினைந்து பக்கத்திற்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்ப பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில் ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும், அர்ச்சனை செய்வதும் தொடர்ந்....... எழுதிக்கொண்டிருந்தவனின் பேப்பர் சரலென பிடுங்கப்பட்டது. “என்னடா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டியா....?” ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தான் தினகரன். “டேய் ஒன்னு ஒழுங்கா படி அல்லது தொழில பாரு.... உன் வயசுல பத்து வீட்டுக்கு கட்டை சுமந்து குடும்பத்த காப்பாத்தினேண்டா... தறுதலைப் பயலே எப்ப பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டு திரியறது.... மாசமானா பென்சன் வாங்குற கிழட்டு பயக கூட இலக்கியம், கிலக்கியம்னு பேசிகிட்டு திரியிறது... உருப்பட மாட்டேடா.... உருப்படவே மாட்ட” மூச்சிரைக்க பேசியவர் தினகரன் எழுதிக்கொண்டிருந்த கதையை சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தார். என்ன செய்து என்ன பயன்? இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளனாகிய தினகரனின் ஆர்வத்தை இவரது ஆத்திரமா தடுத்துவிடும். ‘ரஜினி ராசியில்லை, நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சிக்கலாம்’ எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

52 comments:

பெருசு said...

summa athiruthila!!!!!!!!!!!!!!!!!

வெயிலான் said...

செல்வா,

நல்லாருந்தது.

இதில் எப்படி ஒரிஜினல் சாத்தூர் வேலுசாமி நாயக்கர் வந்தார்?

லொடுக்கு said...

கையை கொடுங்க அண்ணாச்சி... சூப்பரா எழுதியிருக்கீங்க.... பெரிய ஆள்தான் போலிருக்குன்னு படிச்சிகிட்டு வந்தப்ப மிகப் பெரிய ஆள்னு முடிவுல சொல்லிட்டீங்க.

Anonymous said...

Boss what is this?, It is 1 AM here, I read your article very seriously.

At last Rrrrrr....

As many bloggers mentioned, ur writing style is very good.

சுதர்சன்.கோபால் said...

//அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்//

இந்த இடத்தைப் படிக்கும் போதே எங்கியோ நெருடறாப்பல இருந்தது.

ஹூம்..ஆனால் எதிர்பாராத முடிவு.

வித்தியாசமான களத்தில் ஒரு சுவாரசியமான சிறுகதை..பலே..பலே...ஆகட்டும்..ஆகட்டும்...

இளவஞ்சி said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

Anonymous said...

v boring please dont repeat

முத்துகுமரன் said...

இதெல்லாம் நல்லதுகில்லா. ஆமா :-)

சிறுகதை/கவிதையினு வகைப்படுத்தியிருக்கிறது கவனிக்காம விட்டுட்டேன்யா. நல்ல நடை. வாழ்த்துகள்.

நல்லா இருங்கடே!

நாமக்கல் சிபி said...

Thalaiva Super Starai Vechi Supera Oru kadhai Solli irukkeenga!

Parattukkal!

ஜீவி said...

மாலன் எம்.ஜி.ஆர். பற்றி என்றால், இவர் ரஜினி பற்றிப்
போலும், என்று தான் எண்ணி படிக்க ஆரம்பித்தேன்.
கடைசி வரை சஸ்பென்ஸைக் காத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
உங்கள் மேல் குற்றமில்லை. லேபிள்: 'சிறுகதை' என்று
போட்டிருப்பதை முதலில் பார்க்காதது என் தவறு தான்.

PPattian said...

க்ளாஸ்'ங்க... நான் ஏதோ ரஜினியை தெரிஞ்சதை வச்சி தற்புகழ்ச்சி பாடுறீங்களோன்னு நினைச்சேன். அங்கங்கே கொஞ்சம் போல சந்தேகம் எட்டி பார்த்தாலும் அசத்திட்டீங்க போங்க!

Thangs said...

Romba nalla irukku..Vaazthukkal!

துளசி கோபால் said...

இது..........:-)

sathyarajkumar said...

கதை ரசிக்கும் வண்ணம் இருந்தது. முடிவுதான் கொஞ்சம் சொதப்பல். ரஜினி அரசியலில் குதித்து முதல்வராகி விட்டதாகவும் (கதை, கனவு என்றெல்லாம் சொல்லாமல் தவிர்த்து அதே சமயம் இது சும்மா ரீல் என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறீர்கள்.) வாழ்த்தச் சென்ற அப்பாவை யார் நீங்க என்று கேட்ட மாதிரி முடித்திருக்கலாம். (அரசியல் யாரையும் மாற்றி விடும் என்பது கருத்து ஹி ஹி :-))

வடுவூர் குமார் said...

ஹூம்!! எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறதோ?
பொறாமையாக இருக்கு.
அருமையான நடை.
நல்லா இருங்க செல்வேந்திரன்.

விக்னேஷ் said...

சுவாரசியமாக உள்ளது தோழரே! ஹும்..... பட்டையை கிழப்புங்கள்.

Seemachu said...

நல்லா இருந்திச்சி செல்வேந்திரன்..

அழகா ஆரம்பிச்சு.. நெஜம் தானோன்னு நம்ப வெச்சி.. கடேசியில இப்படி தடாலடித் திருப்பம் பண்ணிட்டீங்களே..


வாழ்த்துக்கள்..
அன்புடன்,
சீமாச்சு

ஆசிப் மீரான் said...

தஞ்சாவூர்காரன் குடும்பெல்லாம் சாத்தான்குளத்துக்காரனுக்கு முன்னால எம்மாத்திரம்னு ஜ்மாய்க்குறடா செல்வேந்திரா.. அடிச்சு கொளுத்துலே உம்பாட்டுக்கு :-)

சாத்தான்குளத்தான்

வெட்டிப்பயல் said...

ரொம்ப நல்லா இருந்துச்சிங்க கதை :-)

SurveySan said...

:)

வெங்கட்ராமன் said...
This comment has been removed by the author.
வெங்கட்ராமன் said...

அட இது கதையா. . . . ?

சிறுகதைங்கிற குறிச்சொல் தான் அப்படி சொல்லுது.
ஆனா படிக்கும்போது யாரோ தன்னுடைய வாழ்க்கை அனுபவத்த நேர்ல சொல்வது போல் இருந்தது.

மிகவும் அருமை செல்வேந்திரன்.

பிரேம்குமார் said...

அட‌ கோக்காமக்கா.... :-)

Anonymous said...

அட்டகாசம், அமர்க்களம், பிரமாதம்ன்னேன்.

ஜெஸிலா said...

படிக்கும் போதே புருடா புரிந்து விட்டது. அப்படியெல்லாம் நடக்க கூடாது என்பதற்காக விளங்கியதல்ல. சம்பவங்கள் விளக்கிவிட்டது. 'ரஜினியும் அப்பாவும்' என்ற தலைப்பில் நானும் எழுத இருந்ததாலேயே இந்த பதிவில் ஈர்க்கப்பட்டு வந்தேன். ஆனால் நான் எழுத இருந்தது 'கதை' அல்ல உண்மை சம்பவத்தை. அதையெல்லாம் எழுதினால் 'நீங்கள் ரொம்ப பயங்காட்டுறீங்கன்னு' பின்னூட்டம் போடுவீங்க எதுக்கு வம்புன்னுதான் எழுதவே இல்லை.

Anonymous said...

நல்ல படைப்பு
வாழ்த்துக்கள் :)

vathilai murali said...

எதிபார்க்காத திருப்பம்

தென்றல் said...

செல்வேந்திரன்,

இந்த வாரம் நீங்களா...?!
(நட்சத்திர) வாழ்த்துக்கள்..!

நட்சத்திர வாரத்தில படிக்கமுடியுமானு தெரியலை.. "பொறுமையா" படிச்சிட்டு மறுமொழி போடலாமில?

விசாலாட்சி said...

(நட்சத்திர) வாழ்த்துக்கள்.
என் கணவருக்கு இந்த திரையை அனுப்புகிறேன்

சேதுக்கரசி said...

கவுத்துட்டீங்களே.. ஆனாலும் சூப்பரா எழுதி நைஸாகக் கவுப்பதெப்படின்னு புத்தகம் எழுதலாம் நீங்க :)

வல்லிசிம்ஹன் said...

ஒரிஜினல் திருனெல்வேலி அல்வா.
ஆனால் ஏமாத்தலை. நல்லாக் கதைகட்டி விட்டீங்க.:)))

-L-L-D-a-s-u said...

ஐய்யயோ!! இன்னும் கொஞ்ச நாளில் பாருங்கள். உங்கள் சிறுகதையின் முதல்பகுதி மட்டும் 'உண்மைக்கதையாக திரிக்கப்பட்டு, ரஜினிகாந்த்தின் புகழ்பாட பயன்படுத்தப்படும்.

ராதாராகவன் said...

மிக நல்ல பதிவு. இதனை மற்றவர்கள் திருடி பயன்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

Anoop Sundaram said...

wow, really nice story. you have great writing skills...

அந்தோணிசாமி said...

அருமையான பதிவு. இந்த பதிவினை படிக்கும்படி என் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் ரவீந்திரனை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவன் நிறைய படித்தவன்.

L. Kasthuri said...

SUPER MACHHI

தேவ் | Dev said...

செல்வேந்திரன் ஒரு புது விதமான அப்ரோச்.. நல்லாவே வந்து இருக்கு கதை... கண்டிப்பா இது அச்சு ஊடகங்களால் கவனிக்கப்படும் என நம்புகிறேன்..

நட்சத்திர வார வாழ்த்துக்களும்.

காட்டாறு said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

அசத்திட்டீங்கல்ல....

முதலில் உண்மை என்றும், அப்புறம் உடான்ஸ் என்றும், அப்புறம் உண்மையா இருக்குமோ என்றும்....
என்னமோ போங்க... கடேசில கவுத்திட்டீங்க.

Anonymous said...

nadipilum ,thiramayalum kamalu nigar kamal mattume........
ulaga nayagan kamal ...indiavil kamalukku nigar yarum illay nadipil ithil en thalaivan rajiniyum adakkam ..ithay avare kuri ullare...
ivalavu tiramayana nadiganai avarathu rasigargale mathipathilai enbathu varuthatir kuriya visayam..
kamal doing many things in his film's were as his fans failing to encourage him ! failures of mumbai x press,pamal k samandham (good comedy movies),anbe sivam!(award movie)one of the best movie i liked ..alavanthan good technical movie,virumandi (good script) !!!heyram (good concept)..and many more !! please kamal fans try to encourage ur hero by praising him ..dont waste your time in spending more time in saying were rajini went wrong ,were shankar went wrong in making rajini movie etc there by you watch the movie more keener than what a real rajini fan does!!there by you r unknowingly falling inside the trap of a rajini fan..

rajini veriyan

delphine said...

oops! ஏமாந்தே போட்டேன்..:(

செல்வேந்திரன் said...

வெயிலான்: சாத்தூரில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

லொடுக்கு: உள்குத்து பலமா இருக்கும் போலிருக்கே...!

ஜெஸிலா: படிக்கும் போதே புருடா புரிந்து விட்டது / உங்களுக்கு ஞானதிருஷ்டி ஜாஸ்தி ஜெஸிலா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இடைக்கிடை சந்தேகம் எட்டிப்பார்த்தாலும், கடைசி வரையும் சுவாரசியத்துக்குக் குறைவில்லை.
லதா பற்றிய விபரிப்புகள்...சந்தேகத்தை வரவச்ச இடத்தில் ஒன்று
மிக நன்று

வெயிலான் said...

/// இதில் எப்படி ஒரிஜினல் சாத்தூர் வேலுசாமி நாயக்கர் வந்தார்? ///

/// வெயிலான்: சாத்தூரில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன? ///

சாத்தான்குளத்தார் இப்படி எல்லோருக்கும் அல்வா கொடுக்கும்போது, அவருக்கு நாங்க திருப்பி சாத்தூர் கருப்பட்டி மிட்டாய் கொடுக்காமல் இருந்தால் எப்படி?

ராஜா said...

நல்லாவே எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்
:)

பொன்ஸ்~~Poorna said...

கலக்கல்!

Paul said...

First, I read it in Ananda Vikatan.. and I was thinking it as a true story... the last few paragraphs...God !! You are a gifted writer... God Bless you

PRINCENRSAMA said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்!

தருமி said...

ஆ.வி.யில முதல்லேயே படிச்சேன்...கதை, கவிதை - அமர்க்களம்.

வாழ்த்துக்கள்

chillu said...

nan ennatha solven athiruthulla chumma............adapavigala?????????konjaneram aadipoitomla.........

chillu said...

ada ennapaithu athiruthulla chumma !!!!!!!!!!vala pazhathula oosi podaramathiri cha superapu

பாண்டி-பரணி said...

அருமை நண்பெரே மிக அருமை

பாண்டி-பரணி said...

அருமை நண்பெரே மிக அருமை