Friday, July 13, 2007

பகிர்ந்து கொள்கிறேன்

நம்முடைய செயல்களே நம்மை “கார்னர்” செய்துவிடும் பொழுதுகளில் ஒளிந்து கொள்ள இடமின்றி, அடுத்து என்ன செய்வது? யார் நண்பர்? யார் பகைவர்? யாருக்கு எதுவரை தெரிந்திருக்கிறது? என்ற குழப்பங்கள் மேலிட நம் எல்லோருமே அலைந்து திரிந்திருப்போம். உலகமே சூன்யமாய் தோன்றும் அம்மாதிரிக்காலங்கள் எல்லார் வாழ்விலும் வந்திருக்கலாம். வராதவர்களுக்கு வந்தே தீரும். எனக்கு அம்மாதிரி சமயங்களில் நண்பனாய் இருந்து உதவியது புத்தகங்கள்தான். எழுத்தோ, பேச்சோ என்றைக்கும் படைப்பை முன் நிறுத்தாமல் படைப்பாளியின் பின்புலத்தை நோண்டும் செயல்களை நான் செய்ததே இல்லை. அவன் ஆதியில் அணிந்த பாதி கோவணத்தை தேடுவதற்கு பதில் என்னைதான் அதில் தேடிக்கொள்வேன். உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதும், பேசும் எவனும் எனக்கு மிகப் பிரியமானவர்களே. அப்படி எனக்கு ப்ரியமானவர்களில் சிலர் ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் பேசியதோ, எழுதியதோ எனக்கு உதவி இருக்கிறது. அதில் ஒரு சில...

“எவன் ஒருவன் தன் கடமைகளைச் சரிவர செய்கிறானோ, அவனது உரிமைகள் தானாகவே வந்தடையும்” - மகாத்மா காந்தி

“உண்மைக்கு எதிரி பொய்யல்ல, நன்மைக்கு எதிரி தீமையல்ல, முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கல்ல... எல்லாவற்றுக்கும் ஒரு பொது எதிரி உண்டு. அலட்சிய போக்கு; அதுதான் நம் மிகப்பெரிய எதிரி” - புரொஃபசர் வீஸல்ஸ் (சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்)

“பலர் விழுவதும் சிலர் எழுவதும் ஓரே இடத்தில்தான். அது உழைப்பு. எச்சில் தட்டை கழுவியபோது காட்டிய ஒழுங்குதான் எடிட்டிங் டேபிளிலும் கை கொடுக்கிறது” - டைரக்டர் சேரன்.

“தயங்கித் தயங்கி நிற்பவனை வாழ்க்கை ஒருபோதும் திரும்பி பார்ப்பதில்லை. புறப்பட்டு போ... உனக்கு எல்லாம் புலப்படும்” - பரமஹம்ச நித்யானந்தர்

“காரைக்குடி மணிக்கு எதனால் பெயர் மிருதங்கத்தால் பெயர். மிருதங்கத்து காரைக்குடி மணி ஏதாவது செய்தாக வேண்டும். எனவே மிருதங்கத்தோடு பழக வேண்டும். சிலருக்கு 2 மணி நேரம், சிலருக்கு 12 மணி நேரம். ஆனால் பழகியே ஆக வேண்டும்” - காரைக்குடி மணி

“உழைச்சுகிட்டே இருப்போம். என்னிக்கு கூலி கிடைக்கும்னு தெரியாது. ஆனா கிடைக்கும். பரவை முனியம்மாவுக்கு 60 வயசுலதான் கிடைச்சுது. தன்னை நம்பினவன் ஜெயிப்பான்” - டைரக்டர் தரணி.

“அட்டகாசமான சிரிப்பு ஞானசூன்யத்தின் வெளிப்பாடு” - கோல்ட்ஸ்மித்

“தெரிந்த தொழிலை வைத்து ஓரளவு பிழைக்கலாம். ஆனால் தெரியாத தொழிலை வைத்து பிழைக்கவே முடியாது” - புதுமைப் பித்தன்.

“பிரச்சனைகளுக்கு அரசு ஒரு தீர்வல்ல. அரசே ஒரு பிரச்சனைதான்” - ரொனால்டு ரீகன்

“மெளனம் மூலம்தான் அதிகம் சொல்ல முடிகிறது. மிக மெதுவாகப் பேசிய காந்தியின் குரலே அதிகம் பேருக்கு கேட்டது” - ரவீந்தரநாத் தாகூர்

“சகோதர ஒற்றுமையே சாதனைகளின் முதல்படி” வி.ஜி.பி

“யாருக்காகவும் எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே” – நடிகர் பிரகாஷ்ராஜ்

“சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம். அதற்கு நானே நல்ல உதாரணம். ஆனால், நிஜ வாழ்வில் ஹீரோ ஆவது கடினம், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் எடுப்பதோ, ஆபத்திலிருக்கும் உயிரைக் காப்பாற்றுவதோ கடினமான காரியம். அதைச் செய்பவன் தான் ஹீரோ. நிஜ வாழ்வில் ஹீரோ ஆக முயற்சி செய்யுங்கள்” - நடிகர் தனுஷ் (சன் டி.விக்காக ஊர்வசி கண்ட நேர்காணல் ஒன்றில்)

“உங்களுக்கு பிடித்த வேலையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின் ஒரு நாள் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டி இருக்காது” - ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்

“வெட்கப்படுபவனுக்கு விருத்தி வராது” – அனந்த பத்மநாபச்சார்யார்

“ சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம். எடை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு கத்தியை விடவும் கூரான உடல் இருக்கிறது. அது அம்பைவிட ஆழமாகத் துளைக்க கூடியது. நாவினால் சுட்ட வடு இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?” - எஸ். ராமகிருஷ்ணன்.

இன்றைக்கு இவ்வளவுதான்.....

12 comments:

வெயிலான் said...

செல்வா, என்ன ஒரே தத்துவ மழையா பொழிஞ்சிட்டீங்க.

பல ஆண்டுகள் அனுபவங்களில் தெரிய வேண்டியவைகளை ஒரே பக்கத்தில் ஒட்டுக்கா கொடுத்திட்டீங்க.

நன்றி!

ஜெஸிலா said...

படிச்சீங்க, கேட்டீங்க அது பெருசல்ல அதை நினைவுல வச்சி இதெல்லாம் உதவியிருக்குன்னு சொன்னீங்க பாருங்க.. ம்ம் தூள்

முகு said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்,நட்சத்திர‌
வாரத்தில் ஜொலிப்பத‌ற்கு.

இன்று எழுத்து பஞ்சத்தில் மாட்டிய‌
மாதிரி தெரிகிறது?

அன்புடன்,
முகு

சேதுக்கரசி said...

இம்புட்டு நினைவு வச்சு, குறிச்சு வச்சு எழுதியிருக்கீங்க, இதைப் பஞ்சம்னெல்லாம் நான் சொல்லமாட்டேன்!

துளசி கோபால் said...

மனுஷன் கண்டு பிடிச்சதுலே மோசமான ஆயுதம் சொற்கள்தான்னு எங்கியோ படிச்சேன்.
இது அப்பப்ப ஞாபகம் வந்துட்டுப் போகும்.

வடுவூர் குமார் said...

திரு எஸ்.ராமகிருஸ்ணன் எழுத்து அவர் விளக்கத்துக்கு கூட பொருந்தும்.
சில இடங்களில் கத்தியை விட கூராக இருக்கும்.அவ்வப்போது வாசனையை விட தவறுவதில்லை.

செல்வேந்திரன் said...

வெயிலான், ஜெஸிலா, முகு, சேதுக்கரசி, துளசி கோபால், வடூவூர் குமார் தங்கள் வருகைக்கு நன்றி...

சிநேகிதன்.. said...

சுவாமி செல்வேந்திரனந்தாவின் தத்துவங்கள் அருமை!!

தென்றல் said...

செல்வேந்திரன், அருமை!

பகிர்ந்தமைக்கு நன்றி!!

vathilai murali said...

//அவன் ஆதியில் அணிந்த பாதி கோவணத்தை தேடுவதற்கு பதில் என்னைதான் அதில் தேடிக்கொள்வேன்// அருமை செல்வேந்திரன். உங்கள் முன்னுரையும் தொடர்ந்த கருத்துக்களும்

நெல்லை காந்த் said...

Selva, nice one

வெங்கட்ராமன் said...

******************************
எழுத்தோ, பேச்சோ என்றைக்கும் படைப்பை முன் நிறுத்தாமல் படைப்பாளியின் பின்புலத்தை நோண்டும் செயல்களை நான் செய்ததே இல்லை. அவன் ஆதியில் அணிந்த பாதி கோவணத்தை தேடுவதற்கு பதில் என்னைதான் அதில் தேடிக்கொள்வேன்.
******************************

இது பல பேருக்கு புரிஞ்சா இங்க பாதி பிரச்சனை குறைஞ்சுடும்.

மிகவும் அருமையான தகவல்கள், நன்றி.