Saturday, July 7, 2007

எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸுக்கு உதவ

எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸ் நோயுற்ற தம் மனைவியுடனும், தீராத வறுமையுடனும் போராடி வருகிறார் என்ற செய்தி விகடனில் வெளியாகி இருந்தது. அது குறித்து நான் எழுதியிருந்த பதிவை படித்து விட்ட சில வெளிநாடுவாழ் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவுவது என தனிமடலிலும், பின்னுட்டத்திலும் கேட்டிருந்தனர். இது தொடர்பாக மேற்படி கட்டுரையை எழுதிய திரு. தளவாய் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவரது மனைவி ஹேமாவின் பெயரில் நிறைய செக்குகளும், வரைவோலைகளும் விகடன் அலுவலகத்திற்கு வந்த வண்ணம்தான் உள்ளது. உதவி செய்ய நிணைப்பவர்கள் ஆனந்த விகடன், ஆசிரியர் இலாகா, 34, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு அனுப்பலாம்" எனத் தெரிவித்தார். மேலதிக விபரங்களுக்காக ஸ்டெல்லாபுரூஸ் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணையும் இணைத்துள்ளேன். அவருக்கு உதவ நிணைப்பவர்கள் அந்த எண்ணிலும் அவரைத் தொடர்புகொள்ளுங்கள். தொ.பே. எண்கள்: 044 - 24842347

6 comments:

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி செல்வேந்திரன். என்னால் இயன்றதைச் செய்கிறேன்.

வெங்கட்ராமன் said...

இந்த வார நட்சத்திரத்திற்கு பின்னிப் பெடலெடுக்க வாழ்த்துக்கள்

சேதுக்கரசி said...

ஆகா.. நட்சத்திரமா?? வாழ்த்துக்கள்! :-)))

செல்வேந்திரன் said...

என்னால் இயன்றதைச் செய்கிறேன்.
மிக்க நன்றி சேதுக்கரசி.

பின்னிப் பெடலெடுக்க / முதன்முதலில் இந்த வார்த்தையை யார் பயன்படுத்தி இருக்ககூடும்.

சேதுக்கரசி said...

http://tamilpukkal.blogspot.com/2007/06/blog-post.html தளத்திலும் இந்த அறிவிப்பைக் காண நேர்ந்தது. கூகுளில் ஸ்டெல்லா புரூஸ் என்று தேடினால் உங்கள் இருவரின் பதிவும் தான் முதலில் வருகின்றன :-)

சேதுக்கரசி said...

ஸ்டெல்லா புரூஸின் மனைவி 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டாராம். இருப்பினும் மருத்துவ செலவுக்கான கடனை அடைக்க நிதியுதவி உதவும் என்று ஸ்டெல்லா புரூஸ் தெரிவித்துள்ளார்.