சலிப்பு
"காந்தி கண்ணதாசனின் அறிக்கை சலிப்படையச் செய்வதாக இருக்கிறது" என கருணாநிதி தன் கைப்படக் கடிதம் எழுதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். பாவம் அவருக்குத்தான் தமிழ் எழுத்தாளர்கள் மீது எத்தனை கரிசனம்?!
திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டை கடந்த நாற்பதாண்டு காலமாக ஆண்டு வருகின்றன. இந்த நாற்பதாண்டு காலத்தில் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்துப்போன எழுத்தாளர்கள், நோயில் ரத்தம் கக்கிச் செத்த எழுத்தாளர்கள், எடுத்து எரிக்க நாதியற்றப் பிணமாய் நாறிப்போன எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கிறது என்னிடம். திராவிடக்குஞ்சுகள் தமிழ் வளர்த்த லட்சணம் ஊர் அறியும்.
கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...
***
எங்கள் குடும்பத் தொழிலான தீப்பெட்டிக் கம்பெனி லைசென்சு ரினிவல் வகைக்காக, பரம்பரைச் சொத்தை பங்கீடுவதற்காக, சிட்டை வட்டிக் கடனில் மூழ்கிய அண்ணனை மீட்கும் வகைக்காக, வாடகைக்கு வந்தவர் வீட்டைக் காலி செய்ய மறுத்த விவகாரத்திற்காக, சாலை விபத்தில் இன்ஸூரன்ஸ் க்ளேய்ம் செய்யும் வகைக்காக என வாழ்நாளில் பலமுறை பல வழக்கறிஞர்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் கூட நேர்மையோ, மனிதமோ கிஞ்சித்தும் இருந்ததில்லை. நான் அணுகிய வழக்கறிஞர்கள் எல்லாருமே மிகுந்த தந்திரசாலிகளாகவும், ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவுமே இருந்தனர்.
வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் பொது விவகாரங்களில் நடந்துகொள்ளும் முறை மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது. சமூக நிகழ்வுகளில் காத்திரமான பங்கேற்பை மேற்கொண்டு வந்த அரிய இனங்களுள் ஓன்றாக இருந்த அவர்கள், இன்று கலவரக்காரர்களைப் போலவும் பயங்கரவாதிகளைப் போலவும் செயல்படுவது கண்டு உங்களைப் போலவே நானும் திகைத்து நிற்கிறேன்.
போராட்டத்தில் கல் வீச, சக மாணவனைக் கொலை வெறியோடு அடித்து நொறுக்க, சக மனிதன் மீது அழுகிய முட்டைகளை வீச, காவலர்களின் மண்டையை செங்கல்லால் உடைக்க, காவல் நிலையங்களை, பேருந்துகளைக் கொழுத்த அவர்கள் படித்த சட்டம் தடையாக இல்லை.
கல்வி, கேடில் விழுச்செல்வமா?!
***
ரமேஷ் வைத்யாவின் 'உயரங்களின் ரசிகன்' கவிதைத் தொகுதியைக் கடந்த நான்காண்டு காலமாய் தேடிக் கொண்டிருந்தேன். பரிசல் கூரியரில் அனுப்பி வைத்தார். பக்கத்திற்குப் பக்கம் ஏமாற்றம்.
ரமேஷ் வைத்யா எனும் ஆளுமையின் சமீபத்தியச் சிறுகதைகளோடும், கவிதைகளோடும் ஒப்பிடுகையில் மேற்கண்ட தொகுப்பில் இருப்பதெல்லாம் சுவையற்ற வெற்று வரிகளே. கவிதையின் அடையாளங்கள் சிறிதும் காணப்படாத அத்தொகுப்பை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

Comments
//நான் அணுகிய வழக்கறிஞர்கள் எல்லாருமே மிகுந்த தந்திரசாலிகளாகவும், ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவுமே இருந்தனர்.//
100% உண்மை
ரமேஷ் வைத்யாவின் கவிதை குறித்த உங்கள் விமர்சனத்தை நான் நிராகரிக்கிறேன். காரணம் ரமேஷ்வைத்யா எனக்கு அறிமுகமானவர் என்பதனால் அல்ல. அவரது தொகுப்பை நான்காண்டுகளாகத் தேடியதும் உங்கள் ஏமாற்றத்திற்குக் காரணமாய் இருக்கலாம். புதிய கவிதைக்காரர்களுக்குப் பிடிக்கும் வண்ணம்தான் அது இருக்கிறது.
அப்பறம்... என் வலைப்பூவில மீண்டும் உங்கள் பக்கத்தைச் சேர்த்தாச்சு. டெம்ப்ளேட் மாற்றம் காரணமாய் எத்தனை நாள் இல்லாமல் இருந்ததோ அத்தனை நாள் சேர்த்துத் தரப்படும் என்பதை அறியவும்! (இது முதுகுசொறிதல் அல்ல!!)
(போனஸாக)
கொழுத்த அல்ல கொளுத்த
பின்புறம்னா முதுகு மட்டுமா?
மாதவராஜ், அப்படியொரு நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். அண்ணனது ஆக்ஸிடெண்ட் அனுபம் மிகுந்த கசப்பானதாக இருந்தது. வக்கீல்கள் ஜாக்கிரதை என்றொரு பதிவு போட்டேன். நல்லோரும் உளர் எனும் உங்கள் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.
பரிசல், ரமேஷ் வைத்யாவின் பிற்காலத்திய கவிதைகள் (மணல் புத்தகத்தில் வெளியான கவிதை, பசுமை விகடனில் வந்த யானைப்பாதைக் கவிதை) சிலவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நல்ல கவிதைகளுக்கான என்னுடைய தனிப்பட்ட அபிப்ராய அளவுகோல்களின்படி அவை என்னைச் சிறிதும் கவரவில்லை. முடியலத்துவம் மாதிரி துணுக்குகளை எழுதுகிற நீ எப்படி அவரை விமர்சிக்கலாம் என்று ஒரு நண்பர் சீற்றப்பட்டார். அடியேன் எழுதுகிறவைகள் கவிதைகள் அல்ல என்கின்ற முழு பிரக்ஞையோடு எழுதுகிறவன் நான். ஆனால் இதே மாதிரியான துணுக்குத் தோரணங்களை மனுஷ்யபுத்திரனோ, கலாப்ரியாவோ எழுதினால் வாசகனாக ஆத்திரம் கொள்வேன். அத்தகைய ஆத்திரம்தான் ரமேஷின் பழைய கவிதைகளை படிக்கையில் ஏற்பட்டது.
தமிழின் பத்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிடச் சொன்னால் அதில் ரமேஷின் 'காடவர்கோன் ஐயடிகளையும்' சேர்ப்பேன். ரமேஷ் வைத்யா ஒரு நல்ல படைப்பாளி என்பதில் எனக்குத் துளியும் அபிப்ராய பேதம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாவற்றையும் கொண்டாட நான் அவரது ரசிகன் இல்லை. வாசகன்.
லதானந்த் சார் வருகைக்கும், திருத்தியதற்கும் நன்றிகள்...
aanal erkenave 'natudamai" aaki vitta kalaignar nmattum than varisukalukku sothu serkalama?
ithai ninaichu nama ellam ethanai salipuk kaditham podarathu?
// பரிசல் அண்ணே, சத்தியமாப் புரியலை...
வா... கார்த்திகா இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?!
திராவிட குஞ்சுகள் தமிழை வளர்கிறேன் என்ற பெயரில் இது வரை செய்த கோமாளிதனங்கள் பத்தாதா?
ரமேஷ் வைத்யா பற்றி எழுதியதை அப்படியே ஏற்றி கொள்கிறேன்!
அவர் கவிஞர்ன்னு அவர் தான் சொல்லிகிறார்.
என்னை அலைபேசியில் அழைத்து அப்பப்ப சில வார்த்தை சாட்டையால் அடிக்கிறார், அது தான் கவிதையா?
ரெண்டு பேர் சேர்ந்து உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போல..
//
Addicted to fashion of scolding Kalainjar??
// இந்த நாற்பதாண்டு காலத்தில் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்துப்போன எழுத்தாளர்கள், நோயில் ரத்தம் கக்கிச் செத்த எழுத்தாளர்கள், எடுத்து எரிக்க நாதியற்றப் பிணமாய் நாறிப்போன எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கிறது என்னிடம். திராவிடக்குஞ்சுகள் தமிழ் வளர்த்த லட்சணம் ஊர் அறியும்.//
Did he refused to help them after he came to know about them?? I dont think so. hes doing the best possible.

மதியாதார் தலைவாசலா இருக்கே :)
மதியாதார் தலைவாசலா இருக்கே :)