Sunday, February 1, 2009

மீதமிருக்கும் சொற்கள்எஸ்பிஐ வங்கியின் டெலி மார்க்கட்டிங் பெண்ணிற்கும் வாடிக்கையாளருக்கும் இடைய நிகழ்ந்த சம்பாஷனை ஒன்றினை மசினகுடி பதிவர் சந்திப்பில் ஒலி பரப்பினார்கள். ஆங்கிலத்தில் (?!) நிகழ்ந்த அந்த உரையாடலைக்கேட்டு மூச்சடைக்க சிரித்தோம். அந்த உரையாடல் ஓலி வடிவமாக இங்கே கிடைக்கிறது. இந்த உரையாடல் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல. நுட்பமான பல விஷயங்கள் இதில் இருக்கின்றது. இதை விரிவான விவாதத்திற்குட்படுத்த வேண்டும் வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைத்தேன்.

1) வங்கியில் இருந்தல்லவா பேசுகிறார்கள்? பெண் அல்லவா பேசுகிறாள்? அதுவும் ஆங்கிலத்தில் அல்லவா பேசுகிறாள்? என்று தயங்காது எதிர்கொண்டது முரட்டுத் துணிச்சல் அல்லவா?! அதை வரவேற்போம்.

2) நாவன்மையும் மொழியறிவும் எல்லா இடத்திலும் செல்லுபடியாகாது. கற்றறிந்த அந்த பெண்ணால், தான் சொல்ல வந்ததை கடைசிவரை சொல்ல இயலவில்லை. ஆனால், சரியோ தப்போ சரத் தான் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி முடித்துவிட்டார்.

3) டெலிமார்க்கட்டிங்கில் தேன் குரல் கேட்டால் ஜொள் ஒழுக்காமல் வி.ஐ.பி சூட்கேஸ் விவகாரத்தில் என்னை ஏன் சிக்க வைக்கவைக்கிறீர்கள் என்ற தொனியில் ஏக்கச்சக்கக் கேள்விகளைக் கேட்கிறார் சரத். இத்தனைக்கும் அவரது ஸ்டேட்டஸ் "சிங்கிள்"

4) மொழியை ஆயுதமாகப் பயன்படுத்துவது சரத் மற்றும் என்னைப் போன்ற சாமான்யர்கள் மீது நிகழ்த்தும் வன்முறை. எதிராளி தடுமாறுகிறார் என்றால் உங்களுக்கு எந்த மொழி சவுகர்யப்படும் என்று கேட்டு அந்த மொழியில் பேசினால்தானே நியாயம்?!

5) அதிலும் ஓரிடத்தில் அந்தப் பெண் மெலிதாக சிரித்துவிடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்னதான் இருந்தாலும் சரத் வி.ஐ.பி கஸ்டமர் தகுதிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நினைவுறுத்திக்கொள்கிறேன்.

6) இறுதியில் சரத் சொல்கிற "ஓ.கே. டாட்டா" இன்று போய் நாளை வா என்று சொல்வது போல இல்லையா?! தோற்று ஓடியது அந்தப் பெண்தானே தவிர சரத் இல்லையே...!

சிறு கோரிக்கை:
எப்பாடு பட்டாவது சரத்தை தேடி கண்டுபிடித்து அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக அழைத்துவரும் பெரும்பொறுப்பு கும்கீக்கும் கார்க்கிக்கும் இருக்கிறது.

21 comments:

வால்பையன் said...

சரத்தை சந்திக்கும் போது நீங்களும் என்னை போல தானா என்று கேட்கும் தகுதி எனக்கு இருக்கிறது

வால்பையன் said...

சரத்தை சந்திக்கும் போது நீங்களும் என்னை போல தானா என்று கேட்கும் தகுதி எனக்கு இருக்கிறது

வால்பையன் said...

நான் பேசுரதையெல்லாம் ரிக்கார்ட் பண்ணி காட்டினால் அந்த சரத்தே சிரிப்பார்

senthil said...

மொழியை ஆயுதமாக பயன்படுத்தி தாக்குபவர்களிடமிருந்து தப்பிக்க எதாவது வழி இருக்காண்ணா ?

செல்வேந்திரன் said...

செந்தில் வழி இருக்கிறது. அதற்கு 'சரத்கிலம்' என்று பெயர். பலமுறை சரத்தின் பதில்களைக் கேட்டு மனனம் செய்து நம் எதிரிகள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பிரயோகிக்கவேண்டும்.

குப்பன்_யாஹூ said...

என் கருத்துக்கள்;

முதலில் இந்த தொலை பேசி உரையாடல், செயற்கையாக , நகைச்சுவைக்காக உருவாக்க பட்டுள்ளது போல உள்ளது.

சரத் என்ற மனிதருக்கு ஆங்கிலம் தெரிய வில்லை. அது பெரிய குற்றம் இல்லை. ஆனால தனக்கு ஒரு மொழி தெரியாதா போது அதை படித்து தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அதை படிக்க மாட்டேன், அந்த மொழியை கிண்டல் செய்வேன் என்று கூறுவதோ, பதிவு இடுவதோ கிணற்று தவளை மனப்பாங்கே.

இதில் லாப நஷ்டம் கணக்கு பார்க்க போனால், சரத்துக்கு தான் நஷ்டம், கடன் அட்டை வசதி பெரும் வாய்ப்பை அவர் தான் இழந்து உள்ளார்.

என் பார்வைக்கு குஞ்சனின் பொறுமை, முதிர்ந்த தெளிவான பதில் சொல்லிய பாங்கு போன்றவை பார்ரட்டும் படி இருக்கின்றன. குஞ்சன் வாடிக்கையாளர் சரத்தை ஏலனமோ, பகடியோ செய்ய வில்லை.

குப்பன்_யாஹூ

கார்க்கி said...

எப்படியாவது கண்டுபிடிச்சடறோம்.. மாண்புமிகு சரத் அவர்கள் பற்றிய என் பதிவு இது.

http://www.karkibava.com/2009/01/blog-post_29.html

Karthikeyan G said...

அவர் ச.ம.க தலைவர் சரத் குமாரா ??

பாபு said...

//மொழியை ஆயுதமாகப் பயன்படுத்துவது சரத் மற்றும் என்னைப் போன்ற சாமான்யர்கள் மீது நிகழ்த்தும் வன்முறை//

என்னையும் கூட சேத்துக்கங்க

ந.மு.விமல்ராஜ் said...

நிதர்சனமான உண்மை. அடுத்தமுறை நானும் சரத்-ஐ போல முயற்சி செய்வேன். நன்றி !!!

வெயிலான் said...

சரத்திற்கான எல்லாப்புகழும் கும்கிக்கும், கார்க்கிக்கும்...

மஞ்சூர் ராசா said...

ஆமா பதிவில் போட்டிருக்கும் இந்தப் பெண் யார்?

தாமிரா said...

ஆராய்ச்சிக்குரிய உரையாடல் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை. அதை பதிப்பித்தமை சிறப்பானது.

செல்வேந்திரன் said...

வாங்க குப்பன், தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

கார்க்கி, உங்களது பதிவை படித்துவிட்டுத்தான் இப்பதிவை எழுதினேன்.

ஹா... ஹா... கார்த்திக்கேயன் ஜூப்பரு... ஆமா அவரு 'கச்சிய' கலைக்கப் போறதா சொல்றாய்ங்களே... நெசமாவா...?!

பாபு, நீங்களும் நம்மள மாதிரியா...?!

விமல்ராஜ், வெயிலான், தாமிரா, மஞ்சூரார் வருகைக்கு நன்றி....

குசும்பன் said...

//சிறு கோரிக்கை:
எப்பாடு பட்டாவது சரத்தை தேடி கண்டுபிடித்து அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக அழைத்துவரும் பெரும்பொறுப்பு கும்கீக்கும் கார்க்கிக்கும் இருக்கிறது.//

அண்ணாச்சி கார்க்கி சரத்தை எல்லாம் தேடமாட்டார் வேண்டும் என்றால் அந்த பெண்ணை தேடி சந்திப்புக்கு அழைத்துவருவார்!

குசும்பன் said...

//சிறு கோரிக்கை:
எப்பாடு பட்டாவது சரத்தை தேடி கண்டுபிடித்து அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக அழைத்துவரும் பெரும்பொறுப்பு கும்கீக்கும் கார்க்கிக்கும் இருக்கிறது.//

அண்ணாச்சி கார்க்கி சரத்தை எல்லாம் தேடமாட்டார் வேண்டும் என்றால் அந்த பெண்ணை தேடி சந்திப்புக்கு அழைத்துவருவார்!

குசும்பன் said...

//எதிராளி தடுமாறுகிறார் என்றால் உங்களுக்கு எந்த மொழி சவுகர்யப்படும் என்று கேட்டு அந்த மொழியில் பேசினால்தானே நியாயம்?!//

மிக்க சரி! பேசினால் நன்றாகதான் இருக்கும்!

Karthikeyan G said...

//ஆமா அவரு 'கச்சிய' கலைக்கப் போறதா சொல்றாய்ங்களே... நெசமாவா...?!
//

பொய்யி....
இந்த செய்தி பற்றி இருவேறு கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.

1)தலைவர் இதை அனுதாபத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார். ('இந்த ஒரு தடவை மட்டும் ஒட்டு போடுங்க, இதோட கட்சிய கலச்சுடுறேன்'). இதை திருமங்கலத்தில் 800 பேர் நம்பி இருக்கிறார்கள், நீங்கள் 801.

2.இந்த செய்தியே 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி'யின் சதியாக இருக்கலாம்.

Karthikeyan G said...

//ஆமா அவரு 'கச்சிய' கலைக்கப் போறதா சொல்றாய்ங்களே... நெசமாவா...?!
//

பொய்யி....
இந்த செய்தி பற்றி இருவேறு கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.

1)தலைவர் இதை அனுதாபத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார். ('இந்த ஒரு தடவை மட்டும் ஒட்டு போடுங்க, இதோட கட்சிய கலச்சுடுறேன்'). இதை திருமங்கலத்தில் 800 பேர் நம்பி இருக்கிறார்கள், நீங்கள் 801.

2.இந்த செய்தியே 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி'யின் சதியாக இருக்கலாம்.

மங்களூர் சிவா said...

:))

செல்வேந்திரன் said...

வாங்க குசும்பன், சிவா, கார்த்தி...வருகைக்கு நன்றி