மனிதர்களே
உங்களைப் பற்றிய என் அபிப்ராயம் என்னவென்று எப்போதும் கேட்கிறீர்கள். நான் கேட்கிறேன் 'உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் என்ன?' முதலில் அதைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் மிகத் துல்லியமானதும் மிகுந்த கசப்பானதுமாய் இருப்பதால் அதை கேட்க நீங்கள் ஒருபோதும் செவிமடுப்பதே இல்லை. அதற்காகவே அடுத்தவரிடத்தில் 'அபிப்ராயப் பிச்சை' எடுக்கிறீர்கள். உங்களைப் பற்றிய என் அபிப்ராயங்கள் உயர்வானதாய் இருந்தால் உச்சி முகர்வீர்கள். உண்மையானதாய் இருந்தால் பிய்த்து எறிவீர்கள். உங்களைப் பற்றிய என் மொத்த அபிப்ராயமும் இது ஒன்றுதான் உலகத்தீரே.... ஏற்பது இகழ்ச்சி!
- பிரதியங்காரக மசானமுத்து
- பிரதியங்காரக மசானமுத்து
Comments
பிறவிப்பயன் அளிக்கவல்ல ஒரு காணொளி உங்களிடமிருந்து அனுப்பிவைக்கப்படுமென்ற உத்திரவாதத்துடன் நிலுவையிலிருந்துவருகிறது.
ஆவன செய்யப்படுமென நம்புகின்றேன்.
பதிவு பற்றிய பகிர்தல் பின்னர்...
கமெண்ட் போட்டாலும் வரமாட்டேங்கிது.
கார்க்கி, துப்பாக்கி தேவைக்கு அனுமதி தேவையில்லை. மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்களை மீள்பதிவு செய்ததில் உள்குத்து மற்றும் கும்மாங்குத்து இருப்பதாக தோன்றுகிறது. எதற்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.
கும்க்கி அவர்களே தாங்கள் குறிப்பிடும் காணொளி புதிதாக கிடைத்த சில விஷயங்களாலும் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் (விரைவில்)...
தாமிரா, அப்படி முழுமையாகப் படித்தலென்பது சாத்தியமில்லையென்பதால், கொஞ்சமெனும் வாசிப்போருக்கு பயனளிக்கும் எனது ஐந்து முக்கிய (அப்படியாக நான் கருதும்) பதிவுகளின் இணைப்பை மீள்பதிவு செய்கிறேன்.
ஸ்ரீதர்கண்ணன், வருகைக்கு நன்றி.
இதில் பல பதிவுகள் ஏற்கனவே படித்திருக்கிறேன்.