எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸுக்கு உதவ
எழுத்தாளர் ஸ்டெல்லாபுரூஸ் நோயுற்ற தம் மனைவியுடனும், தீராத வறுமையுடனும் போராடி வருகிறார் என்ற செய்தி விகடனில் வெளியாகி இருந்தது. அது குறித்து நான் எழுதியிருந்த பதிவை படித்து விட்ட சில வெளிநாடுவாழ் நண்பர்கள் அவருக்கு எப்படி உதவுவது என தனிமடலிலும், பின்னுட்டத்திலும் கேட்டிருந்தனர். இது தொடர்பாக மேற்படி கட்டுரையை எழுதிய திரு. தளவாய் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவரது மனைவி ஹேமாவின் பெயரில் நிறைய செக்குகளும், வரைவோலைகளும் விகடன் அலுவலகத்திற்கு வந்த வண்ணம்தான் உள்ளது. உதவி செய்ய நிணைப்பவர்கள் ஆனந்த விகடன், ஆசிரியர் இலாகா, 34, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு அனுப்பலாம்" எனத் தெரிவித்தார். மேலதிக விபரங்களுக்காக ஸ்டெல்லாபுரூஸ் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணையும் இணைத்துள்ளேன். அவருக்கு உதவ நிணைப்பவர்கள் அந்த எண்ணிலும் அவரைத் தொடர்புகொள்ளுங்கள். தொ.பே. எண்கள்: 044 - 24842347
Comments
மிக்க நன்றி சேதுக்கரசி.
பின்னிப் பெடலெடுக்க / முதன்முதலில் இந்த வார்த்தையை யார் பயன்படுத்தி இருக்ககூடும்.