சீரக மிட்டாய் கவிதைகள்

டோராவைக்
காண்பித்து
அழுகையை
நிறுத்துகிறோம்
சோறூட்டுகிறோம்
ஆட வைக்கிறோம்
பின் குழந்தைகள்
டோராவிடம் மட்டுமே
பேச துவங்குகின்றன...

காற்றின் வழி
நூகர்ந்து விட்ட
குருட்டு பாடகனின்
பாடலுக்கு
ஈயும் பணம்
பிச்சையல்ல...

மணியடித்த பின்னும்
தேர்வெழுதுபவர்கள்
படிப்பாளிகளென
அர்த்தம் கொள்ளப்படுகிறார்கள்
நிரூபிப்பதற்கான

வாய்ப்பு
ஒருபோதும்
கிடைக்காது
நீங்கள் ஒரு
நிரபராதியெனில்!

எழுத்தென்னும்
பெருநோயின்
அறிகுறி
கவிதை!

சாணி
கிடைக்காதிருக்கட்டும்
கொள்ளையழகோடு
சிரிக்கிறது
பூசணிப்பூ

ஆசைகளைக்
கொன்று
கனவுகளைப்
புதைத்து
நரகத்தை
சிருஷ்டிக்க
காதலி
அல்லது
காதலிக்கப்படு

எப்போதோ
பேச
துவங்கி விட்டோம்
நீயும் நானும்
இன்னும்
பேசத்தான்
பழகவில்லை

நல்ல எழுத்துக்கு
நல்ல வாசிப்பு
அவசியம்
பிறகெப்படி
காப்பியடிப்பது?

கடைசி பக்கம்
கிழிந்துவிட்ட
நாவலுக்கு
ஒருவர் மட்டுமா
ஆசிரியர்?!

சப்பென்று
இருக்கிறதுன்
கவிதைகள் என்கிறாய்
படிக்க சொன்னால்
நக்கியா பார்ப்பது?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Comments

அத்தனையும் சூப்பர்.

********************
மணியடித்த பின்னும்
தேர்வெழுதுபவர்கள்
படிப்பாளிகளென
அர்த்தம் கொள்ளப்படுகிறார்கள்
நிரூபிப்பதற்கான

வாய்ப்பு
ஒருபோதும்
கிடைக்காது
நீங்கள் ஒரு
நிரபராதியெனில்!

மேற்சொன்ன வரிகளில் இடைவெளி தவறாக உள்ளதென்று நினைக்கிறேன்.

(ஒரு வேளை இதுதான் முடியலத்துவ பாணியோ. . .)
selventhiran said…
நன்றி வெங்கட்ராமன்... ஆமாம் இடைவெளி தவறுதான் அது..
ஆகா மீண்டும் வந்தார் முடியலத்துவ மாமுனி. கவிதைகள் ரசிக்க வைத்தன.

//நல்ல எழுத்துக்கு
நல்ல வாசிப்பு
அவசியம்
பிறகெப்படி
காப்பியடிப்பது?
//

இது மட்டும் முடியல ;)

அன்பு குட்டிச்சாத்தானுக்கு தொட‌ர்ந்து எழுத‌ வாழ்த்துக்க‌ள்
நளன் said…
ரொம்ப நல்லாருன்னுனே :)

நா ஆர்குட் செல்வா :)
வேலையற்ற ஒரு மாலைபொழுதில் விகடனில் உங்கள் கவிதைகள் படித்து கொண்டிருக்கிறேன் . அருமை
உங்கள் வலைத்தளம் தேடித் தந்த கூகிளுக்கு நன்றி :)
butterfly Surya said…
சூப்பர்