உருண்டை

இன்றிரவு
இளம் மனைவியின்
புதிய பருக்களை
அவன் முத்தமிடலாம்
தன் பருக்களை
பாடிய பழைய கவிஞனை
அவள் மறந்திருக்கலாம்
அவனும் தான் எழுதிய
பழைய பருக்களின் பாடலை
மறந்திருந்தால்
கலிலீயோவின்
கால் செருப்பு
நான்!

Comments

கடைசி நாலு வரிகள் சுத்தமாக புரியவில்லை. . . .

கண்டிப்பாக விளக்க வேண்டும். மெயிலில் விளக்கம் தந்தாலும் சரிதான்.