நாய்க்காதல்
சாண் ஏறினால்
முழம் சறுக்குகிறதா?
சங்கடப்படாமல்
லிப்டை பயன்படுத்து
அந்த நீங்கள்
யாரென்று கேட்கிறாய்
நீங்களின் பட்டியல்
நீளமானது
நீங்களுக்குள் நீயும்
இருக்கிறாயென்றால்
நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்
அந்த நீங்களுள் நீ இல்லையென்று...
சட்டம்
தன் கடமையைச்
செய்கையில்
குறுக்கே நிற்காதே!
உட்கார்ந்து கொள்.
செய்
அல்லது
செய்யச் சொல்லிவிட்டு
செத்து மடி
சுத்த தமிழ் பேசுங்களென
முழங்கினார்.
சுத்தமென்பதே
தமிழில்லை
இடைப்பட
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக் குழந்தை
பிச்சை
அண்ணல்
கைவைக்க
அவளும்
இடம் கொடுக்க
நடு பஸ்ஸில்
நிகழ்கிறதொரு
நாய்க்காதல்!
Comments
பழித்தால் வருவது
மேலும் காமம்.
/குறுகுறு நடந்து/
உன் கல்வி தெரிகிறது சகோதரா. சந்திப் பிழையாளர்களைச் சிந்தியாதே
அல்லது
செய்யச் சொல்லிவிட்டு
செத்து மடி//
Kalakunga Annae...